******************************************************************************************************************************************************
சிகரம் தொடுவோம் நாகப்பன் _ புகழேந்தி 978-81-8476-050-7   எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது; சிலவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது & இதுதான் கற்றலின் சித்தாந்தம். குறிப்பாக, பொருளாதாரம், சேமிப்பு, பங்கு வர்த்தகம்... இப்படி புதிது புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்துக்குத் தீனி போட இன்று நிறைய ஊடகங்கள் இருந்தாலும் எல்லோரும் கற்றுக்கொள்ள சிறந்த வழி, புத்தகம் எனும் அச்சு ஊடகம்தான். ஷேர் மார்க்கெட், சென்செக்ஸ் என்ற சொற்கள் சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், பணத்தைப் பெருக்க நினைப்பவர்கள் இந்தச் சொற்களைத் தவிர்த்து விட்டு பணம் பண்ண முடியாது. செய்தித்தாள் முதல் தொலைக்காட்சி வரை இதற்கென்று தனியாக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு பணம் புழங்கும் துறை இது. எளிமையாகப் பணம் சம்பாதிக்க இருக்கும் ஆயிரம் வழிகளில் பங்கு வர்த்தகமும் ஒன்று. இந்தத் துறை குறித்து அறியாதவர்களுக்காக ஆனந்த விகடனில் சிகரம் தொடுவோம் என்ற தலைப்பில், பங்கு வர்த்தகத் துறையில் புகழ் பெற்று விளங்கும் நாகப்பன்_புகழேந்தி இருவரும் ஒரு குழந்தைக்குக் கதை சொல்வது போல மிக எளிமையாக விளக்கி, தொடராக எழுதினார்கள். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் உங்கள் கைகளில் இருக்கும் இந்தப் புத்தகம். பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த புத்தகம் நல்ல வழிகாட்டியாக இருக்கும். நீங்கள் எதையெல்லாம் கடினம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ, அவையெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்கின்றனர் இவர்கள். பான் கார்டைக்கூட இந்தப் புத்தகத்தின் துணைகொண்டு மிக எளிமையாக வாங்க முடியும். பங்கு வர்த்தகம் பற்றி சிலர் கொண்டுள்ள தவறான கருத்துக்களையும் இந்தப் புத்தகம் மாற்றும். ******************************************************************************************************************************************************
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)பாக்கியம் ராமசாமி 978-81-8476-137-5 நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி சூத்திரம், இயல்பிலேயே கைவரப் பெற்றவர் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி. இவருடைய கட்டுரைகளில் நகைச்சுவை இழையோடும். உண்மைச் சம்பவங்களோடு புனைந்த இந்த நகைச்சுவைக் கட்டுரைகள், படிப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். நகைச்சுவையை வலுவில் திணிக்காமல், சாதாரண நிகழ்ச்சிகளையே தனது எழுத்தாற்றல் மூலம் சித்திரித்திருப்பது இந்த நூலின் தனித்தன்மை. 'ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய். உளுத்தம் பருப்பு கால் கிலோ பத்து ரூபாய். வெந்தயம் ஐந்து ரூபாய். சட்னி சாம்பார் பத்து ரூபாய். செய்கூலி, பாத்திர வாடகை, எரிவாயு, சப்ளையர் கூலி பத்து ரூபாய்... ஆக, 55 ரூபாய். இந்த 55 ரூபாய்க்கு அறுபது இட்லி செய்ய முடியும். சேதாரம் 5 இட்லி தள்ளினாலும் 55 ரூபாய்க்கு 55 இட்லி தேறும். ஆக, ஒரு இட்லியின் அடக்க விலை, ஒரு ரூபாய். இதற்கு 50 பைசா லாபம் வைத்தால், ஒரு இட்லி அதிகபட்சம் ஒன்றரை ரூபாய்க்கு விற்கப்படலாம். சாதாரண ஓட்டல்களிலேயே இரண்டு இட்லி ஆறு ரூபாய். மூன்று ரூபாய்க்கு விற்க வேண்டிய இட்லியை 6 ரூபாய்க்கு விற்கிறார்கள்... _ இப்படி கணக்கு போட்டு, இதை கண்டிப்பதாக ஒரு சங்கம் அமைத்து பேசப்போக, கடைசியில் இரண்டு இட்லிக்கே அறுபது ரூபாய் கொடுத்து ஏமாந்து திரும்பியதை நூலாசிரியர் விவரிப்பதே சுவாரஸ்யம்தான்! ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக இரவெல்லாம் கண்விழித்து குறிப்பு எழுதிவைத்து, குறிப்பு பேப்பரை ஒருவர் வாங்கிவைத்துவிட்டு அது காணாமல் போக, கூட்டத்தில் பேசமுடியாமல் தடுமாறியதையும், இதேபோல் திருமண வைபவம் ஒன்றில் எவ்வளவோ பேச எண்ணி இரண்டு நாட்கள் மெனக்கிட்டு குறிப்பு எழுதிவைத்து, கடைசியில் மொய் எழுதுவதற்கு முன்னால் இரண்டே வார்த்தை பேசி வாழ்த்திவிட்டு வந்ததையும் இவர் சொல்லியிருக்கும் பாங்கு, படிப்பவரை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும்.  ******************************************************************************************************************************************************
குற்றவாளிகள் ஜாக்கிரதை டாக்டர் பா.மாதவ சோமசுந்த‌ரம், இலக்குமணன் கைலாசம்978-81-8476-140-5 ஒரு குற்றம் நிகழும் போது அதை செய்தியாக வாசிக்கும் நாம் முதலில் லேசாக அதிர்ச்சி அடைவோம். சிறிது நேரம் வருத்தப்படுவோம். பிறகு, ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு நமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். கோர்ட்டில் வழக்கு நடக்கும். சிறிது காலம் கழித்து தீர்ப்பு வரும். குற்றவாளி சிறைக்குச் செல்வார் அல்லது அபராதம் கட்டி வெளியே வருவார். வழக்கறிஞர்கள் அடுத்த கேஸ் கட்டை தூசி தட்டி எடுக்கப் போய்விடுவார்கள். காவலர்கள் லத்தியைச் சுழற்றியபடி அடுத்த குற்றவாளியைத் தேடிப் போய்விடுவார்கள். ஆனால், இந்தக் குற்ற நிகழ்வுக்கு இன்னொரு இருண்ட பக்கம் உண்டு. யாரும் இதுவரை எட்டிப் பார்த்திராத பக்கம்! அங்கு குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்ணீர் விட்டபடி கதறிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கமாட்டார்! ஒரு திருட்டு நடக்கிறதா? பெரும்பாலான நேரங்களில் போனது போனதுதான். அபூர்வமாக சில நேரங்களில் திருட்டு போன பொருளை தேடிப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனால், பொருளை இழந்ததால் அந்த நபர், மன உளைச்சல், வேதனை, தவற விட்ட அறுபத்து மூன்று நாயன்மார்கள் சூலூர் கலைப்பித்தன் 81-89780-58-1 சேக்கிழார் எழுதிய 'திருத்தொண்டர் புராணம்' சைவ திருமறைக்கு ஒரு புனித நூல் என்றே சொல்லலாம். சிவபெருமானையே போற்றி திருத்தொண்டு புரிந்தவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்கள். அவர்களுடைய சிவதொண்டு மெய்சிலிர்க்க வல்லது. பக்தி என்பதற்கும் அருட்தொண்டு என்பதற்கும் இலக்கணம் வகுப்பதுபோல் நாயன்மார்களின் அனுபவங்கள் அற்புதமாக அமைந்திருக்கும். தனது பக்தர்கள் தன்மீது கொண்டிருக்கும் அன்பை சோதிக்கவும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டவும் சிவபெருமான் நாடகமாடிய திருவிளையாடல்களில் புடம்போட்ட பொன்னாக மின்னியவர்கள் நாயன்மார்கள். நாயன்மார்களின் வரலாற்றை மட்டுமே எழுதுவதைவிட அவர்கள் பிறந்து வாழ்ந்த திருத்தலங்களுக்கே சென்று வழிபட்டு, அந்த அனுபவங்களையும் சேர்த்தே வழங்கலாம் என்று கருதி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாத்திரையாகச் சென்று நாயன்மார்களை உள்ளம் உருக வணங்கியிருக்கிறார் சூலூர் கலைப்பித்தன். ஒவ்வொரு திருத்தலத்திலும் நாயன்மார்களின் கதையை பாடலாகவும் புனைந்திருப்பது ஒரு சிறப்பம்சம். அவருடைய திரைப்படத் துறை அனுபவங்களும் இந்த யாத்திரை நுட்பத்தை எழுத உதவியிருக்கிறது. எந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்லலாம் என்று வழிகாட்டி, சரளமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு சிறந்த சமய நூலாகவும் அமைந்துவிட்டது. நூலாசிரியர் பயணித்து தரிசித்த வரிசையின்படியே பொருளடக்கத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்நூலைப் படிப்பவர்கள் யாத்திரை செல்வதின் பொருள் உணர்ந்து தெய்விக அருளைப் பெறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) சுஜாதா 978-81-89936-73-0 தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது. நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்! இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும். படித்துப் பாருங்கள்... புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்! ******************************************************************************************************************************************************
இன்றும் நமதே ரவிக்குமார் 978-81-8476-051-4 மக்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு தலைவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்களில் ஒருவனாக இருந்தாலே போதும் என்கிற உணர்வை நம் முன் வைக்கும் கட்டுரைகள். வெறும் விளக்கங்கள்தான் என்று ஒதுக்கிவிட முடியாத உண்மைகள் நிறைந்த வார்த்தைகள் நேரடியாகவே நம்மைச் சுடுகின்றன. எந்த வகையிலும் சமூகம் நம்மைப் பாதிக்கவில்லை என்று சொல்லக்கூடிய மனநிலையில் இல்லை நாம். சமூகம் சில காரணிகளால் தொடர்ந்து நம்மை பாதித்தவண்ணமே இருக்கின்றது. அதனோடு இசைந்தோ, அல்லது விலகியோ போய்க்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நம்முடைய உண்மையான நிலை. அரசியல், பொருளாதாரம், சினிமா, உலகமயமாதல், அணு உலை, உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழரின் நிலை... இப்படி நிறைய காரணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இயந்திரத்தனமாகிவிட்ட வாழ்க்கையின் நடுவே போட்டிப் போட்டுக்கொண்டு ஓடவே நமக்கு நேரமில்லை. நமக்கே நமக்கான ஒரு பாதிப்பு வருகிறவரை சமூகத்தின் அட்டவணைக்குள் நாமும் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. பிறருடைய பெயர்கூட தெரியாத நமக்கு அவருடைய துயர் எப்படி தெரியப்போகிறது? ஒரு விஷயம் நம் குரல்வளையை நெருக்கும்போதுதான் அது ஏற்படுத்தும் வலி நமக்குத் தெரிய வருகிறது. இந்தக் கட்டுரைகள் தனிப்பட்ட மனிதருடைய கோபங்கள், சமூக அக்கறைகள் அல்ல... நாம் எல்லோரும் பேசவேண்டிய, பேசியிருக்கவேண்டிய குரல்கள். நமக்கான குரல்கள். ஜூனியர் விகடன் சிந்தனை பகுதியில் வெளியான இக்கட்டுரைகள் ஏற்படுத்திய பாதிப்பை எல்லோருமே உணர்ந்திருக்க முடியும். உண்மைகளை மிக அருகே சந்திக்கத் தயாராயிருங்கள். உங்கள் கோபங்களுக்கும் கரிசனங்களுக்கும் சரியான தீர்வு நிச்சயம் ஏற்படும். இந்தப் புத்தகம் அந்த வேலையைச் செய்யும். ******************************************************************************************************************************************************
ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்---சி.மகேந்திரன்978-81-8476-052-1 உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்துகொண்டே இருக்கின்றன. காடுகளும் மலைகளும் பூமியின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பெரும் மாற்றங்களைச் சந்திக்கின்றன. காற்றும் திசை மாறுகிறது... கடலும் பொங்கி எழுகிறது... இப்படி, சூரியக் குடும்பம் தோன்றியதிலிருந்து, தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டே இருக்கிறது இந்த பூமி. இயற்கையாக நடக்கும் எந்தவொரு மாற்றமும் மனிதனைப் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழவேண்டிய மனிதன் மட்டும் இயற்கையால் படைக்கப்பட்ட யாவற்றையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நினைத்து, அதில் மாற்றங்களைச் செய்து பார்க்கிறான். அந்த மாற்றம் எதுவும் நிலைகொள்ளாது என்பதை உணரவும் அவன் மறுக்கின்றான். அப்படி அவன், இயற்கையால் படைக்கப்பட்ட நதியைத்தான் முதலில் மாற்றத்துக்கு உட்படுத்தினான். மலைகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும் நதி பிறக்கிறது. ஆனால், சில நதிகள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதைக் கண்டுகொள்ள இயலாத அளவுக்குக் கண்காணாத இடத்திலிருந்து சிறுசிறு ஊற்றாகப் பிறப்பெடுத்து, ஊர்ந்து, தவழ்ந்து ஓடி வருகின்றன. இப்படி, இயற்கை தன்னைத் தற்காத்துக்கொள்ள பல மர்ம முடிச்சுகளை போட்டுவைத்துள்ளது. மனிதன் அதை அவிழ்க்க முயலும்போதுதான், இயற்கை தன் கோபப் பெருந்தீயைக் கொப்பளிக்கிறது. முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தவனுக்கு கோபத்தைக் குறைக்க வழி தெரியவில்லை. அப்படி முடியாமல் போகிற நேரங்களில்தான் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற பேரபாயங்கள் நேர்கின்றன. மனிதனின் சுயநல அட்டூழியத்தால் இன்று பல நதிகள் உயிரிழந்து வருகின்றன என்பதையும், தாமிரபரணி நதியில் தொடங்கி கூவம் நதி வரை அந்த அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருப்பதையும் மனதில் ஆதங்கம் பொங்க, நேர்மையுடன் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சி.மகேந்திரன். இதனால் நிகழப்போகும் பேரபாயத்தை நாம் எப்போது உணரப்போகிறோம்? அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இயற்கையோடு முட்டிமோதுவதை நிறுத்திவிட்டு எப்போது விழித்தெழப்போகிறோம்? நதிதோறும் நடக்கும் மணல் கொள்ளைகளை எப்போது நிறுத்தப் போகிறோம்..? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதலில் எழுதப்போவது யார்? _ இப்படி, பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தச் சம்பவங்களை அடிக்கோடிட்டு, கேள்விகளைப் பாய்ச்சுகிறார் நூலாசிரியர் இந்த நூலில். மருதுவின் ஓவியங்களுடன் ஜூனியர் விகடன் இதழில் விழிப்பு உணர்வு தொடராக வெளிவந்த சி.மகேந்திரனின் ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் இப்போது, இன்னும் விரிவான, விளக்கமான பல அத்தியாயங்களுடன் வந்திருக்கிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் உங்களுக்கான அறிவுரையோ, கட்டளையோ அல்ல; நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுகிற பேராபத்திலிருந்து மக்களைக் காத்துவிடலாம் என்று எத்தனிக்கிற ஆலோசனைகள் மட்டுமே. ******************************************************************************************************************************************************
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் 978-81-8476-053-8பதிப்பு     1 சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம் என்று வரும்போது அந்தக் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. உதாரணமாக, உபன்யாசங்களுக்குச் சென்று வீடு திரும்பும்போது மனதில் எழும் சந்தேகங்கள் நிறைய. ஆன்மிகம் மற்றும் வேதாந்தம் தொடர்பான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஏன்? எப்படி? என்ற கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அவ்வளவு ஏன்? வீட்டில் விசேஷ நாட்களில் பூஜை நடக்கும்போது பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் குறித்துதான் நமக்கு எத்தனை கேள்விகள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் விகடன் பிரசுரமாக வெளியாகி பரவலான பாராட்டுதல்களைப் பெற்றது. இந்த நூல் அதன் இரண்டாம் பாகம். ******************************************************************************************************************************************************
108 ஒரு நிமிடக் கதைகள் விகடன் பிரசுரம் 978-81-8476-054-5 கையடக்கமாக, ரயிலிலும் பஸ்ஸிலும் பயணித்துக் கொண்டே படித்து முடிக்க வசதியாக '101 ஒரு நிமிடக் கதைகள்' விகடன் பிரசுரமாக வெளியானபோது அது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. 'எங்கும் வேகம்; எதிலும் அவசரம்' என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது '101 ஒரு நிமிடக் கதைகள்' புத்தகம். 'அளவில் சிறியது என்றாலும் அடக்கத்தில் வெயிட்டானது தான் ஒவ்வொரு கதையும்...' _ இப்படி வாசகர்களிடமிருந்து வந்தவண்ணம் இருக்கும் பாராட்டுக் கடிதங்கள், ஆனந்த விகடனில் வெளியான மற்ற ஒரு நிமிடக் கதைகளையும் நூல் வடிவில் வெளியிடவேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது! இதோ, உங்கள் கையில் தவழ்வது '108 ஒரு நிமிடக் கதைகள்!' அடுத்த முறை நீங்கள் பயணம் செய்யும்போது படிப்பதற்கு வசதியாக இன்னொரு கையடக்க நூல் இது! படித்து இன்புறுங்கள்! ******************************************************************************************************************************************************
பாமா விஜயம் இயக்குநர் கே.பாலசந்தர் 978-81-8476-055-2 தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் என்பதை மட்டும் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடகங்களும் திரைப்படங்களும் பரவலான பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன. தாய்ப் பாசம், சகோதர உறவு, தேச ஒருமைப்பாடு, வன்முறைக்கு இடம்தராமல் பாதுகாப்பது, வரவுக்குத் தகுந்த செலவுகள் செய்வது... இதுபோன்ற கருத்துகளை நிலைபெறச் செய்யும் முயற்சிகளில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள், போலி கௌரவத்தை உடைத்து குடும்ப ஒற்றுமையை உயர்த்திக் காண்பித்து, மக்களிடையே பெரும் ஆதரவைத் திரட்டி வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாமா விஜயம்! தமிழ்த் திரையுலக வரலாற்றில், காலத்தால் அழியாத நகைச்சுவைத் திரைப்படம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பாமா விஜயம். கருத்தாழம் மிகுந்த கதைக்குப் பொருத்தமான கதா பாத்திரங்களை உருவாக்கி, பொருத்தமான கலைஞர்களை உலாவரச் செய்து திரை உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே.பி. ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பான நகைச்சுவை வெடிகளைப் பரப்பி, படம் பார்ப்பவர்களை விழுந்துவிழுந்து சிரிக்கவைத்த கே.பி.யின் திறமையை உயரத்தில் தூக்கி வைத்த படம். ஒரு தலைமுறை பார்த்து ரசித்ததை பல தலைமுறைகள் படித்து ரசிக்க, இதோ இந்த பாமா விஜயம் படத்தின் திரைக்கதை&வசனம் காட்சிக்குக் காட்சி புகைப்படங்களுடன், இந்த நூலாக... ******************************************************************************************************************************************************
அது ஒரு நிலாக் காலம் ஸ்டெல்லா புரூஸ் 978-81-8476-056-9 ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். மூவருமே அவனை விரும்புகிறார்கள். ஒருத்தியை (சுகந்தா) அவன் மனதாரக் காதலிக்கிறான்; ஒருத்தி (லிஸா) மேல் அவனுக்கு லேசாக சபலம் ஏற்படுகிறது, ஒருத்தியை (ரோஸி) அவன் தன் மகளாக பாவிக்கிறான். மூவருடனான தனது உறவுநிலையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் ராம்குமார், அந்த எல்லைக்குள்ளேயே அவர்களுடன் பழகி வருகிறான். அதை மீறுவதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் அவன் தனது நிலைப்பாடில் தெளிவாக & உறுதியாக நிற்கிறான். ராம்குமாருக்கு இன்னொரு முகமும் உண்டு. அவன் சின்னச் சின்ன பொய்கள் சொல்லக் கூடியவன். திட்டமிட்டெல்லாம் அதை அவன் சொல்வதில்லை என்றாலும், வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக்கொள்ள அவனுக்கு அந்தப் பொய்கள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் பொய்யே அவனுடைய வாழ்க்கையை நிலைகுலையவும் வைக்கிறது. அதற்குப் பிந்தைய இந்த நிகழ்வுகளை ராம்குமார் நினைத்துப் பார்ப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. விகடன் மூலம் பரந்துபட்ட தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஸ்டெல்லா புரூஸின் சிறந்த நாவல் இது. சிறந்த எழுத்தாளர்கள் தங்களது நூல்களது மூலம், தங்களுக்குப் பிந்தைய எண்ணற்ற தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஸ்டெல்லா புரூஸும் அத்தகைய ஓர் எழுத்தாளர்தான்; இந்த நூலும் அத்தகைய ஒரு நூல்தான். ******************************************************************************************************************************************************
அகம் புறம் வண்ணதாசன் 978-81-8476-057-6 வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படுகின்றன. அந்த அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறோம். நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது, நமக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது. எழுத்துவண்ணம் மிக்கவர்கள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யும்போது, அவை பலரையும் சென்றடைகின்றன. முகம் தெரியாத வாசகருடன் எழுத்தாளர் நிகழ்த்தும் அந்த உரையாடல் இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமாகக் காரணமாகிறது. இந்த நூலில், தான் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள், அன்றாடக் காட்சிகள், அந்தக் காட்சிகளைத் தான் கண்ட கோணம் என்று பலதரப்பட்ட சுவாரசிய வண்ணங்களை எழுத்துத் தூரிகையால் காவிய ஓவியமாக்கியிருக்கிறார் நூலாசிரியர் வண்ணதாசன். இதில் கிராமத்தின் எழில்மிகு தோற்றம் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊன்றிப் படிக்கத் தோன்றும் நெல்லை மண் வாசத்தோடு, எழில் நடையில், கிராமியத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளில் வண்ணதாசனின் வீச்சு யாரையும் கவர்ந்திழுக்கும். நூலாசிரியரின் அழகு நடைக்கு ஓர் உதாரணம்... அந்த வீட்டு கேட் முனங்குகிறது. கறுப்பு நாய் குரைக்கிறது. லொட-லொடவென்று சைக்கிளின் மட்கார்டு சத்தம் போடுகிறது. அவரிடம் இருந்து மட்டும் சத்தமே இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று ஐயர் சார்வாளின் கரகரத்த குரலையே அவருக்குக் கொடுத்திருந்தேன். என்ன காரணத்-தாலோ திடீரென்று எம்.ஆர்.ராதா குரல் போலத்தான் அவருக்கு என்று தோன்றியது. அப்படித் தோன்றியதில் எனக்கு ஒரு சந்தோஷம்கூட. வெளியே போய்விட்டு வந்தால், வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அவர் பேசிக்கொண்டு எனக்காகக் காத்தி-ருப்பது போலக்கூடத் தோன்ற ஆரம்பித்துவிட்டது... ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து வாரந்தோறும் வாசகர்களை வசப்படுத்திய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. ******************************************************************************************************************************************************
மறந்து போன பக்கங்கள் செங்கோட்டை ஸ்ரீராம் 978-81-89936-49-5 அனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், தங்கள் அனுபவ அறிவை இளையவர்களுக்கு தாராளமாகத் தரக் காத்திருக்கிறார்கள். நம் நாட்டின் பழைமையான நூல்கள் பலவும், அனுபவங்களைத் தாங்கியவையே. ஆனாலும் தீயைத் தொட்டால் சுடும் என்கிற அனுபவப் பாடத்தைக் கேட்பதைவிட, செயலில் தாமே ஈடுபட்டு உண்மைதான் என்கிற அனுபவத்தைப் பெறவே இன்று நம்மில் பலரும் விரும்புகின்றோம். தலைமுறை தலைமுறையாக நம்மிடையே புழங்கிவரும் நீதிக்கதைகள் ஒருவகையில் அறவுணர்வையும் நன்னெறியையும் போதிக்கும் அனுபவப் பாடங்கள் எனலாம். இன்றோ, நாம் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோய் வருகின்ற காரணத்தால், நம் பண்டைய அறிவுப் பொக்கிஷங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போகிறது... இந்நூல் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளது. பண்டைய இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட வாழ்வியல் செய்திகள், ஆன்மிக பக்தி இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை முறை, மண்சார்ந்த சிந்தனைகள், வீரமும் அறிவும் வெளிப்படுத்திய தியாகியர், கம்பனும் ரசிகமணி டி.கே.சி.யும் காட்டிய வாழ்வியல் இலக்கியம், கணிதம்; வானியல்; அறிவியல் என்று பல தளங்களில் இந்நூல் சிந்தனைகள் விரிவடைகின்றன. பலரும் மறந்து போய்விட்ட, ஆனால் மறக்கக் கூடாத செய்திகள் தற்கால வாழ்வியல் நோக்கில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வீரன் வாஞ்சிநாதன், அமரகானம் படைத்த எஸ்.ஜி.கிட்டப்பா, கணிதமேதை எஸ்.எஸ்.பிள்ளை என்று மாமனிதர்களைப் பற்றிய பதிவுகள், இளந்தலைமுறை நினைவில் பதித்துக்கொள்ள வேண்டியவை. ஆழ்வார்கள் காட்டிய அமுதத் தமிழும் கம்பனின் கவிதை நயமும் ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. சின்னச் சின்னக் கதைகள் மூலம் மேலாண்மைத் தத்துவங்கள் காட்டப்படுவது வித்தியாசமான நோக்கு. தலைமுறை வேறுபாடின்றி அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. ******************************************************************************************************************************************************
ஸ்ரீ லலிதா டாக்டர் சுதா சேஷய்யன் 978-81-89936-50-1 இரண்டு சகஸ்ரநாமங்கள் மிகவும் பிரபலம். ஒன்று விஷ்ணு சகஸ்ரநாமம். மற்றது லலிதா சகஸ்ரநாமம். சகஸ்ரம் என்றால் ஆயிரம். அம்பிகையின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அவளைப் போற்றுவதுதான் சகஸ்ரநாம வழிபாட்டின் பொருள். ஓராயிர நாமம் உள்ளத்துள் ஏற்றி, மனம் ஒருமுகப்பட்டுத் துதித்தால் நம்மை நோக்கி வரும் இன்னல்கள் மாயும்; இன்பங்கள் கூடும். இப்படி மகிமை வாய்ந்த அன்னையின் ஆயிரம் நாமங்களுக்கும் பாஷ்யம் எனப்படும் விளக்கவுரை எழுத ஆதிசங்கரர் முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை. அவர் விஷ்ணு சகஸ்ரநாமத்துக்குப் பொருள் எழுதி, அம்பிகையின் பேரில் அம்பிகையின் நாம மகிமைக்குப் பதிலாக அவளின் அழகு ரூபத்தைப் போற்றி சௌந்தர்ய லஹரி படைத்தார் என்பது வரலாறு. உலகமே அழகியலின்பாற்பட்டது. அழகும் வீரமும் கருணையும் கொண்ட ஆதிபராசக்தியின் கருணையால் வெளிப்பட்ட உலகில் வாழும், அவளுடைய பிள்ளைகளான நாம், அவளுடைய கருணையையும் மகிமையையும் போற்றி வணங்குவதற்காகவே, அவள் ஆயிரம் நாமம் கொண்டாள் என்பர் பெரியோர். கௌலாசாரம் என்று ஒரு வழிபாட்டு முறை உண்டு. சமயாசாரம் என்று ஒரு முறை உண்டு. இந்த இரண்டு முறைகளும் சாதாரணமாக ஸ்ரீவித்யா உபாசனையில் சொல்லப்படுகின்றன. இந்த இரண்டு உபாசனா முறைகளுக்கான திருநாமங்களையும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் காணலாம். அவற்றில் மிகச் சுலபமான வழியாக இருக்கக்கூடியது நாம் இந்த நாமங்களைத் தெரிந்தோ தெரியாமலோ சொல்லக்கூடிய முறை. சில நாமாவளிகளை நாம் உச்சரிக்கும்போது அதனுடைய அர்த்தம் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், புரிந்து சொன்னாலும், புரியாமல் சொன்னாலும் நிச்சயம் பலன் உண்டு என்பதை எடுத்துக் கூறியுள்ளார் நூலாசிரியர். இந்தத் திருநாமங்களைச் சொன்னால், அதற்குரிய பயன் நிச்சயமாக உண்டு. ஆன்மிக வழிபாட்டு முறைகளையும் இதிகாச தகவல்களையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்நூலில் இடையிடையே எளிய தமிழில் எழுத்து வடிவத்தில் ஏடு புனைந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். அம்பிகையைப் போற்றும் அனைத்து அன்பர்களுக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம். ******************************************************************************************************************************************************
சுஜாதாட்ஸ் சுஜாதா 978-81-89936-51-8 இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல்படுத்தவும் செய்கின்றன. அதை உள்வாங்கிக் கொண்டுதான் விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில், சுஜாதாட்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார். அப்போது, ஜூனியர் போஸ்ட் வாசகர்கள் மத்தியில், அது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இலக்கியம், அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளையும் சுஜாதா அந்தக் கட்டுரைகளில் அலசியிருக்கிறார். முன்பு சொன்ன மாதிரி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற முறையே அந்தக் கட்டுரைகளின் சிறப்பு. தனது சரளமான எழுத்து நடையால் வாசகர்களை மீண்டும் மீண்டும் தன் பக்கம் வசீகரித்துக் கொண்டிருக்கும் சுஜாதாவின் இந்தக் கட்டுரைகள், சுஜாதாட்ஸ் என்ற பெயரிலேயே வெளிவந்துள்ள நூல் இது. இப்போது படித்தாலும் பல விஷயங்கள் இன்றைய சூழலுக்குப் பொருந்துவதாகவே உள்ள‌ன. சுஜாதாவின் எழுத்து மீது வாசகர்கள் கொண்டுள்ள தாகத்துக்கு இந்தத் தொகுப்பு நிறையவே உதவும். ******************************************************************************************************************************************************
உலகம் இப்படித்தான் ரா.கி.ரங்கராஜன் 978-81-89936-52-5 நிறைய சுவாரஸ்யங்கள் கொண்டது மனித வாழ்க்கை. பல்வேறு உணர்ச்சிகளோடு பயணவெளியில் கடந்து போகிறோம். நாமே நமக்கு மாபெரும் புரியாத புதிர். அந்தப் புதிர் விளங்கிக் கொள்ளப்படும் வரை நமது வாழ்க்கையின் சுவை குறையாமலேயே இருக்கும். ஆசைகளும் அவஸ்தைகளும், இன்னும் இன்னும் இருக்கின்றன. இதுபோலவே நம்முடன் இருக்கிற ஆகச் சிறந்த உணர்ச்சிகளெல்லாம் உலகம் இப்படித்தான் என்கிற இந்த நூலின் வழி பதிவாகியிருக்கின்றன. விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்து கொண்டிருந்த விகடன் பேப்பர் நாளிதழில் உலக நடப்புகளை கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்த தொடராக எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதி வந்தார். காக்டெயில் என்ற தலைப்பில் பதிவாகி வந்த இந்தத் தொடர், வாசகர் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இது வெளிவந்த நாட்களிலேயே, பலரும் இந்தத் தொடர் நூலாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த நூல் நீங்கள் பெறுவதற்குரிய விஷயங்களோடு வந்திருக்கிறது. உலகம் என்னதான் மாற்றங்களை அடைந்துகொண்டே இருந்தாலும், மாறாத சில விஷயங்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. நாமும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் வாழ்ந்திருக்கக்கூடும் இந்த வாழ்க்கையை. அட... இது நம்மளகூட க்ராஸ்பண்ணி போச்சில்ல... என்று சில இடங்களை வாசிக்கும்போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றச் செய்வதே இந்த நூலின் முக்கிய அம்சம். ******************************************************************************************************************************************************
தேவாரத் திருவுலா (பாகம் 3) டாக்டர் சுதா சேஷய்யன் 978-81-89936-53-2 ஆலயங்கள்தான் மனிதனை மாண்புறச் செய்கின்றன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் அனுபவித்துதான் சொல்லி இருக்கிறார்கள். அங்குதான் அமைதியும் பக்தியும் பக்குவப் படுத்தப்படுகின்றன. சக்தி விகடன் இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் தேவாரத் திருவுலாவின் திருத்தலங்கள் தொகுப்பு இது. இதில் விருத்தாசலம் முதல் திருநெய்த்தானம் வரை பதினெட்டு திருத்தலங்களை தரிசித்து அருள்பெறலாம். ஈசனின் திருத்தலங்களுக்கு பயணித்து, பக்தி பரவசத்தோடு வணங்கி, அப்பெருமான் நடத்திய திருவிளையாடல்களை சிறப்புடன் கண்முன்னே நிறுத்துகிறார் டாக்டர் சுதா சேஷய்யன். மேலோட்டமாக சொல்லாமல் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும் வழிகள், தல வரலாறு, அந்த ஊரின் சிறப்பு, கலைநுட்பம் மிகுந்த சிற்ப வேலைப்பாடு, தீர்த்த குளம், மகா மண்டபம், மூலவர், சுற்று பிராகாரங்கள்... என கோயிலுக்கே நம்மை அழைத்துச் சென்று, தேவாரப் பாடல்களைப் பாடி உருகி நிற்கும்போது, உண்மையில் நாமே உலாவந்தது போல் மெய்மறக்கச் செய்கின்றது. நிம்மதியையும் அமைதியையும் அளித்து, பெருமிதம் பொங்க வைக்கும் பயனுள்ள பக்தி நூல் இது. ***************************************************************************************************************** எல்லை சாமிகள் (பாகம் 2) குள. சண்முக சுந்தரம் 978-81-89936-54-9 தமிழக கிராமங்களில் வாழும் மக்கள், தெய்வங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும் அதைக் கொண்டாடுவதற்கும் ஒவ்வொருவிதமான சடங்குகளை, சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வழிபட்டு வருகின்றனர். சிறு ஊர்களையும் பெரும் நகரங்களையும் சேர்த்து ஒரு நாடாக நம் முன்னோர் வகுத்தனர். ஒவ்வொரு நாட்டுக்கும் பழக்கவழக்கங்கள் மாறுபடும்; தெய்வங்கள் வேறுபடும். தெய்வங்கள், தங்களின் குறைகளைத் தீர்ப்பதாகவும், உயிர்களைக் காப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள். சொந்த பந்தங்கள், ஆடு மாடுகள், கோழி குஞ்சுகள் போன்ற உயிர்களைக் காக்கவும், விளைச்சல் பெருகவும் வேண்டுதல் நடத்தி பூஜை போட்டு திருவிழா நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். அது இப்போதும் பல கிராமங்களிலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஊர்களில் உள்ள எல்லை சாமிகளைத் தேடி, நேரில் சென்று கிடாவெட்டு, பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் தல வரலாற்றையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் குள.சண்முகசுந்தரம். சக்தி விகடன் இதழில் தொடராக வெளிவரும் எல்லை சாமிகள்,தொகுப்பின் இரண்டாம் பாகம் இது. குற்றம், குறைகள் அதிகரித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு எல்லை சாமிகளை வழிபடுவதாக மக்கள் சொல்கின்றனர். இந்த அடிப்படையில்தான் ஊரின் எல்லையில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய மக்களின் நம்பிக்கைக்கு பல‌ம் சேர்க்கும் நூல் இது. ******************************************************************************************************************************************************
முத்துக்கள் முப்பத்திரண்டு டாக்டர் அ.தாயப்பன் 978-81-89936-55-6 நொறுங்கத் தின்றால் நூறு வயது, பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பையும் சுத்தமான பற்களால் நாம் அடையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள இப்புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது. பொதுவாக, உணவு வகைகளை ருசிக்கவும், அகத்தின் கண்ணாடியான முகத்துக்கு வேண்டிய வசீகரத்தைத் தரவும், சொற்களை சரியான முறையில் உச்சரிக்கவும் உதவுபவை பற்களே! இவ்வாறு நம் நலனுக்கு உறுதுணையாக இருந்து, நன்மைகளைச் செய்துவரும் பற்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? சரியாகப் பராமரிக்கிறோமா? நமக்குள்ள கவனக்குறைவால், அக்கறையின்மையால், பற்களில் ஏற்படும் பலவித நோய்கள், கறைகள், ஈறுகளில் ஏற்படும் தொல்லைகள் ஆகியவற்றை உதாசீனப்படுத்தி, இவற்றின் பாதிப்பை நம்மில் பலர் அறிந்து கொள்ளாமலே இருக்கின்றோம். வேண்டாதவற்றை வாயில் திணித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கி நம்மையே வெறுக்கும் அளவுக்கு பற்களைப் பராமரிக்கும்(?!) நபர்கள் நம்மிடையேயும் உள்ளனர். அவர்களுக்கான நல்ல நண்பனாக, சரியான வழிகாட்டும் துணைவனாக இந்த நூல் விளங்குகிறது. பற்களில் ஏற்படும் சேதாரம் என்பது, ஓடி விளையாடும் குழந்தைக்கும் ஏற்படலாம், சந்தையில் செய்த சண்டித்தனத்தால் மண்டையில் விழவேண்டிய அடி மாணிக்கப் பற்கள் மீது விழுந்து உடைந்தும் போயிருக்கலாம். அல்லது பராமரிப்பின்மை காரணத்தால் ஆட்டம் கண்டும் போயிருக்கலாம்... இப்படி ஏற்பட்ட சேதத்துக்கு மேலும் சேதாரம் நேராதபடி, முறையான மருத்துவம் மூலம் பற்களை காத்துக்கொள்வது நம் கடமை. அதற்கு இந்த நூல் நன்கு உதவும். பற்களைப் பாதுகாக்கும் முறை, பற்களை சுத்தப்படுத்தும் விதம், பற்களின் பாதிப்பினால் உடலுக்கு ஏற்படக்கூடிய கேடுகள், அவற்றை குணப்படுத்தும் வழிகள், பற்கள் சீராக இல்லாததற்கான காரணங்கள் & இவைபோன்ற கேள்விகளுக்கு இதுவரையில் பதில் தெரியாமல் இருந்திருக்கலாம்... இப்புத்தகத்தின் வரிகளை வாஞ்சையோடு வாசித்தால், பற்கள் பற்றிய முழுமையான பதில்கள் உங்கள் பாக்கெட்டில். இந்த நூல் பல் மருத்துவம் பற்றிய பல ஐயங்களுக்கு விடையளிக்கிற‌து. ******************************************************************************************************************************************************
அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் சுபா 978-81-89936-56-3 திறமை _ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் ஒளிந்திருக்கிறது. சிலரிடம் உடல் உழைப்பாகவும், சிலரிடம் செயல்படும் வேகமாகவும் பொதிந்துள்ளது. கதை சொல்வதற்கும்கூட ஒரு திறமையும் கற்பனை வளமும் வேண்டும். கதை கேட்பவருக்கு சலிப்புத் தட்டாமலும் சுவாரஸ்யம் சிறிதும் குறைந்து போகாமலும் வர்ணனைகளோடு கதை சொல்வதும்கூட ஒரு கலைதான். கதைகள் சொல்லப்படுவதும், அதை ஒரு குழுவாக அமர்ந்து கேட்பதும் இன்று நேற்றல்ல, நம் முன்னோர் காலம் முதல் இன்றுவரை வழிவழியாக உள்ளது. குழந்தைகளுக்குக் கதை சொல்வது சுவாரஸ்யமானது; அதே நேரம் கொஞ்சம் சிரமமான காரியமும்கூட! கதை சொல்லும் விதமும் எளிமையாக இருக்கவேண்டும்; வர்ணனையும் குறையக்கூடாது; கதையில் கருத்தும் இருக்கவேண்டும். இத்தனை விஷயங்களையும் நிறைவுசெய்ய, கற்பனை சக்தியும் வேண்டும். நாம், நம் தாத்தாவையும் பாட்டியையும் கதை சொல்லச் சொல்லி தொல்லை செய்த காலமும் உண்டல்லவா? இப்படி கதை சொல்லச் சொல்லி, கேட்டு மகிழ்ந்த காலம் போய், புத்தகங்களில் படக் கதைகளாகவும் சிறுகதைகளாகவும் படித்து மகிழும் போக்கு வளர்ந்தது. அதனால் கதைப் புத்தகங்களை சிறுவர்கள் விரும்ப ஆரம்பித்தனர். அப்படி சிறுவர்கள் விரும்பும் கதைப் புத்தகங்களுள் சிறப்பான ஒன்றாகத் திகழ்கிறது & அன்புராஜாவும் காற்றுக்குதிரையும். சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த, மந்திர தந்திரங்களும் மாயாஜாலங்களும் சித்துவேலைகளும் நிறைந்த சுவாரஸ்யமான பொழுதுபோக்குக் கதை & இந்த அன்புராஜாவும் காற்றுக் குதிரையும். அதேசமயம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற சொல்லை உணர்த்தும் விதமாக அமைந்தது இந்தக் கதை. சிறுவர் முதல் பெரியவர்வரை அனைத்துத் தரப்பிலும் இந்தக் கதை விரும்பிப் படிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்; கதை எப்படிப் போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையில் சுவாரஸ்யம் கூட்டி, கதாபாத்திரங்களின் பங்கு கதையோட்டத்தில் முழுவதுமாக வரும் வகையில் திகழ்கிறது. சிறுவர் கதைக் கொத்தில் இந்தக் கதை நூலும் ஒன்று. ******************************************************************************************************************************************************
இளம் துளிர் பகத்சிங் மு. கோபி சரபோஜி 978-81-89936-57-0 இந்தியாவின் விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட தேசபக்தர்களும் தியாகிகளும் எண்ணற்றவர்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக எண்ணிலடங்காத் தொண்டர்கள், தலைவர்களின் பின் நாடு முழுவதும் அணிதிரண்டனர். ஆங்கிலேய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டித்து பலவித போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். பல்வேறு அமைப்புகளாகவும் இயக்கங்களாகவும் செயல்பட்டனர். அந்தச் சூழலில் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டக் களத்தில் பங்கு வகித்தவன் பஞ்சாப் தந்த புரட்சியாளன் பகத்சிங். பகத் சிங்கின் தாத்தா அர்ஜுன்சிங் விடுதலைப் போராட்ட வீரர்; தந்தை கிஷன்சிங்கும் ஒரு விடுதலை வீரர். தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உதித்த புரட்சிவீரன் பகத்சிங். தேசமே உயிர்மூச்சு அதன் விடுதலைக்காக இளைஞர்கள் எந்த தியாகமும் செய்யத் தயாராகவேண்டும் என்று அறைகூவல் விடுத்து இளைஞர்களின் உள்ளத்தில் சுதந்திர வேட்கையை விதையூன்றச் செய்தார். அமிர்தசரஸில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையும், லாலாலஜபதிராயின் அசம்பாவித மரணமும் பகத்சிங்கின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்த விடுதலைத் தீயை மேலும் மூட்டியது. தன் குறிக்கோளையும் கொள்கையையும் போன்றே ஒருமித்த எண்ணம் கொண்ட நண்பர்களான ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர ஆஸாத், பி.கே.தத், பகவதி சரண்வோரா ஆகியோரின் துணையோடு ஆங்கிலேய அரசை கதிகலங்கச் செய்தது பகத் சிங்கின் நடவடிக்கைகள். லாகூர் சதி வழக்கு, டெல்லி சட்டசபையில் குண்டு வீசித் தாக்கிய வழக்கு ஆகியவற்றில் ஆங்கிலேய அரசின் சூழ்ச்சி என, பல சம்பவங்கள் கண் முன்னே காட்சியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இந்நூலாசிரியர். தன்னை தூக்கிலிடுவதையே இழுக்காக எண்ணி, சுட்டுக் கொல்லும்படி ஆங்கிலேயரிடம் கோரிக்கை வைத்து, தனது மரணம் தாய்நாட்டின் விடுதலை வேள்வியில் எண்ணற்ற இளைஞர்களை ஈடுபடச் செய்ய ஊக்கமளிக்கவேண்டும் என்று கருதிய செய்திகள், அந்தப் புரட்சியாளனின் வீரத்தைக் காட்டுகின்றன. சுதந்திரம், விடுதலை என்ற வார்த்தைகளின் மகிமை தெரியாதவர்களுக்கும்கூட, இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று பல புரட்சியாளர்களின், தேசபக்த வீரர்களின் மூச்சுக்காற்றை காணிக்கையாக்கிப் பெற்றது என்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி தேசப்பற்றை ஊட்டுகிறது இந்நூல். ******************************************************************************************************************************************************
தேவ மருந்து டாக்டர் எல்.மஹாதேவன் 978-81-89936-59-4 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்றைப் பற்றியும் இந்த நூல் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஆயுர்வேதத்தினால் எந்தெந்த நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், எவ்வளவு நாட்கள் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, சில நோய்களுக்கு (அறுவை சிகிச்சைகள் மூலம்) ஆங்கில மருத்துவம் சிறந்தது என்பதையும் தயக்கமின்றி இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வாத&பித்த&கபத்தின் ஏற்றத்தாழ்வுகளே நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு அடிப்படை என்பதையும், நவீன மருத்துவத்தில் இவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். நம்மை பெரிதும் அச்சுறுத்தும் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், சுவாசம் சம்பந்தமான நோய்களுக்குரிய ஆயுர்வேத மருத்துவத்தையும், வருமுன் காக்கும் ஆலோசனைகளையும் இந்நூலாசிரியர் தெளிவாகக் கொடுத்துள்ளார். உடலை ரணமாக்காமல் எளிய முறையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக உள்ள ஆயுர்வேத மருத்துவத்தை தெளிவாகவும், உதாரணங்களோடும் உணர்த்தும் பயனுள்ள நூல் இது. ******************************************************************************************************************************************************
மூன்றாம் பரிமாணச் சிந்தனை டி.ஐ.ரவீந்திரன் 978-81-89936-60-0 மனிதனின் மனம் எப்போதும் சிந்தனை வயப்பட்டே இருக்கும். சிந்தனை ஏதுமின்றி வெற்று மனத்தோடு எப்போதும் இருப்பதில்லை. இந்தச் சிந்தனையின் விளைவாகவே தீர்வுகள் கிடைக்கின்றன. அதுவே தவம் மற்றும் தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது. மனிதனின் சிந்தனையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மனம் சிந்திக்கிறது என்றாலும், அது அறிவு மற்றும் உணர்வு ஆகிய இரு வகைகளில் அமைகிறது. அறிவுபூர்வமான சிந்தனை, உணர்வுபூர்வமான சிந்தனை என்ற இந்த இரு வகைகளில் பெரும்பாலும் நம்நாட்டின் பழக்க வழக்கங்களை வைத்துப் பார்க்கும்போது, உணர்வுபூர்வமாக சிந்திப்பவர்களே அநேகர் எனலாம். எந்த ஒரு விஷயத்தையும் பற்றிய யோசனைகளை செயலாக்கும்போது, அதை உணர்வின் அடிப்படையில் அமைவதைப் பெரும்பாலும் காணலாம். மேலைநாடுகளின் அடிப்படை அமைப்பைப் பொறுத்து நாம் கண்டால் அறிவுபூர்வமான அதேசமயம் சில நேரங்களில் உணர்வும் கலந்த சிந்தனையைப் பெரும்பாலோர் வெளிப்படுத்துவர். இந்த இரண்டையும் மீறி இன்னொரு வகையிலும் நம் சிந்தனையும் செயல்பாடுகளும் அமையும். அதேபோல் நல்லது & கெட்டது; வெற்றி & தோல்வி போன்ற இரட்டைகளைத் தாண்டி இவற்றில் அமையாத இன்னொரு வழியிலும் தீர்வுகள் அமையும்... இவற்றைப் புரிந்துகொள்வது சற்றே கடினம் என்றாலும், அந்த மூன்றாவது சிந்தனையின் வெளிப்பாடுகள் சில பிரமிக்கத்தக்க வகையில் அமைந்து உணர்வுக்கும் அறிவுக்கும் சவால் விடுவதுண்டு. அப்படிப்பட்ட மூன்றாம் பரிமாணச் சிந்தனையின் திறனையும் விளைவுகளையும் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டில் சிக்கித் தவிக்கும்போது, மரபாக நம் வழிவழிவந்த ரீதியில் சிந்திக்காது, அறிவும் உணர்வும் கலந்த மூன்றாம் பார்வையில் சிந்திப்பதால் ஏற்படும் நன்மைகள், பலன்களை சில உதாரணங்கள் மூலம் இந்நூலில் காணலாம். தீர்வுகளை நோக்கியே பயணிக்கும் நம் சிந்தனைகளுக்கு ஒரு பாதையை வகுத்துக்கொள்ளும் கலையை இந்நூல் காட்டுகிறது. எதையும் நாம் அணுகும் முறையை வைத்து நம்மை எடைபோட்டுக் கொள்ளும் சுய பரிசோதனைக்கலை இந்த நூலின் உதாரணங்களைப் படிக்கும்போது நமக்குள் வளர்ச்சிபெறும். காரணம், எந்த ஒரு சிக்கலையும் நாம் ஆகிவந்த பழைய முறையில் அணுகுவதற்கும், மூன்றாம் பரிமாணச் சிந்தனையின் வழியில் அணுகுவதற்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவதன் மூலம், நமக்கான சிந்தனை உத்தி முழுதாகக் கிடைக்கிறது. தன்னம்பிக்கை துளிர்த்து, பயத்தை அறுத்து, சுயத்தை வளர்க்கும் வித்தையை நமக்குள் மேம்படுத்துகிற‌து இந்த‌ நூல். ******************************************************************************************************************************************************
நீங்களும் நுகர்வோரே வழக்கறிஞர் த.இராமலிங்கம் 978-81-89936-61-7 சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான். நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் மக்கள் நம் நாட்டில் அதிகம். உரிமைகளைப் போராடிப் பெறுவது; கடமைகளைக் குறைவின்றிச் செய்வது; இவை இரண்டும் இணைந்த சமுதாயமே வெற்றிபெற்ற சமுதாயமாகும். இந்த உலகில் நம் அனைவரின் அடிப்படைத் தேவையாக விளங்குபவை உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இவற்றைப் பெறுவதற்கு ஏதோ ஒரு தருணத்தில், நாம் அந்தப் பொருள்களின் பயனை அனுபவிக்கக்கூடிய பயனாளிகளாக, அதாவது நுகர்வோராக மாறுகிறோம். முதலில், நுகர்வோர் என்பவர் யார், முறையீட்டாளர் என்பவர் எப்போது அதற்குரிய தகுதியைப் பெறுகிறார், பொருள் நுகர்வின்போது ஏற்படும் நூதன முறைகேடுகள் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன, நுகர்வின்போது நாம் எப்படி விழிப்போடு இருந்து தவறைக் கண்டுபிடிப்பது போன்ற பலவித கேள்விகளுக்கான‌ பதில்கள் நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது. இப்படித் தெரியாத பல கேள்விகளுக்கான பதில்களைத் தாங்கி, நம்மை ஒரு விழிப்பு உணர்வுள்ள நுகர்வோராகத் துலங்கச் செய்திட இந்நூல் துணைபுரியும். நாம் வாங்கும் பொருள் தரமானதுதானா, சரியான அளவுடையதுதானா, சிறந்த பொருளைக்கொண்டு தயாரிக்கப்பட்டதுதானா, நாம் தரும்  அப்பொருளுக்கு சரியானதுதானா இவைபோன்ற கேள்விகள் நம் மனத்தில் எழலாம். ஒருவேளை பயனாளர் பொருளை வாங்கி ஏமாந்துவிட்டால் எப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது, எந்த நீதிமன்றத்தை அணுகுவது, நுகர்வோர் நீதிமன்றங்கள் என்னென்ன, நீதிமன்ற வகைகள் என்னென்ன, அவை எங்கு உள்ளன, அவற்றை நுகர்வோர் எப்படி அணுகுவது போன்ற தகவல்களையும் தாங்கியுள்ளது இந்நூல். ******************************************************************************************************************************************************
தீரன் சின்னமலை சூலூர் கலைப்பித்தன் 978-81-89936-62-4 இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் பங்கேற்ற‌வர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு பிடிக்க வந்த வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூறையாடப் போவது தெரியாமல் அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். அப்படிக் காலடி வைத்த வெள்ளை ஏகாதிபத்யம், இந்தியாவுக்குள் இருக்கிற வியாபாரச் சந்தையைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டில் இருக்கிற இயற்கைச் செல்வ வளங்களையெல்லாம் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கியது. எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு மறைமுகமாக உதவினர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், ஆக்டோபஸ் போல கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்து சுர‌ண்டத் தொடங்கி, இறுதியாக நம்மிடமே வரி வசூல் செய்து, நம் தேசத்துக்குள் இருந்துகொண்டு நம்மையே அடிமைப்படுத்தினார்கள். இந்தச் சூழலை உணர்ந்து, பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீரர்களில் ஒருவன் தீரன் சின்னமலை. வெள்ளையர்களை விரட்டியடிக்க முடியாவிட்டாலும், அன்னியர்களின் கண்களில் விரல் விட்டு கலங்கச் செய்து, கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டான் தீரன் சின்னமலை. வரலாற்று வீரனான தீரன் சின்னமலையைப் பற்றிய இந்த நூல், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். ******************************************************************************************************************************************************
மைக்ரோவேவ் ஓவன் சமையல் வசந்தா விஜயராகவன் 978-81-89936-63-1 எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை. அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில் தேக்கிக்கொண்டு தலைவி, தலைவனுக்கு உணவு பரிமாறும் அழகை, சங்க இலக்கியங்கள் அழகாகவும் நயமாகவும் படைத்துக் காட்டுகின்றன! தமிழருக்கு எப்போதுமே சமையல் ஒரு பிடித்தமான கலையாகவே இருந்து வருகிறது. காதலும் பேரன்பும் நிரம்பி வழிகிற குடும்ப வாழ்க்கையில் மேலும்மேலும் இன்பத்தைப் பெருக்குகிற சக்தி சமையல் கலைக்கு உண்டு. சுவையோடு கூடிய உணவு, அறிவையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்கிறது. வயிறு குளிர்ந்தால் மனதும் குளிர்ந்து போகிறது. இந்த நூலில் நம்முடைய மனதையும் வயிறையும், வகைவகையான சமையல் குறிப்புகளால் மேலும் குளிர வைத்திருக்கிறார் வசந்தா விஜயராகவன். அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மைக்ரோவேவ் ஓவன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு இப்போது ஒரே நூலாக வந்திருக்கிறது. ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்ட சமையல் நூல்களின் வரிசையில் இது மற்றுமொரு பங்களிப்பு. சமையலில் புதிய நுணுக்கங்களும், புதிய செய்முறைகளும், புதிய வகைகளும் கொண்டதாக சமையல் கலையின் நவீன முறையை இந்த நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். இனி அலுப்பில்லாமல், அவதியில்லாமல் எளிமையான ஒரு கலையாக சமையலை அணுகமுடியும். ******************************************************************************************************************************************************
கண்டேன் கயிலையான் பொற்பாதம் டாக்டர் என்.கங்கா 978-81-89936-64-8 தன்னுடைய அனுக்கிரஹம் எப்போதெல்லாம் மனிதர்களுக்குத் தேவைப்படும் என்பதை இறைவன் அறிவான். அவனுடைய ஒளிவட்டம் ஒருநாள் நம் ஆன்மாவையும் பிரகாசிக்க வைக்கும். அந்தத் திருநாளில் அவனுடைய மலரடிகளில் சரண் அடைகிற பாக்கியத்தைப் பெறவேண்டும். லௌகீக வாழ்க்கையின் அர்த்தம் அப்போது தானாகவே புரிந்துவிடும். இறை அனுபவம் அற்புதமானதோர் பேரானந்த நிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. பனியைப் போல், மழையைப் போல், ஆறு, ஏரி, நதிகளைப் போல் குளிர்ச்சியானது, பவித்ரமானது, தூய்மையானது இறை உணர்வு. அத்தகைய உணர்வைப் பெறவேண்டும் என எண்ணுகிற யாவருக்கும் கண்டேன் கயிலையான் பொற்பாதம்! என்கிற இந்தப் பயண நூல் ஒரு சிறந்த பரிசு! கயிலை மலையின் பிரம்மாண்ட தோற்றம், மலைகளுக்கு ஊடாக சில்லிட்டுக் கிடக்கும் ஏரிகளின் அழகு, மஞ்சள் வெயில் தலைகாட்டும் ஆனந்த கணங்கள், பனிமூடிக் கிடக்கும் குளிர்ச்சிப் பொழுதுகள், மழை சொரியும் அற்புத நேரங்கள், சித்திரங்களும் வரலாறுகளும் பதிவு செய்யப்பட்ட கோயில்கள், இறைவனை தரிசித்த, உணர்ந்த, மெய் சிலிர்த்த கணங்கள், வெவ்வேறு மனித மொழிகள், உறவுகள்... என்று சகலமும் நிறைந்திருக்கின்றன நூல் முழுவதும். சக்தி விகடன் இதழில் பயணத் தொடராக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற‌ ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ******************************************************************************************************************************************************
மாயாவனம் இந்திரா சௌந்தரராஜன் 978-81-89936-65-5 இயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித்தர்கள் வாழ்ந்ததுமான தெய்வீக பூமி. இப்படிப்பட்ட வனம்தான் மூலிகைகள் நிறைந்த ஆத்ம சக்தியை பல சித்தர்களுக்கு வழங்கியது என்ற விவரத்தை இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஆசிரியர் கொடுத்துள்ளார். ஈருளி சித்தர், கணவாய் சித்தர் போன்ற சித்த புருஷர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் எப்படி விஞ்ஞானமே வியக்கும் மருத்துவ சிகிச்சைகளை வனத்தின் மூலிகைகளாலும் சித்த சக்தியாலும் சாதித்தார்கள் என்பதை இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக எழுதியிருக்கிறார். இன்னமும்கூட சித்தர்கள் வாழ்வதாகவும், அப்படிப்பட்ட சித்தர்களின் வல்லமையையும் சித்துவிளையாடல்களையும் இன்றைய சூழலுக்கு ஏற்ப, மனித மனதின் தன்மைகளை வர்ணனைகளோடு விளக்கியிருக்கிறார். தாய், தந்தை, பாட்டி என்ற அழகான ஒரு குடும்பத்தின் கதாபாத்திரங்களோடு சில வேறுபட்ட கதாபாத்திரங்களையும் சேர்த்து, தத்துவார்த்தங்களோடு இந்தப் படைப்பை எழுதியுள்ளார். இன்று, பெண்களைப் பெரிதும் பாதிக்கும் மெகா தொடரின் தாக்கத்தையும், அதனால் எந்த அளவு சில பெண்களின் அறிவு தவறிப்போகிறது என்பதையும் படிப்பவரை சிந்திக்கத் தூண்டும்விதமாக வைஜெயந்தி கதாபாத்திரத்தை உலவவிட்டுள்ளார். அற்புத சக்திகளோடு ஒரு மனிதன் இன்றைய சூழலில் சிக்கினால் மனித சமுதாயம் அவனுடைய சக்தியை சோதனை என்ற பெயரில் என்ன பாடுபடுத்தும் என்பதைப் பற்றிய கற்பனை, நம்மை ரசித்துப் படிக்கத் தூண்டுகிறது. மருந்தே இல்லாத உயிர்க்கொல்லி நோய்க்கும் சித்தர்கள் தீர்வு காண்பார்கள்; ஆனால் விதிக்கு மாற்று கிடையாது என்பதை இந்த நாவலின் கதாநாயகன் மற்றும் அவனது தந்தை கதாபாத்திரங்கள் மூலம் உணர்த்துகிறார். மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழ ஆசைப்படலாம்; ஆனால் நம் வாழ்க்கை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்குகிறது மாயாவனம் நாவல். ******************************************************************************************************************************************************
பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் கங்கா ராமமூர்த்தி 978-81-89936-67-9 இன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம். அதிக  கொடுத்து அறிமுகமில்லாத செயற்கை க்ரீம்களையும், லோஷன்களையும் வாங்கிப் பூசிக்கொண்டு இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்வதைவிட, இயற்கையாக விளைந்த மூலிகை, மருந்துப் பொருட்கள், அஞ்சறைப் பெட்டி அழகு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக முகத்தைப் பொலிவடையச் செய்து மூலிகைகளின் மூலம் அழகை உங்கள் முன் மண்டியிடச்செய்ய முடியும். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி; முகத்திலுள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பால் நாம் அடையும் நன்மை என்ன; அலர்ஜி, அல்சர் ஆகியவற்றுக்கான காரணம்தான் என்ன; மோர் ஒரு மருந்தாவது எப்படி; வில்வ இலையைக் கொண்டு உடலின் வில்லங்கத்தைப் போக்குவது எப்படி; துளசியைக்கொண்டு நம் உடல் உறுப்புகளை தூய்மைப்படுத்துவது எப்படி; புறக்கண்ணில் ஏற்படும் கருவளையத்தைப் போக்குவது எவ்வாறு போன்ற பலவித நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அதிகச் செலவில்லாமலேயே அழகை அதிகரித்துக் கொள்வது எப்படி; எந்தெந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் போன்ற அழகுக் குறிப்புகளை அனைவருக்கும் அள்ளித்தந்து அழகின் ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். இதைப் படித்தவுடன் வாலிப உள்ளங்களுக்கு நாமும் ஏன் ஒரு பியூட்டிஷியன் ஆகக்கூடாது என்று தோன்றலாம். இதையே ஒரு சிறு தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம் என்பதையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். ******************************************************************************************************************************************************
எமர்ஜென்ஸி _ நடந்தது என்ன? வி.கிருஷ்ணா ஆனந்த் 978-81-89936-68-6 எதிரி நாட்டு தாக்குதலால் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ, அல்லது உள்நாட்டுக் குழப்பம் நாட்டைத் துண்டாடிவிடாமல் காப்பதற்கோ அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவது வழக்கம். 1975ல் நம் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு இந்த இரண்டுமே காரணம் இல்லை என்பதையும், அரசுக்கு உள்நாட்டு சக்திகளின் எதிர்ப்பு என்ற போர்வையில் அந்த நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. மேலும் அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள், தங்கள் அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற தகவல்களைத் தருகிறது இந்த நூல். அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்த சிலர் அரசாங்கத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினர், பத்திரிகைகளின் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது, நீதியின் கரம் எவ்வாறு முடக்கப்பட்டது போன்றவற்றையும் இந்த நூல் தெளிவாகத் தெரிவிக்கிறது. எமர்ஜென்ஸிக்கு எதிர்ப்பு இல்லாமலில்லை. ஆனால் அவை கோலியத்துக்கு எதிராக சாம்சன் போராடியதைப்போல சமமில்லாத போராட்டமாக இருந்தது. நாட்டின் சுதந்திரத்துக்காக ஒரு சத்தியாகிரகப் போரை சந்தித்தவர்கள், சுதந்திர இந்தியாவில் மீண்டும் ஒரு போராட்டத்தை சந்தித்தார்கள். ஆனால், ஆளும் தரப்பு பிரிட்டிஷாரின் அடக்குமுறையைவிட அதிக உத்வேகத்தோடு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறையைக் கையாண்டது. இதிலும் ஆளும் தரப்புக்கு எதிராக சத்தியாகிரகப் போர் வழிமுறையை ஜனநாயக விரும்பிகள் கையாண்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன? அவற்றின் சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டது யார்? அவற்றின் விளைவுகள் எத்தகையதாக இருந்தன? போன்ற தகவல்களை இந்தத் தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் நெருக்கடிகால சரித்திரச் சம்பவங்கள் கோவையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் காட்டப்பட்டுள்ள விஷயங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டால், அரசியல் நிலவரங்களை உணர்ந்துகொண்ட மனிதராக நம்மை உயர்த்திக்கொள்ள முடியும். ******************************************************************************************************************************************************
'கோல்'! இலியாஹு எம்.கோல்ட்ராட் 978-81-89936-69-3 நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் எதிர்ப்படக் கூடியவைதான். ஒரு தொழிற்சாலையில் புதிதாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒருவர், நலிந்து கிடக்கும் அதன் இக்கட்டான சூழலிலிருந்து, அந்த நிறுவனத்தை எப்படி மீட்டெடுக்கிறார்... மீண்டும் லாபம் ஈட்டித்தரும் தொழிற்சாலையாக அதை எப்படி மாற்றுகிறார்... இந்த மீட்புப் போராட்டத்தில் தொழிற்சாலைப் பணிகளிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி, தன் மனைவியுடன் இரவு உணவு வேளைகளில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பணிச்சுமை அவரை எப்படி வாட்டியெடுக்கிறது... அதனால் மனைவியைப் பிரிந்து வாடும் அவர், எத்தகைய மனத் துயரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது... இந்தச் சூழலில் இருந்துகொண்டு ஆலையை அவர் எப்படி நிர்வகிக்கிறார்... மனைவியுடன் எப்படி இணைகிறார்... தொழிற்சாலைக்கு ஈட்டிக்கொடுத்த லாபம் எப்படி அந்த அதிகாரியை உயர் பதவிக்கு இட்டுச் செல்கிறது... என்பதையெல்லாம் தன்னுடைய எளிய தமிழாக்கத்தில் அஞ்சனா தேவ் படம்பிடித்துக் காட்டுகிறார். இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தபோது வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். இதில் இடம்பெறும் தொழிற்சாலைகள் தொடர்பான மிக நுணுக்கமான விவரங்களையும், நிர்வாகக் கலைகளையும்கூட ஆர்வத்தோடு படித்து உள்வாங்கிக் கொண்டார்கள். இந்த நூல், அந்தக் கதையை ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது. ******************************************************************************************************************************************************
யோகா... ஆஹா! விவேகானந்தா கேந்திரம் 978-81-89936-70-9 யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா. இன்றைக்கு யோகா கலை அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. உலக அளவில், பலதரப்பட்ட நோய்களுக்கும் நிவாரணியாக யோகா பயிற்சிகளை (யோகா தெரபி) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நவீன உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வேகமான, பதற்றம் நிறைந்த வாழ்க்கை முறை, சந்தோஷத்தைக் காட்டிலும் மனிதனுக்கு கூடுதலான சங்கடங்களையும், மன ரீதியான பிரச்னைகளையுமே கொடுக்கின்றன. அதனால் ஏற்படும் மனக் குழப்பம், அமைதியின்மை, கோபம் ஆகியவற்றால் உடல் பாதிக்கப்படுகிறது. யோகா பயிற்சி மனதை அமைதிப்படுத்துகிறது. மன இறுக்கத்தைப் போக்குகிறது. நோயின் தாக்கம் கணிசமாகக் குறைகிறது. ஜெர்மனியில் எட்டுப் பேரில் ஒருவர் யோகா பயிற்சி செய்பவராக இருக்கிறார். நார்வே, ஸ்வீடன் உட்பட இன்னும் பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் உடற்பயிற்சிக் கூடங்களிலும் யோகா பயிற்றுவிக்கப் படுகிறது. அலுவலகங்களிலும்கூட யோகா வகுப்பு உண்டு! உலகம் முழுவதும் யோகா பிரபலமாக இருந்தாலும் அதன் ஆணிவேர் நம் இந்திய தேசத்தில் ஊன்றப்பட்டது என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம். விவேகானந்தா கேந்திரத்தின் வழிகாட்டலில், சக்தி விகடன் இதழில் இந்தக் கட்டுரைகள் யோகா... ஆஹா! என்ற பெயரில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்த‌ நூல். ******************************************************************************************************************************************************
டேக் இட் ஈஸி பாலிசி க. நித்ய கல்யாணி 978-81-89936-71-6 வாழ்வில் நாம் பல்வேறு தேவைகளையும் வசதிகளையும் பெற உழைக்கவும் சேமிக்கவும் வேண்டியது அவசியம். அப்படி நாம் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வதும் கட்டாயம். அதற்கு உதவுவதுதான் இன்ஷுரன்ஸ் பாலிசி. இந்தியாவில் லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் தொடங்கி வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கமே அதனிடம் கடன் வாங்கும் அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ந்து, உயர்ந்து நின்றது. க. நித்ய கல்யாணி எழுதி நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இன்ஷுரன்ஸ் என் சேவகன் மற்றும் மோட்டார் விகடன் இதழில் எழுதிய டேக் இட் ஈஸி பாலிசி கட்டுரைகள் தொகுக்க‌ப்ப‌ட்டு இந்த‌ நூலாக வெளிவந்துள்ள‌து. நியூ இண்டியா அஷ்ஷுரன்ஸ் நிறுவன அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் மிகுந்த நூலாசிரியர், ஆயுள் காப்பீட்டின் அவசியத்தையும் பயனையும் எடுத்துக் கூறுகிறார். பல நிறுவனங்கள் பாலிசியை விரிவுபடுத்தியுள்ளது பற்றியும், லண்டன் மாநகரமே பெரும் தீ விபத்தால் நிலைகுலைந்து நின்ற சமயம் அதிலிருந்து மீண்டுவர தோன்றியதுதான் இன்ஷுரன்ஸ் திட்டம் என்று அது உருவான வரலாற்றையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். உடல் உறுப்புகளைக் காப்பீடு செய்வது குறித்தும், கார், பங்களா போன்றவற்றை இன்ஷுர் செய்துகொள்வதால் உண்டாகும் நன்மைகளையும், விபத்துக்குள்ளானால் ஏற்படும் நஷ்டத்திலிருந்து அவற்றை ஈடுகட்டுவதன் பயனையும் இந்த நூலில் தெளிவாகவும் அழகாகவும் விளக்குகிறார். ஆயுள் காப்பீடு முதல், சேவை பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, ஓன் டேமேஜ் பாலிசி, ஓய்வுக்குப் பிறகும் மாத வருமானம், மணிபேக் பாலிசி, எண்டோ வ்மென்ட் பாலிசி, பிரீமியம் தள்ளுபடி குறித்தெல்லாம் எளிதாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். உங்கள் பாதுகாப்புக்கு இந்த நூல் நல்ல வழிகாட்டி. ******************************************************************************************************************************************************
சின்ன வயதினிலே மெரீனா 978-81-89936-72-3 பள்ளிக்கூடத்தில் அழுதுகொண்டே சேர்ந்தது, தெருவில் கோலி, பம்பரம், கிரிக்கெட் விளையாடியது, வீட்டில் குறும்புகள் செய்து அடி வாங்கியது, க்ளாஸை கட் அடித்து சினிமாவுக்குப் போனது, கொஞ்சம் வயதுக்கு வந்ததும் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் காதல் வயப்பட்டது... மனத்திரையை யார் ரீவைண்ட் செய்தாலும் இப்படி சின்ன வயது நினைவுகள் அடுக்கடுக்காக ஓடி மகிழ்விக்கும்! மறக்க முடியாத அந்தச் சம்பவங்களை அசைபோடும் போதெல்லாம் அது ஒரு பொற்காலம் என்று மகிழ்ச்சி கொள்ளவும், அந்த நாட்கள் மீண்டும் திரும்பி வராதா என்று ஆதங்கப்படவும் வைக்கும்! இளமை நாட்களின் சம்பவங்களை எல்லோரும் எழுத்தில் பதிவு செய்வதில்லை; செய்யவும் முடியாது. அந்த வகையில் பேனா பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்! ஆர்.கே.நாராயண் மாதிரியான எழுத்தாளர்கள் தங்களது சின்ன வயது ஞாபகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். தமிழிலும் ஒரு சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். 1985ல் தனது சின்ன வயது அனுபவங்களை விகடனில் மெரீனா தொடராக எழுதியபோது அவை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு வாரமும் கட்டுரையைப் படிக்கும்போது, அட! நாமும்கூட இதுமாதிரி சேட்டைகளை யெல்லாம் செய்திருக்கிறோம் என்று தங்களுடைய சிறுவயது நினைவுகளோடு சம்பந்தப்படுத்தி மகிழ்ந்தார்கள் வாசகர்கள்! அந்தத் தொடர் கட்டுரைகள், சீனியர் ஓவியர் கோபுலுவின் குறும்பு கொப்புளிக்கும் சித்திரங்களுடன் இந்த நூலாக வந்துள்ளது. ******************************************************************************************************************************************************
பாரதியின் பார்வையில்... மு. ஸ்ரீனிவாசன் 978-81-89936-78-5 சுதந்திரத்தையே மூச்சாகக் கொண்டு, கடைசி வரை அந்த மூச்சுக்காற்றை வலுவுள்ளதாக்கி வாழ்ந்தவர் மகாகவி பாரதி. இலக்கியத்தில் சிகரமாகத் திகழ்ந்தவர். எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருந்த அவருடைய நட்பு வட்டமும் மிகச் சிறந்ததாக அமைந்திருந்தது. அவர்களுடனான பாரதியின் நட்பு, நாட்டுக்கு நன்மை செய்தது; சோர்ந்து கிடந்த மக்களுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை அளித்தது. இப்படி, அறிஞர்கள், கவிஞர்கள், இசைக் குயில்கள், ஆன்மிக அருளாளர்கள் போன்றோருடன் பாரதி கொண்டிருந்த நெருக்கத்தால், பாரதியின் மற்றொரு பரிமாணம் எப்படி இருந்தது என்பதை, நாம் இந்த நூலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். பாரதியின் கண்ணோட்டத்தில் உத்தமர்களைப் பார்ப்பது நம் கண்ணுக்கு விருந்து, எண்ணத்துக்கு உரம். பாரதி இந்தக் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தைப் பார்த்து வெளிப்படுத்தியுள்ளார்... என்பதை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ள பாங்கு, பாரதியின் மற்றொரு பரிமாணத்தை நாம் எளிதாக உணரும்படி செய்கிறது. பாரதிக்கு முன்னர் இருந்த உலகக் கவிஞர்கள், புரட்சியாளர்கள் எப்படி பாரதி கொண்டிருந்த கொள்கைகளோடும் கவிதைக் கருத்துகளோடும் இணைந்துப் போயிருக்கிறார்கள் என்கின்ற ஒப்புமைப் பார்வை, இந்த நூலில் பார்க்கப்பட்டுள்ளது. தேசத்தலைவர்களோடு கொண்ட நெருக்கம் காரணமாக பாரதியின் தேசியப் பார்வை வலுவாக இருந்ததையும், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் கொண்டுவரப்பட வேண்டும் என்று செயல்பட்டதையும் நாம் பாரதியின் இன்னொரு பரிமாணத்தில் பார்க்கிறோம். பாட்டுக்கொரு புலவனாக நாம் பார்த்த பாரதி, இங்கு, சோர்வுற்றபோது நிதானமாக இருந்தான்; அட்டூழியம் கண்டு நெருப்பென எழுந்தான்; சோகத்தில் கரைந்தான்; நிலைகெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் மறுகினான். அமைதியையும் சாந்தியையும் கண்டான். அவை மட்டுமல்ல, அவற்றை இதோ பார்த்துக்கொள் என்று நம்மையும் காண வைத்தான். ஒரு நண்பனாக, மந்திரியாக, நல்லாசிரியனுமாக இருந்த பாரதி, பண்பிலே தெய்வமாக, நம் எல்லோருக்குமே வழிகாட்டியாகவும் இருக்கிறான். இவன் பாரதிதானா, அல்லது கலைவாணியேவா என்ற மலைப்பு, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும். ******************************************************************************************************************************************************
கனாக்கண்டேன் தோழி முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார் 978-81-89936-79-2 கர்மம், ஞானம், பக்தி ஆகியன செழித்த பாரத புண்ணிய பூமியில் இறையருளைப் பெற, அவரவர்க்குத் தகுந்த வழியில் நாடுகிறார்கள். அவற்றில், குறையிலா பக்தி செய்து இறைவனை நாடுவது சிறந்தது என்பது, பக்தர்கள் பலருடைய வாழ்விலிருந்து காட்டப்படும் நல்ல வழியாக உள்ளது. வடக்கே மீராவும், தெற்கே ஆண்டாளும் இந்த பக்தியை சின்னஞ்சிறார் உள்ளத்தே வித்தெனப் பதித்த வித்தகர்களாகத் திகழ்கிறார்கள். கண்ணனிடம் நாயக & நாயகி பாவத்தில் பக்தி செலுத்திய ஆண்டாள், மீரா ஆகியோரின் பக்திபூர்வமான பாடல்களை இன்றும் பக்தர்கள் பாடுகிறார்கள். கண்ணனிடம் மையல் கொண்டு, அவனையே மணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும்போல், அன்னை லட்சுமியே சீதையாகவும் ருக்மிணியாகவும் அவதாரம் செய்து ஸ்ரீமந் நாராயணன் கைத்தலம் பற்றியதை நாம் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பார்க்கிறோம். இந்தத் திருக்கல்யாண வைபவங்களை இன்றளவும் மனதால் நினைத்து, பக்தர்கள் இறை மூர்த்தங்களுக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி அழகு பார்க்கிறார்கள். இந்த வைபவம் நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன; எதற்காக இதை நடத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்த நூலில் பதிலளித்திருக்கிறார் ஸ்ரீ முக்கூர். விசுவாமித்திர மகரிஷி ஒருமுறை வீம்புக்காக ஒரு போட்டி வைத்து, அதன் மூலம் அரிச்சந்திரன் & சந்திரமதி தம்பதியை பிரித்துவைத்து அபவாதம் தேடிக் கொண்டதையும், அதற்கு பிராயச்சித்தமாக ராமனையும் சீதையையும் சந்திக்க வைத்து அவர்களது திருமணத்தை நடத்திவைத்து அழகு பார்ப்பதையும் இந்த நூலில் ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார். அதேபோல், கண்ணனை நினைத்தே உருகிக் கிடந்த ருக்மிணி, வயதான அந்தணர் ஒருவர் துணையுடன் எப்படி கண்ணனின் கரம் பற்றினாள் என்பதையும், திருமலையில் வீற்றிருந்த ஸ்ரீனிவாசன் பத்மாவதியின் கரம் பற்ற குறத்தி வேடமெடுத்து மணம் செய்து கொண்ட விதத்தையும் ஸ்ரீ முக்கூர் சொல்லியுள்ள பாங்கு ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. மணம் செய்துகொள்வதில் அவசரம் காட்டுவதுபோல், மணமுறிவுக்கும் அவசரம் காட்டும் அவலம் புகுந்துள்ள இன்றைய காலத்தில், ஸ்ரீமுக்கூர் காட்டும் அரிய விளக்கங்கள் தம்பதிகளுக்கிடையே தோன்றும் பிரிவினை எண்ணத்தைப் போக்கும் நல்மருந்தாகத் திகழ்கின்றன. ******************************************************************************************************************************************************
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பா.சு.ரமணன் 978-81-89936-80-8 பகவான் அவ்வப்போது நமக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவதாரம் எடுக்கிறார்; அல்லது, குருமாராகத் தோன்றி நம்மைக் கடைத்தேற்றுகிறார். இது அவருடைய லீலை. குருவிடம் சரணடைந்து அவருடைய உபதேசங்களைக் கேட்கவேண்டும்; ஏனென்றால் குரு நமக்குப் பரிச்சயமானவர்; நம்முடனேயே இருந்து நம்மைத் திருத்திப் பண்படுத்துபவர். நமக்கு நன்கு பழக்கமான அப்படிப்பட்ட ஒரு குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியமூட்டுவதும் பற்பல உணர்ச்சிகளின் கோவையுமான சம்பவங்களை இந்நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர் பா.சு.ரமணன். சாதாரண மனிதராகப் பிறந்து உலகம் போற்றும் உத்தமராக, குருவாக மாறிய அவருடைய வாழ்க்கை வரலாறு வியக்க வைக்கிறது. அவருடைய உபதேசங்கள் நம்முடனேயே வாழ்பவர் ஒருவர் சொல்வதைப்போல, அவ்வளவு அன்யோன்யமாக இருக்கின்றன; ஆகவே கடைப்பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன. குட்டிக்குட்டிக் கதைகளின் மூலமாக ஆழ்ந்த உபதேசங்களைக் கொடுக்கிறார் பரமஹம்சர். அதுவும், சூரணத்தில் தேனைத் தடவி குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல அல்லாமல், ஒரு விஷயத்தை உள்வாங்கிக்கொள்வதில் சிரமப்படுபவரும்கூட, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றைத் தெரிவிக்கிறார். கடவுளை நினைப்பதும், அவரை மறக்காமல் இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்று பட்டவர்த்தனமாகவே தெரிவிக்கிறார். அதேசமயம் குயவன் எவ்வாறு பாண்டத்தைச் செய்யும்போது வலது கையால் களிமண்ணுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், ஒரேயடியாக நசித்துவிடாமல் இடது கையால் உள்ளிருந்தே தாங்கிக்கொள்கிறானோ அதைப்போல, ஆன்மிக அன்பர்களையும் சீடர்களையும் அவர் தாங்குவதை இந்நூலில் உணரலாம். ******************************************************************************************************************************************************
தாரா... தாரா... தாரா... புஷ்பா தங்கதுரை 978-81-89936-82-2 உரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நாவல் வரிகளில் உலாவ விட்டார்கள். ஏன், நாமும்கூட முகம் தெரியாத யாரோ ஓர் எழுத்தாளனின் படைப்புகளில், ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கலாம்; வாழ நேரலாம். இப்படி உண்மை நிகழ்ச்சிகளை, கற்பனை கலந்து தனக்கே உரிய விறுவிறு நடையில் கதைகளில் புகுத்தி வாசகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் புஷ்பா தங்கதுரை. இவர் எழுதிய தாரா... தாரா... தாரா... ஆனந்த விகடனில் 1982ல் தொடராக வெளியானபோதே நிறைய வாசகர்களை தன் வசப்படுத்தியிருந்தது. நாவலைப் படித்தவர்கள், முகம் தெரியாத யாரோ சிலரால் நாமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்..! என்று உணர்ந்தனர். இப்படியெல்லாம்கூட நடக்குமா..? என்றும் வியந்தனர்! பெண்களை மையப்படுத்தி எழுதிய நாவல்களின் வரிசை நீளமானது! அந்தவகையில், இந்த நாவலின் மையமும் ஒரு பெண்ணை முன்னிறுத்தியே நகர்கிறது. பல்வேறு திருப்பங்கள் உடைய நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் போல இந்நாவலின் பக்கங்கள் முழுக்கவும் சுவாரஸ்யங்கள் விரவிக் கிடக்கின்றன. அவசர வாழ்வின் நெரிசலில் சிக்கி, சில்லுச்சில்லுகளாக உடைந்துபோயுள்ள நம்முடைய மனம்... இந்த நாவலைப் படிக்கும்போது அனைத்தையும் மறந்து, ஒன்றாகக் குவிந்து நாவலின் நாயகியோடு பயணமாவதை உணரமுடியும். ******************************************************************************************************************************************************
டோனி தி பாஸ் சி. முருகேஷ் பாபு 978-81-89936-83-9 கபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை! அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர்! பிரமிக்க வைக்கும் வளர்ச்சி இது! கிரிக்கெட் அதிகம் அறிமுகமில்லாத ஒரு மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் அதிரடி ஆட்டக்காரர் டோனி. சமீபத்தில் இங்கிலாந்து பயணத்துக்குப் பின் திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகிவிட, 20‍_20 உலகக் கோப்பை அணியின் தலைமைப் பொறுப்பு டோனியின் வலிமைமிக்க தோளில் ஏற்றி வைக்கப்பட்டது. டோனியைப் பொறுத்தவரை இது சுகமான சுமை! புன் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டு மிஸ்டர் கூல் மாதிரியாகச் செயல்பட்டு, தனக்குக் கீழ் விளையாடிய துடிப்புமிக்க இளம் வீரர்களை அரவணைத்து வெற்றிக் கனியைப் பறித்து வந்திருக்கிறார்! இன்றைய காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் இளம் வயதிலேயே பலர் உயர் பதவிகளில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அதேபோல் அரசியலிலும் அவ்வப்போது இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஆனால், விளையாட்டில் முக்கியமாக கிரிக்கெட்டில் இதுமாதிரி இளசுகளின் தலையில் அத்தனை எளிதில் கிரீடம் சூட்டப்படுவதில்லை. விதிவிலக்காக டோ னிக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது! டோ னிக்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை விளக்குகிறது இந்த நூல். அவர் பிறந்து, வளர்ந்த சூழலில் ஆரம்பித்து, உச்சத்தை அவர் எட்டிப் பிடித்தது வரையிலான பல்வேறு சம்பவங்களை இந்த நூலில் சுவைபட தொகுத்திருக்கிறார் சி.முருகேஷ்பாபு. வெற்றி நாயகனின் இந்த வாழ்க்கைக் கதை, இலக்குகள் பல கொண்டு வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் பலருக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது இந்த நூல். ******************************************************************************************************************************************************
பந்தநல்லூர் பாமா கொத்தமங்கலம் சுப்பு 978-81-89936-84-6 இன்றைய உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும், கிளப், பார் போன்ற கேளிக்கைகளும், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களும் பொழுதுபோக்கு அம்சங்களாக வளர்ந்துள்ளன. என்னதான் ஊடகங்கள் இருந்தாலும் படிப்பதில் கிடைக்கும் சுகம், சுவை, ஆனந்தம், பரவசம் அலாதியானது; தனித்துவமானது. இந்தப் பரவசம், நாவலைப் படைப்பதிலும் கிடைக்கும். நாவல் எழுதுவது ஒரு தவம் என்றால், அதைப் படிப்பது தவத்தால் பெற்ற பயன். எழுத்து வீச்சில் வல்லவரான கொத்தமங்கலம் சுப்பு செய்த தவமே பந்தநல்லூர் பாமா! இந்த நாவலில், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த தமிழ்நாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியை, தன் எழுத்தால் அழகுற படம் பிடித்து, ஒரு திரைப்படம் போல விரித்துக் காட்டியுள்ளார். பரதக்கலையை உயிர் மூச்சாகக் கொண்ட பாமாவின் உணர்ச்சிப் போராட்டமே இந்த நாவல். பாமாவின் இளமை அழகையும், மயங்க வைக்கும் சாரீரத்தையும், பரதத்தையும் பார்த்து நாடே போற்றுவதையும், அவளைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறவர்களையும் தனக்கே உரிய எழுத்து நடையில் நளினமாகக் கையாண்டிருப்பதைப் படிக்கப் படிக்க, பரவசத்தைத் தூண்டுகிறது. நாவலில் வரும் ராஜபார்ட்டு கமலக்கண்ணன், நகைச்சுவை நடிகன் முத்து, சிங்காரச் சிட்டு, சம்திங் சாமா முதலிய பாத்திரப் படைப்புகள் உயிரோட்டமாக நம் கண் முன்னே நிழலாடுகின்றன. கிராமச் சூழலோடும், நகைச்சுவை உரையாடலோடும், யதார்த்தமான வாழ்வை உருக்கமாகச் சொல்லியிருப்பது மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது. ******************************************************************************************************************************************************
நுகர்வோர் ராஜாங்கம் வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் 978-81-89936-85-3 பணம் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், எந்த நிறுவனம் அதை தயாரித்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். காலாவதியாகக் கூடிய பொருள் என்றால் அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா..? அது தரமான பொருள்தானா..? என்றெல்லாம் பார்த்துதான் அதை வாங்கவேண்டும். ஆனால், நம்மில் பலர் நம் தேவையின் அவசரத்தைக் கருதி ஏதோ ஒன்றை, அதுபற்றி எந்த விவ‌ரங்களையும் கேட்டறியாமல் வாங்கிவிடுகிறோம். அப்போதைய தேவையை அது பூர்த்தி செய்தாலும், பின்னர் வருகிற சிக்கல்களையும் விளைவுகளையும் அந்த அவசரகதி நம்மை மறக்கச் செய்துவிடுகிறது. அப்படி, அவசரத்தில் ஒரு பொருளைப் பற்றி ஏதும் தெரியாமல் வாங்கிவிட்டோம்... வாங்கிய பின்னரே தெரிகிறது, கடைக்காரர் அதிக  வைத்து நம் தலையில் கட்டிவிட்டார், காலாவதியாகிவிட்ட பொருளை நம்மிடம் தள்ளிவிட்டார், பொருளின் மீது போடப்பட்டு இருக்கும் எடையைவிட உள் இருக்கும் சரக்கின் எடை குறைகிறது என்பதெல்லாம்! அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா? அதற்கு என்ன தீர்வு? நுகர்வோர் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீதோ அதை விற்பனை செய்த கடையின் மீதோ நோட்டீஸ் அனுப்பி வழக்குப்பதிவு செய்யமுடியும். நாம் தொடுக்கிற வழக்கு சரியான காரணங்களுடன் இருப்பின் வெற்றி நமக்கானதுதான். பிறகு நுகர்வோர் நீதிமன்றம், நாம் அடைந்த நஷ்டத்துக்கான தொகையை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரும். இதனால், மீண்டும் ஒருமுறை இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை அந்த நிறுவனம் தவிர்த்துக்கொள்ளும். இப்படி, நுகர்வோர் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை அவள் விகடன் இதழில் நுகர்வோர் ராஜாங்கம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் எழுதிவந்தார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் இது. ******************************************************************************************************************************************************
தாய்லாந்து ராமாயணம் ஸ்ரீ வேணுகோபாலன் 978-81-89936-86-0 ராமாயணம் கீழை நாடுகள் முழுவதும் அவரவர் குடும்பக் கதைபோல பரவியுள்ளது. இன்று அந்த நாடுகளுக்கு நாம் செல்லும்போது நம் சொந்த மண்ணை மிதிப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றினால், அந்த உணர்வுக்கு வித்திட்டவை ராமாயணமும் மகாபாரதமுமே ஆகும். ஆனால் அந்தந்த நாடுகளின், மக்களின், மண்ணின் தன்மைக்கேற்ப அவை சற்றே இயல்பு மாறி அமைந்திருப்பதை நாம் காணலாம். அவற்றில் மிகவும் வித்தியாசமாகவும், மண்ணின் ரசனைக்கேற்ப மாற்றம் பெற்றதாகவும் திகழ்கிறது, தாய்லாந்து நாட்டின் ராமாயணம். அது பல கவிஞர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகத் தெரியவருகிறது. அவற்றில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னர் முதலாம் ராமன் அதிபதி எழுதிய ராமகியான் என்ற இந்த ராமாயணம், தாய்லாந்தில் தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ராமாயணத்தில் தாய்லாந்தின் தன்மைக்கேற்ப அனுமன், பிரம்மசர்ய நிலை களைந்து, திருமணங்கள் செய்து கொண்டவராகக் காட்டப்படுகிறார். வாலி, சுக்ரீவன் கதையும், அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களும்கூட நமக்கு பழக்கப்பட்ட, ஆனால் சற்றே வித்தியாசமான பெயர்களுடன் உலாவருகின்றன. இருப்பினும் அடிப்படைக் கதையமைப்பு, நம் நாட்டின் வால்மீகி ராமாயணத்தின்படியே இருக்கிறது. இந்த ராமாயணக் கதை நூல், மிகவும் சுவாரஸ்யமாக, படிப்போர் உள்ளத்துக்கு குதூகலம் தரும் வகையிலான கதையமைப்போடு திகழ்கிறது. இதை தன் எளிய தமிழ் நடையில் சுருக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன். நமக்கு ஏற்கெனவே பழகிய ஒன்றாக வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் திகழ்வதால், இந்தத் தாய்லாந்து ராமாயணத்தை நாம் படிக்கும்போது ஏற்படும் கதை வேறுபாட்டை அங்கங்கே கொடுத்து, அதன் மாறுபாட்டையும் விளக்கியுள்ள பாங்கு நமக்கு தெளிவைக் கொடுக்கிறது. ******************************************************************************************************************************************************
சொல்லாததும் உண்மை பிரகாஷ்ராஜ் 978-81-89936-87-7 காலத்தை ஒரு புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைப்பவனே உன்னதக் கலைஞன். அந்த உன்னதத்தை நோக்கி உயர்ந்துகொண்டே இருக்கிற கலைஞன் ‍ பிரகாஷ்ராஜ். கர்நாடகத்தின் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தவர். வாழ்க்கை தரும் வலிகளையே உளிகளாக்கி, தன்னைத்தானே செதுக்கி எழுந்து வந்ததால், இன்று தென்னிந்தியா கொண்டாடுகிற திரைப்படக் கலைஞன். பரபரப்பான நடிகர், புதியன தேடும் தயாரிப்பாளர் என்பது ஒரு பக்கம், சிந்தனையில் சிறகு கட்டும் ரசனைக்காரர், இலக்கிய ஆர்வலர் என்பது இதமான மறுபக்கம். தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னுமின்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசித்த, தரிசிக்கத் துடிக்கிற மனசுதான் அவரது அடையாளம். நடந்த பாதையை, கடந்த பயணத்தை, நம்மை நண்பர்களாக்கி பிரகாஷ்ராஜ் பகிர்ந்துகொண்டதே இந்த சொல்லாததும் உண்மை! அதிர வைத்து, நெகிழ வைத்து நிர்வாணமாகி நிற்கும் உண்மைகள்! உலகமெலாம் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதுவும் ஒன்றுதானே... அது உண்மைதானே! ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான இது புத்தக வடிவில் ... ******************************************************************************************************************************************************
உலக சினிமா (பாகம் 2) செழியன் 978-81-89936-88-4 உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு! செய்தி உலகின் உன்னதத் திரைப்படங்களைப் பற்றி பேசுவதே இந்த நூல். ஒவ்வொரு சினிமாவைப் பற்றியும் தனக்கான பறவைமொழியுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான உலக சினிமாவை எழுத்தால் செதுக்கிய செழியனின் இந்தக் கட்டுரைகளே இந்த‌ நூலாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகம் இது. திரைத் துறையில் சாதனை படைக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். ******************************************************************************************************************************************************
பெண் வாசனை ஆண்டாள் பிரியதர்ஷினி 978-81-89936-91-4 சங்க இலக்கிய காலம் தொட்டே, தமிழில் பெண்மையைப் பற்றிய வர்ணனைகளும் போற்றுதல்களும் சிறப்புற இருந்துள்ளன என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். அகம், புறம் என்று இரு கூறாக வைத்து இலக்கியம் கண்ட நம் முன்னோர், அக இலக்கியங்கள் மூலம் பெண்களின் அழகையும் பண்பையும், புற இலக்கியங்கள் மூலம் வீரத்தையும் பாடி வைத்துள்ளனர். நாகரிகம் தழைத்த காலம் என்று போற்றப்பெறும் அக்காலத்தே தோன்றிய எட்டுத்தொகை நூல்கள் முதல் இன்றைய கவிதை நூல்கள் வரை, பெண்ணியத்தை மையமாகக் கொண்டு பாடப்பட்ட பாடல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், இன்றைய நவயுகக் கவிஞர்கள், குறிப்பாகப் பெண் கவிஞர்கள் எப்படி பெண்ணியத்தைப் பார்த்துள்ளனர் என்பதைச் சொல்லி, சங்க காலப் பாடல்களில் இதற்கு இணையான கருத்து எங்ஙனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சொல்லி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அழகாக ஒப்புமை விருந்து படைத்துள்ளார். நமது தொன்மை அற நூலாகப் போற்றப்படும் திருக்குறள்கூட, மனித வாழ்வின் ஓர் அங்கமாகிய காமத்தை இன்பத்துப்பால் மூலம் கோடிட்டுக் காட்டுகிறது. அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்றும் வாழ்க்கையின் அங்கம் என்பதால், குறள் இம்மூன்றுக்குமான இயல்புகளை வெளிப்படுத்தியுள்ளது. கால மாற்றத்தால் நாகரிகம் மேம்பட்டுள்ள இக்காலக் கண்ணோட்டத்தில், ஆண் பெண் உறவு முறைகள், காதலுக்கும் காமத்துக்குமான வேறுபாடு போன்றவற்றில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இருந்தபோதும், நூற்றாண்டுகள் பல கடந்து வந்துள்ள நம் சிந்தனை மரபு, எப்படி இன்றைக்கும் மாறாமல் எதிரொலிக்கிறது என்ற விளக்கத்தை இந்தப் பெண்வாசனையில் நாம் பார்க்கலாம். இந்தக் காலப் பெண்ணியக் கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ள உள்ளக் குமுறல்களை எடுத்துக்காட்டி, பெண்வாசனை என்பதன் முகத்தை முழுதாக்கியுள்ளார் நூலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. உரைநடையே கவித்துவமாக மலர்ந்துள்ள இந்தப் பெண்வாசனை படிப்போர் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி படிக்கும் தாகத்தை அதிகப்படுத்தும். ******************************************************************************************************************************************************
எனது கிராமம் எனது மண் அண்ண ஹஜாரே 978-81-89936-92-1 இந்தியாவை முன்னேற்ற விரும்புவோர் கிராமங்களை முன்னேற்ற முன்னுரிமை தரவேண்டும் என்றார் மகாத்மா காந்தி. கிராமங்களை முன்னேற்றிவிட்டால் கிராம மக்கள் நகரங்களுக்கு வந்து குவியமாட்டார்கள்; உலகின் இயற்கை வளங்கள் விரைந்து அழியாது; உலகம் மாசுபடாது. அரசுகள், நகர வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி எனக் கருதுகின்றன. அதனால் கிராமங்கள் கைவிடப்பட்ட சவலைப் பிள்ளையாகி வாடுகின்றன. கிராம வளர்ச்சி என்பதுகூட கட்டடங்கள், சாலைகள், மின்கம்பங்கள் என்ற குறுகிய மனப்பாங்குடன் முடிந்துபோகிறது. மக்களின் வளமான வாழ்வே வளர்ச்சி என்றார் காந்திஜி. ஒவ்வொரு மனிதனையும் உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியே தவிர, வானளாவிய கட்டடங்கள் எழுப்புவது வளர்ச்சியாகாது. இன்றைக்கு ஏதாவது வளர்ச்சித் திட்டம் என்றாலோ, கட்டுமானப் பணி என்றாலோ, தர்மப் பிரபுக்களையோ தொழிலதிபர்களையோ அமெரிக்க நன்கொடையையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் இவை எவற்றையும் எதிர்பார்க்காமல் சொந்த உழைப்பில் ஒரு கிராமம் முன்னேற முடியும் என்ற அனுபவத்தின் வடிவம்தான் ராளேகண் சித்தி கிராமம். இந்த கிராமத்தை உயர்த்தியதன் மூலம், மகாத்மாவின் கொள்கைகளான சுய சார்பு, சுய நிறைவு, சுய ஆதிக்கம், சுய ராஜ்ஜியம் இவைதான் இனி வருங்காலத்தில் இந்தியாவின் கிராமங்களில் செயல்படுத்தப்படவேண்டும்; இதைச் செயலாற்றாத வரையில் இந்தியாவின் விடிவெள்ளியைக் காணமுடியாது என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் அண்ணா ஹஜாரே. அழகற்று, ஆதரவற்றுக் கிடந்த கிராமத்தை, தன்னுடைய அயராத சிந்தனை மற்றும் உழைப்பின் மூலம், மற்ற மாநில மக்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் மாற்றியது பற்றிய அனுபவங்களை இந்நூலில் தெரிவித்துள்ளார். தன் கிராமத்தை எப்படியெல்லாம் நல்வழிக்குக் கொண்டுவர முயன்றார்; அப்போது ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அவர் எப்படி முறியடித்தார்; எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார் என்பதை, அண்ணா ஹஜாரேயின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்நூலை எளிய தமிழில் தொகுத்துத் தந்துள்ள டாக்டர் வி.ஜீவானந்தம், அண்ணா ஹஜாரேயை தமிழ் வாசக உள்ளங்களில் பதிய வைக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளார். இப்புத்தகத்தை வாங்கிப் புரட்டும் ஒவ்வொரு விரல்களும் எதிர்காலத்தில் வலுவான சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுக்கும். ******************************************************************************************************************************************************
கம்பன் தொட்டதெல்லாம் பொன் கமலா சங்கரன் 978-81-89936-93-8 ராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை. வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரிதத்தில் மூழ்கி முத்துக் குளித்திருக்கிறார்கள். கம்பனும் அருணாசலக் கவிராயரும் ராமாயணக் காவியத்தை தேனினும் இனிய தமிழில் தோய்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ராமனின் கதை ஒருபுறமிருக்க சம்பவங்களை கம்பன் வர்ணித்திருப்பது கொள்ளை அழகு. யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று பாரதியார் பரவசப்பட்டு பாடும் அளவுக்கு கம்பனின் கவிநயமிக்க வர்ணனைகள் படிப்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. இந்நூலில் பக்கத்துக்குப் பக்கம் கம்பனைக் கொண்டாடுகிறார் கமலா சங்கரன். காலம் கடந்து நிற்கும் அந்தப் படைப்பாளனின் கற்பனைத் திறனையும் கவி உள்ளத்தையும், உவமைகள் பல சொல்லி காட்சிகளை விளக்கும் அவனுடைய உன்னதத் திறமைகளையும் அழகுத் தமிழில் எடுத்துரைக்கிறார். காவியத்தால் கவியமுது படைத்த கம்பனின் படைப்பில், மனத்தை மயக்கும் பொன்னுக்கு இணையான காட்சி நயங்கள் எப்படி மிளிர்கின்றன என்ற ஜாலவித்தையை இந்த நூலில் நாம் காணலாம். நூலாசிரியர் வாயிலாக கம்பனைப் படிக்கும்போது தமிழார்வம் கொண்ட எவரும் உள்ளம் பூரிப்பது நிச்சயம். அந்தக் கவிதை வரிகளில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகள் ஆச்சரியப்பட வைக்கும். கதைப் போக்கிலும், காட்சி அமைப்பிலும் வால்மீகியிடமிருந்து கம்பன் வேறுபடும் சில இடங்களைக் காட்டி, கம்பனின் உள்ளக் கிடக்கையை நூலாசிரியர் உணர்த்தும் பாங்கு, இலக்கிய ரசிகர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். ******************************************************************************************************************************************************
ஜெயிக்கத் தெரிந்த மனமே டி.ஏ.விஜய் 978-81-89936-94-5 வாழ்க்கையில் வசந்த காலத்தை மட்டுமே வரவேற்கக் காத்திருக்கும் உள்ளங்களே மிக அதிகம். மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் வெற்றி நம்மை தானாகப் பற்றிக்கொள்ளும். வெற்றியின் வாசல்கள் பல உண்டு, அவ்வாசலுக்குரிய வாட்டமான சாவி எதுவென்று தெரிந்துவிட்டால்போதும், வண்ணமயமான வாழ்க்கை நம் விருப்பப்படி அமைந்துவிடும். உழைப்பைக் கொண்ட உயர்வு என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும் நலமும் நாளும் வலம் வர வழிகளைக் காட்டுகிறது இந்த நூல். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், இடர்ப்பாடுகள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் பெற்று, வாழ்வில் முதன்மை அடையும் ரகசியங்களை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் டி.ஏ.விஜய். வளத்தை அள்ளித்தரப் போகும் வாழ்க்கையை புத்தம் புதிதாக அணுக வேண்டிய வழிகள்; குழந்தைகளை வருங்காலத்தில் குரோர்பதிகளாக உருவாக்கத் தேவையான தகவல்கள்; சாதாரண மனிதர்களையும் சாதனை மனிதர்களாக்கி, சரித்திர ஏடுகளை எட்டிப்பிடிக்க வைக்கும் அணுகுமுறைகள்; அசதிவரும் வேளையில்கூட, அசாதாரண செயல்களை அனாயாசமாகச் செய்வது எப்படி என்பது போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல். இதில் சேமிப்பை வலியுறுத்தி, செலவைச் சிக்கனப்படுத்தும் வழிகள் சொல்லப்பட்டாலும், நியாயமான சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து, மனதளவில் பணக்காரத் தோரணையை வளர்த்துக் கொண்டால், உள்ளம் பணத்தை அறுவடை செய்யத் தயாராகிவிடும் என்று உளவியல் நுட்பம் பேசுகிறார் நூலாசிரியர். பொருட்களைச் சேர்ப்பது என்ற லட்சிய விதை ஊன்றி, முயற்சி உரமிட்டு, அயர்வை நீக்கி, வியர்வை நீர்விட்டு விளைந்திடும் வெற்றிக்கனிகளைப் பறிக்கக் காத்திருக்கும் வாசகர்களின் வாழ்வில் இந்த நூல் வசந்தத்தை வீசச் செய்யும். ******************************************************************************************************************************************************
ஆரோக்கியமே ஆனந்தம் கண்மணி சுப்பு 978-81-89936-95-2 உடலிலுள்ள உறுப்புகளின் ஆரோக்கிய நிலையே சிறந்த வாழ்வை அளிக்கும். பொருள் தேடி அலைகின்ற வாழ்வில் மனதிலும் உடலிலும் சுகவீனம் அடைந்த மனிதர்கள் ஏராளம். அவர்கள் தங்கள் உடலைப் பராமரித்துப் பாதுகாக்க நேரமின்றி வாழ்கின்றனர். உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்து வாழாமைதான் இத்தகைய நிலைக்குக் காரணம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உடல் மனரீதியான இயக்கத்தைத் தெளிவுடன் வலியுறுத்தும் சீன மருத்துவம், இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகளையும் அவற்றின் கோளாறுகளால் ஏற்படும் நோய்களையும் விளக்குகிறது. அதனை முழுமையாகக் கற்றுணர்ந்து, வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார் கண்மணி சுப்பு. அதன் தொகுப்புதான் ஆரோக்கியமே ஆனந்தம்! சீனர்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்த யின்_யாங் சித்தாந்தமே சீன மருத்துவத்துக்கு அடிப்படை. இரவு பகல் என்ற எதிர்நிலையில் உலக இயக்கம் நடைபெறுவது போலவே, யின்_யாங் சித்தாந்தமும் நம் உடல் இயக்கத்தை நடத்துகிறது. யின்_யாங் சமச்சீராக இயங்கவில்லையெனில் என்னென்ன நோய் உண்டாகிறது என்பதை சிறப்பாக சொல்கிறார் நூலாசிரியர். மேலும், ஐம்பெறும் பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உடலின் இயக்கத்தில் எவ்வாறு பங்காற்றுகின்றன, அவற்றின் தாக்கம் உடலில் குறைந்தாலோ அதிகமானாலோ உடல் இயக்கத்தில் ஏற்படும் சுபாவங்கள், ஒரு நாளில், எந்த நேரத்தில் எந்த உடல் உறுப்புகள் முதன்மையாகப் பணியாற்றுகின்றன, அந்த நேரத்தில் நாம் உடலை எவ்வாறு பேண வேண்டும், உயிர் வாழ்தலுக்கான தேவை என்ன ஆகியவை இந்நூலில் தெளிவாக‌ விள‌க்க‌ப்பட்டுள்ள‌ன‌. ******************************************************************************************************************************************************
எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். இதயக்கனி எஸ்.விஜயன் 978-81-89936-96-9 எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில் கோவிலுக்கு நிகராய் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., தன் வாழ்வில் சந்தித்த நெருக்கடிகளும், தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல.. தன் தாயின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு சைக்கிள் ஓட்டக்கூடக் கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும் வசீகரிக்கும் சக்தியை எப்படிக் கற்றுக் கொண்டார் என்பது அவரோடு பயணித்தவர்களால் கூட அறிய முடியாத ஆச்சரியம்! எம்.ஜி.ஆரை ஒரு மாபெரும் நடிகராக மட்டுமே மனங்களில் நிறுத்தி வைத்திருப்பவர்கள் எடிட்டிங், திரைக்கதை, ஒளிப்பதிவு, வசனம் என சகல திசையிலும் அவர் சாதனைக் கொடி நாட்டியதை அறிந்தால் ஆச்சரியத்தில் புல்லரித்துப் போய் விடுவார்கள். சினிமா சம்பந்தமான அனைத்து நுணுக்கங்களையும் ஆக்கப்பூர்வமாய்க் கற்றுத் தேர்ந்திருந்த எம்.ஜி.ஆரைப் பற்றி, இந்நூலில் எளிய நடையில் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.விஜயன். எந்தப் பின்புலமும் இன்றி திரைத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர்., தன் ஆர்வத்தாலும் அனுபவத்தாலும் நிகரற்ற ஜாம்பவானாக சாதித்ததை படிக்கும் போதே நம் பிரமிப்பு கூடுகிறது. வசதியான பொருளாதாரமோ, விஞ்ஞான வளர்ச்சியோ இல்லாத அந்தக் காலத்திலேயே கேமிரா கோணங்களையும், ஒளிப்பதிவு யுக்திகளையும் மட்டுமே பயன்படுத்தி இரட்டை வேடங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். புகுந்து விளையாடியதைப் படிக்கையில் வியப்பில் விழி விரிந்து போகிறது நமக்கு. அதோடு, வசனங்களில் காட்டிய அக்கறை, டான்ஸில் காட்டிய வேகம், முக பாவனைகளில் வெளிப்படுத்திய யதார்த்தம் என எம்.ஜி.ஆரின் அத்தனை திறமைகளையும் நூலாசிரியர் பட்டியலிடும் விதம் சிலிர்க்க வைக்கிறது. சாதாரண மனிதராக நுழைந்து சாதனைத் திலகமாக கொடி நாட்டிய எம்.ஜி.ஆரின் திரைத்துறை வாழ்க்கையைப் படித்து முடிக்கையில் தன்னம்பிக்கை டானிக்கை தாகம் தீர பருகிய திருப்தி ஏற்படும்! ******************************************************************************************************************************************************
விண்வெளியில் ஒரு பயணம் கமலநாதன் 978-81-89936-97-6 விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற முறையில், சுனிதா வில்லியம்ஸின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களையும், அவர் விண்வெளியில் செய்த சாதனைகளையும் இந்நூல் தெரிவிக்கிறது. மேலும், விண்வெளி ஓடங்களின் அமைப்பையும் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தையும் அவை செயல்படும் விதத்தையும் தெரிவிக்கிறது. ஒரு விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவையான அடிப்படைத் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் விண்வெளியில் ஆற்ற வேண்டிய பணிகளைப் பொருத்துத் தரப்படும் பயிற்சிகள் போன்ற தகவல்களையும், ஒவ்வொருவரும் விண்வெளிப் பயணத்தின்போது ஆற்றிவரும் பணிகளையும் இந்த நூல் விளக்குகிறது. தங்களது தினசரி வாழ்க்கைத் தேவைகளான உடலை சுத்தப்படுத்துவது, உணவு உண்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது போன்றவற்றை விண்வெளி வீரர்கள் அங்குள்ள சூழ்நிலையில் எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்ற தகவலைப் படிக்கும்போது நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. விண்வெளியில் நடக்கவேண்டிய அவசியம் என்ன; விண்வெளி வீரர்கள் அந்த சமயத்தில் அணியும் ஆடையில் உள்ள பிரத்தியேக அம்சங்கள் என்னென்ன; அவை ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் காணப்படுகின்றன; விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும்போதும், விண்வெளியில் இருக்கும்போதும், திரும்பி வரும்போதும் ஏன் ஆரஞ்சு வண்ணத்தில் பிரத்தியேக ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு இந்நூலில் விடை கிடைக்கும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா அனுப்பும் விண்கலங்கள் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான பொருட்களையும், பணிபுரிய விண்வெளி வீரர்களையும் எப்படி அனுப்புகிறார்கள்; அவர்கள் எவ்வாறு பூமிக்குத் திரும்பி வருகிறார்கள் போன்ற ருசிகரத் தகவல்களை பலர் அறிய ஆவலாக இருப்பார்கள். அந்த ஆவலைப் பூர்த்திசெய்யும் விதமாக, இந்த நூலை எளிய முறையில் அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கமலநாதன். இந்த நூல் இளைஞர்களை மட்டுமின்றி, அறிவியல் தாகம் கொண்ட அனைவரையும் நிச்சயம் வசீகரிக்கும். ******************************************************************************************************************************************************
பூமிப்பந்தின் புதிர்கள் க‌.பொன்முடி 978-81-89936-98-3 நாம் வாழும் இந்த பூமி, எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நிலையாக ஓர் இடத்தில் இருப்பதுபோல் நாம் உணரக்கூடிய இந்த பூமி, உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இல்லை; சுற்றிக்கொண்டே இருக்கிறது. இது பூமி கிரகத்தைப் பற்றிய விஷயம். இந்த பூமியும்கூட, நிலம், நீர் என்று பிரிந்துள்ளது. நீர்ப்பரப்புக்கு அடியில்கூட நில மட்டம் இருக்கிறது. இந்த நிலமட்டத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்களும் பூமியின் அடிப்பகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன. இப்போதெல்லாம் திடீரென்று சில இடங்களில் கடல் மட்டம் உயர்கிறது என்கிறார்கள். ஆனால் உண்மையில் கடல் மட்டம் உயரவில்லை; கடல்நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியே உயர்கிறது.... அதுவே கடல் மட்டம் உயர்வதாக நமக்கு ஒரு தோற்றத்தைத் தருகிறது என்கிறார் நூலாசிரியர் க.பொன்முடி. கடல் நீர் சூழ்ந்துள்ள நிலம், அதாவது கண்டங்கள்தான் உயர்கின்றன என்பதற்கு சில ஆதாரங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் நூலாசிரியர். கண்டங்கள் நகர்தல் என்ற கோட்பாட்டை இவர் சில ஆதாரங்களை முன்வைத்து மறுக்கிறார். முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்கள் பிறகு நகர்ந்தன என்ற கூற்றையும் நூலாசிரியர் ஏற்கவில்லை. கண்டங்கள் நகரவில்லை; உயர்கின்றன என்பதே இவர் கருத்து. ஒரு காலத்தில் நட்சத்திரங்களாக இருந்தவையே கால ஓட்டத்தில் குளிர்ந்து பாறையாக இறுகி பூமி போன்ற கிரகங்களாகின்றன என்பதைச் சொல்லி, மேற்கண்ட இந்தக் கருத்துகளுக்கு பக்க பலமாக பல தகவல்களை நூலாசிரியர் முன்வைக்கிறார். அந்தத் தகவல்கள் வாசகர்களுக்கு பூமியைப் பற்றிய பல விவரங்களை அறிந்துகொள்ள ஆவலை ஏற்படுத்தும். ******************************************************************************************************************************************************
கேள்விக்குறி எஸ்.ராமகிருஷ்ணன் 978-81-89936-99-0 ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம். ******************************************************************************************************************************************************
ஜோரான சமையல் கங்கா ராமமூர்த்தி 978-81-8476-000-2 சமையல் கலையில் வல்லவர்கள் என்று புராண காலத்தில், நளனும் பீமனும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். நளபாகம் என்றே உன்னதமான சமையல் கலைக்குப் பெயர். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் முதலிடத்தில் இருப்பது உணவுதான். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் _ என்பது பாரதியின் கூற்று. அதையும்கூட, ஏதோ ஏனோதானோவென்று உப்புச் சப்பில்லாமல் சமைத்துக் கொடுத்தால், உண்பவருக்கு உணவின் மீதான ஈடுபாடு இல்லாமல் போய்விடும். அதன் பிறகு உண்பதற்கு நாக்கும் மனமும் ஒத்துழைக்காமல், உணவை மறுத்துவிடும் போக்கும் ஏற்பட்டுவிடும். எனவே நாவுக்கு ருசியாகச் சமைப்பது முக்கியம். இன்றைக்கு பல குடும்பங்களில் எழுகின்ற சிறு சிறு தகராறுகளும்கூட சாப்பாட்டு மேஜையில் வைத்தே எழுவதாகச் சொல்கிறார்கள். உணவின் ருசியில் மனம் சொக்கிப்போகும்போது, இதுபோன்ற சண்டைகள் எழாது என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. சமையல் கலை, நம் நாட்டில் வட இந்தியப் பாணி, தென்னிந்தியப் பாணி என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது. இந்த நூல் அந்த இரண்டு பாணி சமையலையும் சொல்வதாக அமைந்துள்ளது. அன்றாடம் சமைக்கும் சமையலிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, இன்னும் சுவையாக, விதவிதமாக எப்படி சமைப்பது என்பதற்கான வழிகள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. இன்று பெரும்பாலான வட இந்தியப் பாணி உணவு வகைகளை தென்னிந்தியப் பெண்மணிகள், தங்கள் உணவு லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதுவிதமான வடஇந்திய உணவு வகைகளைச் செய்து பார்க்க வசதியாக, இந்த நூலில் பல்வேறு இனிப்பு வகைகள், பாயச வகைகள், கார வகைகள் தரப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்திய உணவு வகைகள் பலவும் செய்முறை விளக்கங்களோடு தரப்பட்டுள்ளன. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சமையல் வகைகளை ஜோராக செய்து ஜமாய்க்கலாம். ******************************************************************************************************************************************************
சுயம்பு விவேக்சங்கர் 978-81-8476-001-9 தான் வாழ பிறரைக் கெடுக்காதே என்ற வாக்கியத்தை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற வாக்கியங்கள் உதட்டளவில் நின்று விடுகிறது. அண்ணன் எப்போ போவான்; திண்ணை எப்போ காலியாகும் என்று எண்ணிக் கொண்டு, மற்றவரை பள்ளத்தில் தள்ளி, தாம் வென்றுவிட்டதாக அறிவிப்பதற்கு அடிப்படைக் காரணம், நமக்கே தெரியாமல் நம்முள்ளேயே வாழ்ந்து, நம்மை ஆட்டிப்படைக்கும் சுய பச்சாதாபம்தான்! அவரவர் மனதில் தானாக உருவாகும் சுயபச்சாதாபத்தை பின்னணியாக வைத்துப் பின்னப்பட்டதுதான் சுயம்பு என்ற இந்த நாடகம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற சுயபச்சாதாபம், அவனை எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறது; அதனால் நாம் பெறும் நன்மை, தீமை, அவமானங்கள்; நம்மை முடக்க முயலும் சுயபச்சாதாபத்தை அடக்கியாள என்ன வழி போன்றவற்றை நாடக வடிவில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அழகுற வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் விவேக்சங்கர். இசை நாற்காலி எனும் வாழ்க்கை விளையாட்டில் மற்றவரையும் வெற்றிபெறச் செய்து, தானும் வெற்றிபெறும் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார். இந்த நாடகம் உளவியல் பேசும் சமூக நாடகம். நாளும் நம்மிடையே நடக்கும் பொதுவான அலுவலக சம்பவங்களை, உரையாடல்களாகக் கொண்டிருக்கிறது. நல்லமனம் கொண்ட மனிதனும்கூட, சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் சுயபச்சாதாபத்துக்கு பலியாகிறான். அதனை விட்டொழித்து, அதிலிருந்து மீண்டுவர சில வழிகளையும் இந்த நூல் காட்டுகிறது. ******************************************************************************************************************************************************
மகான் ஸ்ரீ ராமானுஜர் எஸ். லெக்ஷ்மிநரசிம்மன் 978-81-8476-002-6 வேதம் தமிழ் செய்த மாறன் என்றபடி, தமிழ்மறையை ஈன்ற தாயாக நம்மாழ்வாரைப் போற்றும் வைணவ உலகம், அந்தத் தமிழ்மறையை பாலூட்டி சீராட்டி வளர்த்த செவிலித் தாயாக ராமானுஜரைப் போற்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவந்த தமிழ் மறைகளான ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களை, பெரும்பாடுபட்டுத் திரட்டி, அவற்றை மீண்டும் மக்களிடையே கொண்டுவந்தவர் நாதமுனிகள். அந்த வழியில், திருக்கோயில்களில் தமிழ்மறை முழங்க வித்திட்டவர் ஸ்ரீராமானுஜர். ஆளவந்தாருக்கு ராமானுஜர் செய்துகொடுத்த உறுதிமொழிகளில் ஒன்று, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை பண்ணோடு ஆலயங்களில் ஒலிக்கச் செய்வது. இதை ராமானுஜர் நிறைவேற்றி வைத்ததால்தான், வைணவ ஆலயங்களில் தமிழ் மறை இன்றளவுக்கும் ஒலித்துவருகிறது. கி.பி.1017ல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் எளிய தத்துவங்களையும் சமூகக் கோட்பாடுகளையும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலை படைத்திருக்கிறார் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன். ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அழகாகக் சித்திரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஓர் அரசன்... தன் அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனை சேவக காலம்போக மீதி நேரத்தில் ராமானுஜருக்குத் தொண்டு செய்ததை மெச்சி, அவனை அரண்மனை சேவகத்திலிருந்து விடுவித்ததுடன் சம்பளத்தைத் தவறாது அவன் இருக்கும் இடத்துக்கு அளிக்கிறான். அதிகாரியோ அந்த சம்பளப் பணத்தை ராமானுஜரின் மடத்துக்கே அளித்துவிடுகிறான். இதைக் கேள்விப்பட்ட ராமானுஜர், உழைக்காமல் சம்பளம் பெறுதல் தகாது என்று சொல்லி, பணத்தைத் திருப்பிவிடச் சொல்கிறார். இதைக் கண்ட அரசன் இப்படியும் ஒரு தர்மாத்மாவா! என்று வியக்கிறான். இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள், எல்லோர் மனதிலும் தர்ம சிந்தனையை விதைக்கும். நேர்மையான வாழ்க்கையை வாழ, எளியோரை அரவணைத்துச் செல்லும் சமத்துவ நோக்கோடு உலகை அணுக, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உத்வேகம் தரும். இந்த நூலின் மூலம் உயர்ந்த தர்மத்தை நம் வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய நெஞ்சுரமும், மனக்கட்டுப்பாடும் வளரும். ******************************************************************************************************************************************************
கஜராஜன் குருவாயூர் கேசவன் உண்ணிகிருஷ்ணன் புதூர் 978-81-8476-003-3 உலகில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும் இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது. மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் கோயிலில் மரித்த _ மன்னிக்கவும், சரிந்த _ நிமிடம் வரையிலான அதன் வாழ்க்கையை நுட்பமாகவும் அற்புதமாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் உண்ணிகிருஷ்ணன் புதூர். குருவாயூர் கேசவன் வெறும் கோயில் யானை அல்ல. பெரும்பாலான கேரளீயருக்கு அது குருவாயூரப்பனின் இன்னோர் அவதாரமே! கேசவனும் யானைகளிலேயே உயர்வான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கிறது. குருவாயூர் கோயிலில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த கேசவனது வரலாறை நூலாசிரியர் உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. மதம் இளகிய நிலையிலும்கூட எந்தவொரு உயிருக்கும் சிறு தீங்குகூடச் செய்யாமல், மரம் அறுக்கும் இடத்தில் இருந்து குருவாயூர் கோயிலுக்கு நடந்தே வந்து சேர்ந்திருக்கிறது கேசவன்! உன்னை நம்பி வந்த என்னை நீ இப்படிச் சோதிக்கலாமா? என்று கேட்பதுபோல் கோயிலுக்குள் முரண்டு பிடித்துச் சுற்றியிருக்கிறது. இன்னொரு முறை மதம்பிடித்து ஊருக்குள் நுழைந்தது. திடீரென்று யானை எதிரில் வந்ததும் மிரண்டுபோன குழந்தைகளைப் பார்த்ததும் சாதுவாக, நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்பதுபோல் ஒரு சுவரோரமாக ஒதுங்கி நின்று வழிவிட்டிருக்கிறது. அப்படி கேசவன் வழிவிட்டு ஒதுங்கி நின்றதைக் கண்ணால் கண்ட சிறுவர்களில் இந்த நூலாசிரியரும் ஒருவர்! வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்து சரிந்திருக்கும் குருவாயூர் கேசவனை மலையாள எழுத்தாளர் உண்ணிக் கிருஷ்ணன் புதூர் மிகவும் அற்புதமாக வார்த்தைகளில் உயிர்த்தெழச் செய்து, என்றென்றைக்குமாக அதை நித்தியத்துவப்படுத்தியிருக்கிறார். மலையாள வாசனை துளியும் கெடாமல் அதே நேரம் தமிழர்கள் சரளமாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் விதத்தில் சிவன் மொழிபெயர்த்திருக்கிறார். ******************************************************************************************************************************************************
மதன் ஜோக்ஸ் (பாகம் 3) மத‌ன் 978-81-8476-004-0 ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள்.<ப்> அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது ******************************************************************************************************************************************************
.சிறப்புச் சிறுகதைகள் விகடன் பிரசுரம் 978-81-8476-005-7 சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல், சிறுகதைகளில் கையாளப்படாத விஷயங்களே கிடையாது. மனித உறவுகள், உணர்ச்சிகள், பாசப் போராட்டங்கள் என்று ஒரு பக்கமும், சமூக விழிப்பு உணர்ச்சிக் கதைகள், அரசியலை துகிலுரித்துக் காட்டும் கதைகள், மத நல்லிணக்கத்தைப் போதிக்கும் கதைகள் என்று இன்னொரு பக்கமும் விரிந்து கிடக்கும் களம் சிறுகதைகளுக்கு இன்று வரை உண்டு. படிப்பவர்களை வசீகரிக்கும் காதல் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. தமிழ் பருவ இதழ்களில் சிறுகதைகளுக்கு என்றுமே சிறப்பான இடம் உண்டு. அவற்றைப் படித்து ரசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெரியது! இன்று காலத்தின் கட்டாயமாக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாமே தவிர, அவற்றின் தரம் குறைவது கிடையாது. இதுவரை பத்திரிகைகளில் வெளிவராத புத்தம் புதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தில் பிரபலமான பதினைந்து எழுத்தாளர்களைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியுடன் புதிய கதைகளை எழுதிக் கொடுத்தார்கள். இந்தப் பதினைந்து கதைகளுக்கு பதினைந்து ஓவியர்கள் சிறப்பாக படம் வரைந்து கொடுத்தார்கள். ஒரு கதைபோல் இன்னொரு கதை இல்லாமல், இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வித்தியாசமானது; படிக்க சுவாரஸ்யமானது; பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது! இது ஒரு புது முயற்சி. ******************************************************************************************************************************************************
ஓ! பக்கங்கள் (பாகம் 2) ஞாநி 81-89780-93-X உணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம். மக்களின் பார்வையில் மக்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து கூர்மையான பார்வையோடு, சமூகத்தில் நடப்பவற்றை எந்தப் பக்கச்சார்பும் அற்று விமர்சிப்பது அவசியம். அந்த வகையில் ஞாநியின் ஓ! பக்கங்கள் கூர்மையான விமர்சனங்கள். நேர்மையான பார்வைகள். கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து விகடன் வாசகர்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஞாநி. ஆனந்த விகடன் வாசகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து வெளியான‌ ஞாநியின் ஓ! பக்கங்களில் இருந்து வெளிவந்த நூல்களில் இது இரண்டாம் தொகுப்பு. ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஓ! பக்கங்கள் வாசகர்களின் விசேஷ கவனத்தையும் அபிமானத்தையும் பெற்றன. காரணம், எந்த விஷயத்தையும் அவர் பார்க்கும் வித்தியாசமான கோணமும், தன் கருத்தைத் தயக்கமின்றி, வெளிப்படையாக அதே சமயம் நாகரிகமாக அவர் தெரிவிக்கும் அணுகுமுறையும்தான். அதனால்தான் சமூகம், பண்பாடு, அரசியல் பற்றியெல்லாம் அவருடைய கருத்துக்களுடன் உடன்படாத வாசகர்கள்கூட, ஒரு விஷயத்தில் ஞாநியின் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பை சுவாசிக்க‌ விரும்பும் வாச‌க‌ அன்ப‌ர்க‌ளுக்கு இந்நூல் 'ஆக்ஸிஜன்". ******************************************************************************************************************************************************
30 நாள் 30 சுவை ரேவதி சண்முகம் 81-89780-94-8 நமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரியத்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம் சமைக்கப்படும் பிரியாணியே சிறந்த உதாரணம். வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி _ சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனி கடைகள் இயங்குவதுகூட இட்லியின் வான‌ளாவிய பெருமைதான். இங்கு, இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவுகூர்ந்து பூரிப்பு கொள்வோம். ஆனாலும், தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட் டிஷ் என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே அவள் விகடன் ஒவ்வொரு இதழோடும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல, மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவை தொகுக்கப்பட்டு ஒரே நூலாக 'இந்த 30 நாள் 30 சுவை' நூலாக வெளிவந்துள்ளது. ******************************************************************************************************************************************************
குறள் கண்ட வாழ்வு அ.ச.ஞானசம்பந்தன் 978-81-8476-061-3 கம்பன் காப்பியத்திலிருந்து திறனாய்வு நோக்கோடு, நாடும் மண்ணும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் ஆகிய மூன்று நூல்களை எழுதினேன். ஆனால் என் தமிழ் நடை கடினமானதாக இருந்ததை உணர்ந்தேன். அந்த நடையில் மாற்றம் வரும் நாள் வந்தது. ஒருநாள், ராயப்பேட்டை பசார் ரோட்டில் உள்ள சிறுமாடியில் குடியிருந்தேன். எதிர்பாராமல் என் வீட்டுக்கு வந்தார், ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன். திருக்குறளை அடிப்படையாக வைத்து, இருபது முப்பது கட்டுரைகள் எழுதித் தரவேண்டும் என்றார். அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வரும் கதை கட்டுரைகள் பெரும்பாலும் பிராமண சமூகத்தினரின் பேச்சு நடையாகவே இருக்கும். அந்த நடையில் என்னால் எழுத இயலாது என்று பணிவுடன் சொன்னேன். அவரோ, சொற்பொழிவுக்குப் போகின்ற நான் கூட்டத்தாரின் திறத்துக்கு ஏற்ப எளிய நடையில் பேசுவதை எடுத்துக்காட்டி, எழுத்து நடையும் அதுபோல் இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொல்ல, எழுத ஒப்புக் கொண்டேன். புறப்படும் முன் வாயிற்படியில் நின்று கொண்டு அவர் சொன்னது, என் எழுத்து நடையை முற்றிலும் மாற்றியமைத்து விட்டது. அவர் சொன்னார்... அ.ச.! ஆனந்தவிகடனை யார் அதிகம் படிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பெரும்பாலும் அதில் வரும் கதைகளை அனைவரும் படிக்கிறார்கள். இலக்கியத் தொடர்புடைய கட்டுரைகளை ஒரு சிலரே படிப்பார்கள். குடும்பத் தலைவிகள் சோறு வெந்தவுடன் கஞ்சியை வடிப்பதற்காகச் சோற்றுப் பானையைச் சரித்து வைத்துவிட்டு கஞ்சி வடிகின்ற நேரம் காத்திருக்கும்போது ஆனந்த விகடனைப் படிப்பார்கள். அந்தப் பெண்களுக்குப் புரியும் வகையில் உங்கள் கட்டுரை அமைய வேண்டும். எழுதி அனுப்புங்கள்! என்றார். குறள் கண்ட வாழ்வு அப்படித்தான் உதித்தது. என் எழுத்து நடையை மாற்றியமைத்ததில் குறள் கண்ட வாழ்வும், எஸ்.எஸ்.வாசனும் முக்கியப் பங்கு வகித்ததை மறக்க முடியாது... இப்படி அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தன் நினைவலைகளைப் பதிந்துள்ளார். அவருடைய எழுத்துப் பணியில் மிகவும் திருப்தி தந்த பணியாக, குறள் கண்ட வாழ்வு என்ற இந்த நூலை அவர் கருதினார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் குறள் வழி நடந்த சான்றோரின் வாழ்க்கைப் பாதையும், அவர்கள் தங்களுக்கு வந்த சிக்கலான கட்டங்களில் எப்படி குறள் சொன்ன வாழ்வை வாழ்ந்து காட்டினர் என்பதும் எளிய நடையில் விளக்கப் பட்டுள்ளது. அமரர் அ.ச.ஞா.வின் மாஸ்டர்பீஸ் இந்தத் தொகுப்பு. ******************************************************************************************************************************************************
தொழில் தொடங்கலாம் வாங்க‌ கட்டுரையாளர்கள் 81-89780-96-4 'வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும்தான் மூலதனம்' இது சாதாரண வாக்கியம் அல்ல. சாதனையின் சிகரம் தொட்டவர்களின் அனுபவ மொழி. ஒருவரின் கடின உழைப்பு, திட்டமிடல், தேர்ந்தெடுத்த துறையின் மீது காட்டும் ஈடுபாடு இவையே அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும், உயர்த்தும். பெருகிவரும் மக்கள்தொகையில் எல்லோருக்கும் அரசாங்க வேலையென்பது எட்டாக் கனிதான். அதே நேரத்தில், தன் உழைப்பை நம்பி ஒருவர் சொந்தமாகத் தொழில் தொடங்கி பத்துப் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்போது, அவரை இந்த சமூகம் சாதனை மனிதராக மதிக்கும். சிலருக்கு சுயமாகத் தொழில் தொடங்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. சிலருக்கு தொழில் தொடங்கும் ஆர்வமும், அதற்கான பொருளாதாரப் பின்னணியும் இருக்கும். ஆனால், என்ன தொழில் தொடங்குவது என்ற குழப்பத்துடன் இருப்பார்கள். அப்படியே சுயமாகத் தொழில் தொடங்கினாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் நஷ்டமடைவோரும் உண்டு. இவர்களில் பெரும்பாலோர் 'எனக்கு நேரம் சரியில்லை அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது' என்று தன்னைத்தானே நொந்துகொள்வதும் வாடிக்கையான நிகழ்வு. அப்படிப்பட்டவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், தேவையான ஆலோசனையும் கிட்டுமெனில் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதைக் கருத்தில்கொண்டு கவனத்தோடு நாணயம் விகடன் இதழில் எழுதப்பட்டதுதான் 'தொழில் தொடங்கலாம், வாங்க!' பகுதி. ஒரு தொழில் தொடங்க அடிப்படை விஷயங்கள் என்னென்ன...? தேவைப்படும் மூலப்பொருட்களை வாங்குவது எப்படி...? ஒரு தொழிலில் இறங்கும்போது அதன் சாதக பாதகங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது எப்படி...? எந்தத் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்...? தொழிலில் போட்டியைச் சமாளிக்க, வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் முறைகள்... என தொழில் துறையின் அடிப்படையான தகவல்களோடு வெளிவந்திருக்கிறது இந்தப் புத்தகம். ******************************************************************************************************************************************************
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் கே.பி.ராமகிருஷ்ணன் 978-81-89936-00-6 தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார். டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது. ******************************************************************************************************************************************************
கூட்டத்திலிருந்து வரும் குரல்..! ஜென்ராம் 978-81-89936-01-3 முகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியலும் இரண்டு கண்கள். ஒன்று பழுதானாலும் சமூக ஒழுக்கம் என்கிற பார்வையும் சேர்ந்து பறிபோய்விடும். சமூகத்தை, அதன் ஒழுக்கத்தை நிலை நாட்டுவது அரசும் அரசியலுமே ஆகும். அப்படிப்பட்ட கண்களைப் பராமரிப்பது அவசியம். அதைப் பராமரிப்பவர்கள் சீராக, சரியாகச் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது அதைவிட அவசியம். கண்காணிப்பவர்களுக்கு வழிகாட்டுதல் என்பது மிக முக்கியம். இங்கு அரசையும் அரசியலையும் பராமரிப்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள். அவர்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது வாக்காளர்களாகிய மக்களே. அவர்களுக்கு வழிகாட்டியாகத்தான் 'ஜூனியர் விகடன்' இதழில் 'சிந்தனை' பகுதியில் விழிப்பு உணர்வுக் கட்டுரைகள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், உலகில் எங்கு, எது நடந்தாலும் அதை உடனுக்குடன் சரியான சமூக நோக்கத்தோடு சிந்தனைப் பகுதியில் அரசியல் விமர்சகர் ஜென்ராம் பதிவு செய்துவருகிறார். அந்தக் கட்டுரைகள் 'கூட்டத்திலிருந்து வரும் குரல்' என்ற தலைப்பில் இந்த நூலாக வெளிவந்திருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் நிகழ்ந்த அணிமாற்றங்கள், கட்சித்தாவல்கள், கருத்து மோதல்கள் என்று நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் நூலாசிரியர். கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்போது மக்களிடம் நிகழ்கிற கொந்தளிப்புகள், சமூகத்தில் நடக்கிற மாற்றங்கள் என்று அத்தனையையும் சமூகத்தின் குரலாக ஒலிக்கும் காலப் பெட்டகம்தான் இந்தக் கூட்டத்திலிருந்து வரும் குரல். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அரசியலிலும் சமூகத்திலும் நிகழ்கின்ற யாவற்றையும் தோலுரிப்பவை. சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது. ******************************************************************************************************************************************************
தெக்கத்தி ஆத்மாக்கள் பா.செயப்பிரகாசம் 978-81-89936-02-0 வாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு இருக்கும். அங்கு வாழும் மனிதர்களெல்லாம் இயற்கையின் தீண்டலை சுகிப்பவர்கள். அவர்கள் எந்தவித பாசாங்கும் அற்று, உண்மைக்குப் பெயர் போனவர்கள். இன்றுவரை தமிழ்ப் பண்பாட்டை, அதன் கலாசாரத்தை உயர்த்திப் பிடிக்கும் கலங்கரை விளக்கமாக கிராமத்து மாந்தர்களே விளங்கி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பேசுவதுதான் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய இந்த 'தெக்கத்தி ஆத்மாக்கள்'. கரிசல் காட்டு மக்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், முண்டியடித்துச் செல்லும் நகர வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சம்சாரிகளையும் அவர்களின் வாழ்நிலை அற்றுப்போகிற சூழலையும் படம்பிடித்துக் காட்டுபவை. 1999ம் ஆண்டு வாக்கில் ஜூனியர் விகடன் இதழில் இது தொடராக வந்தபோது, வாழ்வைத் தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபுகுந்தவர்கள் மத்தியிலும், கிராமத்திலேயே வாழ்பவர்களிடத்திலும் மெத்தப் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கரிசல் சீமைக்காரர்களிடத்தில். இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கிராமத்தைப் பிரதிபலிக்கிறது. மண்ணின், அதன் மக்களின் இந்தக் கதைகள் கண்ணீரும் வடிக்கின்றன. அப்படிச் சொட்டிய ஒவ்வொரு துளியிலும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் காணமுடிகிறது. நிழல் பார்த்து மணி சொல்கிற அனுபவஸ்தர்களின் இந்தக் கதைகள், குடிக்கக்குடிக்கச் சுவை கூடும் சுனை நீரைப்போல் படிக்கப்படிக்க மனம் லயிக்கச் செய்யும் ஞாபகச்சுனையின் பெருங்கதைகள். ******************************************************************************************************************************************************
அர்த்தமுள்ள அந்தரங்கம் டாக்டர் ஷாலினி 978-81-89936-03-7 சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம். காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன. பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி. இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர். ******************************************************************************************************************************************************
அர்த்தமுள்ள ஹோமங்கள் சுப்ரமணிய சாஸ்திரிகள் 978-81-89936-04-4 கதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முறைகளில் ஹோமங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அத்தகைய சிறப்பு மிகுந்த ஹோமங்களைப் பற்றி சக்தி விகடன் இதழில் சுப்ரமணிய சாஸ்திரிகள் எளிமையாக சிறப்புடன் தொடராக எழுதினார். அதில், எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படும் கணபதி ஹோமம், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற சுதர்ஸன ஹோமம், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யப்படும் நவக்கிரக ஹோமம்... இப்படி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பொங்க பல ஹோமங்கள் பற்றி விளக்கியுள்ளார். மேலும், லட்சுமி குபேர ஹோமம், சரஸ்வதி ஹோமம், சண்டி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம், தில ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், வாஸ்து ஹோமம், புருஷ ஸுக்த ஹோமம், ஸ்ரீஸுக்த ஹோமம், பகவத்கீதா ஹோமம், சுயம்வரா பார்வதி பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஐக்கிய மத்ய ஹோமம், வித்யாவிஜய ஹோமம், ரிண மோசன ஹோமம் முதலான ஹோமங்களைச் செய்தால் சிறப்புடன் வாழலாம் என்று அற்புதமாக சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டினார். அவை தொகுக்கப்பட்டு அர்த்தமுள்ள ஹோமங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஹோமங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் நம் வீட்டில் ஹோமம் செய்யும்போது சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனித்து மிகுந்த பலனைப் பெறலாம். அதற்கு இந்தப் புத்தகம் சிறந்த கையேடாக இருக்கும். ******************************************************************************************************************************************************
சித்தர்கள் வாழ்க்கை பி.என்.பர‌சுராமன் 978-81-89936-06-8 விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்மொழிகள் யாவும் மக்கள் நல்வாழ்வு வாழ வழி சொல்லும் மந்திரங்களாக இருக்கின்றன. அதை பல இடங்களில், பல வழிகளில் நிறைவேற்றவும் செய்தார்கள். ஆனாலும், சில நேரங்களில் சித்த நிலையை விலக்கி வைத்தும் வாழ்ந்திருக்கிறார்கள்; மக்களின் நலனுக்காகவே அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது இந்த நூலை வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். சித்தர்களின் வாழ்க்கை பற்றிய இந்தக் கட்டுரைகள் சக்தி விகடன் இதழில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. சித்தர்கள் பற்றி பல வெளிவராத தகவல்களை இந்தக் கட்டுரைகளில் தென்னாடுடையான் என்ற புனைபெயரில் பி.என்.பரசுராமன் எழுதினார். கதைப்போக்கில் செல்லும் அவரது நடை, சித்தர்கள் பற்றிய அரிய தகவல்களை எளிய முறையில் விளக்குகிறது. ஓவியர் தாமரையின் படங்கள் சித்தர்களின் வாழ்க்கை முறையை நம் கண்முன்னே நிறுத்தி, மெய்சிலிர்க்க வைக்கின்றன. சிவவாக்கியர், இடைக்காடர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், திருமூலர், போகர், காகபுஜண்டர், பட்டினத்தார்... இப்படி பல சித்தர்களைப் பற்றிய இந்நூல் இருபது அத்தியாயங்களாக விரிகிறது. ******************************************************************************************************************************************************
மைதான யுத்தம் மகாதேவன் 978-81-89936-07-5 பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்ப் பூக்கிறது...! கிரிக்கெட்டில் இந்திய அணி வென்றுவிட்டால் மனசில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையும், தோற்றுவிட்டால் கன்னத்தில் கைவைத்து எதையோ பறிகொடுத்த நிலைபோல் சோகமாக இருப்பதையும் பலரிடம் பார்க்கிறோம். விளையாட்டுகளில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும் நம் அணியினர் மீது வைத்துள்ள அளவுகடந்த அபிமானத்தால் எப்போதும் நம் அணி வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுகிறது இந்திய மனம். உண்மையில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் அணி உள்ளதா? இந்தியா ஏன் முதலிடத்தில் இல்லை! இவற்றை அலசுகிறது இந்தப் புத்தகம். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடுகளே நிரந்தர வெற்றியை அணிக்கு தேடித் தரும். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது என்ன? உலகிலேயே அதிக சதங்கள் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து நாள் போட்டிகளிலும் அடித்த நபர் ஒரு இந்தியர்தான். அதிக ரன்களைக் குவித்தவரும் இந்தியர்தான். ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டை எடுத்தவரும் இந்தியர்தான். பார்ட்னர்ஷிப்களில் முதலிடத்தில் இருப்பதும் இந்தியாதான். இருந்தும் இதுவரையிலான கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் ஒருநாள் கூட இருந்தது கிடையாது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஒருவகையில் அவமானகரமான ஒன்றும்கூட! உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களிலேயே அதிக வருவாயைக் கொண்டது நமது வாரியம்தான். உலகிலேயே கிரிகெட்டுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ள நாடும் இந்தியாதான். இந்திய அணியின் மீது நம்மில் பலருக்கும் இருக்கும் உள்ளத் தவிப்பை இந்த நூலில் பதிவு செய்து, இந்தியா முதலிடம் பெற மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளையும் அலசியுள்ளார் நூலாசிரியர் மகாதேவன். ******************************************************************************************************************************************************
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) சுஜாதா 978-81-89936-11-2 ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்த‌தோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்த‌த் தகவல்களைக் கட்டுரையில் தந்த‌போது, அந்த அனுபவ‌ப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார். சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியது வாசகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், சென்னை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது? கருத்து சுதந்திரம் என்பது என்ன? பொது வாழ்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்? வன்முறையையும் லஞ்சத்தையும் வெல்லக்கூடிய சக்தி எது? போன்றவை பற்றியும் அலசும் கட்டுரைகள் பல இந்நூலில் உள்ளன. இப்புத்தகத்தின் இறுதியில் 2006ம் ஆண்டில் தொலைக்காட்சி, சினிமா, இசை, அரசியல், பத்திரிகை, விளம்பரம், இலக்கியம், விளையாட்டு போற்ற துறைகளில் சிறந்தவர்கள் யார் யார்? என்ற 'சுஜாதா அவார்ட்ஸ்' பட்டியலும் நகைச்சுவை கலந்து தந்திருப்பது ரசிக்கத்தக்கது. ******************************************************************************************************************************************************
கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் எஸ்.கணேச சர்மா 978-81-8476-062-0 கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே இன்று வரை கருதி வருகிறார்கள். பரமாச்சாரியாருடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கும்போது யாருமே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி நெக்குருகிப் போவதுண்டு. நூலாசிரியர் எஸ்.கணேச சர்மா, காஞ்சிப் பெரியவரின் நெருக்கத்தில் இருந்தவர். அவரின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர். அவர் புகழைப் பேசவும் கேட்கவும் பாடவும் சந்தர்ப்பங்கள் பலவும் தனக்குக் கிடைத்திருப்பதை புண்ணிய பலனாக எண்ணி வருபவர். காஞ்சி மகானின் புண்ணிய சரிதத்தை ஏழு காண்டங்களாக அமைத்து கணேச சர்மா செய்த உபன்யாசங்களின் தொகுப்பே இந்த நூல். பக்தர்களுக்கு காஞ்சி முனிவருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்த அவதார புருஷர் அருள்பாலித்த பல சம்பவங்களை கோவையாக எடுத்துரைக்கிறார். நூலைப் படிக்கும்போது அந்த மகானை நேரில் தரிசிப்பது போன்ற உணர்வும், அன்னாரின் அருளுரைகளைக் கேட்டு மகிழ்வது போன்ற அனுபவமும் ஏற்படும். இந்த நூலைப் படித்து, அந்த கருணை தெய்வத்தின் அருள் கடாட்சத்தைப் பெற பிரார்த்திப்போம். ******************************************************************************************************************************************************
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் அனந்த சாய் 978-81-89936-12-9 மொழி என்கிற தொடர்பு சாதனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நடந்துகொண்டிருக்கின்ற அறிவியல் புரட்சி எதையுமே நாம் பார்க்க முடியாமல் போயிருக்கும். அறிவியலின் வளர்ச்சிக்கு மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவன் பயன்பாட்டிற்கும் மொழி அவசியம். தாய் மொழியைத் தவிர பிற மொழிகளும் தெரிந்திருத்தல் சாலச்சிறப்பு. பிற மொழிகளைக் கற்கவேண்டிய, பேசவேண்டிய அவசியத்தை இன்றைக்கு அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உலகெங்கிலும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலை தமிழகத்திலேயே எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இதுவொரு ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதலாம். ஆங்கிலம் ஒரே மொழியாக இருந்தாலும், அது அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று இரண்டு நாடுகளை மையப்படுத்தி உலகமெங்கும் இரண்டு விதமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் ஆங்கிலம் எழுத, பேச தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்றாகிவிட்டது. அதைக் கருத்தில் கொண்டு அவள் விகடன் இதழில் அனந்தசாய் எழுதிய ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் என்ற தொடர் வெளிவந்தது. அடிப்படை ஆங்கிலம் தெரிந்தவர்கள், யாரிடமும் எளிதாக தயக்கமின்றிப் பேசவேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்தத் தொடர் வெளியிடப்பட்டது. அந்த‌த் தொட‌ர்க‌ட்டுரைக‌ளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் தனது நீண்ட அனுபவத்தோடு கதைப்போக்கில் இந்தக் கட்டுரைகளைக் கொண்டு செல்கிறார். இரண்டு மாணவிகளுக்கு ஆசிரியை வகுப்பு எடுப்பதைப் போல எழுதியிருக்கிறார். ஆங்கிலம் கற்கவேண்டும், பேசவேண்டும் என்று ஆர்வமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களுக்கு இந்த நூல் ஒரு டானிக். ******************************************************************************************************************************************************
சொன்னால் முடியும் ரவிக்குமார் 978-81-89936-13-6 தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக சிந்தனையாளர்கள் பலர் தங்கள் சொல்லையும் செயலையும் பயனுறு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அத்தகைய சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ரவிக்குமார். தன்முனைப்புடன் சமூகச் செயல்களைப் புரியும் ரவிக்குமார், தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட மனிதர்களின் வாழ்வை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு எழுதிவருகின்றார். அரசு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றுக்கான செயல் திட்டங்களையும் முன்மொழிவதே எழுத்துச் சாதுர்யம். அப்படிப்பட்ட இவரது எழுத்து ஜூனியர் விகடன் இதழில் சிந்தனை பகுதியில் வெளிப்பட்டது. அதன் முதல் தொகுப்புதான் இந்நூல். இலங்கைத் தமிழர்களை பாதிப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறுகள் திட்டத்தை அரசு செயல்படுத்தாதது ஏன்? கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்? நாட்டில் ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம்? தீவிரவாதிகளின் கோரிக்கைகள் நியாயமானதா..? அவற்றை நிறைவேற்றலாமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை விவாதித்து அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தாலும், அரசியல்வாதியாகச் சிந்திக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலிக்கிறது ரவிக்குமாரின் குரல். ******************************************************************************************************************************************************
மகா பெரியவர் எஸ்.ரமணி அண்ணா 978-81-89936-14-3 மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர். பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர், துறவு பூண்டு இறை நெறி வளர்த்தவர். காஞ்சிமடம் வந்து, தம்மிடம் ஆசிபெற நினைப்பவர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, வழிகாட்டியாகவும் இருந்தவர். மகா பெரியவரின் பக்தி நெறி, வழிகாட்டும் திறன், ஈகைத் தன்மை குறித்து சக்தி விகடன் இதழில் ஆன்மிக அனுபவம் என்ற பகுதியில் எஸ்.ரமணி அண்ணாவின் அனுபவங்கள் தொடராக வந்தது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. காஞ்சிப் பெரியவர் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு, வளரும் இளைஞர்கள் மெய்ஞானத்தில் இருக்கும் தங்களுடைய பற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், எப்படி தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது சான்று. ஆலயம் தொழ நினைப்பவர்கள் எப்படி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணற்ற அனுபவங்களை காஞ்சிப் பெரியவரின் வழிநின்று விளக்குகிறார் நூலாசிரியர். இந்நூல், காஞ்சிப் பெரியவரை அறிய நினைப்பவர்களுக்கும், அவரது ஆன்மிக வழிகாட்டலை புரிய விழைபவர்களுக்கும் துணை நிற்கும். ******************************************************************************************************************************************************
விரல் நுனியில் வாட் ல‌க்ஷ்மி கைலாசம் 978-81-89936-15-0 அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நடவடிக்கையின்போதும், பொருளின் விலையோடு சேர்த்து வரியாக குறிப்பிட்ட அளவு பணம் செலுத்துகிறோம். அது அரசாங்கம் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரமாக இருக்கிறது. மேலும் நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் செயல்படவும், கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் தேவையான பணத்தை வரிகள் மூலமே அரசாங்கம் திரட்டுகிறது. நம் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சாணக்கியர் காலத்தில் இருந்த வரி நடைமுறைகள் எப்படி இருந்தன என்பதையும், எந்த அளவுக்கு குடிமக்களிடம் வரி விதிக்கப்பட வேண்டும் என்று வகுத்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியலாம். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள், நம் பண்டைய வாழ்க்கை நெறிகளை வெளிப்படுத்துவது. அதில் ஆட்சிமுறை குறித்த அறிவுரைகளும் உண்டு. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள்:756) மன்னரை வைத்தே ஆட்சி தீர்மானிக்கப்படுகிறது என்பதால், அரசு நடத்தத் தேவையான பணத்தை ஆட்சியாளன் எவ்வகையில் தேடலாம் என்பதை வள்ளுவர் வாய்மறை இப்படி விதிக்கிறது. நிலவரியாக வந்த பொருளும், சுங்க வரியாக ஈட்டிய பொருளும், கப்பம் மூலம் வரும் பொருளும் மன்னன் பொருள் ஈட்டும் முறைகள் என்று தெரிவிக்கிறது. இன்றும் ஆட்சிக்குத் தேவையானதை வரிகளே ஈடுசெய்கின்றன. அந்த வகையில் நம் நாட்டில் நடைமுறையில் இருந்த சிக்கலான விற்பனை வரியை மாற்றியமைத்து, எளிமையான மதிப்புக்கூட்டு வரியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். முதலில் சற்று கடினமாகத் தோன்றும் இந்த வரிமுறை, பழக்கத்திற்கு வந்துவிட்டபிறகு எளிமையாகத் தெரியும். வணிகர்களுக்கும் மக்களுக்கும் இந்த முறையை விளக்கும் வகையில் இந்த நூல் துணை செய்யும். வரி கணக்கிடும் செயல்முறைகளை, வரி கட்டும் நடைமுறைகளை எளிதாகப் புரிந்து கொள்ள இந்நூல் கை கொடுக்கும். ******************************************************************************************************************************************************
கல்கி வளர்த்த தமிழ் கல்கி 978-81-89936-16-7 தமிழக வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர்கள் எவரும் மறக்காத பெயர் கல்கி. வரலாற்று நவீனங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தியாக பூமி போன்றவற்றின் மூலம் ஏராளமான வாசகர்களின் மனதை இன்றளவும் மயக்கி வைத்திருக்கும் எழுத்துக்காரர் கல்கி. தான் கண்டு, கேட்டு, உணர்ந்து, உய்த்த அனைத்து நிகழ்வுகளையும் தன் எழுத்தின் மூலம் ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் இவர். தமிழிசையை வளர்த்தெடுத்தவர்களில் முன்னோடியான கல்கி, தமிழிசை குறித்து எழுதிய கட்டுரைகளும் பிரசித்தி பெற்றவை. அதில் நயமான வரிகளின் மூலம், ஹாஸ்யத் தெறிப்போடு தமிழை லாகவமாகக் கையாண்டிருப்பார். தேசிய இயக்கத்துக்கும், நவீன நாகரிகத்துக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பாகச் சிக்குண்ட தமிழரின் வாழ்வை, கருப்பொருளாகக் கொண்டு ஆரோக்கியமான நகைச்சுவையும், இலக்கிய நயமும் கோலோச்சும் கல்கியின் எழுத்துவீச்சுதான் கல்கி வளர்த்த தமிழ். இதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை பரிமாறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்தால் எழுச்சிப் பெற்ற தேசிய தாகமும், நவீன நாகரிகத்தில் வீழ்ந்த நம் முன்னோர்களின் அடிமை மோகமும் சரிவிகிதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தன்னுடைய இலங்கைப் பயணம் பற்றி கல்கி எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படிக்கும்போது, நம் இதயங்களை இலங்கையை நோக்கிப் பெயர்த்துக்கொண்டு போகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான ஆதித் தொடர்புகள், பாரம்பரிய நெருக்கங்கள், வரலாற்றுவழி ஆதாரங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகள், இலங்கையின் வனப்புகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்கள், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுச் சிக்கல்கள்... போன்றவற்றை நேர்மையோடு ஆவணப்படுத்தி இருக்கிறார். மேலும், மாமல்லபுரம் குறித்த மாறுபட்ட சுவையானத் தகவல்கள், தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம், தமிழ் இலக்கியத்தின் போக்கு, ஒரு தனிமனித திருமணம் சமூக வாழ்வில் நிகழ்த்தும் ஏற்ற&இறக்கங்கள்... என சகல திசைகளிலும் தன் சிந்தனையை விரித்திருக்கிறார். 1928ல் தொடங்கி 1938 வரை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கல்கியின் கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கருதி, மீண்டும் அன்றைய ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் கல்கி வளர்த்த தமிழ் என்ற பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றை விகடன் பிரசுரம் இந்த நூலாகக் கொண்டுவந்திருக்கிறது. ******************************************************************************************************************************************************
கைத்தலம் பற்றிய கடவுளர் பிரபுசங்கர் 978-81-89936-17-4 கதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது. இறைவனின் கல்யாண குணங்களை கதைகள் வடிவில் சொல்லி, உபந்யாசங்கள் மூலம் மக்களுக்குப் பரப்பினர். பார்வதி பரிணயம் என்பதோடு, சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், வள்ளி திருமணம், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று மகளிரை மையமாக வைத்து இறைவனை அடைந்தவர் கல்யாணங்களை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் நடத்தி அழகுபார்த்து பக்தி செலுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இத்தகைய நிகழ்வுகளில் மந்திர ஸ்லோகங்களோடு அந்த அந்த தெய்வத்தின் திருக்கல்யாணக் கதைகளையும் கேட்பது மரபு. வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். கல்யாணம் செய்வது என்பது சாதாரண காரியமல்ல என்றும், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது; எனவே அதற்கு தெய்வ அருள் தேவை என்றும் நம்புகிறோம். இறைவனின் கல்யாணக் கோலக் காட்சியை தரிசனம் செய்து துதித்தாலும், தெய்வத் திருமணங்கள் தொடர்பான கதைகளைக் கேட்டாலும் பாராயணம் செய்தாலும் திருமணத் தடைகள் விலகும் என்றும், நல்ல வகையில் வரன் அமையும் என்றும் சொல்வார்கள் பெரியவர்கள். அந்த வகையில் நம் நாட்டில் பாரம்பர்யமாக சொல்லப்பட்டு வரும் தெய்வத் திருமணக் கதைகளை எளிய வடிவில் தந்திருக்கிறார் இந்த நூலாசிரியர். கதைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்போருக்கு மட்டுமல்லாமல், தங்கள் இல்லங்களில் சுபகாரிய நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கும் இந்த நூல் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது. ******************************************************************************************************************************************************
புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் காஷ்யபன் 978-81-89936-18-1 பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை உலகுக்கு உயர்த்திப் பிடிக்கும் பண்பாட்டுத் தளங்களாகவும் திகழ்கின்றன. மேலும், சுற்றுலாத் தலங்களாகவும் இருந்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. நம் புண்ணிய பாரதத்தில் இப்படிப்பட்ட ஆலயங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டவனின் அவதார தலங்கள் முதல், அரசர்களால் கட்டுவிக்கப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்ற ஆலயங்கள் வரை இவற்றில் அடங்கும். இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள். ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணி, அங்கு நிகழும் சிறப்பு வழிபாடுகள், கோலாகலமாக நிகழ்ந்தேறும் திருவிழாக்கள், ஆலயங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மூலவர் உற்சவர் ஆகியோரின் சிறப்புகள், புராதன கோயில்களின் புராணக் கால கதைகள்... என ஆன்மிகம் தோய்ந்த அனுபவ எழுத்துக்களால் நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், ஆலயம் இருக்கும் இடம், அங்கு சென்று வருவதற்கான வழித்தடங்கள், அருகே இருக்கும் பெருநகரங்கள், போக்குவரத்து வசதிகள், தங்கும் இடங்கள்... போன்ற தகவல்களைக் கூடுதலாகத் தந்திருப்பது பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்றுவர உதவும். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆலயங்களை தன் தூரிகை மூலம் தரிசிக்க வைக்கிறார் ஓவியர் ஜெ.பிரபாகர். ******************************************************************************************************************************************************
மனதின் ஓசைகள் ஜென்ராம் 978-81-89936-20-4 நாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனித மனம் அமைதி கொள்ளாது, புதிய புதிய தகவல்களுக்காக பொழுதுகள் தோறும் அலைந்துகொண்டே இருக்கிறது. அந்தத் தேடலுக்கு நல்ல தீனியாக, ஜூனியர் விகடனில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம், சீரிய சிந்தனைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த சிந்தனைப் பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மனதின் ஓசைகள் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது. கூட்டணி அரசியல், இட ஒதுக்கீடு என்று பல்வேறுபட்ட சர்ச்சைகளை இந்த நூலில் திறம்பட அலசுகிறார் ஜென்ராம். இந்தக் கட்டுரைகள் காலத்தின் சிறந்த ஆவணமாகவும் திகழ்கின்றன‌. சமூக, அரசியலின் மீதும் சமூக ஒழுக்கத்தின் மீதும் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த நூல் ஆத்ம நண்பன். ******************************************************************************************************************************************************
குரு தரிசனம் பா.சு.ரமணன் 978-81-89936-21-1 தெய்வத் திருத்தலங்கள் நிறைந்த, தெய்வத் திருத் தொண்டர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் தோன்றி வாழ்ந்த தெய்வீக பூமி தமிழகம். தவயோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஆன்மிகச் சிந்தனையைப் பரப்பியதோடு, தம்மை நாடிவரும் அன்பர்களுக்கும், சீடர்களுக்கும் தமது தவயோக சக்தியால் மனக்குறை நீக்கி, உடல் பிணியும் நீங்கச் செய்துள்ளனர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக வாழ்ந்தும் காட்டியுள்ளனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் தாய் தந்தையர்க்கு அடுத்து குருவுக்கு சேவைகள் செய்து, உண்மையான சீடனின் கடமையைப் பூர்த்தி செய்து, அதன் பிறகு சந்நியாச தீட்சை பெற்று தெய்வீக நிலையை அடைந்தவர்களும் உண்டு. இளம் வயதிலேயே தெய்வீகப் பாதையில் ஈர்க்கப்பட்டு சந்நியாசம் பெற்றவர்களும் உண்டு. சம்சாரக் கடலில் வீழ்ந்து பிறகு தெய்வீக ஞானம் அடையப் பெற்று சந்நியாசம் பெற்றவர்களும் உண்டு. அத்தகைய தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், யோகிகளும் தம்மை நிந்தித்தவர்களுக்கும், தமக்குத் துன்பம் விளைவித்தவர்களுக்கும் கூட அருள் புரிந்துள்ளனர். இவர்கள் தங்களது தவயோகத்தால் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த போதும், ஞான திருஷ்டியால் ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருந்தனர். தம்மை நம்பிய அடியார்களின் துன்பச் சூழலை ஞான திருஷ்டியால் கண்டு துயர் துடைக்கும் வல்லமை பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட தவயோகமும் ஞானமும் தெய்வீக சக்தியும் குருவின் ஆசியும் பெற்ற யோகிகள் பற்றிய சுவையான தகவல்களை இந்த நூலில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். குரு தரிசனம் என்ற இந்நூல் வாயிலாக, தவ ஞானியர் பத்து பேருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் தெய்வத் திருத்தொண்டைப் பற்றியும், இவர்களோடு தொடர்புடைய முக்தித் தலமான திருவண்ணாமலையின் மகத்துவத்தைப் பற்றியும் ஆன்மிக உணர்வு ஓங்கத் தெரிவித்துள்ள பாங்கு நிச்சயம் வாசகரை ஈர்க்கும். ஆன்மிக நாட்டமுள்ள அன்பர்களுக்கு இந்நூல் ஊக்கமும் ஆன்ம ஞானமும் நல்கும். ******************************************************************************************************************************************************
ஹாய் மதன் (பாகம் ‍3) மத‌ன் 978-81-8476-063-7 இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம். ******************************************************************************************************************************************************
வான சாஸ்திரம் வேங்கடம் 978-81-89936-22-8 குழந்தைக்குச் சோறூட்ட வானத்தைக் காட்டி, நிலாவைக் காட்டி, அதன் அழகை ரசிக்கச் செய்து, விண்ணின் விசித்திரத்தை முதன்முதலாக அன்னை அறிமுகப்படுத்துகிறாள். அதுமுதல், பரந்து விரிந்த விண்ணைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் நமக்குள் அதன் பிரமாண்டம், மெய்சிலிர்க்கும் எண்ண அலைகளை ஏற்படுத்துகிறதே. மனத்தை ஈர்க்கும் வானின் நீல நிறம், பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தேய்வதும் வளர்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் வெண்ணிலா, அவ்வப்போது பூமியில் எங்கேனும் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் விண்கற்கள், இதோ இன்றைக்கு நான் பூமியை நெருங்கியிருக்கிறேன்; இந்த சந்தர்ப்பத்திலேயே என்னைப் பார்த்துவிடுங்கள், இனி என்னைப் பார்க்க வேண்டுமானால் நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி ஆசையைத் தூண்டிவிடும் கிரகங்கள்... இப்படியாக விண்ணைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நமக்குள் ஆச்சர்யங்கள் அலைமோதும். உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் உடையவர்களான நம் நாட்டிலும் வான சாஸ்திரம் உச்சத்தில் இருந்துள்ளது. கோள்களையும் விண்வெளியையும் பற்றிய பரந்த அறிவை நம் முன்னோர் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். ஆயினும் கணக்கீடுகள் சார்ந்த அறிவுபூர்வமான அஸ்ட்ரானமி எனப்படும் வானியலைக் காட்டிலும், சுவாரஸ்யங்கள் மிகுந்த அஸ்ட்ராலஜி எனப்படும் ஜோதிடத்தை அதிகமாகக் கையாளத் தொடங்கியதால், முன்னோரின் வானியல் நுட்பம் பிற்காலங்களில் அதிக வளர்ச்சியுறாமல் போய்விட்டது என்பர் அறிஞர் பெருமக்கள். இன்றைய அறிவியல் யுகத்தில் வானியல் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாத்தியமாகியிருக்கிறது. இதற்கு மூலகாரணமாக இருப்பவை, விண்வெளி ஆராய்ச்சியும் வானியலில் பரந்துபட்ட அறிவும்தான்! வளரும் தலைமுறை நாளைய உலகை வழிநடத்திச் செல்ல விண்வெளி சார்ந்த நுட்பங்களை நன்கு அறிந்து தங்களுக்குள் தர்க்கிக்க வேண்டும். காரணம், அடிப்படையை அறிந்து கொண்டு, தங்களுக்குள் ஏன்? எதற்கு? எப்படி? என்கின்ற கேள்விகளைக் கேட்கும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகிறது. இந்த நூல், அதற்கான யுக்தியை காட்டுகிறது. ******************************************************************************************************************************************************
காந்தி தாத்தா கதைகள் கொத்தமங்கலம் சுப்பு 978-81-89936-19-8 காந்தியை தேசப்பிதாவாக, நாட்டின் சுதந்திரத்துக்குப் பாடுபட்டவராக மட்டுமே அறிந்திருக்கிறோம். அவரது இன்னொரு பக்கத்தை, குழந்தைத்தனமான குணத்தை, பல நல்ல கொள்கைகளைக் கற்றுத் தரும் குருவாக அவர் வாழ்ந்த வாழ்க்கையை நம்மில் பலர் அறிய வாய்ப்பில்லாமலே இருந்திருக்கிறது. குறிப்பாக இந்தக் காலத்துக் குழந்தைகள் காந்தியின் அன்பை, நகைச்சுவையை, விடாப்பிடியான வேகத்தை, பண்பை, எங்கே இருந்தாலும் அங்கே தன் முத்திரை பதிக்கும் வித்தையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதையெல்லாம் குட்டிக் குட்டிக் கதைகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் மனதில் பசுமரத்து ஆணியாக சில நல்ல குணங்கள் நுழைந்து கொள்ளும். இளகிய மண்ணாக இருக்கும் அவர்களின் இதயத்தில் காந்தியின் வாழ்க்கையைப் பதிவு செய்வது இந்தியா முழுக்க மகாத்மாக்களை விதைக்கும் வாய்ப்பாகும். அம்மாவின் கதை கேட்டு முத்து எவ்வாறு நற்குணங்களைக் கற்றுத் தேர்கிறான் என்பதை அழகான, அன்பான, எளிய வார்த்தைகளில் விளக்கி இருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. வெறும் கதைகளாக மட்டுமில்லாமல் காந்தியின் வாழ்க்கையினூடே இந்திய சுதந்திர வரலாற்றையும் இணைத்துச் சொல்லி இருப்பது அவரது சாமர்த்தியம். இயந்திரங்களும் எலெக்ட்ரானிக் பொருட்களும் நம் வாழ்க்கையை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் கதை கேட்கும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கிறார்கள் பெற்றோர் பலர். அவர்களுக்கு இக்கதைகள் அரிய பொக்கிஷம். வரலாற்றைக் கடந்து வந்த பெரியவர்களுக்கு காந்தி காலத்திய நிகழ்வுகள் இன்பமான மலரும் நினைவுகள். ******************************************************************************************************************************************************
அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் காஷ்யபன் 978-81-89936-23-5 ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் ஆன்மிகத் தலங்கள்தான், உயிர்களை ஆண்டவனோடு ஐக்கியப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆன்மாவை சகலவிதமான தீமைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் இந்த ஆலயங்களே ஆத்ம சுத்திகரிப்பு நிலையங்கள். அவை ஆன்மிக சிந்தனைகளை வளர்க்கும் அற்புத ஆலயங்கள். ஆதலால்தான், இறைவன் அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து அருள்மழை பொழிகிறான். இறைவன் எல்லோருக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவன். ஆதலால், அறிவார்ந்த முனிவர்கள் முதல் ஓரறிவு சிற்றுயிர்கள் வரை எல்லோரும் வணங்கி வழிபட்டு உய்வுபெற்ற செய்திகளைத்தான் தலபுராணங்கள் உரைத்தன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்துகொண்டார் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் அருள் மழை பொழியும் அற்புத ஆலயங்கள். இந்த நூலில் பெருமாள் குடிகொண்டிருக்கும் பதினான்கு திருத்தலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடியவருக்கும் இடமளித்த வரலாறுகள், பரம்பொருளை மனதாரப் பற்றிக் கொண்டவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள்... என ஆன்மிகம் தோய்ந்த அனுபவ எழுத்துக்களால் நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆலயங்களை தன் தூரிகை மூலம் தரிசிக்க வைக்கிறார் ஓவியர் ஜெ.பிரபாகர். ******************************************************************************************************************************************************
உனக்காகவே ஒரு ரகசியம் சத்குரு ஜக்கி வாசுதேவ் 978-81-89936-24-2 உலகில் வாழும் உயிர்கள் யாவும் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கின்றன. எல்லா உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே பிரயாசைப்படுகின்றன. ஆனாலும், வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் சில சிக்கல்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. கால ஓட்டத்தில் அவையே தொடர்கதையாகி நீர்த்துப்போய் அலுப்புத்தட்ட துவங்கிவிடுகிறது. இத்தகைய சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு அவன் பயத்தின் பிடிக்கு ஆட்பட்டுப் போகின்றான். அதன் காரணமாக சரியான முடிவுகள் எடுக்கும் தருணங்களை தவறவிட்டு அவதிப்படுகிற நிலைக்கு உள்ளாகின்றான். அப்படிப்பட்ட சூழல்களை உணர்ந்து, வாழ்க்கையை துய்த்து அணுகி அனுபவிப்பதற்கான ரகசியங்கள் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. அந்த மந்திரத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலின் வாயிலாக பயிற்றுவிக்கிறார். ஆனந்த விகடன்_ல் ஜக்கி வாசுதேவின் உனக்காகவே ஒரு ரகசியம் எழுத்தாளர்கள் சுபாவின் எழுத்தாக்கத்தில் தொடராக வந்தபோது அதைப் படித்து சத்குருவின் மானசீக சீடர்களானவர்கள் பலர். சிலர் நேரடியாக சத்குருவைச் சந்தித்து அவருடைய சமூகப் பணிக்கு உதவியாகத் தம்மையும் இணைத்துக் கொண்டனர் என்பது செவி வழிச் செய்தி. கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து; அதுவே உண்மையும்கூட. ஆனால், இன்றைக்கு அவையாவும் தலைகீழாகி, மனிதனைப் பலவித சர்ச்சைகளிலும் சண்டைகளிலும் செலுத்தி ஆட்டுவிக்கின்றன என்பதே நிதர்சனமான காட்சியாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சமூக அவலங்களிலிருந்து விடுபட அன்பு, தியானம், யோகா, மரம் வளர்ப்பு, இயற்கை பராமரிப்பு என்று பல்வேறுபட்ட புதிய திசைகளை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் வழி காட்டுகிறார். அந்த திசைகளை நோக்கி பயணிப்பவர்கள் என்றும் இளமை மாறாது நோய்நொடியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள். ******************************************************************************************************************************************************
ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி காஷ்யபன் 978-81-89936-25-9 இந்தியத் தத்துவ ஞான மரபை வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேலை நாடுகளுக்குப் பரப்பிய பெருந்தகையோர் பலர் இந்த தேசத்தில் இருந்துள்ளனர். சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமதீர்த்தர், பரமஹம்ஸ யோகானந்தர் என எத்தனையோ மகான்கள் இங்கிருந்து மேலைநாடுகளுக்குச் சென்று இந்தியத் தத்துவ போதனைகளைச் செய்துள்ளனர். அவர்களுக்கு மேலை நாடுகளில் பக்தர்களும் சீடர்களும் இருக்கின்றனர். இந்த மகான்களின் தாக்கத்தால், இந்திய நாட்டுக்கு வந்து இந்த மண்ணில் சில காலம் தங்கிச் செல்ல ஆசை கொண்டு இங்கு வருபவர்கள் பலர். ஆனால், நம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, வெளிநாடுகள் எதற்கும் செல்லாமல், தன் தெய்வீக ஒளியாலும் சிறப்பாலும் மேலைநாட்டினரை இங்கு வரவழைத்து தம் பக்தர்களாக ஆக்கிய சிறப்பு மகரிஷி ரமணருக்கே உரித்தானது. இந்து மதத்தின் இணையில்லா இறையடியாராக, வேதாந்தத்தின் வேந்தனாக, கருணைக்கடலின் சொரூபமாக, மொத்தத்தில் சத்குருவாக விளங்கிய ரமண மகரிஷியின் வாழ்க்கை இந்த நூலில் அழகுற பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமணரின் குழந்தைப் பருவ வாழ்க்கை, அவர் தன்னை ஆன்மிகத்தில் இணைத்துக் கொண்டது, திருவண்ணாமலையை இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம், அங்கு அவரின் தன்நிலை மறந்த தவம், ரமணாசிரமம் உருவான விதம், தியானம் பற்றிய ஆலோசனைகள், அவர் எடுத்துச் சொன்ன ஆன்மிகச் சிந்தனைகள், நல்லொழுக்க நெறிமுறைகள், மனிதநேயத்தைப் பற்றிய மங்காத குறிப்புகள் ஆகியவற்றை இதில் காணலாம். அர்த்தம் மிகுந்த கதைகளும் ரமணரின் கருத்துகளும் நம் கருத்தில் பதியும். பகவான் ரமணரின் வாழ்வில் ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களையும் அதனால் அவர் பெற்ற அனுகூலங்களையும் நாம் இந்நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். ******************************************************************************************************************************************************
புராணங்களின் புதிய பார்வை ஸ்வாமி 978-81-89936-26-6 இன்றளவும் உள்ள, உலகின் பழைமையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான நம்மிடம், நம் முன்னோர் கொடுத்துச் சென்றுள்ள இலக்கியப் பொக்கிஷங்கள் அளவற்றவை. நம்மை நல்வழிப்படுத்த உருவகக் கதைகள், பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியன இன்று பரவலாக இருப்பதுபோல், அந்தக் காலத்தில் எழுந்தவையே புராணங்களும் இதிகாசங்களும். காலச் சூழலுக்கு ஏற்ப அவற்றில் மக்களின் வாழ்க்கை முறைகளும், பழக்க வழக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். விஞ்ஞான அறிவு பெற்றுள்ள இன்றைய சூழலில், அந்தப் புராணங்களில் பெரும்பாலானவற்றை அப்படியே ஏற்க நமக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் அவை காட்டும் நீதியை நம்மால் தள்ளிவிட முடியாது. அக்கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் நம் நாட்டில் தோன்றியனவாயினும், கிழக்கத்திய சிந்தனைகளில் தோய்ந்த நாடுகளில், குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இவை இரண்டின் தாக்கம் சற்றே அதிகம்! அங்கெல்லாம், அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப இவ்விரு இதிகாசங்களும் மாற்றம் பெற்று செல்வாக்குடன் திகழ்கின்றன. பெரியவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கோ பேரன் பேத்திகளுக்கோ இந்தப் புராணக் கதைகளைச் சொன்னால், பழம் பஞ்சாங்கம் என்று கேலி பேசிச் சென்றுவிடுகின்றனர். இவற்றில் என்ன இருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் இந்தத் தலைமுறையினர். ஆனால் இவற்றில் உருவகமாக பல அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளன என்று சொல்லி, அவற்றை இந்தக் கால அறிவியல் நடைமுறைகளுக்கு ஒப்புமைப்படுத்தி எளிமையாகப் புரிய வைத்திருக்கிறார் இந்த நூலாசிரியர். இவற்றில் உள்ள விளக்கங்கள், புதிய கோணத்தில் நம் நாட்டின் புராண இதிகாசங்களைப் பார்க்கும் பார்வையை நமக்கு அளிக்கும். புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள எந்திர தந்திர வித்தைகள் எப்படி இன்றைக்கு நாம் காணுகின்ற அறிவியல் ஆயுதங்களாகவும் கருவிகளாகவும் ஆகியிருக்கின்றன என்கின்ற கருத்தோடு, எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப நம் புராண இதிகாசங்களை நாம் பார்க்கும் விதத்தையும் இந்நூலில் ஆசிரியர் காட்டியுள்ள பாங்கு, ஒரு வழிகாட்டி. ******************************************************************************************************************************************************
பலன் தரும் விரதங்கள் பிரபுசங்கர் 978-81-89936-27-3 இறைவழிபாட்டின் ஒரு அம்சமாக இருப்பவை விரதங்கள். இவை எல்லா மதங்களிலும் உண்டு. விரதங்களின் மூலம் உடலுக்கும் உள்ளத்துக்குமான ஆரோக்கியத்தை முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி வகுத்து வைக்கப்பட்ட நியமங்களின்படி விரதம் இருப்போரின் அனுபவங்கள், அதை நமக்கு எடுத்துச் சொல்லும். நாம் கொண்டாடும் சில பண்டிகைகளே, விரதங்களாகவும் இருப்பதுண்டு. இது கூடுதலான இறை வழிபாட்டு முயற்சிகளே. இப்படி இறை வழிபாட்டுக்குப் பல வழிகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கியக் காரணம், நாம் இருக்கும் நிலைக்குக் காரணமான இறைவனுக்கு, நாம் இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நன்றி சொல்வதற்காகத்தான். அதையும் ஒரு முறையாகச் செய்தால், வழிபாட்டில் முழு ஈடுபாடு இருக்குமல்லவா? இதையே இந்தப் புத்தகம் சொல்கிறது. தற்காலத்திய இளைஞர்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஈடுபாடு என்பது நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களாகவே விரும்பி இதுபோன்ற விரதங்களிலும், வழிபாட்டிலும் கலந்துகொள்ள முன்வராததற்கு, அவர்களுடைய சில கேள்விகளுக்கு விடை கிடைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். கிழமைகள், திதிகள், மாதங்கள் உள்ளிட்ட சிலவற்றை வைத்தே விரதங்கள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த விரதங்களின் தன்மைகள் என்ன? அவற்றால் ஏற்படும் பலன்கள் என்ன? அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்களை எளிய வகையில் தருகிறது இந்நூல். வளரும் தலைமுறையினர் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்திருக்கும் இந்நூல், அவர்களுடைய அடிமனத்தில் எழும் சந்தேகங்களைப் போக்கும். ******************************************************************************************************************************************************
நேற்றைய காற்று யுகபாரதி 978-81-89936-28-0 இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீறி உதடுகளை முணுமுணுக்க வைத்துவிடும். கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் கவிஞர்கள் நமக்களித்துள்ளனர். இன்பமான நேரங்களில் மட்டுமல்ல, கவலையுறும் நேரங்களிலும் நமது மனத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் மருந்தாக திரையிசைப்பாடல்கள் திகழ்கின்றன. தேனிசைத் தென்றலாக, இன்னிசை கீதமாக பாடல்களை உருவாக்கிய தமிழ்த் திரையுலகக் கவிஞர்களின் சொந்த வாழ்க்கைச் சூழலைப் பற்றியும், திரையுலகுக்கு அவர்கள் அறிமுகம் ஆன விதம் மற்றும் அவர்களின் கவித்திறன் பற்றியும் இந்நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியுள்ளார். தியாகராஜ பாகவதர் காலம்தொட்டு இன்று வரையுள்ள பாடலாசிரியர்களில் மிகப் பிரபலமானவர்களைப் பற்றியும், அவர்களின் எழுத்துநடை எப்படியெல்லாம் நெஞ்சை நெகிழவைக்கும் தன்மையோடு அமைந்திருந்தன என்றும் சில பாடல்களின் உதாரணங்களோடு அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். காலத்தால் அழியாத கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து பாடல்களாக நிலைபெற சுவைகூட்டிய இசையமைப்பாளர்கள் சிலரையும் ஆங்காங்கே நினைவுகூர்ந்துள்ளார். பாடலாசிரியர்கள் வரிசையில் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, கா.மு.ஷெரீப், பஞ்சு அருணாசலம், நா.முத்துலிங்கம் போன்றவர்கள் வளர்த்த சமூக இலக்கிய நயத்தைப் படிக்கும்போதே கடந்தகாலச் செழுமை நம் கண்களில் தெரிகிறது. ******************************************************************************************************************************************************
பாரதத்தின் பக்த கவிகள் மு. ஸ்ரீனிவாசன் 978-81-89936-29-7 இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானுடமே இவ்வளவு கூத்துகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நாம் இசை வல்லுனர்களைப் பார்த்திருக்கிறோம். புலவர்களைப் பார்த்திருக்கிறோம். பக்திப் பரவசத்தில் ஊனுருக நின்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் ஒன்றாகத் தேனில் கலந்து இறைவனுக்குப் படைத்து, பின் புசிப்பதுபோல இசையும் புலமையும் பக்தியும் ஒன்றாகச் சேர்ந்த திருவருட் செல்வர்களான பக்த கவிகளை இந்நூலில் காண்கிறோம். பக்த கவிகள் என்போர், இறைவன் மேல் பக்திமேலீட்டால் கவிதைகளைப் புனைந்தும் இசையால் ஏத்தியும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள். நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர்கள். இன்றைக்கு, ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்றால் என்ன? என்று கேட்டால் சின்னக் குழந்தையும் அர்த்தம் சொல்லும். அதை எவ்வாறு தடுப்பது என்று கேட்டால் அனேகப் பெரியவர்கள் பதில் சொல்லக்கூடும், ஆனால் யதார்த்தமாக நடைமுறையில் சொல்லித்தருவதற்கு மிகமிகச் சொற்பமானவர்களாலேயே முடியும். பக்த கவிகள் நடந்துகாட்டியது போல பக்தியை இசையுடன் சேர்த்து மேற்கொள்ள முயற்சித்தால் கண்டிப்பாக மனநிம்மதியுடன் வாழலாம். இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த நம் தேசத்தில் வாழ்ந்த முப்பது பக்த கவிகளைப் பற்றியும் அவர்களுக்கு இறைவன் நேரில் வந்து தரிசனம் தந்தது, அவர்கள் வாழ்வில் நடந்த அசாதாரணமானதும் ஆச்சரியமானதுமான சம்பவங்கள், அவர்கள் எழுதிய பாமாலைகள், அவர்களுடைய பாடல் வல்லமை போன்றவற்றை இந்நூலில் படித்து மகிழலாம். வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து, வெவ்வேறு மொழிகளைப் பேசிவந்த இவர்கள், பக்தி எனும்போது ஒரே சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பதை இவர்களுடைய பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. ******************************************************************************************************************************************************
தியானம் அதன் ஞானம் ஸ்வாமி 978-81-89936-30-3 திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றதால், பொருளைத் தேடி ஓடும் செயலையே முதன்மையாகக் கொண்டு ஓயாது பாடுபடும் உள்ளம், வாழ்வின் அமைதிக்கான அருள் தேடும் செயலை மட்டும் விட்டுவிடுகிறது. பொருள் அதிகம் குவிந்துவிட்ட பிறகு ஏதோ ஒரு வெறுமை மனத்தை ஆட்கொள்ளும். அப்போது மனம் நிம்மதியைத் தேடி ஏங்கி நிற்கும். உடனே தியானம், யோகம் என்று நாடிச் செல்லும். நம்முடைய ஆத்மாவுக்கு பொருள் தரும் பொலிவைவிட, அருள் எனும் மருள் நீக்கிய மழையே & அமைதியே தேவையானது. அப்படிப்பட்ட அமைதியை அடைய என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் போன்ற கேள்விகள் நிறைய பேருக்குத் தோன்றும். பணிச்சுமை, நெருக்கடி, விரும்பத்தகாத விஷயங்கள், மனத்துக்கு ஒவ்வாத சுற்றுச் சூழல் என்று பல்வேறு காரணிகள், மனிதனின் மன நிம்மதியைக் குலைத்து, மனத்துக்கு படபடப்பையும் அலைக்கழிப்பையும் தோற்றுவிக்கின்றன. இத்தகைய சூழலில் இளம் தலைமுறையே இன்று யோக மார்க்கத்தையும் தியானத்தையும் தேடிச் செல்கின்றன. அப்படி தேடிச் செல்லும்போது, எது சரியானது, யார் சரியாகப் பயிற்றுவிப்பார் போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பே. தியானம் என்பது என்ன, தியானம் செய்யும்போது எதை எண்ணி தியானிப்பது, தியானம் செய்யும் முறை, அதனால் நாம் பெறும் பயன்கள், தியான வகைகள், அதன் நோக்கங்கள் போன்றவற்றுக்குரிய எளிய, அரிய விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஆழ்கடலில், பரந்த வெளியில் எங்கோ இருக்கும் அமைதியை, பரம்பொருளை உள்ளுக்குள் உணர, தியானம் அதன் ஞானம் என்ற முத்தை உங்கள் முகத்தருகே கொண்டுவந்துள்ளார் நூல் ஆசிரியர். தினமும் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வாழ்வில் தியானத்துக்கு ஏது நிதானம் என்ற கேள்வி எழுவது இயல்பு. நிதானத்தை நிர்கதியாக்கிவிட்டு வாழ்வில் நிலையாக நிற்பது கடினம். ஆகவே, வாழ்வுக்கு வேண்டிய வளத்தைச் சேர்க்க உடலுக்கு வேண்டும் நலம். உடலுக்கு வேண்டிய நலத்தை அமைதி எனும் அருவத்தின் மூலம் உருவாக்குகிறது ஆன்மா. இந்த ஆன்மா எனும் அழகிய பூங்காவில் ஆண்டவனை அமரச்செய்யும் முயற்சியே தியானம். இந்த தியான மார்க்கத்தை எப்படி அடைவது என்ற ஞானத்தை இந்நூல் மூலம் பெற்று, நிச்சயம் நிம்மதி பெறமுடியும். ******************************************************************************************************************************************************
தலையணை மந்திரம் எஸ்.கே.முருகன் 978-81-89936-31-0 மந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத் திகழ்கிறது. அதுதான் தலையணை மந்திரம். தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே. ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே தருகிறது இந்த நூலின் தலைப்பு! தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம் & அவர்களின் தனிமை நேரமே. அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அன்யோன்யமான உரையாடலே தலையணை மந்திரம். அந்த ஏகாந்த நேரத்தில் அன்யோன்யத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்; அன்யோன்யம் வளர வளர எப்படி தாம்பத்யத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்; தாம்பத்யத்தில் லேசாக விரிசல் நேரும்போதே அதை எப்படி நேராக்கிக் கொள்வது; தாம்பத்யத்துக்கான சோதனைக் களனான ஊடல் ஏற்படும் நேரங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்... ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது. தாம்பத்யம் எனும்போது உள்ள உறவு மட்டும்தானா, உடல் உறவு இல்லாமலா? அது இல்லாமல் வாழ்க்கையில்லை, அதேசமயம் அது ஒன்றே வாழ்க்கையில்லையே! அதுவும் வாழ்க்கையில் ஓர் அங்கம், நிச்சயத் தேவை என்ற அணுகுமுறை இந்தப் புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இந்தத் தலையணை மந்திரம் கணவனும் ஓதலாம். ம‌னைவி சொல்லே தலையணை மந்திரம் அல்ல! மந்திரத்தின் குறிக்கோள் உறுதியான தாம்பத்யம். தாம்பத்யம் என்பது கணவன்&மனைவி மட்டும் தங்கள் சுயநலத்தைப் பார்த்துக்கொண்டு போவதல்ல; பெண் தன் புகுந்தவீட்டையும், ஆண் தன் மாமனார் வீட்டையும் அனுசரித்துக் கொண்டு, தங்கள் இணையின் மனத்தை வசீகரித்து வைத்துக் கொள்ளும் நுண்ணிய கலையை அறிந்தவர்கள் மிகச் சொற்பமே. அந்தக் கலையை உளவியல் பாங்கோடு அணுகி இந்நூல் மூலம் தருகிறார் நூலாசிரியர். ******************************************************************************************************************************************************
பருத்தி வீரன் இயக்குநர் அமீர் 978-81-8476-064-4 சமீபகால தமிழ்ப் படங்களில் பிரபலமான நாயகர்களோ, பிரமாண்டமோ இல்லாமல் அசாத்திய வெற்றி பெற்றிருக்கிற படம் பருத்திவீரன். திரைக்கதையிலும், படமாக்கும் நேர்த்தியிலும் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பருத்திவீரன் சரியான சாட்சி! புழுதிக்காட்டின் வாழ்வியலையும் வழக்கங்களையும் அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவது போல், பருத்திவீரனை படைத்துக் காட்டி இருக்கிறார் இயக்குநர் அமீர். இவர், எப்போதுமே யதார்த்தத்தின் மேல் பயணிக்கக் கூடிய ரசனைக்காரர். பருத்திவீரன் மூலம் தரமான படைப்புகளாலும் பிரமிக்கத்தக்க வெற்றியைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருப்பவர். பருத்திவீரன் மூலம் ஜாதியக் கூறுகளின் வலியை, சொல்லாமல் சொல்லி பார்ப்பவர்களின் நெஞ்சுக்குள் நியாயத் தராசை ஆட்டிவிட்டிருக்கும் அழுத்தமான ஆதங்கமான படைப்பாளி. வெளிநாடு போய் படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், படத்தை எடுத்துக் கொண்டு வெளிநாடு போய் விருதுகளை வாங்கிக் குவிக்கிற ஜாம்பவான். ராம் படத்துக்காக சைப்ரஸ் விருதை வென்று இந்திய சினிமா வித்தகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அமீர், பருத்திவீரனை ஜெர்மனியில் நடந்த உலகப்பட விழாவுக்கு கொண்டு போய், சிறந்த படத்துக்கான சிறப்பு விருதையும் தட்டி வந்திருக்கிறார். பருத்திவீரனை உருவாக்கிய ஒவ்வொரு துளி போராட்டங்களையும், சக நண்பனிடம் சொல்வது போல் உங்களிடத்தில் எடுத்து வைக்கிறார் அமீர் இந்த நூலில். அமீரின் யதார்த்தமான எழுத்தும், பருத்திவீரனின் திரைக்கதையும், சினிமாவில் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு பாடமாகவும், வட்டாரத் தமிழை வாசிக்கத் துடிப்பவர்களுக்கு இனிப்பு பானமாகவும் இருக்கும்! ******************************************************************************************************************************************************
சாக்கிய முனி புத்தர் முருக சிவகுமார் 978-81-89936-32-7 பாரதத்தின் புகழ், பெருமை இங்குத் தோன்றிய மகான்களாலும் சிறந்த அறிவுப் பொக்கிஷங்களாலும் பாரில் பரவியுள்ளது. மகரிஷிகளும் மகாபுருஷர்களும் அவதரித்த இந்த மண்ணில்தான் சாக்கிய வம்சத்தில் அரசாளும் உரிமையோடு அவதரித்தார் மகான் சித்தார்த்தர். ஏகபோக வாழ்வுக்கு வசதிகள் இருந்தும், எல்லை இல்லா செல்வமிருந்தும், மக்களைப் பற்றியும் அவர்களது இன்ப துன்பங்கள் பற்றியுமே சிந்தித்த சித்தார்த்தர், அதற்கு விடைகாண தன் வாழ்வையே அர்ப்பணித்து உலகம் போற்றும் புத்தரானார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற வார்த்தையை மெய்ப்பித்தது புத்தரின் வாழ்வு. அம்பினால் அடிபட்ட அன்னப் பறவையிடம் அவர் காட்டிய ஜீவகாருண்யமும், அரச வம்சத்தில் பிறந்தும் பணியாட்களோடு சரிநிகர் சமானமாய் உழவுசெய்த செயலும் அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். ரோகிணி நதிநீர் பிரச்னைக்காக சாக்கிய வம்சத்துக்கும் கோலியர் வம்சத்துக்கும் இடையே போர் மூண்டுவிட்டால், அதனால் ஏற்படக்கூடும் உயிரிழப்புகளைத் தடுக்க, சாக்கிய சங்கத்தை எதிர்த்து சொந்தபந்தங்களையும் அரசாளும் உரிமையையும் துறந்து நாட்டைவிட்டே புத்தர் வெளியேறினார் என்ற செய்தி புத்தரைப் புதிதாகப் படிப்பவர்களுக்குப் புதிய செய்தி. யாகம் போன்ற வைதீக கர்மாக்களால், அறியாமையின்பால் அப்பாவிகள் ஏமாற்றப்படுவதைக் கண்டு மிகவும் வருந்தி, மனித சமுதாயத்துக்கு புதிய வழியைக் காட்டினார் புத்தர். மக்களின் அறியாமை இருள் விலக புத்தர் போதித்த போதனைகள் பற்றியும் புத்த பிக்குகள் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகள் நெறிமுறைகள் பற்றியும், புத்த பிக்குகள் யார், புத்த உபாசகர்கள் யார் என்பது பற்றியும் அவரவர் பின்பற்றவேண்டிய கடமைகளையும் இந்நூல் விளக்குகிறது. ஆசையே மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை. ஆசைகளைத் துறந்தால் துன்பமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்று போதனைகளை வழங்கியதால், அவரது பாதையில் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டதும், அங்குலிமாலா என்ற அரக்ககுணம் கொண்டவன்கூட புத்தரின் போதனைகளால் மனம் மாறியதையும் படிக்கும்போது புத்தரின் தியான யோகத்தின் சக்தியும் அவரது போதனைகளில் பொதிந்திருந்த உண்மையும் நம்மை ஈர்க்கும். ******************************************************************************************************************************************************
சுட்டிகளின் உலகம் கமலநாதன் 978-81-89936-33-4 பணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் பலரும் நினைக்கின்றனர். சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் அமெரிக்காவைப் பற்றிய செய்திகளை தினந்தோறும் ஊடகங்களின் மூலம் கண்டும் கேட்டும் வருகின்றோம். அதனை நேரில் சென்று பார்த்தால் மனதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அமெரிக்காவின் முக்கிய இடங்களான ஃப்ளோரிடா, வாஷிங்டன், சௌத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மனதைக் கவரும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பார்த்த பொறியாளர் கமலநாதன், அந்த அனுபவத்தை சுவாரஸ்ய மொழி நடையில் சுட்டிகளுக்கும் புரியும்படி சுட்டிவிகடன்_ல் எழுதினார். அதுவே இந்த 'சுட்டிகளின் உலகம்' பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வந்ததுபோல நம்முடன் கை குலுக்கும் டிஸ்னி உலகம், குட்டி யானைகள் ஆற்றில் குளித்து அமர்க்களப்படுத்தும் ஜங்கிள் க்ரூஸ், திகிலடைய வைக்கும் பேய் பங்களா, விண்வெளி ஓடங்களையும் அதன் நுட்பங்களையும் வெளிப்படுத்தும் கென்னடி விண்வெளி மையம், டைனோசர் போன்ற அரிய உயிரினங்களைப் பற்றி அற்புத தகவல்களைத் தருவதுடன் எரிக்கற்கள், பூகம்பங்கள் ஏற்படுவது குறித்த செய்திகளைத் தரும் நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியம் போன்றவற்றை சுற்றுலா வழிகாட்டி போல விளக்கங்கள் சொல்லி சுற்றிக்காட்டுகிறார். மேலும், சுட்டிகள் விளையாடி மகிழும் உபகரணங்கள் கொண்ட கஹகன் பார்க், அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை பற்றியும் சுதந்திரப் போர் பற்றியும் அமெரிக்கச் சரித்திரங்களைச் சொல்லும் சார்ல்ஸ்டன் பாட்டரி பார்க், அமெரிக்காவில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஆர்வமுடன் கொண்டாடும் ஆவிகள் தினம், சுதந்திரதேவி சிலை அமைக்கப்பட்ட வரலாறு போன்றவற்றை அற்புதமாகப் பதிவுசெய்துள்ளார். பிரமாண்ட நாடான அமெரிக்காவை நேரில் பார்க்கும் குதூகலத்தைத் தருகிறது இந்நூல்... ******************************************************************************************************************************************************
பொன்னிவனத்துப் பூங்குயில் கொத்தமங்கலம் சுப்பு 978-81-89936-34-1 குயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்! குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்கும்போது, நாமும் அவர்களுடன் குதித்துக் கும்மாளம் போடலாம். புகழ்மிக்க கதாநாயகனுக்கே உரிய தகுதியோடு, இளவரசர் பிரதாபசிம்மன் வெவ்வேறு வேடங்கள் தரித்து, தன்னை வெளிக்காட்டாமல் நடத்தும் நாடகங்களில், நாமே வேடமிட்டு உலா வரும் உணர்வு ஏற்படுகிறது. காவிரி பற்றிய வர்ணனையில் சிலிர்ப்பும் பிரமிப்பும் தோன்றுகிறது. பயணம் செல்லும்போது காவிரி குறுக்கிடும் இடங்களில், சில்லிடும் சாரலில் நம்மை இழந்து பாலம் கடக்கும் நாம், இந்தக் கதையைப் படித்தபின், காவிரி அன்னையை கண்களில் வழியும் நீரோடு வழிபடுகிறோம். 'அவனுக்கென்ன... ராஜா மாதிரி வாழ்க்கைடா!' என்று சொகுசு ராஜாக்களை மட்டுமே அறிந்திருக்கின்ற நமக்கு, அந்த ராஜாக்களும் இன்றைய அரசாங்க மந்திரிகளைப் போல, காலை எழுந்ததுமே 'நான்தானே இன்னும் ராஜா..?' என்று கேட்டுத் தெளிவு பெறும் அளவுக்கு சூழ்ச்சிக்குள் சிக்கியிருந்தார்கள் என்ற அதிர வைக்கும் உண்மை உறைக்கிறது. இப்படி, நாவல் முழுக்க எது உண்மை, எது கற்பனை என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு நகர்கிற கதையின் உச்சக்கட்டத்தில் வேகமும் பரபரப்பும் தெறிக்கிறது; இதயம் படபடக்கிறது. மனதை உலுக்கும் காதல் கதை, ஒரு சாம்ராஜ்யத்தில் இத்தனை மாற்றங்களை உண்டுபண்ணியதா என்று அதிர்ச்சி அலையிலிருந்து வெளியே வரமுடியாமல், புத்தகத்தை மூட மனமின்றி, திகைத்து நிழலாட வைக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'பொன்னிவனத்துப் பூங்குயில்' இன்றும் உயிரோட்டமுடன் நம்மை உலுக்குகிறது. ******************************************************************************************************************************************************
51 அட்சர சக்தி பீடங்கள் ஜபல்பூர் ஏ.நாகராஜ சர்மா 978-81-89936-35-8 நம் நாட்டில் வெவ்வேறு விதமான வழிபாடுகளை மக்கள் ஆன்மிக நம்பிக்கையின்பாற்பட்டு நடத்தி வருகின்றனர். அவை ஒவ்வொன்றிலும் ஏதோ ஓர் அர்த்தம் பொதிந்திருக்கும். அவற்றுக்கென தனிப்பட்ட கதைகள், வழிபாட்டு முறைகள் போன்றவை, மக்களின் ஆன்மிக வாழ்வுக்கான சுவாரஸ்யங்களை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இரண்டு சஹஸ்ரநாமங்கள் நம் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்றவை. ஒன்று விஷ்ணு சஹஸ்ரநாமம். மற்றொன்று லலிதா சஹஸ்ரநாமம். அதுபோல் இரண்டு பாகவதங்கள் நம் நாட்டில் பிரபலமாக போற்றப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதம் என்பது விஷ்ணுவின் அவதாரங்களைத் தாங்கிய கதைகள் கொண்டது. குறிப்பாக கிருஷ்ணர் தொடர்பான சின்னச் சின்னக் கதைகள் நிரம்பியது. இன்னொரு பாகவதம், நம் நாட்டில் பரவலாக சிறப்புற வழங்கப்பட்டுவரும் தேவீபாகவதம். இதில்தான் அன்னை பராசக்தி பற்றிய கதைகள் உள்ளன. துர்காதேவி, சாமுண்டாதேவி, மகிஷாசுரமர்த்தினி என்று பல கதைகளைக் கொண்ட தேவீபாகவதத்தின் அடிப்படையில் பல்வேறு சக்தி தலங்கள் நாடெங்கும் அமைந்துள்ளன. சாக்த வழிபாட்டை மையமாகக் கொண்ட தலங்கள், பீடங்கள் அவை. அந்தவகையில் சமஸ்கிருத மொழியில் உள்ள 51 அட்சரங்களை மையமாகக் கொண்ட 51 அட்சர சக்தி பீடங்கள், நம் நாட்டில் காலங்காலமாக மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. அந்தப் பீடங்களுக்கு நேரில் சென்று, பல குறிப்புகளை துணையாகக் கொண்டு இந்நூலாசிரியர் தொகுத்துள்ளார். நேரில் பார்த்த அனுபவங்களையும், கதைகளையும் எளிய வகையில் தந்துள்ளார். இந்நூலில் 51 அட்சர சக்தி பீடங்களுக்குரிய அம்மன் படங்களோடு, அந்த அம்மன் எப்படி இருப்பார் என்கின்ற முழுக் குறிப்பும் வர்ணனைகளும், வரைபட உதவியோடு தரப்பட்டுள்ளன. உக்கிரக ரூபியாக எழுந்தருளி, பக்தர்களின் துன்பங்களைத் தவிடுபொடியாக்கி, மனத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் மலர்ச்சியும் தரும் இந்த 51 அட்சர சக்தி பீடங்களின் சக்திதேவியரை தரிசிக்கும் முழுப்பயனும் இந்நூல் மூலம் கிடைக்கிறது. ******************************************************************************************************************************************************
தவிப்பு ஞாநி 978-81-89936-36-5 தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், இனத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறைகொண்டு சமூகத் தொண்டாற்றுவதை தமது கடமையாக எண்ண வேண்டும். சமூக அரசியலில் பங்குகொண்டு, தனி மனித சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டு ஒவ்வொரு குடிமகனும் விழிப்பு உணர்வு பெறுவது அவசியம். மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் இரு கண்களாகப் பேணிக்காப்பதும் அவசியம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய அரசியல் அமைப்பில்தான், மொழியாலும் இனத்தாலும் பிரிவினைவாதம் தோன்றி, அவ்வப்போது இந்திய ஜனநாயகத்தில் பிரச்னைகள் ஏற்படுவதும் சகஜமான நிலையாகிவிட்டது. சில நேரங்களில் இந்திய அரசியல் செயல்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், சிந்தனைத் தெளிவும் சமூக அக்கறையும் கொண்ட சிந்தனையாளர்கள் தங்களுடைய விமர்சனப் பார்வையில் கட்டுரைகள் மூலமும் கதைகள் மூலமும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படி, சமூக அக்கறையோடு இந்திய அரசியல் நாகரிகத்தையும் உள்ளடக்கி 'தவிப்பு' எனும் உணர்ச்சிமயமான நாவலைப் படைத்திருக்கிறார் ஞாநி. ஆனந்த விகடனில் 1998ல் தொடராக வெளியான, அரசியல் பின்னணி கொண்ட இந்த நாவலில், சிறந்த கதாபாத்திரங்களைப் படைத்து அவர்கள் மூலம், ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் நட்பாக மட்டும் பழக முடியாதா? என்ற கேள்விக்கு விடை தருகிறார். தமிழ் உணர்வையும் இந்திய ஒருமைப்பாட்டையும் விட்டுத்தராமல் பல்வேறு பிரச்னைகளுக்கும் விடையளித்திருக்கிறார் ஞாநி. ******************************************************************************************************************************************************
வனங்களில் விநோதங்கள் லதானந்த் 978-81-89936-37-2 வனம், விந்தைகள் நிறைந்த பச்சை தேவதை. தன் மடியில் தவழ்கிற உயிர்களிடத்தில் அவள் நீங்காத கருணையும் அன்பும் பொழிபவள். எந்த உயிரையும் பட்டினியிட்டு பார்க்கும் பழக்கம் அவளுக்கு எப்போதும் இருந்ததில்லை. சிறிய உயிரான ஓணானிலிருந்து பாம்பு, சிறுத்தை, யானை, சிங்கம்... என்று எல்லா உயிர்களுக்கும் பசியாற்றி வாழ வழிசொல்லும் தாய். காட்டின் அடர்ந்த பசுமையும், அதில் வாழ்கின்ற உயிர்களும்தான் நாட்டின் அழியாச் செல்வங்கள். அத்தகைய காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். செழுமையான காட்டைப் பற்றியும் காட்டிலேயே ஜனித்து வாழும் உயிர்களைப் பற்றியும் பேசுவதுதான் வனங்களில் விநோதங்கள். நூலாசிரியர், தமிழ்நாடு வனத்துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் லதானந்த் என்கிற டி.ரத்தினசாமி. வனங்களின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிவந்த அனுபவம் பெற்றவர். சங்கத் தமிழில் இருந்து சென்னைத் தமிழ் வரை இவருக்கு அத்துபடி. தன் துறை சார்ந்த நுட்பமான அனுபவமும் எழுத்துத் திறமையும் இணைந்து வந்துள்ளதால் இந்த நூல் சிறப்பாகத் திகழ்கிறது. பூச்சிகளைத் தின்னும் தாவரம் எது? மாநில விலங்கு எது? வனத் தீயை அணைப்பது எப்படி? மதம் கொண்ட யானையைக் கையாள்வது எப்படி? இப்படி பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யங்களைக் கொண்டது இந்தப் புத்தகம். ******************************************************************************************************************************************************
பம்மல் முதல் கோமல் வரை அறந்தை மணியன் 978-81-89936-38-9 உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்களைத்தான். இப்படி மக்களோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களின் கதையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்பவை வசனங்களே. அந்த வசனங்களே மக்களின் உணர்வுகளில் கலந்து, அவர்களை உணர்ச்சியின் பிடியில் ஆழ்த்துகின்றன. சென்ற நூற்றாண்டில் நாடகங்கள் சுதந்திர உணர்வுக்கு வித்திடும் வகையில் செய்திகளைத் தாங்கிச் சென்றன. பின்னர், சமூக சமய முன்னேற்றத்துக்கான செய்திகளைத் தாங்கிச் செல்லும் ஊடகமாக நாடகம் திகழத் தொடங்கியது. அதன் வேராக விளங்கியதும் வசனங்களே! பிற்காலத்தில் நாடகங்களின் அடிப்படையில் பேசும் திரைப்படங்கள் வந்த பிறகு, திரைப்பட வரலாற்றில் ஏராளமான வசனகர்த்தாக்கள் தங்கள் எழுத்துத் திறமையால் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தார்கள்; அதன் மூலம் மக்கள் மனங்களில் கருத்துகளை விதைத்தார்கள். அப்படி மக்கள் மனங்களில் பதிந்த வசனங்களை எழுதிய வசனகர்த்தாக்களை வாசகர்கள் மனத்தில் பதியவைக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல். எந்தப் படத்தில் எந்த வசனம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டது; எந்த வசனம் மக்களின் மனங்களைக் கவர்ந்தது; ஒரு சில படங்கள் வசனத்துக்காகவே ஓடிய காரணம் என்ன; எந்தப் படத்துக்கு யார் வசனம் எழுதினார்கள்; அவர்கள் எழுதிய வசனத்தால் பெற்ற சமுதாய அந்தஸ்து என்ன; பிரபலமான வசனம் உருவான விதம்; அதற்கு வசனகர்த்தா எடுத்துக்கொண்ட சிரத்தை ஆகியவற்றை இந்நூலில் படித்து அறியலாம். கடந்த காலத் திரைப்பட வரலாற்றில் வசனகர்த்தாக்களின் பங்கு என்ன; அன்று அவர்களுடைய வசனநடை எப்படி இருந்தது; அன்றைய வசனநடை இன்றைய திரைப்பட உலகுக்கு எந்தளவிற்குத் துணையாக நிற்கிறது? போன்ற தகவல்களை இந்நூல் தருகிறது. ******************************************************************************************************************************************************
சிவாஜிராவ் டூ சிவாஜி திருவாரூர் குணா 978-81-89936-39-6 சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். ஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது பாரம்பரியமான நாடகத்திலிருந்து வந்தவர் என்பதால் தமிழ்த்திரையுலகம் அவரை எளிதில் வாரி அணைத்துக் கொண்டது. ஆனால், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்... வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்... வசதி வாய்ப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாதவர் என்கிற பட்சத்திலும்கூட, தமிழ்த் திரையுலகத்தில் நின்று, நிதானித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமை சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்தையே சாரும். பல போராட்டங்கள், சங்கடங்களுக்கு இடையிலும், கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், கலைஞானம் போன்ற திறமையாளர்களின் ஆதரவோடு இன்று திரைத்துறையில் யாரும் எதிர்பார்த்திராத இடத்தைப் பிடித்திருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தமிழக அரசியல் சூழலே முன்வந்து எதிர்பார்க்கிறது. 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ரஜினி பின்னணியில் இருந்து வாய்ஸ் கொடுத்ததற்கே ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது என்றால், மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருடைய செல்வாக்கு எத்தகையது என்று சுலபமாக தீர்மானித்துவிட முடியும். இத்தகைய செல்வாக்கை சிவாஜிராவ் எப்படிப் பெற்றார், அவர் ரஜினிகாந்த் ஆன கதை என்ன... என்று அவரோடு நெருங்கிப் பழகி பணியாற்றிய திரைத்துறையின் பிரபலங்கள், பல்வேறு புதிய தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் பகிர்ந்துகொண்டார்கள். ரசிகர்களும் தங்களின் பார்வையில் ரஜினியைப் பற்றி பல சுவாரசியமான சம்பவங்களை சொன்னார்கள். அந்தக் கட்டுரைகள் இப்போது சிவாஜிராவ் டூ சிவாஜி என்கிற பெயரில் நூலாகி இருக்கிறது. ரஜினியின் திறமைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது இந்நூல். ******************************************************************************************************************************************************
மஞ்சி விரட்டு கொத்தமங்கலம் சுப்பு 978-81-89936-40-2 மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது. சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொல்லும் அதேநேரம், அந்தக் காலத்து மனிதர்களின் பளீர் நையாண்டிகளும் ஹாஸ்யங்களும் ரசிக்க வைக்கின்றன. பாத்திரங்களின் சிந்தனையில் கதை சொல்லப்படும்போதே, நடுவே இடம்பெறும் நாடக பாணி பேச்சு நடை, சிறுகதைகளின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளில் மக்களின் மனநிலையில் எழுந்து அடங்கிய மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டியபடியே சென்றிருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. கற்பனைக் கதைகளில் கடவுளர்களையும் கையாண்ட சுப்பு, அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியதில் புருவம் உயர்த்த வைக்கிறார். சுவைக்கு அடிமையாகி மெல்லும் புகையிலுக்கு இப்படி ஒரு பின்னணியும் இருக்குமோ என்ற நினைப்பே, மேலும் சுவாரஸ்யப்படுத்துகிறது. 16 வகை செல்வங்கள்போல வெளியாகி இருக்கும் இந்தச் சிறுகதைகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சுவை! ******************************************************************************************************************************************************
மிஸ் ராதா கொத்தமங்கலம் சுப்பு 978-81-89936-41-9 பழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள். கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்... உள்ளே நடுக்கம் என்று அலையும் ஆண்குலம், பணமும் சுற்றமும் இந்த கல்லூரிப் பறவைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதல்கள் என்று மயக்கும் மசாலாக் கலவையோடு நகர்கிறது இந்நாவல். துறுதுறு காதல் சம்பவங்களுக்கிடையே, மர்மமான ஒரு பிளாஷ்பேக் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படி இறுதிப் பக்கம்வரை நம்மை இழுத்துப் பிடித்துக் கொள்கிற கொத்தமங்கலம் சுப்பு, இன்றைய நடப்புகள் பலவற்றையும் அப்போதே கணித்து ஆச்சர்யமூட்டுகிறார். காதல் வசனங்களில் நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேசுகிற வசனங்களின் நறுக்குத் தெறிப்பில், சுவாரஸ்யமான யூத் ஃபிலிம் பார்த்த உணர்வு. பெண்ணின் அழகுக்கு முன் எத்தகைய ஆணும் அடிமைதான் என்று நதியின் ஓட்டம்போல் இயல்பான நடையில் படம்பிடித்துக் காட்டி இருக்கிற கொத்தமங்கலம் சுப்பு, சினிமா அனுபவத்தைப் புகுத்தி, காட்சி அமைப்புகளை திரைக்கதை போலவே நகர்த்திச் செல்கிறார். இந்தத் தொடர் விகடனில் வெளியான சமயத்தில் _ 40 வருடங்களுக்கு முன் _ ஓவியங்கள் வரைந்த மாயா, இந்தப் புத்தகம் வெளியாகும்போது, புதிதாக சில படங்களை அதே அழகோடு வரைந்து தந்து, இந்நூலின் ஆக்கத்தில் தன் ஆர்வத்தைக் காட்டியுள்ளார். கொத்தமங்கலம் சுப்பு நூல்களின் வரிசையில் மிஸ் ராதா ஒரு மணிமகுடம். ******************************************************************************************************************************************************
கமலா கல்யாணமே வைபோகமே! அகஸ்தியன் 978-81-8476-065-1 மனிதப் பிறவிக்கு மட்டுமே சிரித்து மகிழும் உணர்வு உண்டு. நகைச்சுவை என்ன நலிந்தோருக்கு அப்பாற்பட்டதா? சில்லரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிரிப்பு சொந்தமானதா? அப்படி ஒரு சிலர் நினைத்தால், அந்த நினைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்ற முடிவோடு இந்த நகைச்சுவைக் கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர் அகஸ்தியன். நான் டெல்லியில் இருந்தபோது சென்னையில் இருக்கும் என்னுடைய புது வீட்டை வாடகைக்கு விடலாம் என்றெண்ணி, மைத்துனன் தொச்சு அண்டு ஃபேமிலிக்கு என் வீட்டை வாடகைக்கு விட்டேன். வாடகைக்கு விட்ட நாளில் இருந்தே வாடகைக்கு பதிலாக வெறும் கைகளைத்தான் பார்க்க முடிந்தது. வாடகையை கேட்டு நேரடியாகப் போன போது, நீங்கள் கவலைப்படாமல் ஊருக்குப் போங்கோ... நான் எல்லா பாக்கியையும் கொடுத்து விடுகிறேன். என்ன யோசிக்கிறீங்க? போய் இறங்கறதுக்கு முன்னே செக் இருக்கும் என்று சொல்லி, என்னை மேலே பேச விடாமல் அனுப்பி விட்டார். டெல்லி திரும்பினேன். தொச்சு அனுப்பிய கவர் வந்தது. மகிழ்ச்சியோடு, செக் வந்திருக்கும் என்று பிரித்தேன். ராசியில்லாத வீடு; வியாபாரத்தில் நஷ்டம் ஆகிவிட்டது. ஆகவே, வீட்டைக் காலி பண்ணுகிறேன்; சாவி எதிர் வீட்டுக்காரரிடம் கொடுத்து இருக்கிறேன். முதலில், நீங்கள் ஆயிரம், இரண்டாயிரம் செலவு பண்ணி, வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி எல்லாம் பண்ணுங்கள் என்று அறிவுரை வழங்கி எழுதி இருந்தார்! இதையெல்லாம் கேட்டால் வீட்டில் பிரளயமே உருவாகும்... என்ன செய்வது, மைத்துனன் ஆயிற்றே! இப்படியாகத்தானே என் முதல் குடித்தனக்காரர் காலி பண்ணினார். அடுத்த குடித்தனக்காரர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. நானேதான்! _ இதுபோன்ற நகைச்சுவை கலந்த நையாண்டி ததும்பும் கதைகளின் தொகுப்பாக உருவாகியிருக்கிறது இந்நூல். இப்படிப்பட்ட சி(ரி)லிர்ப்பூட்டும் கதைகளை அக்கம்பக்கத்தினரையும் படிக்கச் செய்து, சுற்றத்தையும் சூழ்நிலையையும் கலகலவென வைத்துக் கொள்ள இந்நூல் கைகொடுக்கும். ******************************************************************************************************************************************************
சூப்பர் சுடோகு கோ.கணேசன் 978-81-89936-42-6 விளையாட்டு என்பது பொழுதுபோக்குவதற்கு மட்டுமல்ல... உடலுக்கு பலம் தரும் உடற்பயிற்சிகள், மூளைக்கு பலம் தரும் உள்ளரங்கு விளையாட்டுகள் போன்றவற்றை பெரும்பாலும் சிறுவர் சிறுமியர் விளையாடியிருக்கலாம். எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதற்கான உபகரணங்கள் தேவை. அப்படி இல்லாமல், பேப்பரும் பென்சிலும் வைத்துக்கொண்டு கணக்குப் புதிர்கள் மூலம் நேரத்தை பயனுள்ள முறையில் போக்க ஒரு விளையாட்டு பிரபலமாகியுள்ளது. அதுதான் சுடோகு. மேஜிக் ஸ்கொயர் எனப்படும் மாயச் சதுரம், கணித ஆர்வமுள்ள மாணவர் உலகை ஆட்டிப்படைத்த காலம் போய், அதேமுறையில் கட்டங்களுக்குள் வரிசையாக எண்களை நிரப்பும் சுடோகு இப்போது மாணவர் உலகை அதிகமாக ஆக்கிரமித்துள்ளது எனலாம். ஒருவகையில் சினிமாப் பாடல்களைப் பாடி விளையாடும் அந்தாக்ஷரி மாதிரிதான் இதுவும். பாடிய பாடல் திரும்பவும் வரக்கூடாது, விட்ட இடத்திலிருந்து சங்கிலித் தொடர்போல் தொடரவேண்டும். இந்த விளையாட்டு போரடித்துவிட்டால் இனி நீங்கள் சுடோகுவுக்குத் தாவிவிடலாம். இது எண்களின் வரிசை விளையாட்டு. ஒரு வரிசையிலோ காலத்திலோ 1 முதல் 9 வரையுள்ள எண்கள் வரிசையாக வரவேண்டும், ஆனால் அவற்றில் எதுவும் மீண்டும் அதே வரிசையிலோ காலத்திலோ வரக்கூடாது என்பதுதான் இந்த சுடோகு எண் வரிசை விளையாட்டின் விதிமுறை. நமக்கு வரிசைகளில் நிற்க வேண்டிய தேவை அதிகம். ரயில்வே புக்கிங், ரேஷன் கடை, மின்சாரக் கட்டணம் செலுத்துமிடம் என்று இப்படி எல்லா இடங்களிலும் வரிசை, வரிசை, வரிசைதான்! அப்போதெல்லாம் பொழுதைப் போக்க என்ன செய்வதென்று திண்டாடிக் கொண்டிருப்போம். இதுபோன்ற சமயங்களில் இந்தப் புத்தகம் நல்ல தோழன். ******************************************************************************************************************************************************
புண்ணிய யாத்திரை பி.சுவாமிநாதன் 978-81-89936-43-3 சக்தியை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று உடல் சக்தி. மற்றொன்று மன சக்தி. நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும் உடற்பயிற்சி செய்து, வாகான உடல் வலிமையை ஏற்படுத்திக் கொள்வதிலும் உடல் சக்தியைப் பெறமுடியும். ஆனால், மன சக்தி என்பது வேறுபட்டது. அது சஞ்சலமற்ற மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதன் மூலம் ஏற்படுவது. நல்ல மன சக்தி கிடைக்க, ஆன்மிக வழிபாடுதான் சிறந்த வழி என்று உணரப்பட்டது. ஆண்டவனைத் தொழுவதால் மனதை ஒருநிலைப்படுத்தலாம். ஆண்டவனை வழிபடுவதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று மனதைக் கோயிலாக்கி வழிப்படுவது. மற்றொன்று ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழுவது. நம் மக்கள் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுபவதையே காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள். கோயில்களைப் பற்றியும் கோயில்களின் சிறப்புகள் பற்றியும் அங்கு வீற்றிருக்கும் வழிபாட்டுக் கடவுள்கள் பற்றியும் சக்தி விகடன் இதழில் பி.சுவாமிநாதன் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இந்தக் கட்டுரைகள் சக்தி விகடன் இதழில் வெளிவந்தபோது, ஆலயங்களைத் தேடித்தேடி தொழ நினைக்கும் பக்தர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆண்டவனைத் தரிசிப்பதற்கும் ஆலயங்களைத் தேடிச்செல்வதற்கும் முன், இந்தக் கட்டுரைகளை வாசித்துவிட்டுச் சென்றால், உங்கள் மன சக்தி வலுப்பெறும். ******************************************************************************************************************************************************
பணம் செய்ய விரும்பு நாகப்பன் _ புகழேந்தி 978-81-89936-44-0 உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள். நாணயம் விகடன் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில், நாகப்பன் _ புகழேந்தி பங்கேற்று, மக்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளை வாசகர்களுக்குச் சொல்லித் தருகின்றனர். அந்தக் கூட்டத்தில், வாசகர்களுடன் நடந்த உரையாடல்கள் இந்தப் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கோடீஸ்வரராக எந்த வழியில் செல்வது நல்லது? என்பதில் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களான அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என அனைவரையும், பொருளாதார இலக்கை நோக்கிய பயணத்தில் எவ்வாறு சேர்த்துகொள்வது? ஒவ்வொரு முதலீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் எவ்வாறு பங்கேற்பது? பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது என்ன செய்ய வேண்டும்? போன்ற அற்புத தகவல்களை வாசகர்களின் அருகில் அமர்ந்து பேசுவதுபோல சிறப்புடன் தந்துள்ளனர். எழுத்தாக்கம் செய்துள்ளார் தளவாய் சுந்தரம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லப்படும் குட்டிக் கதைகள் சுவாரஸ்யமானவை. ******************************************************************************************************************************************************
கையளவு களஞ்சியம் டாக்டர் சங்கர சரவணன் 978-81-89936-45-7 சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து கையளவு களஞ்சியம் என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றில் சிந்துச் சமவெளி நாகரிகம் தொடங்கி மக்களை ஆட்சி செய்த பேரரசுகள், இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு, பழந்தமிழக வரலாற்றுச் சான்றுகள், தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்கள், உலக வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஆப்ரகாம் லிங்கன் வரை இந்நூல் உலக வரலாற்றை ஒரு வரிச் செய்திகளாக விவரிக்கிறது. மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் மக்கள் வாழ்வில் அறிவியலின் பங்கு வரை, உடல் கூறுகளின் இயக்கம் முதல் மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை, சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, விளையாட்டுத் துறையின் சாதனையாளர்கள் முதல் ஒவ்வொரு விளையாட்டு பற்றிய அடிப்படைத் தகவல்கள் வரை, உலக நாடுகளின் அரசியல், பூகோளம், நாட்டுப்புறவியல் மற்றும் சமயங்கள் வரை பல்வேறு துறைகளைப் பற்றிய விறுவிறு தகவல்களைச் சுவைபடத் தொகுத்து எழுதியுள்ளார் டாக்டர் சங்கர சரவணன். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்கள் தரப்பட்டுள்ளன. அனைத்துத் தகவல்களும் ஒரு வரிச் செய்திகளாக இருப்பதால், பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்துகிறவர்களுக்கும் இந்நூல் சிறந்த பொக்கிஷம். ******************************************************************************************************************************************************
ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை கிரேஸி மோகன் 978-81-89936-46-4 வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சும்மா பேச்சுக்கு சொல்லப்பட்ட விஷயமல்ல. வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு நிஜமாகவே மன அழுத்தம் வருவதில்லை. மன வருத்தமும் இருப்பதில்லை! மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதிலும், விரசமில்லாமல் ஜோக்கடிக்க எல்லோராலும் முடிவதில்லை. பேசும்போதுகூட சமாளித்துவிடலாம். எழுத்தில் நகைச்சுவையை வெளிக்கொண்டு வருவதுதான் இன்னும் கடினமானது. படிப்பவர்களை ஒவ்வொரு பாராவிலும் சிரிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தைப் புரட்டிவிடுவார்கள்! படிப்பவர்களைப் புன்னகைக்க வைக்கும் டெக்னிக் அறிந்தவர் கிரேஸி மோகன். இவரது படைப்புகள் எத்தகைய உம்மணா மூஞ்சிகளையும் புன்முறுவல் பூக்க வைக்கும். கட்டுரைகளில் மிகவும் அப்பாவித்தனமாக இவர் நுழைக்கும் ஜோக்குகளைப் படித்தால் க்ளுக் சிரிப்பு உத்தரவாதம்! ******************************************************************************************************************************************************
அழகான வீடு சரஸ்வதி ஸ்ரீனிவாசன் 978-81-89936-47-1 வீட்டை அழகாய், அலங்காரமாய் வைத்துக்கொள்வது ஒரு கலை. அவசர வேலைகள் நிறைய இருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்தால் நம்மை அரவணைக்கும் தாயைப்போல மனத்துக்கு இதமான, பாதுகாப்பான, நிம்மதி கொடுக்கும் ஆலயமாக வீடு விளங்கவேண்டும். அப்படி இல்லாமல், குப்பை நிறைந்ததாய், பொருட்கள் அலங்கோலமாய் சிதறிக் கிடக்க, திரைச் சீலைகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, டி.வி. ஒரு பக்கம் பெரிதாய் அலறிக் கொண்டிருக்க, இந்தக் குப்பைகளின் நடுவே நாமும் வாழ்வது நன்றாக இருக்குமா? வீடு குடிசையாக இருந்தாலும் அடுக்கு மாடி வீடாக இருந்தாலும் பங்களாவாக இருந்தாலும், அது நாம் வாழும் இருப்பிடமாயிற்றே! ஆகவே அதை ஒழுங்காகப் பராமரிப்பது மிக அவசியம். எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் அதை எப்படி அழகுபடுத்துவது? என்பதைத்தான் இன்டீரியர் டெகரேஷன் எனும் கலை நமக்கு விளக்குகிறது. பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வீட்டைப் பார்த்தவுடனே, அதுபோல் தங்கள் வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சாதாரணமாகத் தோன்றும். வீட்டை நன்கு பராமரிப்பவரைப் பார்த்து பொறாமைப்படுவதைக் காட்டிலும், தங்களின் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி ரசிக்கும் பக்குவம் வந்துவிட்டால், ரசனைக்கேற்ப அனைத்தும் அழகாகவே அமைந்துவிடும். இந்த நூல், அப்படிப்பட்ட ரசனையைத் தூண்டி, அழகியலை மனத்துள் புகுத்துகிறது. விருந்தினர்களைக் கவரும் வகையில் வீட்டின் வரவேற்பறையை எப்படி அமைப்பது, சமையலறையில் பாத்திரங்களை அழகுற அடுக்கி அசத்துவது எப்படி, படிக்கும் அறை, பூஜை அறை, தோட்டம், மின் விளக்குகள், படுக்கை அறை போன்றவற்றை எப்படி அழகாக்குவது என்பதை இந்நூலாசிரியர் நன்கு விளக்கியுள்ளார். ******************************************************************************************************************************************************
உலக சினிமா (பாகம் 1) செழியன் 978-81-89936-48-8 சினிமா வேறு... சினிமா உலகம் வேறுஒ என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு! செய்தி உலகின் உன்னதத் திரைப்படங்களைப் பற்றி பேசுவதே இந்த நூல். ஒவ்வொரு சினிமாவைப் பற்றியும் தனக்கான பறவைமொழியுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான சினிமாஒவை எழுத்தால் செதுக்கிய செழியனின் பங்களிப்பை உலகம் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கும். இது வெறும் தொடராக மட்டுமே நின்றுவிடாமல் தொகுப்பாக வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாசகர்களும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களும் கேட்டுக்கொண்டதால் இந்தக் கட்டுரைகள் நூலாக வெளியிடப்படுகின்றன. இப்போது முதல் பாகம் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. திரைத் துறையில் சாதனை படைக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. உலக சினிமாவின் கதவுகள் திறக்கப்படுகின்றன. புரட்டப் புரட்ட உலகம் ஒளிப்படமாகட்டும்! ******************************************************************************************************************************************************
ஆங்கில இலக்கணம் ஆர்.ராஜகோபாலன் 978-81-8476-104-7 நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் பேசும்போதும், ஆங்கிலச் சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளையும் கலந்து பேசிப் பழகும் நமக்கு, தனி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தயக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம், இலக்கணப் பிழை ஏற்பட்டு, கேட்பவர் கேலி பேசக்கூடாதே என்று நினைப்பதுதான்! இப்படிப்பட்டவர்கள், பிழையின்றி ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வசதியாக ஆங்கில இலக்கணத்தை இந்த நூலில் எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் ஆர்.ராஜகோபாலன். ஒவ்வொரு வாக்கியத்தையும் உபயோகப்படுத்தும் விதம் மற்றும் அதன் ஆங்கில விளக்கங்கள் அனைத்தும் தெளிவான தமிழில் தரப்பட்டுள்ளன. ஆங்கில மாதிரி வாக்கியங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தமிழ் வாக்கியங்களில் மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓரளவு ஆங்கிலம் அறிந்த சிலர் பயன்படுத்தும் ஆங்கில வாக்கியங்களில் ஏற்படும் சிற்சில பிழைகளை சுட்டிக்காட்டி, அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் பொருள் சிதைவையும் விளக்குகிறார் நூலாசிரியர். தற்போது பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்றொடர்களை உதாரணமாகக் காட்டி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஆங்கில மொழிகளில் கையாளப்படும் வித்தியாசங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆங்கில மொழியை ஓரளவு அறிந்தவர்களுக்கும், கற்க விரும்பும் எல்லோருக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ******************************************************************************************************************************************************
கோவணாண்டி கடிதங்கள் கோவணாண்டி 978-81-8476-109-2 நம் நாட்டில் மக்களுக்கு ஆதாரமானதாக இருக்கும் விவசாயத் துறை மட்டும் மன்னர் ஆட்சிகளுக்குப் பிறகு, ஏறெடுத்தும் பார்க்கப்படாத பரிதாப நிலையில்தான் இருக்கிறது. அதிலும், மக்களாட்சி என்ற பெயரில் அரசியல்வாதிகள் வந்து அமர்ந்த பிறகு, நவீனத்துவம் என்ற பெயரில் தொழில் துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிட்ட விவசாயத்துறை, கிட்டத்தட்ட சீரழிந்தே போய்விட்டது. அதன் பலனைத்தான் 'உணவுப் பொருள் பஞ்சம்' என்ற பெயரில் தற்போது உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 'பசி, பட்டினி போன்ற கேவலமான சூழலுக்கு இந்த உலகம் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காத்திருக்கிறது' என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அபாய மணி அடிக்க ஆரம்பித்துவிட்டவர் கோவணாண்டி. ஜோசியமாகவோ ஹேஷ்யமாகவோ அல்ல... உலகத்தின் நாடியைப் பிடித்துப் பார்த்து அந்த ஓசையை எழுப்பினார். விவசாயம், கிராமப்புறம், சுற்றுச்சூழல் என்று பலதரப்பட்ட விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆவேசம், கிண்டல், கேலி, அறிவுரை என்று பல ரசம் ததும்ப, அரசியல்வாதிகள் மற்றும் மக்களுக்கு 'பசுமை விகடன்' இதழ் மூலம் கோவணாண்டி முன் வைத்த முறையீடுகள்... கடிதங்கள்... சாமானியப்பட்டவையல்ல..! தனி வெடியாக வந்த அந்தக் கடிதங்கள் இப்போது சரவெடியாக உங்கள் கைகளில்... 'பசுமை விகடன்' சார்பாகத் தமிழக அளவில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது, 'யார் இந்தக் கோவணாண்டி?' என்றபடி அவரைத் தேடி அலைமோதும் மக்களே அதற்குச் சாட்சி! 'யார் இந்தக் கோவணாண்டி?' என்று அரசியல்வாதிகள் வட்டாரத்திலும் தேடுகிறார்கள். அதுமட்டுமா... கோவணாண்டியின் வருகைக்குப் பிறகு, பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல தளங்களிலும் அவரைப் போலவே ஆவேச அவதாரங்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதுவே, கோவணாண்டியின் ஆவேச எழுத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்! இந்த நூலில் இடம் பெற்றுள்ள கோவணாண்டியின் ஒவ்வொரு கடிதத்தையும் படித்தால், அவருடைய கோபத்தில் இருக்கும் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடியும். ******************************************************************************************************************************************************
அபங்கம் என்.ராஜேஸ்வரி 978-81-8476-108-5 இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது என்பது போன்ற விஷயங்களை முன்வைக்கும் ஞானயோகமும், கர்மயோகமும் அனைவராலும் பின்பற்ற முடியாதவை. கல்லாதவர்களும், ஏழைகளும், முதியோரும், குழந்தைகளும் என எளிய மக்களும் கடைத்தேற வழிவகுக்கும் நோக்கிலேயே பக்திமார்க்கம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் _ ஒவ்வொரு மாநிலத்திலும் பக்தி இயக்கமானது பெரும் ஊக்கத்துடன் வற்றாத ஜீவ நதியாக, கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்து மக்களை நல்வழிப்படுத்தியுள்ளன. அந்த பக்தி இயக்கம் உரைநடைக் காவியங்களாகவும் கவிதைகளாகவும் பொங்கிப் பிரவாகித்தன. அந்தவகையில், மஹாராஷ்டிரத்தில் பக்தி இயக்கத்தின் வளர்ச்சிக்கு 'அபங்கப் பாடல்கள்' பெரும் பங்காற்றியிருக்கின்றன. துக்காராம், நாமதேவர், ஏக்நாத், ஞானேஸ்வர் என எண்ணற்ற மகான்கள் தோன்றி ஆயிரக்கணக்கில் அபங்கங்கள் பாடி மக்களை மகிழ்வித்து, பக்திப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நூலில், அபங்கம் என்றால் என்ன என்பதை விவரித்தும், துக்காராம் மஹாராஜின் வாழ்க்கை வரலாறையும் பிணைத்து உணர்ச்சிபூர்வமாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் என்.ராஜேஸ்வரி. அபங்கங்களைச் சொல்லி, அதற்குப் பொருளும் உரைத்து, அந்த அபங்கம் எந்தச் சூழ்நிலையில் இயற்றப்பட்டிருக்கும் என்பதையும் ஒரு கதா காலட்சேபம் போல அழகாக விவரித்திருக்கிறார். பண்டரிபுரம் குறித்து அதி விசேஷத் தகவல்களும், அபங்கம் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் அதைக் கற்றுத் தரும் 'பரிவார்ஒ அமைப்பின் அனைத்து தொலைபேசி எண்களும் கடைசி அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. புத்தகங்கள் என்பவை, கனி நிறைந்திருக்கும் தோட்டத்துக்குப் போவது எப்படி என்ற வழிக்குறிப்புகளைத் தரக்கூடியவை. அதன் வழியில் சென்றால் தீஞ்சுவைக் கனிகளைப் பறித்து உண்டு ஆனந்தம் அடையலாம். அபங்கம் என்னும் நற்கனிகள் நிறைந்த தோட்டத்துக்கு வாருங்கள்... பக்தி ரசம் சொட்டும் அதன் சாறைப் பருகுங்கள்..! ******************************************************************************************************************************************************
சமையல் சந்தேகங்கள் 200 சாந்தி விஜயகிருஷ்ணன் 978-81-8476-066-8 இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப உண்பதற்குச் சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் உணவு வகைகளைச் சமைப்பதும், சமையல் கலையில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் தெரிந்துகொள்வதும் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷய‌ம். நல்ல உணவு நல்ல சிந்தனையைக் கொடுக்கும். சுவையான விருந்து மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். மகிழ்ச்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அப்படித்தான், இன்றைய பரபரப்பான குடும்பச் சூழலில் நமது மனதில் எவ்வளவு கோபம், வெறுப்பு இருந்தாலும் நல்ல சுவையான உணவை உண்ணும்போது, மற்ற‌ எல்லாம் பறந்துபோய், புத்துணர்வு பிறந்துவிடும். வீட்டில் சமையல் செய்யும் எளிய குடும்பத்தினர் முதல் உயர்தர சைவ ஹோட்டலில் பணிபுரியும் சமையல்காரர்கள் வரை படித்துத் தெரிந்துகொண்டு செய்து, பரிமாறி, சுவைத்து மகிழவேண்டிய 79 வகையான சமையல் அயிட்டங்களையும், அவற்றைச் செய்யத் தேவையான பொருட்களையும் இந்நூலில் விளக்கிக் கூறியுள்ளார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன். ஒவ்வொன்றிலும் உப்பு, மிளகாய், எண்ணெய் எவ்வளவு சேர்க்கவேண்டும், சமைத்த பதார்த்தங்கள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றுடன் என்ன சேர்க்கவேண்டும், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார். சமையலின்போது ஏற்படும் குறைகளைக் களையும் விதமாக இந்த நூலில் உள்ள 200 வினா_விடைக் குறிப்புகள் நிச்சயம் உதவும். படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்... சமையல் செய்து அசத்துங்கள்... சுவைத்து மகிழுங்கள். ******************************************************************************************************************************************************
உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் குருபிரியா 978-81-8476-007-1 ஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்... எப்போது உரம் போடவேண்டும்... எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்... எப்போது கிளைகளை வெட்டிவிட வேண்டும்... என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தரும் வகையில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்றால் சாதாரண காரியமா..? வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான்! ஑உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது? குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவது?ஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. ஑நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே... நாமெல்லாம் வளரவில்லையா..?ஒ என்ற கேள்வி பலர் மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று: நமது முன்னோர்கள் புத்தகங்கள் படிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலத்தில் பெற்ற அறிவானது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததால், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அறிவுரையும் உதவியும் கிடைத்து வந்தன. குடும்பத்தில் இருந்த அம்மா, பாட்டி, மாமியார் எல்லாம் ஒருவகையில் குழந்தை வளர்ப்பு நிபுணர்களாகவும் உளவியலாளராகவும், மருத்துவராகவும், செயல் இயக்குநராகவும், பேராசிரியராகவும் செயல்பட்டுவந்துள்ளனர். இப்போது அந்தக் குடும்ப அமைப்பு மாறியுள்ளது. எனவே, இன்றைய இளம் தம்பதிக்கு இத்தகைய வழிகாட்டுதல்கள் மிகவும் தேவைப்படுகின்றன. அதற்கு இன்றைய நிலையில் ஒரே வழி புத்தகங்கள்தான்! இரண்டாவது: இன்று வாழ்க்கை முறை வெகுவாக மாறியுள்ளது. பல்வேறு அனுபவங்கள்... பல்வேறு வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஒவ்வொரு தவறையும் குழந்தைகள் செய்து செய்து திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிலவற்றைப் பார்த்தோ, படித்தோ திருத்திக் கொண்டுவிடலாம். ஓர் இசைக்கருவி உங்கள் வீட்டில் இருப்பதினாலேயே நீங்கள் இசைக் கலைஞனாக ஆகிவிடுவதில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததினாலேயே நீங்கள் நல்ல பெற்றோர் ஆகிவிடுவதில்லை. இசைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் & வளர்க்கத் தெரியவேண்டும். குழந்தையெனும் யாழ் உங்கள் வீட்டில் இருக்கிறது. மீட்டக் கற்றுத் தருகிறது இந்நூல். உங்கள் குடும்பத்தில் பரவட்டும் இனிய கீதம்! ******************************************************************************************************************************************************
எங்கிருந்து வருகுதுவோ ரா.கி.ரங்கராஜன் 978-81-8476-016-3 வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல். இந்த நூலில், அவருடன் பழகியவர்கள், அவர் அறிந்த மனிதர்கள், பத்திரிகையில் அவர் பணிபுரிந்தபோது நடந்த பல சுவையான விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் வித்தியாசமாகக் கூறியுள்ளார். ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்த அவருடைய அனுபவங்கள், வாசகர்களுக்கு நல் விருந்து. கார்டூனிஸ்டுகளான ராஜு, கோபுலு, மாலி போன்றவர்களோடு தனக்குள்ள அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்கங்கே குட்டிக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. நிறைய குட்டிக்கதைகள் மூலம்தான் சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். உலகம் அவர் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்ததை இவருடைய கட்டுரைகளில் இருந்து நம்மால் உணரமுடிகிறது. தொலைக்காட்சி செய்திகள், தொடர்கள் போன்றவற்றில் கண்ட நெருட வைத்த காட்சிகள், நெகிழச்செய்த காட்சிகள் ஆகியவற்றை விமர்சனப் பார்வையோடு தந்துள்ளார். சில செய்திகளுக்குப் பின்னுள்ள சுவாரஸ்யங்களையும் கதைகளையும் கொடுத்திருப்பது, பொது அறிவுக்கு விருந்து. ******************************************************************************************************************************************************
கட்டபொம்மு கதை கொத்தமங்கலம் சுப்பு 978-81-89936-08-2 இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கட்டபொம்மன் மட்டும் போரிடவில்லை. தன்னோடு பல வீரர்களையும் இணைத்துக் கொண்டான். அதில் குறிப்பிடத்தக்கவன் அவன் தம்பி ஊமைத்துரை. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவன் விட்டுப் போன போராட்டத்தை தோளில் சுமந்தவன். வெள்ளையர், பீரங்கி குண்டுகளால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை துளைத்தெடுத்தபோது, நான்கே நாட்களில் மீண்டும் ஒரு கோட்டையை அதே இடத்தில் கட்டியவன். வெறும் மண்ணோடு சில மூலிகைகளையும் கலந்து கட்டப்பட்ட ஒரு 'இரும்புக் கோட்டை' அது. அப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை பெயர் தெரியாத கவிஞர் ஒருவர் கும்மிப் பாடல்களாக வடித்திருக்கிறார். அந்தப் பாடல்களைத் தொகுத்து வீரபாண்டியனின் வீர வரலாற்றை எளிய மொழியில் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருக்கிறார். ஓவியர் கோபுலு விடுதலை வீரத்தைக் காட்சியாக வடித்திருக்கிறார். 1951_ம் ஆண்டு ஆனந்த விகடனில் 'கட்டபொம்மு கதை' என்ற தலைப்பில் இந்தப் பொன் எழுத்துக்கள் தொடராக வெளிவந்தது. அது இந்திய சுதந்திரப் போராட்டம் முடிந்து அலை ஓய்ந்திருந்த சமயம். மென்மையான சுதந்திரக் காற்றில் ஒரு வீரச் சரித்திரத்தைப் படித்த வாசகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர். ஆண்டுகள் பல கடந்து விட்டன. புதிய தலைமுறையினர் வளர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு விடுதலைப் போராட்ட வரலாற்றை, அதன் தாத்பரியத்தை விளக்கும் அரிய நூல் இது. ******************************************************************************************************************************************************
காய்கறி சாகுபடி விகடன் பிரசுரம் 978-81-8476-110-8 பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை! திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல்,  வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ! இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல், 'பசுமை விகடன்' இதழில் வெளியான, காய்கறி சாகுபடியில் மகசூல் அள்ளிய வெற்றி விவசாயிகளின் சாதனைக் கதைகள் இவை. காய்கறி விவசாயத்துக்கான நிலம் தயாரிப்பில் ஆரம்பித்து, அறுவடை செய்யும் காலம் வரை இந்த விவசாயிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அனைத்தும், காய்கறி பயிரிடுவதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்படும். தனித்த அடையாளத்துடன், சுயமாக இயங்கும் அந்த 'மகசூல் மகாராஜா'க்களின் அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். ******************************************************************************************************************************************************
இந்தப் பூக்கள் விற்பனைக்கு விகடன் பிரசுரம் 978-81-8476-111-5 மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் 'பசுமை விகடன்' இதழில் தொடர்ந்து இடம்பிடிக்கிறது. இந்த அனுபவங்கள், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் உட்கார்ந்து படித்து பெறும் பயிற்சியைவிட பலமடங்கு மேலானவை என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே புத்தகமாக விரிகிறது உங்களுக்காக! இதையே பயிற்சிக் களமாகக் கொண்டு, நீங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! ******************************************************************************************************************************************************
மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் விகடன் பிரசுரம் 978-81-8476-112-2 பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! 'வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்' என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? 'அப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..?' என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் _ 'மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்!' தற்போது, விவசாயிகளிடையே 'மரப்பயிர் வளர்ப்பு' என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், 'பசுமை விகடன்' இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது. ******************************************************************************************************************************************************
ஆன்மிக கதைகள் தங்கம் கிருஷ்ணமூர்த்தி 978-81-8476-113-9 வாழ்க்கைத் தத்துவங்களையும், ஒழுக்க நெறிகளையும் காட்டுபவை, இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும். இவ்விரு இதிகாசங்களில் பொதிந்துள்ள வாழ்க்கைக் கதைகள், புராணங்களில் கூறப்படும் நீதிக் கதைகள், மகான்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புத நிழ்வுகள் ஆகியவற்றை எளிமையான நடையில் தந்துள்ளார் நூலாசிரியர் தங்கம் கிருஷ்ணமூர்த்தி. மஹாளயபட்ச அமாவாசை அன்று பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியம், அதனால் உண்டாகும் பலன் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. தெய்வீக மணம் கமழும் தமிழகத்தின் ஆன்மிகப் பெரியோர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மகாசிவராத்திரியில் விரதமிருந்து தீபமேற்றி சிவனை வழிபட்டால் ஏற்படும் பலனை 'கயவன்' வேதநிதியின் கதை உணர்த்துகிறது. 'எது புலனடக்கம்' என்பதை விளக்க, பதஞ்சலி முனிவர் அவரது சிஷ்யரின் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும் கதை உள்ளது. ஞானச் செருக்கு கூடாது என்பதை உணர்த்த, 'விஜயேந்திர ஸ்வாமிகள் _ பிரபஞ்சன சர்மா போட்டி' கதை உள்ளது. 'சந்நியாசி, சம்சாரி ஆகலாமாஒ என்ற விளக்கத்தைத் தருகிறது ஞானேஸ்வரின் சிறுவயது அரசவை விவாதம். விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஸ்ரீரங்கத்தின் எல்லை ராஜகுரு வியாசராஜரால் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்ற வரலாற்றோடு ஒன்றிய கதை, சிக்கல்களைத் தீர்க்கும் மதிநுட்பத்தின் அவசியத்தைப் புலப்படுத்துகிறது. அதேபோல், சொர்க்கத்தை விடவும் சிறந்தது, அறச்செயல் புரிந்து வாழ்வதே என்ற பண்பை முத்கலர்&துர்வாசர் கதை காட்டுகிறது. குலம், மதம், இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் தேசத்துக்குப் பெருமை சேர்த்த தீர்க்கதரிசிகளான ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், அண்ணாமலை ஸ்வாமிகள், ஞானேஸ்வர் போன்றோரின் இறைச்சேவை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலில் இடம்பெற்றுள்ள வேத, இதிகாச, புராண, ஆன்மிக கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரியவைக்கக் கூடியவை. ******************************************************************************************************************************************************
கட்சிகள் உருவான கதை அருணகிரி 978-81-8476-114-6 வோட்டுப் போடுவது மட்டும்தான் இன்று நமக்குத் தெரிந்த அதிகபட்ச அரசியல் பங்களிப்பு. அரசியல் மைதானத்தில் தலைவர்களும், அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே விளையாடத்தக்கவர்கள் என்று எண்ணுவதால் பலரும் அரசியல் மீது அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள். 'கட்சிகள் உருவான கதை'என்ற இந்த நூலை, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிய அருமையான தொகுப்பாகத் தந்திருக்கிறார் அருணகிரி. இவர் எழுதியிருக்கும் ஆக்கபூர்வ _ தேடுதல் மிகுந்த _ படிக்கிற போதே மனதில் நம்பிக்கையைத் துளிர்க்க வைக்கிற, அரசியல் உலகின் போராட்டகர விஷயங்கள், அரசியலை விட்டு விலகி நிற்க நினைக்கிறவர்களைக்கூட உள்ளே இழுக்கும். மாணவ சமுதாய எழுச்சி மூலம் உருவெடுத்த 'அஸ்ஸாம் கணபரிஷத்ஒ, பழங்குடியினரது மேம்பாட்டுக்காக கிளர்ந்தெழுந்த 'ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா', ஆக்ரோஷத்தால் அவதரித்த மம்தா பானர்ஜியின் 'திரிணாமூல் காங்கிரஸ்' என ஒவ்வொரு கட்சியும் உருவான கதையை விவரமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். மத்தியில் எத்தகைய ஆட்சி அமையும் என்பதை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கும் தேசியக் கட்சிகள் பற்றியும், நாட்டை ஆளத்தக்க காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றியும் புள்ளி விவரங்களோடு நூலாசிரியர் தரும் தகவல்கள் சுவையானவை. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 267 வாக்குகள் மட்டுமே பதிவாகி, அதில் 266 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எம்.எல்.ஏ_வான கதையை எல்லாம் படிக்கையில் சுவாரஸ்யமும், வியப்பும் நம்மை விழிவிரிக்க வைக்கின்றன. இன்றைக்கு ஆளுங்கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ இருக்கிற ஒவ்வொரு கட்சிகளும், எவ்வளவு போராட்டங்களையும் நெருக்கடிகளையும் கடந்து, இத்தகைய தகுதியை அடைந்திருக்கின்றன என்ற விவரங்கள் எல்லாம் இந்த நூலில் நுணுக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலில் எந்நாளும் பேசப்படத்தக்க தலைவர்களைப் பற்றிய ஸ்கேனிங் பார்வையாகவும் பல தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. மொத்தத்தில் இந்த நூல் இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிய அரிய அரிச்சுவடி! ******************************************************************************************************************************************************
அடேங்கப்பா ஐரோப்பா வேங்கடம் 978-81-8476-115-3 இப்போதெல்லாம் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கமுடிகிறது. அரக்கோணத்துக்கும் அச்சரப்பாக்கத்துக்கும் இணையாக ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும், தனியாகவும் குடும்பத்துடனும் மக்கள் பயணிக்கிறார்கள். மேல் படிப்புக்காகவும், வியாபார நிமித்தமாகவும் விமானம் ஏறுபவர்களைத் தவிர, ஹாலிடேவுக்காக காமிரா சகிதம் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புபவர்களும் அநேகம் பேர்! இப்படி, மேல் நாட்டுப் பயணம் மேற்கொள்பவர்களெல்லாம், அங்கே தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்துவிடுவதில்லை. அதிகபட்சம் தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதோடு சரி! அதேசமயம், வெளிநாட்டுப் பயணக்கட்டுரைகளைத் தமிழில் எழுதுபவர்களும் நிறைய பேர் உண்டு. வெறுமனே, தங்கிய ஓட்டல்கள் பற்றியும், சாப்பிடும் உணவு வகைகள் பற்றியும் எழுதுவதோடு, வெளிநாட்டு மக்கள் பற்றியும், பண்பாடு, கலாசாரம் பற்றியும், பார்க்கும் இடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் எழுதும்போது வாசிக்கும் சுவாரஸ்யம் அதிகமாகிறது. வேங்கடம் எழுதியிருக்கும் இந்த 'அடேங்கப்பா... ஐரோப்பா' நூல் ஐரோப்பா கண்டத்திலுள்ள உலகப்புகழ்மிக்க இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். தனக்கென்று தனி ஸ்டைல் அமைத்துக்கொண்டு சுற்றுலா தலங்களைப் பற்றி அழகாக வர்ணிக்கிறார் நூலாசிரியர். ரோம், பைசா நகரம், லண்டன் தொடங்கி, உலகின் மிகச்சிறிய நாடான வாட்டிகன் வரை அந்த நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பற்றி வாசிக்கும்போது, அங்கிருக்கும் காட்சிகள் அப்படியே ஒரு திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகிறது. உலக அதிசயங்களில் ஈஃபிள் டவர், பைசா கோபுரம் இரண்டைப் பற்றியும் பல புதிய தகவல்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்கப் படிக்க விறுவிறுப்பு குறையாது என்பதே இந்த நூலின் சிறப்பு. வெறும் பயணக் கட்டுரைகளாக இல்லாமல், வரலாற்றுப் பின்னணியோடு புதிய பயண அனுபவத்தைக் கொடுக்கிறது. பலருக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கவேண்டும் என்று ஆவல் இருக்கும். ஆனால், பயணத்தை எப்படித் திட்டமிடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்நூல் சிறந்த பயணத் துணைவன்! இனி, ஐரோப்பாவைச் சுற்றலாம் வாங்க... ******************************************************************************************************************************************************
தத்துவ ஞானம் வேங்கடம் 978-81-8476-118-4 மதம், சாதி அமைப்பு, உருவ வழிபாடு என்பதெல்லாம் மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. கடவுள் இருக்கிறார்; இல்லை என்பதெல்லாம் இங்கு முக்கியமானவை அல்ல. நமக்கும் மேலே ஒருவர் இருக்கிறார். அவர், நம்மைவிட அதிக சக்தி பெற்றிருக்கிறார். நம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை, தீமைகளை எல்லாம் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்றார் போல நமக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் உலகத்தை வழி நடத்திச் செல்கிறது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு சித்தாந்தம் உண்டு; கொள்கையும், கோட்பாடுகளும், தத்துவ உபதேசங்களும் உண்டு. ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு நூலிழையில் ஒன்று சேர்வதை நம்மால் உணர முடியும். 'தத்துவங்கள் என்பது என்ன? தத்துவங்கள் யாருக்காகத் தோன்றின? கடவுள் இருக்கிறார் என்று இதுவரை யாராவது நிரூபித்திருக்கிறார்களா? கடவுள் இல்லை என்று மறுப்பவர்களாவது, உலக மக்கள் நம்பும்படியாக அதை நிரூபித்திருக்கிறார்களா?' போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த நூலில் விடைதேட முயன்றிருக்கிறார் வேங்கடம். 'அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் உண்மை என்று உலகில் ஏதும் இல்லைஒ என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். 'சாதாரணமான உண்மையிலிருந்து அசாதாரணமான பேருண்மையைத் தேடுவது எப்படி?' என்ற வழிமுறைகளை இந்நூல் மிக மிக எளிமையான உதாரணங்கள் மூலம் விளக்குகிறது. தொடர்ந்து தத்துவஞானத் தேடலில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கு இந்நூல் நிச்சயம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கும். ******************************************************************************************************************************************************
கடல் நிலம் விஜயகிருஷ்ணன் 978-81-8476-067-5 கடலின் மொழி அலையா... நுரையா..? ‍_ இந்தப் பாடலிலிருந்து மேலும் விரிகிறது கடலின் மொழி. யாருக்குமே புரியாமல் மிக ரகசியமாய், கடல்கோளாய், புயலாய், சுனாமியாய்... மனிதனை ஆட்டிப் படைக்கிறது! கடல் அள்ளிக் கொண்ட நகரங்களைப் பற்றி வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் படித்துக் கொண்டிருந்த நமக்கு, நம் காலத்திலேயே கடலின் வேறொரு முகம் தெரிந்துவிட்டது! குழந்தையைப் போல் கண்களை அகல விரித்துப் பார்த்துப் பழகிய சாதுவான கடல், திடீரென்று மிருகத்தின் கூரிய நகங்களைப் போல் கரையேறி வந்தபோது நாம் அடைந்த அச்சம் நமக்கே தெரியும். அந்த அச்சமும் இழப்பும் ஏற்படுத்திய வலிதான் இந்த கடல் நிலம் நாவல். 1964_ல் ராமேஸ்வரம் பகுதியில், கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும் ஏற்பட்ட பேரழிவுகளை கண்முன் நிறுத்துகிறது. இயற்கையின் அந்தச் சீற்றத்தை நேரெதிரே பார்த்தவர்கள் இப்போது இதைப் படித்தால், காயங்களின் வலியை மீண்டும் அனுபவிப்பார்கள். அந்த அளவுக்கு உண்மையாகவும் ரத்தமும் சதையுமாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், நெய்தல் நிலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் விஜயகிருஷ்ணன். கவித்துவம் நிறைந்த அவரது மொழிநடை, நாவலுக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தரமான இலக்கிய நூல்கள் வரிசையில் கடல் நிலம் நாவலுக்கும் நிச்சயம் இடம் உண்டு. ******************************************************************************************************************************************************
அண்ணாவின் இறுதி நாட்கள் இளஞ்சேரன் 978-81-8476-119-1 மாமனிதர்கள் மறைந்து விட்டாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவர்களுடைய சாதனைகள் எப்போதும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் தவிர்க்க இயலாத தலைவர் பேரறிஞர் அண்ணா. அவர் பின்பற்றிய நெறிமுறைகள், எந்தக் காலகட்டத்துக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவை. அண்ணாவின் கடமை உணர்வும், கண்ணியமும், கட்டுப்பாடும் வரலாற்று ஏடுகளில் மறக்க முடியாத பக்கங்கள். ராஜதந்திரம் மிக்க இந்த அரசியல் சாணக்கியரின் இறுதி நாட்கள், தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ஒரு விதப் பதற்றத்துடன் கவனிக்கப்பட்டன. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் பூரண குணம்பெற்று மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருந்தது! சிகிச்சைக்காக அண்ணா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இறுதி நாட்களில் நடந்த சம்பவங்களை தனது டைரியில் குறித்து வைத்திருந்தவர் நூலாசிரியர் இளஞ்சேரன். குங்குமம் பத்திரிகையின் (மலையாளம்) ஆசிரியரான இவர், ஒவ்வொரு நாளும் அண்ணாவின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள், படித்த செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். இதைப் படிக்கும்போது டென்ஷன் மிக்க அந்த இறுதி நாட்கள் மீண்டும் நம் நினைவுக்கு வரும். அண்ணாவின் அபூர்வமான புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு. ******************************************************************************************************************************************************
இமயஜோதி சிவானந்தர் மு. ஸ்ரீனிவாசன் 978-81-8476-120-7 தொண்டு, சேவை, பொது நலம் ஆகியவற்றுக்கான விளக்கத்தை அறநூல்களாகக் கொடுத்து, அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த மகான்கள். அவர்களுள் ஒருவராக, ஆதரவற்றோருக்கு ஆபத்பாந்தவனாக இருந்து அவர்களை அரவணைத்து அருள்புரியும் கருணைக் கடல் சிவானந்தர். தமிழகத்தில், தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர் சிவானந்தர். மருத்துவப் படிப்பில் இருந்த ஆர்வத்தினால், பல கஷ்டங்களுக்கு இடையில் மருத்துவப் படிப்பை முடித்தார். தான் கற்ற மருத்துவ நுணுக்கத்தை மக்களின் நல்வாழ்வுக்காகவே அர்ப்பணித்தார். தர்மசீலர், தயாளகுணம் கொண்டவர். ஆத்ம சாதனை கைவரப்பெற்றவர். இன்னும் பல பல நற்பண்புகள் கொண்ட மகானாக சிவானந்தரை இந்நூல் நமக்குக் காட்டுகிறது. மலேசியாவில் டாக்டராகப் பணி செய்த குப்புசாமி என்ற சிவானந்தரிடம் சிகிச்சைக்கு வந்த தமிழ்த் துறவி கொடுத்த நூல், சிவானந்தரின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதையும், மருத்துவப் பணியில் பணமும், புகழும் சேர்ந்தபோதும் அதில் நாட்டம் இல்லாமல், ஆன்ம ஒளி தேடி தாய்நாடு திரும்பி, ரிஷிகேசத்தில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக சேவையோடு பொதுநலச் சேவை செய்ததையும் இந்நூலில் படிக்கும் போது, சிலிர்ப்பு ஏற்படுகிறது வெகு தூரம் சென்று தர்மாசிரமங்களில் யாசகமாக பெற்று வந்த பால், தயிரை நோயாளிகளுக்கும், பாதாம், பிஸ்கட்டுகளை தன்னைப் பார்க்க வரும் விருந்தினருக்கும் கொடுத்துவிட்டு, காய்ந்த ரொட்டியை தனக்கான உணவாக்கிக் கொண்டு, தியாக உள்ளத்தோடு வாழ்ந்த சிவானந்தர் பற்றிய தகவல்கள் நெஞ்சை நெகிழ வைக்கும். நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாசன், இளமைக்காலத்தில் சுவாமி சிவானந்தரோடு நெருங்கிப் பழகியவர்; சீடராக இருந்து சுவாமிஜியின் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தை பல இடங்களில் கொண்டு சென்றவர். ஆன்மிக அன்பர்களுக்கும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கும் இமயஜோதி சிவானந்தரை உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இந்த நூல் வரப்பிரசாதமே! ******************************************************************************************************************************************************
நோபல் வெற்றியாளர்கள் கே.என்.ஸ்ரீனிவாஸ் 978-81-8476-121-4 சுவீடன் நாட்டு அறிஞர் ஆல்பிரட் நோபல் பெயரில், அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களை கௌரவப்படுத்தும் வகையிலும் வழங்கப்பட்டு வரும் உலகின் மிக உயரிய விருது நோபல் பரிசு. இது எவருக்கும் எளிதாகக் கிடைத்துவிடாது. சாதனையாளர்களின் பணிகளை வைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆய்வுகள் தொடர்பான கேள்விக் கணைகளைத் தொடுத்து, அவர்களின் ஆய்வுகளிலும் பதிலிலும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே விருதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை, இந்த நூல் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம். தங்களுடைய ஆராய்ச்சிக்கு இது போன்ற உயர்ந்த பரிசுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. நினைவிலும் நிஜத்திலும் மனித குல மேம்பாட்டைப் பற்றியே யோசித்து, அல்லும் பகலும் விடாது உழைத்ததற்கான அங்கீகாரமே இந்த நோபல் விருது. பல ஆண்டுகளாக இந்தப் பரிசு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், உலகப் போர்க் காலங்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் 1916, 1931, 1934, 1940, 1941, 1942 ஆகிய வருடங்களில் இயற்பியலுக்கான நோபல் பரிசு எவருக்கும் அளிக்கப்படவில்லை. நோபல் பரிசு பல துறைகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் இயற்பியல் துறையில் வழங்கப்பட்ட விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் இந்நூல் விவரிக்கிறது. தவிர, சிலவற்றில் தோல்வியை சந்தித்தாலும் மேலும் ஆராய்ச்சியைத் தொடர எது ஊக்கியாக இருந்தது; எந்த மாதிரியான சூழலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் என்பதையும் அலசியிருக்கிறார் இந்நூலாசிரியர். வருங்காலத் தூண்களான மாணவர்களையும், அறிவியல் ஆர்வம் உள்ளவர்களையும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க இந்நூல் துணைபுரியும். ******************************************************************************************************************************************************
மௌனம் கலையட்டும் ஜென்ராம் 978-81-8476-122-1 அதிரடி, சஸ்பென்ஸ், ஆர்ப்பாட்டம், மௌனம், கலகம், குழப்பம், காமெடி, வெற்றி, தோல்வி _ இந்த வார்த்தைகள் சினிமாவைவிட அரசியலுக்குத்தான் முற்றிலும் பொருந்துகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் முதல், மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரை பல அதிரடி மாற்றங்கள் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக நடந்தேறியிருக்கின்றன. உலக அரங்கில் ஒப்பிடும்போது, இந்திய அரசியல் ஒரு திறந்த புத்தகம் என்றாலும் அந்தப் புத்தகத்தில் சில கடினமான வரிகளை வாசிக்க நேர்கிறபோது குடிமக்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவது சகஜம்தான். அத்தகைய குழப்பமான வரிகளுக்கு விளக்கம் தருகிற பணியை ஜூனியர் விகடனில் 'சிந்தனை' பகுதியில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம் செய்து வருகிறார். வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகத்தில் நிகழ்கிற பல சம்பவங்களையும் சர்ச்சைகளையும் இந்தக் கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. ஜூ.வி.யில் வெளிவந்த சிந்தனைக் கட்டுரைகள் 'கூட்டத்திலிருந்து வரும் குரல்', 'மனதின் ஓசைகள்' என்று இரண்டு நூல்களாக ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, இப்போது மேலும் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'மௌனம் கலையட்டும்!' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. உங்கள் அறிவுத்தாகத்தையும் தேடல் வேட்கையையும் தணிப்பதில் இந்த நூல் முனைப்புக்காட்டும். கட்டுரைகள் வெளிவந்த தேதிகளோடு இருப்பதால் இந்நூல் ஓர் ஆவணமாகவும் உங்களுக்குப் பயன்படும். முள்ளை முள்ளால் எடுப்பது போல, சமூகத்தில் இருக்கிற மௌனத்தை இந்த மௌனம'க‌(ல)ளயட்டும்! ******************************************************************************************************************************************************
சதுரகிரி யாத்திரை பி.சுவாமிநாதன் 978-81-8476-123-8 இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் மலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் கயிலாய மலை, பர்வத மலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் போற்றிப் புகழப்படுகின்றன. இத்தகைய மலைத் தலங்களுள் சதுரகிரியும் குறிப்பிடத்தக்க ஒன்று. சதுரகிரியின் மலைப்பகுதிக்கு மேலே இருக்கும் நூற்றுக் கணக்கான குகைகளில் சித்தர் பெருமக்கள் எண்ணற்றோர் இன்றைக்கும் அரூபமாக வீற்றிருந்து சித்து விளையாட்டுகள் புரிகிறார்கள். சக்தி விகடன் இதழில் புராண முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி பற்றி சிறப்பான தொடர் ஒன்று வெளியானது. 'குடந்தை ஸ்யாமா' என்ற புனைபெயரில் பி.சுவாமிநாதன் எழுதிய அந்தத் தொடர் வெளியாகும்போதே, அது தொடர்பான ஆன்மிக அன்பர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். உலகெங்கும் உள்ள எத்தனையோ பக்தர்களுக்கு, சதுரகிரி என்கிற அற்புத க்ஷேத்திரத்தை அறிமுகப்படுத்திய 'சதுரகிரி யாத்திரை' தொடர் கட்டுரைகள், இப்போது புத்தக வடிவில், உங்கள் கரங்களில் தவழ்கிறது. சுவையான தகவல்கள், சிலிர்ப்பான அனுபவங்கள், சென்று திரும்புவதற்குத் தேவையான குறிப்புகள்... என்று ஒரு முழுமையான தொகுப்பாக இந்த நூல் மலர்ந்துள்ளது. சதுரகிரி பயணம் செய்ய விரும்பும் ஆன்மிக அன்பர்களுக்கு இந்த நூல் அரியதொரு பொக்கிஷமாக அமைந்து உதவும்! ******************************************************************************************************************************************************
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே பத்மன் 978-81-8476-124-5 'கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி...' 'கடவுளை எனக்குப் பிடித்திருக்கிறதா என்பது முக்கியமில்லை. கடவுளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம்.' 'கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.' இப்படிச் சொல்லப்படுவதெல்லாம் ஏதோ புதிதாகத் தோன்றியிருக்கும் நவீன இயக்கத்தின் வெளிப்பாடுகளாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்து சமயத்தின் ஆழமான தத்துவ மரபைப் பற்றித் தெரிந்திருக்கும் ஒருவருக்கு இவை 'கடலில் எழும் இன்னொரு அலையே' என்பது நன்கு புரிந்திருக்கும். கடவுள் என்ற கற்பிதம் தோன்றிய மறு நிமிடத்திலிருந்தே அதை மறுதலிக்கும் கோட்பாடுகளும் தோன்றிவிட்டன. கடவுளை மறுக்கும் அந்தக் கலகக் கோட்பாடுகள், கடவுளை ஏற்கும் கோட்பாடுகளைப் போலவே சமூக நலனுக்குப் பெரும் பங்கை ஆற்றியிருக்கின்றன. இந்தியாவில் அந்தக் கோட்பாடுகள் மிகப் பெரிய மரியாதையுடன் மதிக்கப்பட்டுள்ளன; மிகுந்த உத்வேகத்துடன் பின்பற்றப்பட்டுள்ளன. கடவுள் ஏற்பு மற்றும் கடவுள் மறுப்பு ஆகிய இரண்டு தத்துவங்களும் இந்திய ஆன்மிகத்தின் இரண்டு கண்கள் போல் ஒளி வீசி வழி நடத்தியுள்ளன. இந்தியாவில் தோன்றிய ஆன்மிக மார்க்கங்களை வெகு சுருக்கமாகவும், அதேசமயம் அவற்றின் ஆழத்தையும் பிரமாண்டத்தையும் நன்கு புரிந்துகொள்ளும் வகையிலும் அற்புதமாக விவரித்துள்ளார் நூலாசிரியர் பத்மன். 'உண்மை என்பது ஒன்றுதான். அறிஞர்கள் அதனைப் பல்வேறு கோணங்களில் சொல்கிறார்கள்' என்பது எவ்வளவு உன்னதமான தத்துவம் என்பது இந்த நூலைப் படித்து முடிக்கும்போது விளங்கும். ******************************************************************************************************************************************************
அரசியல் ஆசான் சாணக்கியன் ஜெ.பிரபாகர் 978-81-8476-125-2 பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானவை, நமது சாஸ்திரங்கள். நமது சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை _ தர்மத்தை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைக்க, அந்தந்த சாஸ்திரத்தில் கரைகண்ட விற்பன்னர்கள் அவ்வப்போது நமது நாட்டில் தோன்றியுள்ளனர். அதன் பலனாகத்தான் அந்த சாஸ்திரங்கள் இன்றும் நமது வாழ்க்கையுடன் இணைந்து செல்கின்றன. மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்த தனி நூல் நமது நாட்டில் ஒரு காலகட்டம் வரை இல்லை எனலாம். வேதங்களும் பிற சாஸ்திரங்களும் சொல்லும் ஆலோசனைகளை ஒட்டியே அவை தொடர்ந்து வந்தன. இந்த முறையில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு சாஸ்திரங்களின் உதவியுடன் பரிகாரங்கள் கூறி, சரிசெய்து வந்தனர். இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் அரசியல் மற்றும் ஆட்சி முறை குறித்து ஒரு நூல் எழுத வேண்டும் என்று சாஸ்திரங்களில் தேர்ந்த ஒருவருக்கே தோன்றியது. தட்சசீலப் பல்கலைக்கழகம் உருவாக்கிய அந்த மாணவன்தான் கௌடில்யன் எனப்படும் சாணக்கியர். அநேகமாக இதுவே உலகின் முதல் நிர்வாக நூலாக இருக்கக் கூடும். அந்த நூல் அர்த்தசாஸ்திரம்! வெறும் விதிகளை மட்டும் சொல்லாமல், விதிவிலக்குகளுக்கு உரித்தானவற்றையும் விவாதிக்கிறது அர்த்தசாஸ்திரம். சாம _ தான _ பேத _ தண்ட முறைகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தகுந்த உபாயங்களுடன் விளக்குகிறது. தான் படைத்தவற்றை தகுந்த ஒரு அரசன் மூலமாகவே செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் சாணக்கியர் உருவாக்கிய மாவீரன்தான், அன்றைய இந்திய நாடு கண்ட 'சந்திரகுப்த மௌரியன்.' ஜனநாயகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட நம் அரசியல் தலைவர்கள் மக்கள் நலம் தொடர்பான விஷயங்களில், சரியான விதத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றனர். உள்நாட்டுப் பிரச்னைகள் மட்டுமின்றி, நமது அண்டை நாடுகளுடனான உறவு நிலை வரை, நம்மால் சரியான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் சாணக்கியரின் திட்டமிடல்களும், அண்டை நாடுகளுடன் அவர் மேற்கொண்ட அணுகுமுறையும் எப்படி மாபெரும் வெற்றியைத் தந்தன என்பதை, ஓவியங்களுடன் ஜெ.பிரபாகர் எழுதியிருக்கும் இந்த நூலைப் படிப்போர் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள். ******************************************************************************************************************************************************
கிராமத்து விளையாட்டுகள் இரத்தின. புகழேந்தி 978-81-8476-126-9 விளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. மேற்படிப்பு கற்றுத் தரும் பல மேலாண்மைப் பண்புகளை விளையாட்டு எப்படி சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. சமூகமாக மனிதன் கூடி வாழ வேண்டும்; வலியோரிடமிருந்து எளியோரைக் காக்க வேண்டும்; சக மனிதர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை, சிறு வயதில் விளையாட்டு மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்பதை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் இரத்தின.புகழேந்தி. சமூகத்தின் அரிய பொக்கிஷமாக இருக்கும் விளையாட்டுகள் நகர்மயமாதல், உலகமயமாக்கல் போன்ற காரணங்களால், காலப்போக்கில் குறைந்து வருவதை நூலாசிரியர் மிகுந்த ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார். இந்த நூலில், நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. விளையாட்டு எப்போது எவரால் விளையாடப்படுகிறது, அதன் விதிகள் என்னென்ன, பண்டைய இலக்கியங்களில் இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் என்ன இருக்கிறது, இந்த விளையாட்டை விளையாடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன ஆகியவற்றை இந்த நூல் சுவாரசியமாகச் சொல்கிறது. இதன் மூலம், கிராமிய விளையாட்டுகளின் நுட்பங்களையும், அதன் மூலம் கற்றுக் கொள்ளப்படுபவற்றையும், சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்களின் கருத்துகள், கள ஆய்வுச் செய்திகள் ஆகியவற்றையும் நாம் அறிந்துகொள்கிறோம். படித்து, நாம் மனக்கண்ணில் பதிவு செய்துகொள்ளும் விளையாட்டுகள், தகுந்த படங்கள் மூலம் நம் புறக்கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது, இந்த நூலின் சிறப்பு. ******************************************************************************************************************************************************
ஹாய் மதன் (பாகம் 4) மத‌ன் 978-81-8476-127-6 கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்! கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு! விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன்! இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 'ஹாய் மதன் தொகுப்புகள் எங்களுக்கு ஒரு டிக்ஷனரி மாதிரி பயன்பட்டு வருகின்றன... எது குறித்து சந்தேகம் எழுந்தாலும் நாங்கள் 'ரெஃபர்' செய்வது மதனின் பதில்களைத்தான்...' என்று நிறைய வாசகர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதுவது உண்டு. விகடன் பிரசுரமாக 'ஹாய் மதன்' தொகுப்புகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளிப்பது இது மாதிரியான கடிதங்கள்தான்! ******************************************************************************************************************************************************
செவக்காட்டுச் சித்திரங்கள் வே.இராமசாமி 978-81-8476-128-3 இன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான்! மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட அதிவிரைவு வாகனங்கள், வெளிநாட்டு உணவு வகைகள் என கிராமங்களும் தங்கள் இயல்பைத் தொலைத்து வருகின்றன. ஆனால், அங்கு வாழும் பகட்டு இல்லாத சாதாரண மக்களின் வாழ்க்கை, அந்த மண்ணில் தொடர்ந்து உழன்று கொண்டுதானிருக்கிறது. அப்படிப்பட்ட வறட்சியான செம்மண் காட்டில், தான் சிறுவனாக இருந்தபோது வேப்பம் முத்து பொறுக்கி, பால்பவுடர் ருசித்ததையும், கோலிக்குண்டு உருட்டி, மல்லுக்கட்டி விளையாடியதையும், அம்மாவுக்குத் தெரியாமல் தோசையை எடுத்து முழுங்கும்போது தொண்டை அடைத்துக்கொண்டு 'தோசை முழுங்கி' என்ற பட்டப் பெயர் பெற்றதையும், கணக்குப் பரீட்சை பேப்பர் முழுக்க 'மூக்காண்டி வாத்தியார்' பட்டப் பேரை எழுதி அடிவாங்கியதையும் மண் வாசனை கெடாமல் எழுத்துச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார் நூலாசிரியர் வே.இராமசாமி. இந்த நூலைப் படிக்கப் படிக்க, நமது இளம் பிராயத்து சம்பவங்களும் நினைவுகளும் காட்சிகளாக விரிந்து அந்த செவக்காட்டுக்கே அழைத்துச் செல்வதை உணரமுடியும். கிராமத்துக்கே உரிய கிண்டலும் கேலியும் காதலும் ரோசமும் நூல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. இளவட்டக்கல் தூக்கும் முத்துக்காளை, மடை ஏறாம கிடக்கும் தண்ணியை இறைவெட்டிப் போட்டு இறைக்கும் மயில்சாமி, புழுதியில் பல்டியடித்துக் கிடந்த ராசேரிக் கோனார், தைலாங்கிழவி போன்ற பாத்திரப் படைப்புகள் ஓவியர் சேகரின் கோட்டோவியங்களில் உயிர் பெறுகின்றன. நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்து வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கும், கிராமத்தில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்வு கரைந்துகொண்டு வருவதை உணர்ந்துகொள்வதற்கும் இந்த நூல் ஒரு காலக்கண்ணாடி. ******************************************************************************************************************************************************
டீன் ஏஜ் டாக்டர் என்.கங்கா 978-81-8476-130-6 பச்சிளம் குழந்தையை வளர்ப்பதில் சில சிரமங்கள் என்றால், நடைபயிலும் குழந்தையை வளர்ப்பதில் வேறு சில சிரமங்கள் உண்டு. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் இவர்கள் அடம்பிடிக்கும்போது கொஞ்சம் அதட்டி, உருட்டி பணியவைத்து விடலாம். ஆனால், மேற்சொன்ன இரு வகையானவர்களையும் வளர்ப்பதில் இல்லாத புது மாதிரி சிரமங்கள் டீன் ஏஜ் பருவத்தினர் வளரும்போது இருக்கின்றன. விஷயங்களை அவர்களுக்கு ஊட்டுவதில்லை; பரிமாறிக்கொள்கிறோம். அவ்வாறு பரிமாறிக்கொள்ளும்போது பெரியவர்களுக்கே கூச்சமும், பயமும் ஏற்படும். எவ்வளவுதான் மறைத்தாலும் அந்தக் கூச்சத்தையும் பயத்தையும் கண்டு அரும்புகள் உள்ளத்தில் மிரள்கின்றனர், தடுமாறுகின்றனர். டீன் ஏஜ் பருவத்தினரை இலக்காகக் கொண்டு டாக்டர் என்.கங்கா, எழுதியிருக்கும் இந்த நூலில், டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது, அவர்களுக்கு மன ரீதியாக எழும் அவஸ்தைகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், உடல் உபாதைகள் ஆகியவற்றையும், அவற்றை சரி செய்துகொள்ளும் வழிகளையும் விவரித்துள்ளார். வருமுன் காக்கும் சில யுக்திகளையும் தெரிவித்துள்ளார். டீன் ஏஜ் பருவத்தினர் மீது எப்போதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்களுடைய மன சஞ்சலங்களைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள் என்பதை இந்த நூலில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். எந்தக் கண்ணோட்டத்தில் அவர்களைப் பார்க்கவேண்டும், அவர்களை எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும், எவ்வாறு ஆதரவாக நடந்துகொள்ளவேண்டும் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 'நான் வளர்கிறேனே அம்மா!' என்று டீன் ஏஜ் பருவத்தினர் சொல்லும்போது, 'கொஞ்சம் பெரியவர்களும் வளரவேண்டுமே அம்மா!' என்ற 'பஞ்ச்'சும் அதில் தெரிகிறது. டீன் ஏஜ் பருவத்தினர் மட்டுமல்லாது, அவர்களை எப்படி அணுக வேண்டும் என்று பெரியவர்களுக்கும் சொல்லும் பயனுள்ள நூல் இது. ******************************************************************************************************************************************************
27 நட்சத்திரக் கோயில்கள் மய‌ன் 978-81-8476-132-0 மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுடன் இணைந்து, வளர்ந்து வந்துள்ள ஒரு சாஸ்திரமும் கூட. நம்முடன் இணைந்துள்ள ஒரு சாஸ்திரமாக இருப்பதால், ஜோதிடத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகமாகிறது. நமது சாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே, இவை எங்குமே முரண்படுவதில்லை. அதனாலேயே சாஸ்திரங்கள், தங்களது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் அதற்குள்ளேயே அடக்கிக் கொண்டுள்ளன. பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த '27 நட்சத்திரக் கோயில்கள்' புத்தகம் உங்களுக்கு உதவும். உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அந்தத் தலத்தின் தல மரம் _ அதன் சிறப்பு, அது தொடர்பான தலபுராணக் கதை, அந்தத் தலம் பற்றிய பூகோளத் தகவல், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மந்திரம் என்று நட்சத்திரம் தொடர்பான அத்தனை தகவல்களையும் நூலாசிரியர் மயன் இந்தப் புத்தகத்தில் துல்லியமாகக் கொடுத்துள்ளார். ஓவியர் ம.செ. வரைந்துள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள், இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு. ******************************************************************************************************************************************************
சார்லி சாப்ளின் அஜயன் பாலா 978-81-8476-135-1 உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஆக்கம் தரும் படைப்புகளும், ஊக்கம் தரும் செயல்களும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவர்களுடைய சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்; நினைவுகள் எப்போதும் துளிர்த்துக் கொண்டிருக்கும். உலகத் திரைப்பட வரலாற்றில் யாரும் எளிதில் எட்டமுடியாத உயரத்தைத் தொட்டவர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்நூல். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்ற சார்லி சாப்ளினின் வாழ்க்கை, எத்தகைய சோதனைகள் நிறைந்தது என்பதையும், அதை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்பதையும், உருக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. இளம்வயதில் தந்தையின் ஆதரவில்லாதது, தாய் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை, பட்டினி இரவுகளோடும் பராரியாக அவமானங்களோடும் போராடிப் பெற்ற வெற்றிகள், தன்னை உதாசீனப்படுத்திய காதலி ஹெட்டி, படங்களின் மூலம் கிடைத்த பல மில்லியன் டாலர் நோட்டுகள், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுதல், ஆஸ்கர் விருது, அமெரிக்காவுக்கே திரும்ப அழைத்துக்கொள்ளுதல்... இப்படி சார்லி சாப்ளினின் போராட்டம் நிறைந்த வெற்றிக் கதையை, அபூர்வமான புகைப்படங்களுடன் படிக்கப் படிக்க நம் மனதில் உத்வேகம் பிறக்கிறது. சாப்ளின் வாழ்க்கையிலிருந்தும், அவர் வழங்கியத் திரைப் படங்களிலிருந்தும் நாம் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. குறிப்பாக, இளைஞர்களுக்கும், வளரும் திரைப்படக் கலைஞர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ******************************************************************************************************************************************************
விகடன் ஜோக்ஸ் 2007 விகடன் பிரசுரம் 978-81-8476-136-8 கோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்! ******************************************************************************************************************************************************
உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் செவல்குளம் 'ஆச்சா' 978-81-8476-133-7 உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். அந்தப் பழமொழிகளையும், அறிஞர் பெருமக்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் திரட்டி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் செவல்குளம் 'ஆச்சா'. உங்கள் உள்ளங்கையில் அமர்ந்து உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்நூல், ஒவ்வொரு நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும், அள்ள அள்ளக் குறையாத அரிய பொக்கிஷமாக விளங்கும். ******************************************************************************************************************************************************
******************************************************************************************************************************************************
அம்பேத்கர் அஜயன் பாலா 978-81-8476-141-2 வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது. இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார். இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்புகள், செயல்பாடுகள் ஏராளம். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாற்றை நூலாசிரியர் அஜயன் பாலா எளிய நடையில் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் 'நாயகன்' வரிசையில் வெளியான அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அபூர்வ புகைப்படங்களுடன் இப்போது நூலாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது. இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் அம்பேத்கரின் வரலாறும் மிக முக்கியமானது. ******************************************************************************************************************************************************
கிச்சன் மருந்து சுவாமி சித்தானந்தா 978-81-8476-142-9 உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை தலைகீழ்! மனிதர்களை நோய்களின் தொல்லையிலிருந்து காக்க சிவபிரான் அருளிய மருத்துவ முறையாகக் கருதப்படுவது 'சித்த மருத்துவம்'. மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் தன்வந்திரி அருளியதாகக் கருதப்படும் மருத்துவ முறை 'ஆயுர்வேதம்'. இவற்றின் கலவையாக உருவானதுதான் பாட்டி வைத்தியம் என்ற நம் பாரம்பரிய வைத்தியம். சாதாரணமான தலைவலி, உடல் வலி என்றாலே பலரும் நாடுவது ஆங்கில மருந்து மாத்திரைகளை. ஆனால் மேலைநாடுகளிலோ மக்கள் அதிகம் விரும்புவது மூலிகைப் பொருட்களாம்! அங்கே நம் சித்த, ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறதாம். சில ஆங்கில மருந்துப் பொருட்களே, மூலிகைகளிலிருந்து வேதி முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. ஒன்றுமில்லாத பிரச்னைக்குக்கூட ஓராயிரம் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை, மருந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு முறைகளிலும் சொல்லப்படும் மருத்துவப் பொருட்களான வாசனைத் திரவியங்கள், மளிகைப் பொருட்கள், காய் வகைகள், பழ வகைகள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் மருத்துவ குணங்களை சுவாமி சித்தானந்தா என்ற பெயரில் இந்நூலில் தொகுத்து அழகாகத் தந்துள்ளார் நூலாசிரியர் தி.முருகன். சாதாரண உடல் உபாதைகளுக்கு நம் வீட்டு சமையல் பொருட்களே நல்ல மருந்துப் பொருட்களாக இருக்கிறது என்பதைக் கூறுவதோடு, சமையலுக்காக அஞ்சறைப்பெட்டியில் அடங்கியிருக்கும் பொருட்களை மருத்துவத்துக்கு எப்படி பயன்படுத்துவது; எந்த நோய்க்கு எதை பயன்படுத்துவது; எத்தனை வேளை எடுத்துக் கொள்வது போன்ற மருத்துவ முறைகளை, மருந்துக்குக்கூட கசப்பு சேர்க்காத வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். 'பாட்டி வைத்தியம் என ஒதுக்கலாகாது' என்று, ஆள்காட்டி விரல் நீட்டி, நமக்குச் சுட்டிக் காட்டுவது இந்த நூல். ******************************************************************************************************************************************************
மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் ஜி.சக்கரவர்த்தி 978-81-8476-143-6 ''ரெண்டு நாளா வயித்துப்போக்கு நிக்கவேயில்லே... எதுனாச்சும் மாத்திரை கொடுங்க கடைக்காரரே...'' _ மெடிக்கல் ஸ்டோரில் இதுமாதிரி கேட்டு நிறைய கஸ்டமர்கள் வருவதுண்டு. 'டாக்டர் கிட்டே போனால் ஏகப்பட்ட டெஸ்டுகளை எடுக்கச் சொல்லி பணத்தைக் கறந்துடுவார்... பேசாம மருந்துக் கடைக்குப் போய் ஏதாவது ஆன்டிபயாடிக் வாங்கி போட்டுக்கலாம்...' _ உபாதையின் தீவிரம் தெரியாமல் தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடும் ரகமும் உண்டு. இந்த அணுகுமுறையே தவறு. திருக்குறளில் மருந்து _ அதிகாரத்தில், 'நோய்நாடி நோய் முதல் நாடி' குறளில், என்ன நோய் என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணத்தையும் ஆராய்ந்து, அது தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, அந்த மருந்து உடலுக்குப் பொருந்துமா என்பதையும் ஆராய்ந்து, மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். மருத்துவர் ஆலோசனைகளின்படி நடக்காமல், தாமாகவே மருந்துகளை நேரடியாகக் கடைகளில் வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை நூலாசிரியர் ஜி.சக்கரவர்த்தி இந்நூலில் தெளிவாக விளக்குகிறார். மருந்துகள் நம் உடலில் செயல்படும் விதத்தையும், மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களின் செயல்பாடுகளையும் நூலாசிரியர் தகுந்த குறிப்புகளோடு விவரிக்கிறார். மருந்து விற்பனை மற்றும் தயாரிப்பு குறித்த சில சட்ட விவரங்களும் இந்நூலில் உள்ளன. மருத்துவம் தொடர்பான பாடநூல் மாதிரியாக இல்லாமல், கசப்பு மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுப்பது மாதிரியாக, நகைச்சுவை இழையோட நூலாசிரியர் ஒவ்வொரு கட்டுரையையும் எழுதியிருப்பது இந்த நூலின் ஹைலைட்! ******************************************************************************************************************************************************
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) சுஜாதா 978-81-89936-09-9 2 ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍_யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்" என்றார். பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி_பதிலாக உருவெடுத்தது! வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு ஒரு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இப்பகுதி. ''ஒவ்வொரு வாரமும் இப்பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்கங்களைப் படிக்க நேர்ந்தது! லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது" என்று சுஜாதா மனநிறைவோடு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், பதில்களில் சுஜாதாவின் தனி 'டச்', நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இப்பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி_பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுக்கள்! தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் புத்தகத்தில் ஐந்தாவது பதிப்பில், 'ஜூனியர் போஸ்ட்' பத்திரிகையில் சுஜாதா எழுதிய 'அதிசய உலகம்' கேள்வி_பதில்களையும் தேர்ந்தெடுத்து இணைத்து புதிய பொலிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறேன். ******************************************************************************************************************************************************
சீவலப்பேரி பாண்டி சௌபா NIL பத்திரிகைத்துறையில் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிபெற்ற ஜூனியர் விகடனில், வாசகர்களின் பெரும் ஆதரவு பெற்றவை கிராமத்துப் பக்கங்கள்! நாடு விடுதலை அடைந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதும் கிராமங்களின் பல்வேறு பிரச்னைகளும் அந்தப் பக்கங்களில் ஒலித்தன. அதோடு கிராமத்தின் கலாசாரமும் அதில் இடம்பெற்றது. கிராமத்துச் சோகமும் சிரிப்பும் அதில் எதிரொலித்தன. அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்களும் கதைகளாக வந்திருக்கின்றன. அதில், 'செளபா' எழுதிய சீவலப்பேரி பாண்டி தொடர் மிகவும் புகழைப் பெற்றது. அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்கள்... எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய கிராமத்து வீரமகன் ஒருவனின் வாழ்க்கை சில சுயநலவாதிகளால் திசைதிருப்பப்பட்டு, அவன் கொலைகாரனாகிவிட்ட கதை. கதையின் கடைசியில், பாண்டி செத்து வீழ்கிறபோது போலீஸ் அதிகாரி பிரேம்குமார் மட்டுமின்றி நமக்கும் பாண்டியின் இதயத்துக்குள் மனிதநேயம் தெரியத்தான் செய்கிறது. க‌த்திமேல் ந‌ட‌ப்ப‌துபோல‌ எச்ச‌ரிக்கையுட‌ன் எழுத‌வேண்டிய‌ க‌ட‌மை செள‌பாவுக்கு இருந்த‌து. அதைச் செவ்வ‌னே செய்தார். தெற்க‌த்திய‌ தீந்த‌மிழ் ந‌டை அவ‌ருக்கு கைவ‌ந்த‌து. தொட‌ருக்கு மேலும் உயிரூட்டிய‌து. விக‌ட‌ன் மாண‌வ‌ர் திட்ட‌த்தில் 'க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌' செள‌பா, இன்று தேர்ந்த‌ எழுத்தாள‌ராக‌ உய‌ர்ந்திருப்ப‌து விக‌ட‌னுக்குப் பெருமை. ******************************************************************************************************************************************************
உடலே உன்னை ஆராதிக்கிறேன் டி.கே.வி.தேசிகாச்சார் 81-89780-74-3 சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' நடையைப் பார்த்துவிட்டு சென்னையின் ஜனத்தொகையில் ஒரு கணிசமான சதவிகிதம் என்னைத் துக்கம் விசாரித்துவிட்ட சூழ்நிலையில், சில நண்பர்கள் 'யோகா ட்ரை செய்து பாரேன்!' என்று யோச‌னை சொன்னார்க‌ள். 'இர‌வு ப‌க‌ல் என்ப‌தெல்லாம் இல்லாம‌ல் க‌ளேப‌ர‌மாக‌ அன்றாட‌ வாழ்க்கையை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜ‌ர்ன‌லிஸ்ட், க‌ட்டுப்பாடாக‌ யோகா செய்ய‌ முடியுமா?' என்ற‌ ச‌ந்தேக‌ம் விசுவ‌ரூப‌ம் எடுத்தாலும், முழ‌ங்கால் வ‌லி 'முய‌ற்சி செய்' என்று ஆணையிட்ட‌து. 'கிருஷ்ண‌மாச்சாரியார் யோக‌ ம‌ந்திர‌ம்' சென்று தேசிகாச்சாரைச் ச‌ந்தித்த‌து அப்போதுதான்! ஒரே வார‌த்தில், காலுக்கென்று சில‌ எளிமையான‌ யோகாச‌ன‌ங்க‌ள் மூல‌ம் அவ‌ர் என் வ‌லியை போன‌ இட‌ம் தெரியாம‌ல் துர‌த்திய‌து வேறு விஷ‌ய‌ம்! அதேச‌ம‌ய‌ம் அவ‌ர் ந‌ட்பு கிடைத்த‌த‌ற்காக‌ என் முழ‌ங்கால் வ‌லிக்கு நான் ந‌ன்றி தெரிவிக்காம‌ல் இருக்க‌ முடியாது! அத‌ற்குப் பிற‌கு ஓராண்டுக்கும் மேல் அவ‌ரிட‌ம் யோகா க‌ற்றுக்கொண்டேன். வைர‌ விழா வெளியீடான‌ ஜோக்ஸ் புத்த‌க‌த்துக்காக‌ என்னுடைய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஜோக்குக‌ளுட‌ன் நாட்க‌ண‌க்கில் ம‌ல்லாடிய‌போது முதுகுவ‌லி வ‌ராம‌ல் ச‌மாளித்த‌த‌ற்கும் அவ‌ர் சொல்லித் த‌ந்த‌ யோகாச‌ன‌ங்க‌ள்தான் கார‌ண‌மாக‌ இருக்க‌ வேண்டும்! தேசிகாச்சார்! ஒரு முறை ச‌ந்தித்தால்கூட‌ ம‌ற‌க்க‌ முடியாத‌ ம‌னித‌ர் அவ‌ர். காலை, பிற்ப‌க‌ல், மாலை, இர‌வு நேர‌ம், க‌டும் வெயில், குளிர்... இப்ப‌டிப் ப‌ல‌ சூழ்நிலைக‌ளில் அவ‌ரைச் ச‌ந்தித்திருக்கிறேன். 'ட‌ல்'லாக‌ இருப்ப‌து, மூட்_அவுட் ஆவ‌து, கோப‌ப்ப‌டுவ‌து... இந்த‌ எதுவுமே இவ‌ரிட‌ம் கிடையாதா என்று விய‌ந்திருக்கிறேன். சாமானிய‌ரோடு பேசிக்கொண்டிருந்தாலும் ச‌ரி, வி.ஐ.பி_யோடு இருந்தாலும் ச‌ரி _ எப்போதும் மாறாத‌ புன்ன‌கை, பொறுமை, சுறுசுறுப்பு, நிதான‌ம்! வாழ்க்கையை முழுமையாக‌க் க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ந்த‌வ‌ர்க‌ள் இப்ப‌டித்தான் இருப்பார்க‌ளோ! 'இந்து' நாளித‌ழில் யோகா ப‌ற்றிச் சில‌ வார‌ங்க‌ள் அவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரைக‌ள், வெளிநாடுக‌ளில் அவ‌ர் ப‌ய‌ண‌ம் செய்த‌போதெல்லாம் இந்தியா ப‌ற்றியும் யோகா ப‌ற்றியும் ப‌ல‌ நாட்டு மாண‌வ‌ர்க‌ள் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு அவ‌ர் த‌ந்த‌ அற்புத‌மான‌ ப‌தில்க‌ள், தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ள்... இவ‌ற்றையெல்லாம் ப‌டித்த‌போது, தேசிகாச்சாரை த‌மிழில் எழுத‌ வைக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் என்னுள் எழுந்த‌து. அத‌ன் விளைவுதான் விக‌ட‌னில் தொட‌ராக‌ வெளிவ‌ந்த‌ 'உட‌லே உன்னை ஆராதிக்கிறேன்!' மிக‌ச் சிற‌ப்பாக‌ அமைந்துவிட்ட‌ அந்த‌த் தொட‌ரைப் புத்த‌க‌மாக‌ விக‌ட‌ன் பிர‌சுரிக்க‌ முடிவெடுத்த‌போது என் ம‌கிழ்ச்சி இர‌ட்டிப்பாகிய‌து! ******************************************************************************************************************************************************
மதன் ஜோக்ஸ் (பாகம் 1) மத‌ன் 81-89780-75-1 நகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு. மாலி, ராஜு, கோபுலு என்று வழிவழி வந்த அந்த அதிர்ஷ்டத்தின் இன்றைய ஒளிமயமான சின்னம் 'மதன்'. ஜோக்குகளுக்கு 'ராஜு' ஓவியம் வரைவதை நான் சிறுவயதில் அருகே இருந்து கவனித்திருக்கிறேன். படுவேகத்தில் மனிதர்களின் ஆக் ஷ‌ன்களை அவர் வரைவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ராஜுவுக்குப் பிறகு மதனிடம்தான் அந்த வேகத்தைப் பார்த்தேன். அரசியல் கார்ட்டூன்களிலும் சரி, ஜோக்குகளிலும் சரி... மதன் வீச்சு _ இருபத்தோராம் நூற்றாண்டைத் தொட்டுவிட்ட சாதனை புரிந்திருக்கிறது. இணை ஆசிரியராக பொறுப்புகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட மதனின் ஜோக்குகளைத் தொகுத்து வழங்குவ‌து என‌க்கு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியும் பெருமையும் த‌ருகிற‌து. ******************************************************************************************************************************************************
வந்தார்கள்... வென்றார்கள்! மத‌ன் 81-89780-59-X 4 ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா?' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், 'ஆர‌ம்பித்த‌ நேர‌ம் ச‌ரியில்லையோ' என்று ஒரு க‌ண‌ம்கூட‌ அவ‌ர் த‌ய‌ங்க‌வில்லை. 'இதுதான் ச‌ரியான‌ ச‌ம‌ய‌ம்... உண்மைக‌ளைச் சொல்வ‌த‌னால் ந‌ன்மைதான் ஏற்ப‌டும்... தொல்லைக‌ள் வ‌ருவ‌தில்லை' என்ற‌ திட‌மான‌ ந‌ம்பிக்கையோடு எழுதினார். ம‌த‌ன் மொக‌லாய‌ ச‌ரித்திர‌த்தைச் சொல்ல‌ச் சொல்ல‌, உண்மையில் ஒரு ம‌க‌த்தான‌ வெற்றியாக‌ தொட‌ர் அமைந்த‌து. எந்த‌க் க‌ள‌ங்க‌மும் அவ‌ர் எழுத்தில் இருக்க‌வில்லை. ஒவ்வொரு ம‌ன்ன‌ரையும் நேசித்து, ஒவ்வொரு நிக‌ழ்ச்சியையும் அவ‌ரே நேரில் இருந்து பார்த்த‌து போல‌ எழுதிய‌ பாங்கு அதிச‌ய‌மான‌து. வாச‌க‌ர்க‌ளும் 'சொக்குப்பொடி' போட்ட‌து போல‌ அவ‌ர் எழுத்துக்கு ம‌ய‌ங்கினார்க‌ள். ல‌ட்ச‌க்க‌ண‌க்கானோர் ப‌டித்தார்க‌ள், பிர‌மித்தார்க‌ள். என‌து இனிய‌ ந‌ண்ப‌ரும் என‌க்குப் பெரும் ப‌க்க‌ப‌ல‌மாக‌ விள‌ங்கிய‌வ‌ருமான‌ ம‌த‌னின் இணைய‌ற்ற‌ சாத‌னையான‌ இந்த‌த் தொட‌ரைப் புத்த‌க‌மாக‌ வெளியிட்ட‌போது வாச‌க‌ர்க‌ளிடையே ப‌ல‌த்த‌ வ‌ர‌வேற்பு கிடைத்த‌து. வாச‌க‌ர்க‌ளின் ஆத‌ர‌வு தொட‌ர்ந்து இருப்ப‌தால், த‌ற்போது புதிய‌ ப‌திப்பாக‌ இப்புத்த‌க‌த்தை வெளியிடுவ‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன். ******************************************************************************************************************************************************
மதன் ஜோக்ஸ் (பாகம் 2) மத‌ன் 81-89780-76-X ஆனந்த விகடன் வைர விழாவையொட்டி வெளியான 'மதன் ஜோக்ஸ்' புத்தகத்தை தமிழக வாசகர் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சிரித்து மகிழ்ந்தது! அதைத் தொடர்ந்து 'மதன் ஜோக்ஸ்_2' வெளியாகிறது. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு போன்ற மதனின் நகைச்சுவைப் படைப்புகளும் இந்த இரண்டாவது புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பு! மதன் படைத்த காரெக்டர்களான ரெட்டைவால் ரெங்குடுவின் விஷமம், முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் பயம், வீட்டு புரோக்கர் புண்ணியகோடியின் சமாளிப்பு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவின் குறும்பு... இவை எளிதில் மனதைவிட்டு மறையுமா என்ன? 'மதன் ஜோக்ஸ்' அடங்கிய முதல் புத்தகத்தை தமிழக மக்கள் வரவேற்றதைப் போலவே, 'மதன் ஜோக்ஸ்_2' புத்தகமும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெறும் என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை! ******************************************************************************************************************************************************
கடவுளைத் தேடி 'கிருஷ்ணா' கே.ஆர்.எஸ். 978-81-8476-070-5 கல்லும் மண்ணும் மனித குலமும் தானாகவே தோன்றிவிட்டனவா; இவை எங்கிருந்து வந்தன; யார் உருவாக்கினார்கள்; எப்படி உருவாக்கினார்கள்; எப்போது உருவாக்கினார்கள்; அப்படி உருவாக்கிய சக்தி எது _ இவற்றை எல்லாம் நாம் தினமும் அலசிக் கொண்டுதான் வருகிறோம். ஆனால், இன்று வரை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நம்பத் தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை என்ற குறை, ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த சக்தியைத் தேடிக் கொண்டிருத்தல் என்பது ஒருபுறம் இருக்க, இந்தக் கருத்தோட்டமே தவறு என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் கருத்துகளுடன் விஞ்ஞானக் கூற்றையும், வேத விளக்கங்களையும் ஒப்பிட்டு, இறைவனின் இயல்பை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கிருஷ்ணா கே.ஆர்.எஸ். இறைவனைத் தேடித் தேடி ஓடிக் கொண்டிருப்பதைவிட, உண்மைப் பொருளாக இறைவன் நமக்குள்ளே இருப்பதைப் புரிய வைக்க முயன்றுள்ளார் இந்நூலாசிரியர். ஒருவன் தன் சுக&துக்கங்களையும், நிறை&குறைகளையும் நிவர்த்தி செய்துகொள்ள ஒரு வழிகாட்டியாக, துன்பத்தில் துவளும் வேளையில் ஆறுதல் தரும் துணையாக இருந்து நம்மைக் காத்துவரும் சக்தியை, புரிந்து, உணர்ந்து தெளிவு பெற இந்நூல் கைகொடுக்கும். பகவத்கீதையில் கண்ணன் காட்டிய பல்வேறு உபாயங்களை எளிமையான தமிழில் விளக்கி, தகுந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் எல்லோருமே கடவுளை உணர்ந்துகொள்ளலாம் என்ற கருத்தை படிப்பவர் மனத்தில் பதியச் செய்துள்ளார். இந்த நூல் ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கும். ******************************************************************************************************************************************************
அவதார புருஷன் கவிஞர் வாலி 81-89780-71-9 'கவிஞர் வாலி ராமகாதையைப் புதுக்கவிதையாக எழுதி வருகிறார்... அற்புதமாக இருக்கிறது... அது விகடனில் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார் இளம் டைரக்டரான வஸந்த்! 'வாலி... ராமாயணம்... புதுக்கவிதை' மூன்றும் சேர்ந்து எண்ணிப் பார்த்தபோதே, உடனே அதன் அருமையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த சில நாட்களிலேயே கவிஞர் வாலியை, துணை ஆசிரியர் சந்திக்குமாறு செய்தேன். துணை ஆசிரியர் சில அத்தியாயங்களைப் படித்து வியந்து... மறுநாளே என்னிடம் அதை உணர்ச்சிகரமாகச் சொல்லி_ எல்லாமே கிடுகிடுவென நடந்தது! நான் கால‌ண்ட‌ரில் தேதியைப் பார்த்தேன்... அதிச‌ய‌ம்! அடுத்து வ‌ருவ‌து ச்ரி ராம‌ந‌வ‌மி! பிற‌கு, மின்ன‌ல் வேக‌ம்தான்... 'அவதார‌ புருஷ‌ன்' என்ற‌ அழ‌கான‌தொரு த‌லைப்பைத் த‌ந்தார் இணை ஆசிரிய‌ர் ம‌த‌ன். ப‌ட‌ம் வ‌ரைய‌ ம‌.செ. ஒப்புத‌ல் த‌ந்தார். '1995 ராம‌ந‌வ‌மியில் ஆர‌ம்பித்து, 1996 ராம‌ந‌வ‌மி வ‌ரை ஓராண்டு வெளியிடுவ‌து' என‌ அப்போதே வாலியிட‌ம் டெலிபோனில் பேசினேன்! அப்ப‌டித்தான் ஆர‌ம்பித்த‌து, அழ‌கான‌ புதுக்க‌விக் காவிய‌ம் 'அவ‌தார‌ புருஷ‌ன்'! க‌விஞ‌ர் வாலியின் ஒவ்வொரு சொல்லும் எளிமை, அருமை! ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ள் அதைப் ப‌டித்து உண‌ர்ச்சிவ‌ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அதைப் புத்த‌க‌மாக‌ வெளியிடுமாறு ஒவ்வொருவ‌ரும் கோரிக்கை விடுத்த‌ன‌ர். அதையேற்று, மிகுந்த‌ ம‌கிழ்ச்சியோடும் ம‌ன‌நிறைவோடும் விக‌ட‌ன் வெளியீடாக‌ 'அவ‌தார‌ புருஷ‌ன்' வெளிவ‌ந்திருக்கிற‌து. த‌ன‌து இல்ல‌த்தில் இருக்க‌வேண்டிய‌ புத்த‌க‌மாக‌ இதை ஒவ்வொரு த‌மிழ் வாச‌க‌ரும் க‌ருதுவ‌ர் என்றே நான் நிச்ச‌ய‌ம் ந‌ம்புகிறேன். ******************************************************************************************************************************************************
வருச நாட்டு ஜமீன் கதை வடவீர பொன்னையா 978-81-8476-075-0 ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது 'வருச நாட்டு ஜமீன் கதை'. நூறு வருடங்களுக்கு முன்பு தேனி வட்டாரத்தில் சீரோடும் பேரோடும் வாழ்ந்த வருச நாட்டு ஜமீன் குடும்பம், ஒரு சித்த‌ரின் சாபத்தால் சீரழிந்து போன கதை. சிறுவயது முதலே பெரியவர்கள் மூலமாக இந்தக் கதையைப் பாட்டாகவும் வசனமாகவும் சொல்லக் கேட்டவர் வடவீர பொன்னையா. இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த‌க் க‌தை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஜ‌மீன் ப‌ர‌ம்ப‌ரை ம‌னித‌ர்க‌ளையும், வாரிசுக‌ளையும், குடும்ப‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் வ‌ட‌வீர‌ பொன்னையா நேரில் ச‌ந்தித்து ச‌ம்ப‌வ‌ங்க‌ளை உறுதி செய்துகொண்ட‌ பிறகு... சுவார‌சிய‌மாக‌த் தொட‌ரை எழுதி முடித்தார். வாச‌க‌ர்க‌ளிடையே ப‌ல‌த்த‌ கைத்த‌ட்டல்க‌ளும் கிடைத்த‌ன‌. 'வ‌ட‌வீர‌ பொன்னையா' என்ற‌ பெய‌ரில் ஒளிந்துகொண்டிருக்கும் பொன். ச‌ந்திர‌மோக‌ன், தேனி வ‌ட்டார‌த்திலேயே பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ர். அத‌னால் தேனி ம‌ண்ணின் வாச‌னையையும், ம‌க்க‌ளின் உண‌ர்வுக‌ளையும் அதே ஒய்யார‌ ந‌டையில் எழுதிய‌தால் தொட‌ருக்கு இன்னும் 'கிக்' அதிக‌மான‌து. க‌தைக்கேற்ற‌ப‌டி அழ‌கான‌ ஓவிய‌ங்க‌ள் வ‌ரைந்து கொடுத்து, தொட‌ருக்கு மெருகூட்டியிருக்கிறார் ஓவிய‌ர் ச‌சி. 'பொன்ஸீ' என்று அழைக்க‌ப்ப‌டும் பொன். ச‌ந்திர‌மோக‌ன், விக‌ட‌னில் மாண‌வ‌ராக‌ எழுத‌ ஆர‌ம்பித்து... பின்பு புகைப்ப‌ட‌ ப‌த்திரிகையாள‌ராக‌ வ‌ள‌ர்ந்து, த‌ற்போது தேர்ந்த‌ எழுத்தாள‌ராக‌ பெய‌ர் எடுத்திருப்ப‌து விக‌ட‌னுக்குப் பெருமை! ******************************************************************************************************************************************************
காதல் படிக்கட்டுகள் கட்டுரையாளர்கள் 81-89780-63-8 'காதல் படிக்கட்டுகள்' தொடர் ஜூ.வி_யில் வெளிவந்த நேரம்... காதல், இளைஞர்களுக்கான உணர்வு மட்டுமல்ல என்ற உண்மையை நிரூபிக்கும் விதமாக எல்லாத் தரப்பினரிடமிருந்தும் அத‌ற்கு ஏகோபித்த‌ ஆத‌ர‌வும் வ‌ர‌வேற்பும் கிடைத்த‌து. காத‌ல் என்ற‌ ச‌க்திவாய்ந்த‌ மூன்றெழுத்துக்க‌ளுக்குப் பின்னால் எவ்வ‌ள‌வு சுவையான‌, வித‌வித‌மான‌ அனுப‌வ‌ங்க‌ள்! ப‌ற‌வைக‌ளின் ச‌ங்கீத‌த்துக்கும் வான‌த்தின் வ‌ர்ண‌ஜால‌த்துக்கும் இணையான‌ க‌வித்துவ‌மும் அழ‌கும் காத‌லுக்கு ம‌ட்டுமே உண்டு. மக்க‌ளால் பெரிதும் அறிய‌ப்ப‌ட்ட‌ வி.ஐ.பி_க்க‌ள் ப‌ல‌ர், காத‌ல் குறித்த‌ த‌ங்க‌ள் எண்ண‌ங்க‌ளை, க‌ருத்துக்க‌ளை, அனுப‌வ‌ங்க‌ளை இந்த‌த் தொட‌ர் மூல‌ம் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். த‌ங்க‌ளை ம‌ல‌ர‌ வைத்த‌தும் நெகிழ‌ வைத்த‌துமான‌ வ‌சீக‌ரத் த‌ருண‌ங்க‌ளை வெளிப்ப‌டையாக‌ச் சொல்லியிருக்கிறார்க‌ள். காத‌ல் தேவ‌தையின் உயிரோவிய‌த்துக்குத் த‌ங்க‌ள் அனுப‌வ‌ங்க‌ளையே தூரிகைக‌ளாக்கி இவ‌ர்க‌ள் வ‌ண்ண‌ம் சேர்த்துத் த‌ர‌... முத்தாய்ப்பாக‌, அந்த‌ அழ‌கு ஓவிய‌த்தின் க‌ண்க‌ளைத் திற‌ந்துவைத்து உயிர்ப்பாய்ச்சும் உன்ன‌த‌மான‌ ப‌ணியைச் செய்துத‌ர‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ரை அணுகினோம். உட‌னே ஒப்புக்கொண்டு, உண‌ர்ச்சித‌தும்ப‌ ஒரு குறுங்காவிய‌மே இய‌ற்றித் த‌ந்தார் அந்த‌ இல‌க்கிய‌க் காத‌ல‌ர். அவ‌ருக்கும் இந்த‌த் தொட‌ரில் ப‌ங்கேற்ற‌ என் ம‌திப்புக்குரிய‌ அனைவ‌ருக்கும் க‌னிவான‌ ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜூ.வி. வாச‌க‌ர்க‌ளைச் சுண்டியிழுத்த‌ இந்த‌த் தொட‌ரை, ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிடுவ‌தில் ம‌கிழ்ச்சிய‌டைகிறேன். இந்த‌த் தொகுப்புக்குள் ப‌ய‌ண‌ம் செய்யும்போது நிச்ச‌ய‌ம் நீங்க‌ளும் ம‌கிழ்வீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன். ******************************************************************************************************************************************************
மனம் மலரட்டும் சுவாமி தயானந்த சரஸ்வதி 81-89780-99-9 சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 'மனம் மலரட்டும்' என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதுவது குறித்த அறிவிப்பு விகடனில் வெளியானதுமே, வாசகர்கள் அதை வரவேற்று மனம் குளிர்ந்து கடிதங்கள் எழுதினார்கள். கட்டுரை வெளிவரத் துவங்கியதும் ஒவ்வொரு வாரமும் வாசகர்களிடமிருந்து எங்களுக்கு வந்த கடிதங்களும் என்னை உற்சாகப்படுத்தியது உண்மை. அடிய வேதாந்தக் கருத்துக்களை ஒவ்வொருவருக்கும் புரியும் வகையில், எளிமையாக எடுத்துரைப்பதில் தனிச்சிறப்புப் பெற்றவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. 'மனம் மலரட்டும்' கட்டுரைத் தொடரில் இது பிரத்தியேகமாகப் பிரதிபலித்தது. வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் நல்லது கெட்டதுகளையும் இன்ப துன்பங்களையும் கடவுள் தரும் பிரசாதமாக ஏற்க நமது மனம் பக்குவப்பட்டுவிட்டாலே, பிரச்னைக‌ள் காணாம‌ல் போய்விடும் என்ப‌தை இந்த‌த் தொட‌ரில் அருமையாக‌ வ‌லியுறுத்தி விள‌க்கினார் சுவாமி த‌யானந்த‌ ச‌ர‌ஸ்வ‌தி. வாச‌க‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு சுவாமிஜி அளித்த‌ விள‌க்க‌ங்க‌ள், இந்த‌த் தொட‌ருக்கு ம‌குட‌மாக‌ அமைந்த‌ன‌. த‌ன‌து குருகுல‌த்தில் வ‌குப்புக‌ள், வெவ்வேறு ஊர்க‌ளில் 'உரைக‌ள்' என்ற‌ த‌ன் தொட‌ர்ப‌ணிக‌ளுக்கு இடையே வாச‌க‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்குப் ப‌தில் எழுதிக் கொடுத்த‌ சுவாமிஜிக்கு என் ஸ்பெஷ‌ல் ந‌ன்றி. அன்றாட‌ வாழ்க்கையில் ஏற்ப‌டும் விவ‌ரிக்க‌ இய‌லாத‌ ம‌ன‌ அழுத்த‌த்துக்கும் தீர்க்க‌ முடியாத‌ சிக்க‌ல்க‌ளுக்கும் உள்ளாகியிருக்கும் ப‌ல‌ருக்கும் 'ம‌ன‌ம் ம‌ல‌ர‌ட்டும்' க‌ட்டுரைக‌ள் ந‌ன்ம‌ருந்தாக‌ அமையும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை. விக‌ட‌னில் வெளியான‌ சுவாமி த‌யானந்த‌ ச‌ர‌ஸ்வ‌தியின் தொட‌ர் க‌ட்டுரைக‌ளை இப்போது விக‌ட‌ன் பிர‌சுர‌மாக‌ வெளியிடுவ‌தில் பெருமையும் பெருமித‌மும் கொள்கிறேன். ******************************************************************************************************************************************************
வாவ் 2000 வேல்ஸ் 81-89780-79-4 புது வருடமான 2000. இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும், நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வு பிறந்து, உலகமே அதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, 'இந்தப் புத்தாயிரத்தைப் புதுமையான முறையில், அதே சமயம் விகடன் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எப்படி வரவேற்கலாம்?' என யோசித்தோம். 'சரித்திரம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை சுவைபடக் கூறினால் வாசகர்கள் ரசிப்பார்கள்' என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அந்த வகையில், கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நடந்த முக்கிய சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து வரலாற்றுத் தொடர் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம். 100 வார‌ங்க‌ள் _ அதாவ‌து, கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பே புது மில்லினிய‌த்துக்கு வ‌ர‌வேற்புக் கூறும் வித‌மாக‌, 'வாவ் 2000' என்ற‌ த‌லைப்பிட்டு இந்த‌ புதிய‌ நூறு வார‌த் தொட‌ர் ஆர‌ம்பித்தோம். உல‌க‌ ச‌ரித்திர‌ நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் ஆங்கில‌த்தில் வெளிவ‌ந்துள்ள‌ன‌. ஆனால், த‌மிழில் இந்த‌த் தொட‌ர் முத‌ல் முய‌ற்சி. ப‌ல‌ ஆயிர‌ம் வார‌ங்க‌ள் வ‌ர‌க்கூடிய‌ வ‌ர‌லாற்றை நூறே வார‌ங்க‌ளில் அட‌க்குவ‌து என்ப‌து ச‌ற்றுச் சிர‌ம‌மான‌ காரிய‌ம் என்ப‌து வாச‌க‌ர்க‌ளுக்குப் புரியும். இருப்பினும், மிக‌ முக்கிய‌மான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எதையும் விட்டுவிடாம‌ல் இத்தொகுப்பில் இணைப்ப‌தில் க‌வ‌ன‌முட‌ன் செய‌ல்ப‌ட்டிருக்கிறோம். தொட‌ர் வ‌ந்துகொண்டிருக்கும்போதே வாச‌க‌ர்க‌ள் அவ்வ‌ப்போது தெரிவித்த‌ எண்ண‌ங்க‌ள், ஆலோச‌னைக‌ள், விம‌ரிச‌ன‌ங்க‌ள் இத்தொட‌ரை மெருகேற்ற‌ இன்னும் உத‌வின‌. விக‌ட‌னில் தொட‌ர் வெளியாகும்போதே மிக‌வும் ர‌சித்துப் பேரார்வ‌ம் காட்டிய‌ வாச‌க‌ர்க‌ள், இந்த‌ப் புத்த‌க‌த்துக்கும் அமோக‌ வ‌ர‌வேற்பை அளிப்பார்க‌ள் என்ப‌தில் என‌க்குச் ச‌ந்தேக‌மில்லை! ******************************************************************************************************************************************************
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி சுகி சிவம் 81-89780-67-0 1 மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அடுத்த தொடர் என்ன என்ற ஆவலோடு காத்திருப்பார்கள். விற்பனையில் இரண்டு லட்சம் பிரதிகளை நோக்கி சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சுவாமி சுகபோதானந்தா எழுதிய 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்', அரிய வேதாந்தக் கருத்துக்களை எளிய முறையில் சுவாமி தயானந்த சரஸ்வதி அளித்த 'மனம் மலரட்டும்' ஆகிய இரண்டு வெற்றித் தொடர்களே, வாசகர்களின் வரவேற்பு சான்றுகள். இந்த‌ வ‌ரிசையில், சொல்லாற்ற‌லும் எழுத்தாற்ற‌லும் கொண்ட‌ அன்ப‌ர் சுகி.சிவ‌ம், 'ம‌ன‌சே, நீ ஒரு ம‌ந்திரச் சாவி' என்ற‌ த‌லைப்பின்கீழ் ஆன‌ந்த‌ விக‌ட‌னில் எழுதிய‌ த‌ன்ன‌ம்பிக்கைத் தொட‌ர் வாச‌க‌ர்க‌ளின் ம‌ன‌தில் ம‌ற்றொரு மாணிக்கக் க‌ல்லாக‌ ஒளிவீசுகிற‌து. த‌ன்னை வ‌ள‌ர்த்துக் கொள்ளுத‌ல், நேர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட‌ல், த‌னிம‌னித‌ முன்னேற்ற‌ம், ம‌னித‌ன் வாழ‌வேண்டிய‌ வித‌ம் ஆகிய‌வ‌ற்றில் மிகுந்த‌ ஆர்வ‌ம் கொண்ட‌ சுகி.சிவ‌ம், சின்ன‌ச் சின்ன‌க் குட்டிக் க‌தைக‌ள், ச‌ம்ப‌வ‌ங்க‌ள் மூல‌மாக‌ வாச‌க‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ம்பிக்கை ஒளி ஏற்றியிருக்கிறார். அவ‌ருக்கு என் ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'ம‌ன‌சே, நீ ஒரு ம‌ந்திர‌ச் சாவி' தொட‌ரைப் புத்த‌க‌மாக‌ வெளியிடும் இதே ச‌ம‌ய‌த்தில், அவ‌ள் விக‌ட‌னில் சித்திரை மாத‌ம் தொட‌ங்கி ப‌ங்குனி மாத‌ முடிவு வரையில் நாம் கொண்டாடும் சிற‌ப்புப் ப‌ண்டிகைக‌ளைப் ப‌ற்றி சுகி.சிவ‌ம் ஆன்மீக‌ உண‌ர்வு குறையாம‌ல் இல‌க்கிய‌த் த‌ர‌த்தோடு ப‌டைத்த‌ 'வ‌ழிபாடு' க‌ட்டுரைத் தொகுப்பையும் இணைத்து, ஒரே புத்த‌க‌மாக‌த் த‌ருவ‌தில் மிகுந்த‌ ம‌கிழ்ச்சிய‌டைகிறேன். 'ம‌ன‌சே, நீ ஒரு ம‌ந்திர‌ச் சாவி', 'வ‌ழிபாடு' இணைந்த‌ இந்த‌ அருமையான‌ புத்த‌க‌த்தை வாச‌க‌ர்க‌ள் பெரிதும் வ‌ர‌வேற்பார்க‌ள் என்று ந‌ம்புகிறேன். ******************************************************************************************************************************************************
ரொமான்ஸ் ரகசியங்கள்! தொகுப்பாளர்கள் 81-89780-27-1 'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'நான் ரெடி, நீங்க ரெடியா?' என்று எந்த மனைவியும் கணவனிடம் நேரடியாக அல்ல, மறைமுகமாகக்கூடக் கேட்கத் தயங்குகிற காலமாகத்தான் இன்றும் இருக்கிறது. ஒரு முழம் பூ, நாலு வரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், செல்லமாச் ஒரு தட்டல், எதிர்பாராத முத்தம், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ சம்பவங்கள் நம்மைச் சுற்றிலும் சந்தோஷப்பட வைக்க நிறைந்திருக்கின்றன. மாறிவ‌ரும் வேக‌ யுக‌த்தில், வாழ‌வேண்டிய‌ த‌ருண‌ங்க‌ளை இப்ப‌டித் த‌வ‌ற‌விட்டு விட்டோமே என்று வ‌ருத்த‌ப்ப‌டாம‌ல், ஒவ்வொரு நாளையும் முடிந்த‌ அள‌வுக்கு ச‌ந்தோஷ‌மாக‌வும் திருப்தியாக‌வும் மாற்றிக்கொள்ள‌ உத‌வும் உற்சாக‌ டானிக்கே ரொமான்ஸ்! ப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ண‌வ‌னும் ம‌னைவியும் புரிந்துகொள்ள‌வும், எளிய‌ சிறுசிறு விஷ‌ய‌ங்க‌ளால் ச‌ந்தோஷ‌ப்ப‌ட‌வும், உற‌வை திருப்திக‌ர‌மாக்கிக் கொள்ள‌வும் தேவை ரொமான்ஸ்! 'ரொமான்ஸ் ர‌க‌சிய‌ங்க‌ள்' தொட‌ர் தொட‌க்க‌த்திலேயே வாச‌கிய‌ரின் பெரும் வ‌ர‌வேற்பைப் பெற்ற‌து. 'வாச‌கிக‌ள் சொல்ல‌த் த‌ய‌ங்கிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை நாசூக்காக‌வும் நாக‌ரிக‌மாக‌வும் எடுத்துக் காட்டி விள‌க்கிய‌ இந்த‌த் தொட‌ர் ஒரு புத்த‌க‌மாக‌ வெளிவ‌ந்தால், இனிய‌ இல்ல‌ற‌ம் அமைய‌ இள‌ம் த‌ம்ப‌திய‌ருக்கு ந‌ல்ல‌தொரு வ‌ழிகாட்டியாக‌ இருக்கும்' என்று ப‌ல‌ரும் க‌டித‌ம் எழுதியிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளின் விருப்ப‌த்தை நிறைவேற்றும் வ‌கையில், 'ரொமான்ஸ் ர‌க‌சிய‌ங்க‌ள்' தொட‌ரை ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிடுவ‌தில் மிகுந்த‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன். ******************************************************************************************************************************************************
அச்சமின்றி ஆங்கிலம் டி.ஐ.ரவீந்திரன் 978-81-8476-071-2 வேர் ஆர் யூ கோயிங்? இங்க பக்கத்துலதான் கடைக்கு. வாட் ஃபார்? கொஞ்சம் முந்திரிப்பருப்பு வாங்கிட்டு வரலாம்னுதான் ஒருவர் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கிறார்; மற்றவரோ பிடிவாதமாக தமிழிலேயே பதில் சொல்கிறார். ஆனால் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்பவர், தமிழில் இவர் சொல்லும் பதிலையும், தமிழிலேயே பதில் சொல்பவர் அவர் பேசும் ஆங்கிலத்தையும் புரிந்துகொள்கிறார். இப்படி ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருந்தும், எளிய ஆங்கிலத்தில் பேசுவதற்குக்கூட பலரும் தயங்குவதற்கு என்ன காரணம்? அச்சம்தான். அந்த அச்சத்தைப் போக்கி, ஆங்கிலத்தில் உரையாட உளபூர்வமாகத் தயாராக்குகிறது இந்நூல். நம்மில் பலருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்; எதிராளி பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஆனால் பதில் சொல்ல ஒரு கூச்சம், தயக்கம், எல்லாவற்றுக்கும் மேலாக அச்சம் என்று ஆங்கிலம் பேசாததற்கு இந்த நூலாசிரியர் காரணங்களை அடுக்குகிறார். நம்மில் ஆங்கிலம் பேச வராத பலரும், அதற்கு தம்முடைய அச்சமே காரணம் என்று அறிவதில்லை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் ஆங்கிலம் பேசுவதை பலரும் தவிர்த்து வருவதை விளக்குவதுடன், தாழ்வு மனப்பான்மை, கூச்சம், அச்சம் ஆகிய குறைகளை மாற்றிக்கொள்ளும் பயிற்சி, பிறகு சுலபமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நூலின் இறுதி அத்தியாயங்களில், பேசுவதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு ஆங்கில அறிவு மட்டும் தேவையோ அந்த அளவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைப் படித்தால், வாசகர்கள் அச்சமின்றி உடனே ஆங்கிலம் பேசத்தொடங்கலாம். ஆர் யூ ரெடி? ******************************************************************************************************************************************************
டயலாக் விகடன் பிரசுரம் NIL ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள். போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், 'ஊர் உலகத்தில்தான் எத்தனை சுவாரஸ்யமான பேச்சுக்கள்... காதைத் தீட்டிக்கொண்டு, ஒட்டுக் கேட்டு, நறுக்கென்று எழுதி அனுப்புங்களேன்' என்று ஒரு போட்டி வைத்தோம். 'வித்தியாசமாக ஏதாவது வந்தால், இரண்டொரு இதழ்களுக்குப் பிரசுரிக்கலாம்' என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால், வாசக மகாசக்தி எழுதிக் குவித்த பேச்சுத் துணுக்குகள், நாங்களே அதுவரை அறிந்திராத முற்றிலும் புதுமையான ஒரு சுவையோடு அசத்தின. 'ட‌ய‌லாக்' என்று த‌லைப்பைக் கொடுத்து, இத‌ழ்க‌ண‌க்கில் எங்க‌ளையும் அறியாம‌ல், அவ‌ற்றைத் தொட‌ர்ந்து பிர‌சுரிக்க‌ ஆர‌ம்பித்தோம். மாத‌ங்க‌ள்... ஏன், வருட‌ங்க‌ள் ப‌ல‌ உருண்டோடிய‌போதும், வாச‌க‌ர்க‌ளிடமிருந்து 'ட‌ய‌லாக்'குக‌ள் வ‌ருவ‌து கூடிய‌தே த‌விர... குறைய‌வில்லை! டீக்க‌டையில், ம‌ர‌த்த‌டியில், த‌பால் ஆபீஸில், க‌ட்ட‌ண‌க் க‌ழிப்ப‌றை வாச‌லில்கூட‌ யாராவ‌து காதைச் சாய்த்துக்கொண்டு நின்றால், 'ஹ‌லோ! நீங்க‌ ஜூ.வி. வாச‌க‌ரா? டய‌லாக் அனுப்ப‌ மேட்ட‌ர் தேத்த‌றீங்க‌ளா?' என்று ப‌ர‌ஸ்ப‌ர‌ம் விசாரித்துக்கொள்வ‌து வேடிக்கையான‌ வ‌ழ‌க்க‌மாகிப் போன‌து. அரிசி விலையேற்ற‌த்திலிருந்து அமைச்ச‌ர‌வை உருட்ட‌ல் வ‌ரை... ர‌ஜினி அர‌சிய‌ல் பிர‌வேச‌ம் முத‌ல் ர‌ம்பா அழ‌கு ந‌டை வ‌ரை... வீர‌ப்ப‌ன் காடு முத‌ல் புருஷ‌ன் _ பொண்டாட்டி ச‌ண்டை வ‌ரை... எதையுமே வாச‌க‌ர்க‌ள் விட்டுவைப்ப‌தில்லை! இன்றைக்கும், 'ஜூ.வி. கைக்கு வ‌ந்த‌தும் முத‌ல்ல‌ ப‌டிக்க‌ற‌து ட‌ய‌லாக்தான்' என்று த‌ய‌ங்காம‌ல் சொல்லுகிற‌ வாச‌க‌ர்க‌ள் ஏராள‌ம். அந்த‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌க்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌, பிர‌ப‌ல‌மாக‌ப் பேச‌ப்ப‌ட்ட‌ எந்த‌வொரு விஷ‌ய‌முமே இந்த‌ப் ப‌குதியில் இட‌ம்பெற‌த் த‌வ‌றிய‌தில்லை. அந்த‌ வ‌கையில், 'ட‌ய‌லாக்' என்ப‌து கால‌த்தைப் பிர‌திப‌ல‌க்கும் ம‌க்க‌ளின் நாடித்துடிப்பாக‌வே இன்றுவ‌ரை அப்ப‌டியே தொட‌ர்கிற‌து! ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பேட்டிக்கு எங்க‌ள் நிருப‌ர்க‌ள் போகும்போது, 'எப்போது 'ட‌ய‌லாக்'குக‌ளைத் தொகுத்துப் புத்த‌க‌மாக‌த் த‌ர‌ப்போகிறீர்க‌ள்?' என்று ப‌ல‌ வி.ஐ.பி_க்க‌ளே ஆர்வ‌த்துட‌ன் கேட்ப‌துண்டு. ம‌லைய‌ள‌வு பிர‌சுரமான‌ ட‌ய‌லாக்குக‌ளிலிருந்து எதை எடுப்ப‌து, எதை விடுப்ப‌து என்ற‌ பிர‌மிப்பிலேயே அந்த‌ முடிவை நான் ஒத்திப்போட்டுக்கொண்டு வந்தேன். வாச‌க‌ர்க‌ளுக்கான‌ ட‌ய‌லாக் ப‌குதி ஆர‌ம்பித்து, ஒரு ட‌ஜ‌ன் வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து இப்போதுதான் நேர‌ம் வாய்த்திருக்கிற‌து. இந்த‌ வ‌ண்ண‌மிகு தொகுப்பு உங்க‌ளையெல்லாம் நிச்ச‌ய‌ம் ம‌கிழ்வூட்டும். அந்த‌ப் பெருமை முழுக்க‌ முழுக்க‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌ ஜூ.வி. வாச‌க‌ர்க‌ளையே சாரும். ******************************************************************************************************************************************************
எம்ப்ராய்டரி மிருதுளா நாகராஜன் 81-89780-15-8 உலகம் முழுக்கப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தில் அபாரமான ஒற்றுமை உண்டு. 'நான் அணிந்திருக்கும் உடை, உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக, மிகச் சிறப்பானதாக, எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக, அசத்தலாக இருக்க வேண்டும்' என்று மனதார விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது! அந்த எண்ணம் அடிமனதில் இருப்பதால்தான், எம்ப்ராய்டரி மூலம் டிசைன் டிசைனாக கைவேலைப்பாடு செய்த உடைகளைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். மிக அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஓர் உடையைப் பார்க்கும்போது, 'அடேங்கப்பா!' என்று மனதில் பிரமிப்பு ஏற்படுகிறது. அதே சமயம், 'நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா?' என்ற ஏக்கமும் பல பெண்களுக்கு ஏற்படுவது உண்மை. நிச்ச‌ய‌ம் முடியும்! நிறைய‌ப் பேர் நினைப்ப‌து போல‌, எம்ப்ராய்ட‌ரி அப்ப‌டியொன்றும் க‌ற்றுக்கொள்ள‌ முடியாத‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் அல்ல‌. நிறைய‌ ஆர்வ‌ம், ந‌ல்ல‌ ர‌ச‌னை, கொஞ்ச‌ம் உழைப்பு... இந்த‌ மூன்றும் இருந்தால் போதும் _ எந்த‌ப் பெண்ணுமே எம்ப்ராய்ட‌ரி என்கிற‌ சித்திர‌ப் பின்ன‌லில் வித்த‌கி ஆக‌லாம்! க‌ற்ப‌னையில் தோன்றும் வ‌ண்ண‌ங்க‌ளுக்கும் வ‌டிவ‌ங்க‌ளுக்கும் ஊசி_நூலால் உயிர் கொடுத்து, ப‌டைப்பாற்ற‌லின் மூல‌ம் ம‌ட்டுமே கிட்டுகிற‌ திருப்தியை அனுப‌விக்க‌லாம்! 'க‌ற்ற‌தை வெளிப்ப‌டுத்திக் கைத்த‌ட்ட‌ல் பெறுவ‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌க் க‌லை... க‌லையைத் தொழிலாக்கி, வித்தையைக் காசாக்கி, வாழ்க்கையில் மேம்பாடு காண‌வும் வாய்ப்ப‌ளிக்கிற‌து இது' என்கிறார், 'அவ‌ள் விக‌ட‌ன்' இத‌ழில் இர‌ண்டாண்டுக‌ளாக‌ எம்ப்ராய்ட‌ரி தொட‌ர் எழுதிவ‌ந்த‌ மிருதுளா நாக‌ராஜ‌ன். 'முப்ப‌து ஆண்டுக‌ளாக‌ இந்த‌க் க‌லையைப் ப‌ல‌ ஆயிர‌ம் பேருக்குப் ப‌யிற்றுவித்து வ‌ருப‌வ‌ர், ம‌துரா கோட்ஸ் நிறுவ‌ன‌த்தின் ஆலோச‌க‌ர், பார‌திய‌ வித்யா ப‌வ‌னில் எம்ப்ராய்ட‌ரி லெக்ச‌ர‌ர், தேசிய‌ வ‌டிவ‌மைப்புத் தொழில்நுட்ப‌க் க‌ழ‌க‌த்தின் தைய‌ல் ம‌ற்றும் எம்ப்ராய்ட‌ரி துறை கெள‌ர‌வ‌ப் பேராசிரியர்' என‌ப் ப‌ல‌ பெருமைக‌ளைப் பெற்றுள்ள‌ மிருதுளா நாக‌ராஜ‌ன் கூறுவ‌தை எவ‌ரால் ம‌றுக்க‌ முடியும்?! தொட‌ராக‌ வ‌ரும்போதே, 'இதை எப்போது புத்த‌க‌மாக‌ப் போடுவீர்க‌ள்?' என்று கேட்டு வ‌ந்த‌ க‌டித‌ங்க‌ள் ஏராள‌ம். 'ப‌த்திரிகையின் ஒரு ப‌குதியாக‌ வெளியாகும்போது ஏற்ப‌டுகின்ற‌ இட‌நெருக்க‌டி, புத்த‌க‌மாக‌ வெளியிடும்போது பிர‌திப‌லிக்க‌க்கூடாது' என்றும் ப‌ல‌ர் கேட்டிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் விரும்பிய‌த‌ற்கு மேலாக‌வே, இந்த‌ப் புத்த‌க‌த்தில் புகைப்ப‌ட‌ங்க‌ள் பெரிய‌ அள‌வில், அதிக‌ எண்ணிக்கையில் சேர்க்க‌ப்ப‌ட்டு _ ப‌யிற்சிக் குறிப்புக‌ளும் விரிவாக்கித் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. த‌மிழில் புதிய‌ முய‌ற்சியாக‌, விரிவான‌தொரு எம்ப்ராய்ட‌ரி நூலை விக‌ட‌ன் பிர‌சுர‌மாக‌ வெளியிட்டு, உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில் த‌வ‌ழ‌விடுவ‌தில் பெருமித‌ம் அடைகிறேன். ******************************************************************************************************************************************************
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) சுஜாதா 81-89780-62-X சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்' என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்பி வருவார். 'அவுட்லைன்' ஐடியா சொல்வார். விவாதிப்போம். அத்தனை ஆலோசனைகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு. அவர் புறப்படும்போதே அறிவிப்பு வெளியிட்டுவிடலாம். என் பத்திரிகையுலக அனுபவத்தில், எனக்குக் கிடைத்த இனிய நண்பர்களில் முக்கியமானவர் சுஜாதா. அவரது படைப்புகளின் முதல் ரசிகன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு. ப‌ணியிலிருந்து ஓய்வுபெற்ற‌ பிற‌கும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌ ம‌னித‌ர். ராஜீவ்காந்தியுட‌ன் விமான‌த்தில் சுற்றிய‌வ‌ர். ர‌ஜினிகாந்த்துட‌ன் சினிமா பேசிய‌வ‌ர். அப்துல்க‌லாமுட‌ன் ந‌ட்பு பாராட்டுப‌வ‌ர். நாட்டுப்புற‌ப் பாட‌ல்க‌ளைத் தேடுவார். க‌ம்ப்யூட்ட‌ர் க‌ருத்த‌ர‌ங்குக‌ளில் உரையாற்றுவார். ப‌ல‌ தள‌ங்க‌ளில் இய‌ங்கிய‌ப‌டி த‌ன் வாழ்வினையும் த‌மிழ் வாச‌க‌ர்க‌ளையும் சுவார‌ஸ்ய‌ப்ப‌டுத்த‌த் தெரிந்த‌வ‌ர். 'க‌ற்ற‌தும்... பெற்ற‌தும்...' _ விக‌ட‌னில் சுஜாதாவின் வெற்றிக‌ர‌மான‌ தொட‌ர்க‌ளில் ஒன்று. அவ‌ருக்கே உரித்தான‌ குறும்புக‌ள், அறிவிய‌ல் தேட‌ல்க‌ள், சாம‌ர்த்திய‌மான‌ ச‌மூக‌ச் சாட‌ல்க‌ள், எதிர்கால‌க் க‌ன‌வுக‌ள், க‌வ‌லைக‌ள், அனுப‌வ‌ப் பாட‌ங்க‌ள் எல்லாமே இந்த‌த் தொட‌ரில் மின்ன‌ல் வேக‌ ந‌டையில் வாச‌க‌ர்க‌ளை வ‌சீக‌ரித்த‌து. இல‌க்கிய‌ம் முத‌ல் இன்ட‌ர்நெட் வ‌ரை வாராவார‌ம் விக‌ட‌னில் வ‌ந்த‌ அவ‌ர‌து உல‌க‌த்துக்குள், இப்போது ஒரே மூச்சில் உலாப் போக‌ உங்க‌ளை அழைக்கிறேன். 'இந்த‌த் தொகுப்பு உங்க‌ளுக்கு நிறைய‌வே க‌ற்றுத் த‌ரும்' என‌ உறுதியாக‌ ந‌ம்புகிறேன். ******************************************************************************************************************************************************
போஸ்ட் மார்ட்டம் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் 81-89780-95-6 'புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் எழுதியது' என்ற அறிமுகத்துடன், எனது ஆசிரியர் இலாகாவிலிருந்து 'ட்ரிக் ஆர் ட்ரீட்' புத்தகத்தைப் பார்வைக்கு வைத்தார்கள். புத்தகத்தின் ஒருசில பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள்ளேயே, எனக்குள் ஆச்சரியம் கட்டு மீறியது. 'மருத்துவத் துறையில் இருக்கின்ற ஒருவரே, அந்தத் துறையின் அவலங்கள் பற்றி இந்தளவுக்குத் தைரியமாக வெளிப்படுத்த முடியுமா?' என்பது என் முதல் ஆச்சரியம். புரிந்துகொள்வதற்குக் கடினமான மருத்துவத் துறையின் நுணுக்கங்களை, எளிய நீதிக் கதைகளுடன் பளிச்சென விளக்கியிருந்த விதம் அதைவிட ஆச்சரியம்! 'ஒரு பனிமலையின் நுனியளவுதான் இந்தப் புத்தகத்தில் டாக்டர் தொட்டிருக்கிறார். மருத்துவம் பற்றியும் மருத்துவர்கள் பற்றியும் ஒவ்வொரு குடிமகனும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக அவரிடம் நிச்ச‌ய‌ம் இருக்கும். ஜூ.வி. வாச‌க‌ர்க‌ளுட‌ன் அதை அவ‌ர் ப‌கிர்ந்துகொள்ள‌த் த‌யாராக‌ இருப்பாரா?' என்று என‌க்குள் எண்ண‌ம் ஓடிய‌து. டாக்ட‌ர் சேதுராம‌னிட‌ம் பேசினோம். 'த‌வ‌று எங்கே ந‌ட‌ந்தாலும் அதைத் தோலுரித்துக் காட்டுவ‌தில் உங்க‌ளுட‌ன் கைகோர்த்துக் கொள்வ‌தில் ம‌ட்டில்லா ம‌கிழ்ச்சி' என்று ச‌ம்ம‌தித்தார் டாக்ட‌ர். அப்ப‌டித்தான் ஆர‌ம்ப‌மான‌து 'போஸ்ட்மார்ட்ட‌ம்' தொட‌ர்! தொட‌ரின் முத‌ல் இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் வெளியாவ‌த‌ற்குள்ளேயே, சில‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ம‌த்தியிலிருந்து இத‌ற்குக் க‌டும் எதிர்ப்பு! 'நோயாளிக‌ளுக்கும் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் இடையே ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை ம‌ற்றும் உற‌வை இந்த‌க் க‌ட்டுரைத் தொட‌ர் சீர்குலைத்துவிடும்' என்று க‌ண்ட‌ன‌க் குர‌ல் எழுப்பினார்க‌ள். 'இது உங்க‌ளுக்குத் தேவையில்லாத‌ வேலை' என்று டாக்ட‌ர் சேதுராம‌னிட‌ம் எடுத்துச் சொல்லி, தொட‌ரை அற்பாயுளில் முடிக்க‌ முய‌ன்ற‌வ‌ர்க‌ளும் உண்டு. உறுதி, டாக்ட‌ர் சேதுராம‌னிட‌ம் இருந்த‌தால்... தொட‌ர்ந்து அறுப‌த்தைந்து அத்தியாய‌ங்க‌ளில் 'ஆரோக்கிய‌மான போஸ்ட்மார்ட்ட‌ம்' அர‌ங்கேறிய‌து. 'காசு கொடுத்து அனுப‌விக்கின்ற எந்த‌வொரு சேவையிலும் குறைவிருந்தால், அதுப‌ற்றித் த‌ய‌ங்காம‌ல் கேள்வி கேட்க‌லாம்' என்ற‌ நுக‌ர்வோர் விழிப்பு உண‌ர்வு, உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌விவிட்ட‌ கால‌ம் இது. ஆனால், இந்தியா உள்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ளில் ம‌ருத்துவ‌ சேவை ம‌ட்டும் இத‌ற்கு விதிவில‌க்காக‌வே இருந்து வ‌ந்த‌து... வ‌ருகிற‌து! 'டாக்ட‌ர் என்ப‌வ‌ர் தெய்வ‌ம் மாதிரி... அவ‌ர் எது சொன்னாலும் செய்தாலும், அது ச‌ரியாக‌த்தான் இருக்கும்' என்ற‌ அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கையும் ந‌ம்மில் ப‌ல‌ருக்கு உண்டு. ம‌ருத்துவ‌ர்க‌ள் உயிர்காக்கும் தெய்வ‌ங்க‌ள் என்ப‌து முற்றிலும் உண்மைதான். ஆனால் அல‌ட்சிய‌ம், ப‌ண‌த்தாசை கார‌ண‌மாக‌, ம‌ருத்துவ‌த் துறையின் புனித‌த்துக்கே க‌ள‌ங்க‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌கையில், க‌றை ப‌டிந்த‌ சில‌ வெள்ளைக் கோட்டுக‌ளும் ஊடுருவ‌த் துவ‌ங்கிவிட்ட‌ன‌. ஜீர‌ணிக்க‌க் க‌டின‌மாக‌ இருந்தாலும், இதுதான் இன்றைய‌ ய‌தார்த்த‌ம்! 'பூனைக்கு யார் ம‌ணி க‌ட்டுவ‌து?' என்று ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ப‌ல‌ரும் ஏங்கிக் கொண்டிருந்த‌ நிலையில், அதை டாக்ட‌ர் கே.ஆர்.சேதுராம‌ன் இந்த‌த் தொட‌ரின் மூல‌ம் திற‌ம்ப‌ட‌ச் செய்திருக்கிறார் என்றே ந‌ம்புகிறேன். அவ‌ர் க‌ட்டிய‌ ம‌ணி, க‌டைக்கோடியில் உள்ள‌ அப்பாவித் த‌மிழ‌ன் வ‌ரை எச்ச‌ரிக்கை ம‌ணியாக‌ ஒலித்து உஷார்ப‌டுத்திய‌து என்ப‌திலும் ச‌ந்தேக‌மில்லை. தொட‌ர் வெளியாகி முடியும் வ‌ரை, அன்றாட‌ம் எங்க‌ளுக்கு வ‌ந்து குவிந்த‌ பாராட்டுக் க‌டித‌ங்க‌ளே அத‌ற்கு சாட்சி. 'இது வீட்டுக்கு வீடு இருக்க‌வேண்டிய‌ ம‌ருத்துவ‌ கீதை' என்று உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட‌ வாச‌க‌ர்க‌ளும் உண்டு. அந்த‌க் க‌டித‌ங்க‌ள் அளித்த‌ ஊக்க‌ம், உற்சாக‌ம் கார‌ண‌மாக‌த்தான் 'போஸ்ட்மார்ட்ட‌ம்' இன்று உங்க‌ள் கைக‌ளில் புத்த‌க‌ வ‌டிவ‌மாக‌த் த‌வ‌ழ்கிற‌து. ******************************************************************************************************************************************************
சக்தி தரிசனம் (பாகம் 1) காஷ்யபன் NIL ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன். ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட்டுரைகள், ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. பிறகு வந்த நாட்களில், 'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களைத் தொடர்ந்து ஒதுக்குங்கள்... திருத்தலங்களின் அருமை பெருமைகளை விளக்கும் விரிவான கட்டுரைகள் விகடனில் வெளியானால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்கிற ரீதியில் வாசகர்களிடமிருந்து எண்ணற்ற கடிதங்களும் எங்களுக்கு வந்தன. ஆன‌ந்த‌ விக‌ட‌னில் 'ச‌க்தி த‌ரிச‌ன‌ம்' என்ற‌ த‌லைப்புட‌ன், அம்ம‌ன் அர‌சாட்சி செய்யும் கோயில்க‌ளை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு எழுத‌லாம் என்று தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. பொதுவாக‌வே க்ஷேத்ராட‌ன‌ம் என்ப‌து, இன்றைய‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுட‌ன் இர‌ண்ட‌ற‌க் க‌ல‌ந்துவிட்ட‌ ஒன்று. ம‌ன‌தில் ப‌க்தி சிர‌த்தையுட‌ன், குடும்ப‌த்தில் அமைதி வேண்டி அநேக‌ம் பேர் ப‌ய‌ண‌ப்ப‌டுகிறார்க‌ள். இவ‌ர்க‌ளை ம‌ன‌தில் வைத்தே இந்த‌க் க‌ட்டுரைத் தொட‌ர் திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌து. ஒரு கோயில் என்றால், அத‌ன் பூர்வீக‌ வ‌ர‌லாறு, சிற‌ப்புக‌ள், அங்கு இருக்கும் செள‌க‌ரிய‌ம், அசெள‌க்ரிய‌ம் போன்ற‌வை 'ச‌க்தி த‌ரிச‌ன‌'த்தில் வெளியான‌து. காஷ்ய‌ப‌னின் தெளிவான‌ க‌தை சொல்லும் போக்குட‌ன் அமைந்த‌ எழுத்து, வாச‌க‌ர்க‌ளை ஒவ்வொரு ஆல‌ய‌த்துக்கும் நேரிலேயே அழைத்துச் செல்வ‌து போல‌ ஒரு சுக‌ம் த‌ந்த‌து. ஜெ.பிர‌பாக‌ரின் ஓவிய‌ங்க‌ள், அந்த‌க் கோயில் சூழ்நிலைக்கே வாச‌க‌ர்க‌ளை அழைத்துச் சென்ற‌ன‌. ச‌க்தி த‌ரிச‌ன‌ம் தொட‌ரில் வெளியான‌ அத்த‌னை கோயில்க‌ளையும் ஒரே புத்த‌க‌த்தில் வாச‌க‌ர்க‌ளுக்குக் கொடுப்ப‌து என்ப‌து இய‌ல‌வில்லை. என‌வே, முத‌ல் ப‌குதி இப்போது வெளியாகியுள்ள‌து. ச‌க்தி த‌ரிச‌ன‌ம் செய்ய‌ப் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ நூல் ப‌ய‌னுள்ள‌ ஒரு 'கைடு' மாதிரி அமையும் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு உண்டு. ******************************************************************************************************************************************************
வெரைட்டி ஃபாஸ்ட் புட் ரேவதி சண்முகம் 978-81-8476-044-6 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பார்கள். இங்கே என்னவென்றால், ஒரு கவியரசரின் வாரிசு கைமணக்க சமைக்கிறது. ஆம்! கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம் சமையற்கலையில் நிபுணராக ஜொலிக்கிறார். கலாசாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருந்தது போல், சமையல் திறனிலும் தனித்துத் தெரிந்தார்கள் தமிழக மக்கள். திருநெல்வேலி சமையல், தஞ்சாவூர் சமையல் என்று ஊருக்கு ஊர் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற அறுசுவையிலும் கொஞ்சம் கூட்டிக் குறைத்து வித்தியாசப்படுத்திச் சுவைத்து மகிழ்ந்தார்கள். இதில் செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பு. அங்கே சைவம், அசைவம் இரண்டுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைப்பவை. இரண்டிலுமே கைதேர்ந்தவர் ரேவதி சண்முகம். 'அவள் விகடன் வாசகிகளுக்காக, உங்கள் சமையல் அனுபவங்க‌ளைப் ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்' என்று இவ‌ரிட‌ம் கேட்டோம். விய‌ப்பின் விளிம்புக்குப் போன‌ ரேவ‌திக்கு இர‌ட்டிப்பு ச‌ந்தோஷ‌ம்... இருக்காதா பின்னே! 'அவ‌ள் விக‌ட‌ன்' முத‌ல் இத‌ழிலிருந்து ஆர்வ‌மாக‌ப் ப‌டித்துவ‌ரும் வாச‌கியாம் அவ‌ர்! எல்லோருக்கும் தெரிந்த‌, எல்லா இட‌ங்க‌ளிலும் கிடைக்கிற‌ அயிட்ட‌ங்க‌ளை வைத்துக்கொண்டு, புதுப்புது ரெஸிபிக‌ளை வாச‌கிய‌ருக்குக் க‌ற்றுக்கொடுத்தார். ப‌டித்துப் பார்த்த‌வ‌ர்க‌ள், ஆர்வ‌ம் மேலோங்க‌ச் செய்தும் பார்த்து, ர‌சித்து வாழ்த்தினார்க‌ள். வெளிநாடுக‌ளிலும் பிற‌ மாநில‌ங்க‌ளிலும் வ‌சிக்கும் அவ‌ள் விக‌ட‌ன் வாச‌கிக‌ள், 'அவ‌ள் விக‌ட‌ன் இத‌ழில் வெளியான‌ ச‌மைய‌ல் செய்முறைக‌ளைத் தொகுத்துப் புத்த‌க‌மாக‌ப் போடுங்க‌ள்... எங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருக்கும்' என்று அடிக்க‌டி க‌டித‌ம் எழுதுவ‌துண்டு. 'முத‌லில் ரேவ‌தி ச‌ண்முக‌த்தின் சைவ‌ ரெஸிபிக‌ளை ஒரு புத்த‌க‌மாக‌ப் போட‌லாம்' என்ற‌ எண்ண‌ம் எழுந்த‌து. க‌ட‌ந்த‌ ஒன்ற‌ரை ஆண்டுக‌ளாக‌ அவ‌ள் விக‌ட‌னில் வெளியான‌ நூற்றுக்கு மேற்ப‌ட்ட‌ சுவையான‌ சைவ‌ ரெஸிபிக‌ளைத் தேர்ந்தெடுத்து, அழ‌கான‌ ஒரு வ‌ண்ண‌த் தொகுப்பாக‌ வாச‌கிய‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தில் பெருமைய‌டைகிறேன். ர‌சித்து ச‌மையுங்க‌ள்... ருசித்து ம‌கிழுங்க‌ள். ******************************************************************************************************************************************************
மனசுக்குள் வரலாமா சுவாமி மித்ரானந்தா 81-89780-65-4 கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, பெரியவர்களின் அனுபவ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல், இளைய தலைமுறையினரின் தடுமாற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அவசர உலகத்தின் நிர்ப்பந்தங்கள் வேறு, தெளிவான நுடிவுகளை எடுக்கவிடாமல் அவர்களைப் போட்டு நெருக்குகிறது. எனவே, இன்று நம்பிக்கைக்கு உரிய நல்லவர்களின் அறிவுரை என்பது விலைமதிப்பில்லாதது. விகடனில் சுவாமி சுகபோதானந்தா மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோர் எழுதிய தொடர்களுக்கு எல்லையில்லாத வரவேற்பு கிடைத்ததும் இந்த காரணங்களால்தான். இந்த வரிசையில் வாசகர்களால் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்ட இன்னொரு தொடர்தான், சுவாமி மித்ரானந்தாவின் 'மனசுக்குள் வரலாமா?'. அலைபாய்ந்த‌ ப‌ல‌ ம‌ன‌ங்க‌ளுக்கு அமைதி த‌ந்த‌ அந்த‌த் தொட‌ர், இப்போது புத்த‌க‌ வ‌டிவில் _ ஒரு நிர‌ந்த‌ர‌ ந‌ண்பனாக‌, ந‌ல்ல‌ குருவாக‌, சிற‌ந்த‌ வ‌ழிகாட்டியாக‌! ******************************************************************************************************************************************************
சக்தி தரிசனம் (பாகம் 2) காஷ்யபன் NIL கம்ப்யூட்டர் சாதனைகளும் காலத்தின் வேகமும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாலும், நம் புனித பாரதத்தில் ஆன்மீகமும் ஆல் போல் வேர்விட்டுச் செழித்தோங்கியே வளர்ந்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் செல்லும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு, ஆன்மீகத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் குறைந்ததாகத் தெரியவில்லை! காற்று வாங்குவதற்காகக் கோயில்களுக்கு வருபவர்கள் குறைந்து போய், மனநிம்மதி தேடி வருபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். 'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களை விகடனில் ஒதுக்கலாம்' என்று முடிவெடுத்தபோதுதான், 'சக்தி தரிசனம்' பிறந்தது. அதற்கு வாராவாரம் ஆதரவும் வரவேற்பும் கூடியது. அதுவே விக‌ட‌ன் பிர‌சுர‌ வெளியீடாக‌ அவ‌தார‌ம் எடுத்த‌போது, அத்த‌னை ஆல‌ய‌ங்க‌ளையும் ஒரே தொகுப்பில் அட‌க்குவ‌து என்ப‌து இய‌லாம‌ல் போன‌து. அத‌னால், விக‌ட‌னில் வெளியான‌ ச‌க்தி த‌ரிச‌ன‌க் க‌ட்டுரைக‌ள் இரு ப‌குதிக‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டு, முத‌ல் தொகுப்பு க‌ட‌ந்த‌ ஏப்ர‌லில் உங்க‌ள் கையில் த‌வ‌ழ்ந்த‌து. முத‌ல் தொகுப்பில் மூழ்கித் திளைத்த‌ வாச‌க‌ப் பெரும‌க்க‌ள், 'அடுத்த‌ தொகுப்பு எப்போது வெளியாகும்?' என்று ஆவ‌லுட‌ன் எங்க‌ளுக்குக் க‌டித‌ம் எழுதி விசாரித்துக்கொண்டே இருந்தார்க‌ள். எத்த‌னை கால‌ம்தான் அவ‌ர்க‌ளைக் காத்திருக்க‌ வைப்ப‌து? இதோ, இர‌ண்டாம் பாக‌ம்... முத‌ல் பாக‌த்துக்குச் ச‌ற்றும் ச‌ளைக்காத‌ நேர்த்தியுட‌ன் உங்க‌ள் கைக‌ளில்! காஷ்ய‌ப‌னின் தெளிவான‌ _ க‌தை சொல்லும் போக்குட‌ன் அமைந்த‌ எழுத்தும், ஜெ.பிர‌பாக‌ரின் ப‌க்திர‌ச‌ம் த‌தும்பும் ஓவிய‌ங்க‌ளும் வாச‌க‌ர்க‌ளாகிய‌ உங்க‌ளை அந்த‌ந்த‌ ஆன்மீக‌த் த‌ல‌ங்க‌ளின் சூழ்நிலைக்கே அழைத்துச் செல்லும் என்ப‌தில் ஐய‌மில்லை. ச‌க்தி த‌ரிச‌ன‌த்துக்காக‌ப் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு, முத‌ல் பாக‌ம் போல‌வே, இந்த‌ இர‌ண்டாம் பாக‌மும் ப‌ய‌னுள்ள‌ ஒரு வ‌ழிகாட்டியாக‌ அமையும் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு உண்டு. ******************************************************************************************************************************************************
டிப்ஸ் கட்டுரையாளர்கள் 81-89780-66-2 மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் 'டிப்ஸ்'. காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்பது முதல் இரவு படுக்கையறை செல்வது வரை இல்லத்தரசிகள் சந்திக்கும் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்னைகளை, அனுபவங்கள் காரணமாக எளிதில் சமாளிக்கவும் கற்றுத் தேர்கிறார்கள். இந்த வகையில், நாங்கள் கண்டுபிடித்த(!) சமாளிப்பு முறைகளை 'அவள் விகடன்' இதழ் ஆரம்பித்த நாள் முதலே 'டிப்ஸ்'களாக வாசகிகள் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். இதைப் படிக்க நேரும் மற்ற வாசகியரும், 'அட... சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் க‌டுக்காயையும் போட்டு அரைத்துத் த‌லைக்குத் தேய்த்தால், பேன் தொல்லை வ‌ர‌வே வ‌ராதாமே!' என்று விய‌ந்து, அடுத்த‌ முறை த‌ங்க‌ள் வீட்டில் அம‌ல்ப‌டுத்தியும் விடுகிறார்க‌ள். அழ‌கு, ஆரோக்கிய‌ம் ம‌ட்டும‌ல்ல‌... வீட்டுப் ப‌ராம‌ரிப்பு, ச‌மைய‌ல் என‌ டிப்ஸ்க‌ளின் ராஜாங்க‌ம் ரொம்ப‌ப் பெரிய‌து. அவ‌ள் விக‌ட‌னில் தொட‌ர்ந்து வெளியாகி வ‌ரும் டிப்ஸ்க‌ளைப் ப‌டிக்கும் வாச‌கிக‌ள், 'க‌ணிச‌மான‌ டிப்ஸ் துணுக்குக‌ளைத் தொகுத்து, ஒரு சூப்ப‌ர் புத்த‌க‌மாக‌ வெளியிடுங்க‌ள்... எங்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்' என்று அவ்வ‌ப்போது எங்க‌ளிட‌ம் தெரிவித்துக்கொண்டே இருந்தார்க‌ள். இப்போதுதான் அத‌ற்குச் ச‌ரியான‌ வாய்ப்பு அமைந்திருக்கிற‌து. தெளிவான‌ வ‌டிவ‌மைப்புட‌ன், அழ‌கான‌ விள‌க்க‌ப் ப‌ட‌ங்க‌ளுட‌ன் க‌ல‌ர்ஃபுல்லாக‌, உங்க‌ள் கைக‌ளில் 'டிப்ஸ்' புத்த‌க‌த்தைத் த‌வ‌ழ‌ விட்டிருக்கிறோம். வ‌ர‌வேற்று வாழ்த்துங்க‌ள். த‌ய‌க்க‌மில்லாம‌ல் க‌ருத்து சொல்லுங்க‌ள். ******************************************************************************************************************************************************
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) சுஜாதா 81-89780-77-8 'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை. 'ஏன்? எதற்கு? எப்படி?' _ முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு, 'கேள்வி_ப‌தில் ப‌குதியை மீண்டும் ஜூ.வி_யில் தொட‌ங்க‌லாம்' என்று சுஜாதாவிட‌ம் கேட்ட‌போது, 'நான் த‌யார்... ஆனால், கேள்விக‌ளை எழுதி அனுப்புவ‌தில் வாச‌க‌ர்க‌ளுக்குப் ப‌ழைய‌ ஆர்வ‌ம் இருக்குமா?' என்று நியாய‌மான‌ ச‌ந்தேக‌த்தையும் எழுப்பினார். ஜூ.வி. வாச‌க‌ர்க‌ள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கை இம்முறையும் பொய்க்க‌வில்லை. புல்லில் தொட‌ங்கி பிர‌ப‌ஞ்ச‌ம் வ‌ரைக்கும் கேள்விச் ச‌ர‌ங்க‌ளைத் தொடுத்து, என்னையும் சுஜாதாவையும் திண‌ற‌டித்துவிட்டார்க‌ள். அன்பான‌, உற்சாக‌மான‌, ஈடுபாடுமிக்க‌ 'போட்டா போட்டி'யாக‌வே வாச‌க‌ர்க‌ளும் சுஜாதாவும் கேள்வி_ப‌தில் அர‌ங்கில் இணைந்து க‌ர‌ம் கோர்த்து, 106 அத்தியாய‌ங்க‌ளை வெளுத்துக் க‌ட்டினார்க‌ள். இதோ... சுட‌ச்சுட‌ அந்த‌ இர‌ண்டாவ‌து தொகுப்பும் உங்க‌ள் கைக‌ளில் த‌வ‌ழ்கிறது! விக‌ட‌னின் த‌ர‌மான‌ வெளியீடுக‌ளுக்கு இன்னொரு அணிக‌ல‌னாக‌ அமைந்திருக்கும் இந்த‌ப் புத்த‌க‌த்துக்கும் வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ள் பேராத‌ர‌வு த‌ருவீர்க‌ள் என்று என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கிற‌து. ******************************************************************************************************************************************************
இவன்தான் பாலா இயக்குநர் பாலா NIL இதுவரை மூன்றே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞர், தன் அனுபவங்களையே விதைகளாக்கி, விருட்சமாக வளர்ந்து வருகிறார். அவரது கதையை அறிந்துகொள்ள விகடன் வாசகர்களைப் போலவே நானும் விரும்பினேன். தான் கடந்து வந்த பாதையை இருபத்தோரு வாரங்கள் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் பாலா. அதை அவர் விவரித்த விதமே ஒரு சிலிர்ப்பூட்டும் நாவல்போல அமைந்தது. திரைத்துறையில் வளரத் துடிக்கிற, பொதுவாழ்வில் சாதிக்கத் தவிக்கிற ஒவ்வொரு இளைஞனும் படுகிற அவஸ்தைகளை, சுமக்கிற அவமானங்களை, கடந்து வருகிற தடைகளை நான் அறிவேன். அப்படி ஒருவராக இருந்த பாலா.. இன்று ஒரு தேர்ந்த படைப்பாளியாக உருவானதன் ரகசியத்தை விவரிக்கிற இந்தத் தொடர், அதற்கான மரியாதையைப் பெற்றதில் வியப்பில்லை. விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான 'இவன்தான் பாலா'வை ஒரு புத்தக வடிவில் உங்களிடம் ஒப்படைப்பதில் பெருமைப்படுகிறேன்! ******************************************************************************************************************************************************
கேளுங்கள்... சொல்கிறோம்! விகடன் பிரசுரம் NIL பிரச்னைகளும் தீர்வுகளும் வாழ்க்கை முழுவதும் தொடரும் அம்சங்கள். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்குத் தங்கள் பிரச்னைகளை சக மனிதர்களிடம் ஆறஅமரச் சொல்லி, தங்கள் துயரங்களுக்கு வடிகால் தேடிக்கொள்ள அவகாசமில்லை. அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி.. கல்லூரி மாணவிகளும் சரி.. தங்கள் அந்தரங்கப் பிரச்னைகளை யாரிடமாவது சொல்லித் தீர்வு பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு யோசனை சொல்பவர்களும் ஆதாரபூர்வமற்ற, விஞ்ஞான விளக்கமற்ற பொத்தம் பொதுவான கருத்துகளைச் சொல்லி அவர்களை மேலும் சிக்கலில் ஈடுபடுத்தும் நிலையைக் காண்கிறோம். இந்தக் காரணங்களாலேயே, 'அவள் விகடன்' படிக்கும் எண்ணற்ற வாசகிகளிடமிருந்து எங்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்தது. 'எங்கள் வேதனைகளையும் ஆதங்கத்தையும் வெளியிட பக்கங்கள் ஒதுக்கக் கூடாதா? தெளிவான, சரியான பதில் கிடைத்தால் எங்கள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் இருக்குமே..!‍_ என்பதுதான் அந்த வேண்டுகோள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட பகுதிதான் 'கேளுங்கள்.. சொல்கிறோம்!' வாசகியர் பலரும் முதலில் தங்கள் உடல் ரீதியான, மனரீதியான பிரச்னைகளைத்தான் அதிகம் எழுதி அனுப்பினார்கள். அந்த விஷயங்களை தலைசிறந்த நிபுணர்களிடம் எடுத்துச் சொல்லி பதில்பெற முயற்சித்தபோது, ''மக்களுடைய அனைத்து சந்தேகங்களைத் தீர்த்துவைக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்!'' என்று சொல்லி மிகவும் அக்கறையுடன் களத்தில் இறங்கி, தெளிவான, விளக்கமான பதில் தந்தார்கள். அந்த அரிய விளக்கங்களின் தொகுப்பாக இந்த நூலை அளிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். இந்நூலை பத்திரமாக வைத்திருங்கள்.. உங்கள் அலமாரியில்.. கைக்கெட்டும் தூரத்தில்..! எப்போதும் வழிகாட்டும், சமய சஞ்சீவியாக! ******************************************************************************************************************************************************
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா காஷ்யபன் NIL வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும். பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இடம் பெறத் துவங்கியது. கலியுக தெய்வம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசனின் சரிதத்தை அவள் விகடனில் வெளியிட ஆரம்பித்ததுமே, அதற்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. வெங்கடேசனின் ம‌கிமை புத்தம்புதிதாகச் சொல்லக்கூடிய ஒன்று இல்லைதான். ஆனால், திருப்பதி மலைக்குள் புகுந்து ஆராய முற்பட்டபோதுதான் எண்ணற்ற பக்தித் தகவல்கள், இதுவரை வெளியுலகத்தைப் பரவலாகத் தொடாமல், கடலுள் கிட‌க்கும் முத்துக்க‌ளைப் போல‌ ஆங்காங்கே சித‌றிக் கிட‌ப்ப‌து தெரிந்த‌து. திருப்ப‌தி ம‌லையின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்குச் சென்று, அந்த‌க் க‌தைக‌ளையெல்லாம் ப‌க்தி சிர‌த்தையோடு தேடி எடுத்து, சுவைமிக்க‌ எழுத்தோவிய‌மாக‌ வ‌டித்திருக்கிறார் காஷ்ய‌ப‌ன். தூரிகைச் சித்த‌ர் ஜெ.பி_யின் ஓவிய‌ங்க‌ள், புத்த‌க‌த்துக்கு மேலும் மெருகூட்டி அழ‌குக்கு அழ‌கு சேர்த்திருக்கின்ற‌ன‌. 'திருப்ப‌தி ம‌லை வாழும் வெங்க‌டேசா' புத்த‌க‌த்தைப் ப‌டித்து, நெஞ்ச‌ம் நிறைந்து முழுமை அடைவீர்க‌ள் என்றால், இந்த‌ப் புத்த‌க‌ம் வெளியிட்ட‌த‌ன் நோக்க‌ம் நிறைவேறிவிட்ட‌து என‌த் திருப்தி கொள்வேன். ******************************************************************************************************************************************************
குருவே சரணம் பிரபுநந்த கிரிதர் 81-89780-26-3 அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை! மனித வாழ்வு செம்மையுறவும் பயனுடையதாகப் பரிமளிக்கவும் எத்தனையோ குருமார்கள் மனிதர்களோடு மனிதர்களாக இப்பூவுலகில் தோன்றி நன்மொழிகளை நல்கியிருக்கிறார்கள். எளிமையும் ஈர்ப்பும் நிறைந்த சின்னச் சின்னக் கதைகள் மூலம் அருளுரைகள் வழங்கி, மனிதகுலம் அமைதியுடன் வாழ வழிகாட்டியிருக்கிறார்கள். பக்தி, யோகம், மந்திர_தந்திரங்கள் அனைத்தும் ஞான மார்க்கத்திலேயே கற்றுத் தேர்ந்த குருமார்கள், வெறுமனே அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்த்துவ‌த‌ற்காக‌ ம‌ட்டும் இந்த‌ உல‌கில் பிற‌ப்பெடுக்க‌வில்லை. ம‌னித‌னுக்கு அவ‌ன‌து பிற‌ப்பின் நோக்க‌த்தை உண‌ர்த்தி, இய‌ற்கையோடு இனிதாக‌ இணைத்து வைக்க‌வேண்டியே அவ‌த‌ரித்திருக்கிறார்க‌ள். த‌வ‌வாழ்வு வாழ்ந்த‌ குருமார்க‌ளின் அறிவுரைக‌ளும் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கைச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் இருளில் த‌விக்கும் ம‌னித‌ர்க‌ளுக்குக் கைவிள‌க்கு போல‌ துணைபுரிகின்ற‌ன‌. இந்நூலில் இட‌ம்பெற்றுள்ள‌ ஒன்ப‌து குருமார்க‌ளின் வாழ்க்கை வ‌ர‌லாறுக‌ளும் த‌னித்த‌னியாக‌ நூல்க‌ளாக‌ வ‌ர‌வேண்டிய‌வைதான். இருந்தாலும், சுருங்க‌க் கூறி விள‌ங்க‌வைப்ப‌து என்னும் முறையில், அற்புத‌மான‌ ந‌டையில் இந்நூலை வ‌டிவ‌மைத்துள்ளோம். 'குருவே ச‌ர‌ண‌ம்' நூலை ஆராய்ந்து ப‌டிப்ப‌வ‌ர்க‌ள், குருமார்க‌ளின் க‌ருத்துக்க‌ளைத் தங்க‌ள் வாழ்க்கையிலும் பின்ப‌ற்றினால், இந்நூலை வெளியிட்ட‌த‌ன் நோக்க‌ம் நிறைவேறிய‌தாக‌ எண்ணி ம‌கிழ்வேன். ******************************************************************************************************************************************************
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) சுஜாதா 81-89780-61-1 காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும் நேர்த்தியோடும் சுருக்கமான வாக்கிய அழகோடும் எழுத்தாளர் சுஜாதா படைத்த தொடர்கட்டுரைதான் 'கற்றதும்... பெற்றதும்...'! மொத்தமாக இந்தக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நிகழ்காலத் தகவல் களஞ்சியமாகவே அவை உருப்பெற்றிருப்பதை உணர முடியும். 'க‌ச‌ப்பு மாத்திரையை இனிப்பு த‌ட‌விக் கொடுப்ப‌துபோல்...' என்றொரு சொல‌வ‌டை த‌மிழில் உண்டு. ஆனால், சுஜாதாவின் கையாளும் நேர்த்தி கார‌ண‌மாக‌ எவ்வ‌ள‌வு க‌ச‌ப்பான‌, க‌டின‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள்கூட‌ முழுக்க‌ முழுக்க‌ச் சுவைக்க‌த் த‌குந்த‌ இனிப்புப் ப‌ல‌கார‌மாக‌வே மாறிவிடுவ‌து ஒரு அதிச‌ய‌ம்தான். 'க‌ற்ற‌தும்... பெற்ற‌தும்...' _ விக‌ட‌னில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி என்ப‌து முத‌ல், இன்றும் அது தொட‌ர்ந்து கொண்டிருப்ப‌து வ‌ரையிலான‌ முழு நீள‌ வ‌ர‌லாற்றை, இதே புத்த‌க‌த்தில் சுஜாதாவின் முன்னுரையில் அறிந்து கொள்ள‌லாம். முன்னுரையில் தொட‌ங்குங்க‌ள்... முடியும்வ‌ரை நிறுத்த‌ மாட்டீர்க‌ள்! ******************************************************************************************************************************************************
துணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் 81-89780-30-1 தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம். ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை. வாழ்க்கை எவ்வ‌ள‌வு விசித்திர‌மான‌ முடிச்சுக‌ளைக் கொண்டிருக்கிற‌து... ம‌னித‌ர்க‌ள் எத்த‌னை வித‌மான‌ ம‌னோபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்... ஒரு க‌ண‌ம் ம‌கிழ்ச்சியாக‌வும், ம‌றுக‌ண‌ம் துய‌ர‌மாக‌வும் மாறும் ம‌ன‌ம்தான் எவ்வ‌ள‌வு ஆச்ச‌ரிய‌மான‌து... இதுபோன்ற‌ எண்ண‌ற்ற‌ எண்ண‌ங்க‌ளை ந‌ம‌க்குள் எழுப்புகின்ற‌ இந்த‌க் க‌ட்டுரைக‌ள் அனைத்தும், ந‌ம் நினைவில் நிழ‌லாடிக் கொண்டே இருக்கும். இவ‌ர் வெயில் ப‌ற்றி எழுதும்போது ஒரு துண்டு சூரிய‌ன், ம‌ழை ப‌ற்றி எழுதும்போது ஒரு கை மேக‌ம், காத‌ல் ப‌ற்றி எழுதும்போது ஒரு ரோஜா இத‌ழ்... பிரிவு ப‌ற்றி எழுதும்போது ஒரு க‌ண்ணீர்த் துளி... ந‌ம்மை வ‌ந்து அடைகின்ற‌ன‌. அது அத்த‌னையையும் நீங்க‌ள் மொத்த‌மாக‌ அள்ளிக்கொள்ள‌வே, 'துணையெழுத்து' இப்போது ஒரு முழுத் தொகுப்பாக‌ வெளிவ‌ருகிற‌து. இதைப் புத்த‌க‌மாக‌க் கொண்டு வ‌ருவ‌தில் நான் பெரும‌கிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ******************************************************************************************************************************************************
மாமரக் கனவு வீரா கோபால் 978-81-8476-073-6 கிராமங்கள் இயற்கை எழில் வாய்ந்தவை. ஆறுகள், ஓடைகள், குளங்கள், குன்றுகள், குறுங்காடுகள், பச்சை வயல்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்து, ஒரு பிரதேசத்தின் பசுமையான முகவரியாகத் திகழ்கிறது. கிராம மக்கள் சூட்சுமம் இல்லாதவர்கள். வெளிப்படையாக, எளிமையாக விளங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில், இளம் பருவத்தில் விளையாடித் திரிந்த காடுகளையும், கரடுகளையும், பறித்து ருசித்த பிஞ்சுகளையும், தானியங்களையும், விளையாட்டுகளையும், பழக்க வழக்கங்களையும், மறக்கமுடியாத நிகழ்வுகளையும் சிறுசிறு குறிப்புகளாக நினைவுகூர்கிறார் நூலாசிரியர் வீரா கோபால். பால்ய பருவம் ஒவ்வொருவருக்கும் பசுமையான பருவம். இன்பமோ துன்பமோ, காலம் கடந்து பார்க்கும்போது நிச்சயம் அது மறக்கமுடியாத சுகமாகத்தான் மாறிப்போகிறது. அப்படித்தான் பழைய நினைவுகளை உணர்ந்து உற்சாகமாக எழுதியுள்ளார். நாம் இந்த நூலைப் படிக்கும்போது, நமது இளம் பிராயத்து நினைவுகளும் காட்சிகளாக விரிந்து நம்மை அந்த வாழ்க்கைக்கே அழைத்துச் சென்று குதூகலிக்க வைக்கிறது. மீண்டும் நமது ஊரில் வாழ்ந்ததுபோலவே பரவசமடையச் செய்கிறது. இது ஒரு வாழ்க்கை அனுபவப் பதிவு. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் எல்லாம் மாறிவரும் இந்தக் காலத்தில் இது போன்ற அனுபவப் பதிவு அவசியம். இன்னும் சில காலங்களில் இதுமாதிரியான வாழ்க்கை முற்றிலும் இல்லாமல் போய்விடும் நிலை வரலாம். அடுத்த தலைமுறைகள், தன் முன்னோர்களின் வாழ்க்கையையும், தங்கள் ஊர் அடைந்திருக்கும் மாற்றத்தையும் புரட்டிப் பார்க்க இந்நூல் கண்டிப்பாக உதவும். இதைப் படித்துக்கொண்டே ஒருமுறை இந்த ஊருக்குள் பயணித்து வரலாம். ******************************************************************************************************************************************************
எத்தனை மனிதர்கள் சின்ன குத்தூசி 81-89780-54-9 தனி மனித வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பும் வரலாறுதான். புள்ளிவிவரங்களைச் சொல்லி, வாசிப்பதற்குக் கடினமான வார்த்தைகளைத் திணிக்காமல், நேர்த்தியான நடையில் எழுதப்பட்ட எத்தனையோ வரலாற்று நூல்கள் மக்களுக்கு உபயோகமாக அமைந்துள்ளன. கலை, இலக்கியம், அரசியல் போன்ற பல்வேறு களங்களில் புகழ்பெற்று விளங்கும் மேதைகளின் அனுபவங்களைத் தொகுத்து எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. இதை எழுதக்கூடிய அனுபவம் மட்டுமல்லாமல், தகுதியும் மிக்கவர். தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட வ.உ.சி. முதல் அறியப்பட வேண்டிய அப்துற் ரஹீம் வரை பலருடைய வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்துக் கண்ணாடிபோல பிரதிபலித்திருக்கிறார். அந்த அபூர்வ மனிதர்களின் குணநலன்களைப் பெருமைப்படுத்துவதாக இருப்பதுடன் அவர்களுடைய அனுபவங்களைப் படித்து அறியும் வாசகர்கள், தங்களை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த நூல் அமையும் என நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
30 நாள் 30 சமையல் ரேவதி சண்முகம் 978-81-89936-58-7 ஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்கள். 'என்ன சாப்பாடு செய்யலாம், என்ன குழம்பு வைக்கலாம்?' என்று சிந்தித்து, ருசியாகச் சமைத்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாற நேரம் இருந்தது. ஆனால், இப்போது பல இல்லத்தரசிகள் வேலைக்கும் சென்று அலுவலக வேலைகளையும் சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பலவிதமான மக்களுடன் நெருங்கிப் பழகி வேலை செய்துவரும் சூழ்நிலையில், அவர்களது நடை, உடை, கலாசாரத்தைக் கற்றுக்கொண்டது போல, உணவு பழக்க வழக்கங்களிலும் அவர்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள். ஆக, நமது உணவுக் கலாசாரமும் மாறிவிட்டது. சுருக்கமான செலவில் வீட்டிலுள்ள சமையல் பொருட்களைக் கொண்டே விதம் விதமான _ சுவையான சமையல் வகைகளைச் செய்து ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இந்த '30 நாள் 30 சமையல்' புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். இந்த சமையல் குறிப்புகள் அவள் விகடன் இதழுடன் இணைப்புகளாக வெளிவந்தபோதே வாசகிகளிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. கலந்த சாதம் முதற்கொண்டு, ஊறுகாய் வரை எளிமையான செய்முறைகளோடு விளக்கமாகச் சொல்லித் தந்திருக்கிறார், சமையல் திலகம் ரேவதி சண்முகம். இல்லத்தரசிகள் இந்தப் புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் போதும், கைகள் பரபரக்கும்... கால்கள் உடனே சமையல்கட்டுக்கு விரையும். வகை வகையான உணவு வகைகளால் உங்கள் குடும்பத்தினரை இனிய அனுபவத்தில் திளைக்க வைப்பீர்கள். ******************************************************************************************************************************************************
உடல் இயந்திரம் டாக்டர் கே.ராஜா வெங்கடேஷ் 978-81-89936-76-1 உடலில் உள்ள உறுப்புகள் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருப்பதைப் பொறுத்தே, ஒரு மனிதனுடைய உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. உணவு, காற்று போன்றவை நமக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தேவைகள். உண்ணும் உணவையும் சுவாசிக்கும் காற்றையும் உடல் உறுப்புகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதுதான் உடற்கூறு அதிசயம்! உணவு செரிப்பது எப்படி? செரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் எங்கே, எப்படி, எவ்வாறு மாற்றம் ரத்தம் சுத்தமடைவது எவ்வாறு? இதுபோன்ற ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். உடலின் இயக்கத்துக்கு உறுப்புகள் எப்படி ஒத்துழைக்கின்றன என்பது, ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது என்பதால், நாம் ஒவ்வொருவரும் உடல் உறுப்புக‌ளின் அமைப்பிய‌ல் ப‌ற்றி அவ‌சிய‌ம் தெரிந்துகொள்ள‌ வேண்டும். சுட்டி விக‌ட‌னில் வெளிவ‌ந்து கொண்டிருந்த‌போதே பெரும் வ‌ர‌வேற்பைப் பெற்ற‌ இந்த‌க் க‌ட்டுரைக‌ளை டாக்ட‌ர் கே.ராஜா வெங்க‌டேஷ் இனிமையான‌ அறிவிய‌ல் ந‌டையில் எழுதியிருக்கிறார். சுட்டிக‌ள் இதை ஆழ்ந்து ப‌டித்துப் பார்த்தால், உட‌ற்கூறு ப‌ற்றிய‌ அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்ள‌ பேருத‌வியாக‌ இருக்கும். ******************************************************************************************************************************************************
சந்தனக்காட்டு சிறுத்தை பாலகிஷன் NIL வீரப்பனின் வாழ்க்கை தமிழக வரலாற்றின் ரத்த அத்தியாயம். இருபது வருடங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி அத்தனையிலும் பரபரப்பாக பவனிவந்தவன். தமிழகம், கர்நாடகம் என இரு மாநில போலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அந்தக் காட்டுச் சிறுத்தையின் கதைதான் என்ன? சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல்... என தன் ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்தே நாட்டை அதிரவைத்த அவன் பின்னணி என்ன? சின்னஞ்சிறு ஆள்படை வைத்துக்கொண்டு வனஅதிகாரியிலிருந்து வி.ஐ.பி_க்கள் வரை கச்சிதமாகக் கடத்தி இரண்டு அரசுகளையே மிரட்ட முடிந்தது எப்படி? வீரப்பன் என்ற மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகம் எப்படி நுழைந்தது? இரக்கமில்லாத அந்த மிருகத்துக்குள்ளும் மனைவி, குழந்தை என குடும்பப்பாசம் வந்தது எப்படி? இப்படி ஏகப்பட்ட கேள்விக் குறிகளுக்கு விடைதேடும் முயற்சியாகத்தான் 'சந்தனக்காட்டு சிறுத்தை!' ஜூனியர் விகடனில் ஆரம்பிக்கப்பட்டது. வீரப்பனின் அட்டகாசங்கள் உச்சத்தில் இருந்த சமயம் இந்தத்தொடர் ஜூ.வி.யில் வந்துகொண்டிருந்தது. நாளாக நாளாக, அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமானதும் வீரப்பனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அரசியல் மாற்றங்களும் வீரப்பனின் வாழ்க்கையை திசை திருப்ப ஆரம்பித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, 'சரண்டர் _ பொதுமன்னிப்பு' என்று செய்திகள் வர ஆரம்பித்ததும் 'சந்தனக்காட்டு சிறுத்தை' தொடரை தற்காலிகமாக ஒரு 'இடைவேளை' விட்டு நிறுத்தியிருந்தோம். அதன் பிறகு தமிழ் தீவிரவாதிகள் தொடர்பு, ராஜ்குமார் கடத்தல், நாகப்பா கடத்தல் என்று விறுவிறுப்பான காட்சிகள் ஆரம்பித்தன. கடைசியாக வீரப்பனின் மரணம் பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வீரப்பன் வாழ்ந்த காடுகளிலேயே பல நாட்களாகச் சுற்றி வந்து, பல்வேறு தரப்பினரிடம் கேட்டறிந்த சம்பவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார் பாலகிஷன். இப்போது 'சந்தனக்காட்டு சிறுத்தை!' புத்தகத்தில் வீரப்பனின் கடைசிக் காலகட்ட நிகழ்ச்சிகளையும் சேர்த்து, முழுத் தொகுப்பையும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். துப்பாக்கியில் தொடங்கிய வீரப்பனின் வாழ்க்கை துப்பாக்கியிலேயே முடிந்துபோனது. வன்முறையின் பாதையில் நடக்கும் யாருக்கும் கதி இதுதான் என்பதற்கு வீரப்பனின் வாழ்க்கையும் சாட்சி! ******************************************************************************************************************************************************
இது சிறகுகளின் நேரம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் 81-89780-70-0 'இது சிறகுகளின் நேரம்!' என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜூனியர் விகடனில் முதலில் 90 இதழ்களுக்கு எழுதியபோது, உற்சாகத்தோடும் உள்ளம் கசிந்தும் மெய்சிலிர்த்தும் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்துகொண்டே இருந்தன. மிகமிகச் செறிவான, புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா எனும் மந்திரக்கோலால், ஆழ்ந்த தமிழறிவால் மிகமிக எளிமையாக்கி வாசகர்களுக்கு ருசிக்கக் கொடுத்தார் கவிக்கோ. இடையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சிறிதுகாலம் தொடரை அவர் நிறுத்தியபோது, 'எப்போது மறுபடியும் கவிக்கோவின் தத்துவத் தமிழ் விருந்து?' என்று வாசகர்கள் எங்களைத் துளைத்தெடுத்து விட்டார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் 'இது சிறகுகளின் நேர'த்தை அவர் நகரவிட்டபோது, முன்னிலும் செறிவான கருத்துக்கள்... முன்னிலும் எளிமை... முன்னிலும் இனிமை! பல சமயங்களில் அவர் அனுப்பும் அத்தியாயங்களைப் படிக்கும்போது எனக்கும் அவருக்கும் இடையே இனம்புரியாத ஒரு டெலிபதி அலையோடு கிறதோ என்றுகூட ஆச்சரியப்படுவேன். கடவுள் பற்றி, வாழ்க்கை பற்றி, ஆசைகள் _ நிராசைகள் பற்றி... குறிப்பாக மதம் பற்றி எனது அனுபவத்தில் எந்தவிதமான கருத்துக்களை நான் கொண்டிருக்கிறேனோ அதையே கவிக்கோவும் சொல்லி வைத்தாற்போல் எழுதிய சந்தர்பங்கள் ஏராளம்! வியப்பை அடக்க முடியாமல் உடனே அவரிடம் தொலைபேசியில் இதை நான் தெரிவித்ததும் உண்டு. ஒரு இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் சிறகடித்த கவிக்கோவின் சிந்தனைகளை மொத்தமாக இந்தப் புத்தகமாக உங்கள் கைகளில் தவழ விடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ******************************************************************************************************************************************************
உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் டாக்டர் கே.ஜி.ரவீந்திரன் 81-89780-43-3 இந்திய மண்ணில் உருவான பழமையான மருத்துவ முறை ஆயுர்வேதம். நமது பாரம்பரியத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்தது இது. நோய் என்பது உடல் பாதிப்பால் மட்டும் வருவதில்லை எனக் கருதும் ஆயுர்வேத வைத்தியர்கள் உடல், மனம் மற்றும் ஆன்மிகத் தன்மைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்து சிகிச்சை தருகிறார்கள். இந்த நோய்க்கு இன்ன மருந்தைக் கொடுங்கள் என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டு நகராமல், நோய்களே வராமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத்தரும் அற்புத மருத்துவம்தான் ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தின் அற்புத குணமே அது கற்றுத் தரும் வாழ்க்கை முறைதான். பிள்ளைப் பேறில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, இளம்வயதில் பிள்ளைகளை நடத்தும் முறை, திருமணம், உணவு, தூக்கம், வேலை, தாம்பத்ய நெறி, வயதான பிறகு உடலை எப்படி புத்துணர்வு பெற வைப்பது என எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக கற்றுத்தரும் வாழ்க்கை வேதம் அது! கிட்டத்தட்ட மூன்றாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட இந்த விஷயங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவதாக இருப்பதுதான் இதன் அதிசயம். உணவே மருந்து என்பதைத்தான் முக்கியமாக இந்த வேதம் வலியுறுத்துகிறது. 'உயிரின் ஆதாரமே உணவுதான். முறைதவறி சாப்பிட்டால் நல்ல உணவே விஷமாகி கொன்றுவிடும். அதேசமயம் விஷத்தையேகூட முறையாக சாப்பிட்டால் அது உயிர்காக்கும் அமிர்தமாகிவிடும்' என்று ஆயுர்வேதத்தில் சொல்கிறார்கள். இளைய தலைமுறையினர் நிம்மதியான வாழ்க்கையின் அடிப்படை ரகசியங்களை புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்கு இந்தப் புத்தகம் ஆயுர்வேத பொக்கிஷத்தின் திறவுகோலாக இருக்கும் என்பது நிச்சயம். ******************************************************************************************************************************************************
தேவதைகளின் தேவதை தபூ சங்கர் 81-89780-44-1 உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள். கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... என் காதலியின் தூக்கம் கலைந்துவிடப் போகிறது' என்று பாட வைத்தது கலீல் ஜிப்ரானின் காதல். பெரும் செல்வங்களை விட்டுவிட்டு வறுமையிலும் காதலைக் கொண்டாடியது ஜென்னி மார்க்ஸின் காதல். காற்று புகாத இடங்களிலும் காதல் நுழைந்துவிடும். காதல் தீரும் இடத்தில் காலம் உறைந்துவிடும். காதலின் கண்களுக்குத்தான் கலைடாஸ்கோப்பில் வானவில் தெரியும். ஒரு குடம் நீரூற்றி ஓராயிரம் பூ பூப்பது காதல் செடியில்தான். காதல் மனதால்தான் பனித்துளியில் வானம் பார்க்க முடியும். காதல் சில நேரங்களில் அழகான முட்டாள்தனம், சிலநேரங்களில் அடம் பிடிக்கும் குழந்தைத்தனம். அதனாலென்ன... மழையையும் இசையையும் ரசிக்க காரண காரியங்கள் எதற்கு? காதல் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் வாழ்க்கை நதி இன்னும் ஈரம் காயாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. 'ஆதலினால் காதல் செய்வீர்' என கட்டளையிட்டான் பாரதி. தபூசங்கர் பெருங்காதலனாக இருக்கிறார். காட்டு நீர்ச்சுனை போல அவரது பேனாவிலிருந்து காதல் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில் குழந்தைமையும் தெய்வாம்சமும் கொண்ட காதலை எழுத்தாக்கியிருக்கிறார். காதலுக்கு வயதோ வானமோ ஒரு எல்லையில்லை. எனவே எல்லோரும் தேவதைகளின் தேவதை தருகிற காதல் ரசத்தைப் பருகலாம்... பருகி உருகலாம்! ******************************************************************************************************************************************************
இனி எல்லாம் ஜெயமே ஆர்.ஜி.சந்திரமோகன் NIL சுயமுன்னேற்ற நூல்கள் தமிழுக்குப் புதியவை அல்ல. 'அவர் இப்படி ஜெயித்தார்... இவர் அப்படி ஜெயித்தார்' என்று அடுத்த நாட்டில் இருக்கிறவர்களையும், அடுத்த மாநிலத்தில் இருப்பவர்களையும் உதாரணமாகக் காட்டி பலரால் எழுதமுடியும். ஆனால், 'நான் ஜெயித்தது இப்படித்தான்!' என்று ஒரு சிலரால் மட்டுமே எழுதமுடியும். அத்தகைய சாதனை படைத்த ஆர்.ஜி.சந்திரமோகன் எழுதியிருக்கும் புத்தகம்தான் 'இனி எல்லாம் ஜெயமே!' சந்திரமோகனின் எழுத்துக்களில் வெளிப்படுவது புத்தக அறிவு மட்டும் அல்ல... அனுபவங்கள்! வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து தன் உழைப்பால் உயர்ந்திருக்கும் இவரது கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வது இவரது சாதனைகள்! புத்தகம் படிப்பவர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் 'மலையைப் புரட்ட முடியும்... வானத்தை வளைக்க முடியும்ஒ என்றெல்லாம் செய்ய முடியாத விஷயங்கள் எதையும் சந்திரமோகன் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. தான் எதையெல்லாம் சாதித்தாரோ அதை மட்டுமே சொல்லி வாசகர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறார். ''தொழிலில் ஜெயிக்க வேண்டுமானால் புத்திசாலித்தனம், துணிச்சல், மனிதர்களை எடைபோடும் திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்... இவை மட்டும் இருந்தால் போதாது. தனிப்பட்ட சுக துக்கங்களை தியாகம் செய்ய வேண்டும். சிந்தனைகள் எல்லாம் தொழில் மீது மட்டுமே படர்ந்திருக்க வேண்டும்...'' _ வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு சந்திரமோகன் கூறும் யோசனைகள் இவை. இவர் எழுதிய உற்சாகமூட்டும் கட்டுரைகள் ஆனந்த விகடனில் வெளிவந்து அனைத்துத் தரப்பு வாசகர்களின் பாராட்டுதல்களை பெற்றது. இப்போது அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ******************************************************************************************************************************************************
நாளைக்கு மழை பெய்யும் போப்பு 81-89780-78-6 பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு. அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில் எழுதி, செதுக்கியும் இழைத்தும் செம்மையுறச் செய்து இந்தப் புத்தம் புதிய கதைகளை வழங்கியுள்ளார். தமிழின் பாரம்பரியச் செழுமையும் மொழி வளமும் கொண்ட இந்தக் கதைகள், அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள், தியாகங்கள், வீரம், சூழ்ச்சி எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாக பதிவு செய்து நம்மை சிந்திக்க வைக்கின்றன. இக்கதைகள் கிராமம் முதல் பெருநகரங்கள் வரை நம் பார்வையை விரியச் செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் பயணிக்கச் செய்கின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது சிங்கப்பூரிலும் சில காலம் வாழ நேர்ந்த இவரது அனுபவங்கள் இதற்கு கை கொடுத்துள்ளன; களம் கொடுத்துள்ளன. விகடன் பிரசுரத்திலிருந்து வெளிவரும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் வாசிக்கப் போகும் கதைகள் இதுவரை எந்த இதழ்களிலும் வெளிவந்திராதவை. அறியப்பட வேண்டிய எழுத்தாளரை இந்நூல் வாயிலாக தமிழ் கூறும் மக்களுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரியப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இக்கதைகளின் தனித்துவத்தையும் நுட்பங்களையும், கூடவே இவை தரும் அனுபவத்தையும் நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
பிரச்னை பூமிகள் ஜி.எஸ்.எஸ். 978-81-89936-74-7 அரசியல், புவியியல், மொழி, இனம், பொருளாதாரம் எனப் பல்வேறு காரணங்களால் இன்று பூமி எங்கும் பிரச்னைகள்! அமைதியான நாடுகளின் பெயர்களை உலக மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில நாடுகள் உலக மக்கள் அனைவராலும் ஆவலுடன் கவனிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற பல்வேறு நாடுகள் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நாடுகள் மீது மக்கள் அறியும் செய்திகள் தற்காலிகச் செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அச்செய்திகளின் முழு ஆழத்தை அறிய, அந்நாடுகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். உலகப் பிரச்னைகளை அறிந்து அதை அலசிப் பார்ப்பது என்பது வெறும் பொழுது போக்கு என்று கருத முடியாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இராக்கில் குண்டு வெடித்தால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் கத்திரிக்காய்  எகிறி விடுவதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற அடிப்படையில்தான் ஆனந்த விகடனில் 'பிரச்னை பூமிகள்!' என்ற தலைப்பில் தொடர் வெளிவந்தது. ஜனவரி 2005 வரை கடைசித் தகவல்களைச் சேர்த்து, தொகுத்து இப்போது நூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். உலகச் செய்திகளில் ஈடுபாடும் அறிவும் வேண்டும் என்றால் ஒவ்வொரு நாட்டின் பிரச்னைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இனி பிரச்னைக்குரிய நாடுகள் பற்றி நீங்கள் படிக்கும்போது இது ஒரு முன் குறிப்புப் புத்தகம் போல உபயோகமாகும் என்பது எனது நம்பிக்கை. ******************************************************************************************************************************************************
96, தோப்புத் தெரு இயக்குநர் கே.பாலசந்தர் 978-81-8476-074-3 நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த கே.பாலசந்தர், நாடக உலகுக்குள் புயலாகப் பிரவேசித்தார். மேடையில் புதுமைகள் புகுத்தினார். கை தேர்ந்த சிற்பியாக பாத்திரங்களைச் செதுக்கி, பல கலைஞர்களை அதில் வாழ வைத்தார். சர்வர் சுந்தரம் நமக்குக் கிடைத்தார். மேஜர் சந்திரகாந்த் அறிமுகமானார். இன்னும் பல கே.பி. நாடகங்கள் கிடைத்தன. பார்த்தவர்கள் சிலிர்த்து, பிரமித்தார்கள். அது ஒரு பொற்காலம்! திரையுலகம் கே.பி.யை அழைத்துக்கொண்டது. பின்னர் சின்னத் திரையும் அவரைத் தனதாக்கிக் கொண்டது. நேரமின்மை காரணமாக நாடகத்தை விட்டு அவர் விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது _ தற்காலிகமாகத்தான்! ஒரு காலகட்டத்தில் கே.பி., நாடகங்கள் எழுதி, இயக்கவில்லையே தவிர, மற்றவர்கள் மேடையேற்றும் நாடகங்களைத் தொடர்ந்து பார்த்து உற்சாகப்படுத்தினார். ஆக்கபூர்வமாக விமரிசனம் செய்தார். முன்வரிசையில் கே.பி. உட்கார்ந்திருக்கிறார் என்றால் மேடையில் நடிப்பவர்கள் தேர்வு எழுதுவதுபோல் உணர்ந்தார்கள். மோதிர விரலில் குட்டுப்பட முட்டி மோதினார்கள். இப்போது, அஞ்ஞானவாசம் முடிந்து மீண்டும் புத்தம்புது நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார் கே. பாலசந்தர். 96, தோப்புத் தெருவில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உண்டு; சிந்திக்க வைக்கும் கதையம்சம் உண்டு. படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க முடியும். அந்த அளவுக்கு நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார் கே.பி. படிப்பவரையும் அந்தக் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக்கி விடுகிறார். இந்த நாடகத்தில் காட்சிக்குக் காட்சி கே.பி. டச் மிளிர்வதை உணரமுடியும். சீனியர் ஓவியர் கோபுலுவின் உயிரோட்டமுள்ள சித்திரங்கள் நாடகாசிரியரின் கற்பனை கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதையும் நீங்கள் காணலாம்! ******************************************************************************************************************************************************
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மத‌ன் 81-89780-55-7 ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணையாசிரியராக அவர் பொறுப்பு??வகித்தபோது,??அவரிடமிருந்து??வெளிப்பட்ட பன்முகத் திறமைகள் என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியப்புக்குள்ளாக்கும். மூலம் தேர்ந்த சரித்திர ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி என் வியப்பைக் கூட்டினார் மதன். ஜூ.வி|யில் எழுதிய அந்தத் தொடரின் மூலம், கடந்த காலத்தின் பரிமாணத்தை சுவைபட படம் பிடித்துக் காட்டும் தேர்ந்த எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், மனிதனின் மூளைக்குள் மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய இன்னொரு ஒரு மிருகம்! மிகநுட்பமாக திரட்டிய தகவல்களைத் தனக்கே உரிய சிலிர்ப்பூட்டும் எழுத்து நடையில் தொகுத்து, வாசகர்களின் ஆரவாரமான வரவேற்பை இந்தத் தொடரிலும் அள்ளிக்கொண்டார் மதன். இந்த விஞ்ஞான, வரலாற்று பெட்டகத்தை ஒரு புத்தகமாக புத்துணர்வு மிக்க வடிவமைப்பில் வாசகர்களின் கைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். புத்தகம் பற்றி சொல்ல தனியாக வார்த்தைகள் தேவையில்லை... படிக்கத் துவங்கினாலே உங்களுக்கு இதன் அருமை புரிந்துவிடும். ******************************************************************************************************************************************************
சிகரங்கள் நமக்காக‌ வழக்கறிஞர் த.இராமலிங்கம் 978-81-89936-89-1 உழைத்து முன்னேற வேண்டும், புகழின் உச்சியை அடையவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது இந்த 'சிகரங்கள் நமக்காக!' 'இன்றைய இளைஞர்கள் விதைநெல் போன்றவர்கள்' என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு அத்தியாயத்திலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி எழுதியிருக்கும் வழக்கறிஞர் த.இராமலிங்கம், சாதனை படைத்த பெருமக்களையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். நமது நாட்டுக்கு பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் பதவியை ஒளிவீசச் செய்தவர்களும் சரி... நீதித்துறை, காவல்துறை மற்றும் பொது நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி, தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றி பதவி உயர்வு பெற்றவர்களும் சரி... அந்த சாதனைக்காக எந்தளவு சீரிய சிந்தனையும் உயர்ந்த மதிநுட்பமும் செலவிட்டார்கள் என்பதைப் பொருத்தமான இடங்களில் உதாரணம் காட்டி ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிளிரச் செய்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். இனிய தமிழில், இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்தப் புதிய சுயமுன்னேற்ற கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். ******************************************************************************************************************************************************
சுந்தர காண்டம் இந்திரா சௌந்தரராஜன் 81-89780-69-7 ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம்' என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது 'சுந்தர காண்ட'த்தில்தான். 'ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், 'கண்டேன் சீதை'யை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம். அவள் விகடனில், 'சுந்தர காண்ட'த்தை இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனைச் சிறப்போடு எழுதி வந்ததை வாசகர்கள் படித்து பெரிதும் மகிழ்ந்தார்கள். வாழ்க்கையே இன்று ஒரு தேடல்தான், யுத்தம்தான், வலி மிகுந்த பயணம்தான். சோதனைகளை சுகமாக சமாளிக்க மனோபலமும் தெய்வபலமும் அவசியமாகிறது. மனித வாழ்வின் மனத்துயரங்களை ஆற்றும் மகத்தான 'சக்தி வாய்ந்த 'சுந்தர காண்டம்' படியுங்கள்... பரவசமடையுங்கள்... மனவலிமை பெறுங்கள். ******************************************************************************************************************************************************
தொட்டால் தொடரும் பட்டுக்கோட்டை பிரபாகர் NIL மனித உணர்வுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் உணர்வு காதலுணர்வு. ஓர் ஆணும் ஒரு பெண்ணும், நீ, உனக்கு நான்! என்று ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைக்கு காதல்தான் ஆதாரம். வெவ்வேறு மனித உறவுகள் பரிமளிப்பதும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலுணர்வால்தான். உயிருக்குள் உயிராய் வளர்ந்து நம்பிக்கையைப் பலப்படுத்தும் காதல் \ உன்னதமான காதல் \ சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. காதலர்களுக்குள் நம்பிக்கை தகர்ந்து விட்டால்..?, தொடரும்.. காதலைச் செதுக்கி, காதலர்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். தொடரும்...| விகடனில் வெளிவந்து சில????ஆண்டுகளானாலும்,???இப்போதும் பக்கங்களுக்குள் பயணித்தாலும் சூடும் சுவையும் குறையாமல் வாசகர்களின் நெஞ்சை அள்ளும் விதமாகத் திகழ்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பம்சம். தொட்டுப் படிக்கத் துவங்கிவிட்டால், நீங்களே தொடர்ந்து புரிந்து கொள்வீர்கள். ******************************************************************************************************************************************************
ஏழு தலை நகரம் எஸ்.ராமகிருஷ்ணன் NIL மீண்டும் குழந்தையாகிற ஆசை யாருக்குத்தான் இல்லை! நிலா பார்க்கக்கூட நேரமில்லாமல், அவசரமும் தீராத தேவைகளுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் சென்றுவிட ஒரு மாயக் கம்பளம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் உண்டுதானே? சதா வாகனங்கள் இரைந்து கொண்டே இருக்கிற தார்ச்சாலை சட்டென்று ஒரு புல்வெளியாக மாறிவிடாதா? வண்ணங்கள் மாறிமாறி துரத்திக்கொண்டே இருக்கும் சிக்னல்கள் பொசுக்கென்று ஒரு மரமாகி பூத்துவிடாதா? இப்படிப்பட்ட கனவுகள் இல்லாதவர்கள்தான் யார்? நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் 'ஏழுதலை நகரம்'! காசு கொடுத்து கிளியைப் பேசச் சொல்லும் நமது உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது 'ஏழுதலை நகரம்'. அங்கே இயல்பாகவே பேசும் பறவைகள் வாழ்கின்றன. உதிராத பூக்கள் சிரிக்கின்றன. மழைக்கால சாயங்காலத்தில் வந்து போகும் வானவில்லைப் போல சுவடுகள் இல்லாமலும், காற்றைப் போல சுமைகள் இல்லாமலும் அதிசய மனிதர்கள் வந்து போகிறார்கள். அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய புதிர்களும் சாகஸங்களுமாய் நீளும் ஏழுதலை நகரத்துக்குள் நுழைந்துவிட்டால் பெரியவர்கள்கூட குழந்தைகளாகிவிட வேண்டியதுதான். சுட்டிகளுக்கோ நினைவில் கல்வெட்டாகி நிற்கக்கூடிய அற்புத அனுபவம் இது. பக்கத்துக்குப் பக்கம் அத்தனை சந்தோஷத்தை அளிக்கக்கூடிய குழந்தைகளுக்கான புதுவிதமான நாவல் இது. எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி புதிதாக அறிமுகம் வேண்டியதில்லை. விகடனில் வெளிவந்த 'துணையெழுத்து' மூலமாகவும் தன் பிற படைப்புகள் மூலமாகவும் உலகத் தமிழர்கள் மனதில் இடம் பிடித்த இனிய படைப்பாளி. 'ஏழுதலை நகரம்' அவரது எழுத்தின் புதுமைக்கு இன்னொரு உதாரணம். இந்த நாவலைப் படிக்கும்போது எனக்குக் கிடைத்த சந்தோஷமும், மனம் துள்ளும் மகிழ்ச்சியும் உங்களுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்.அதிசய நகரம் வரவேற்கிறது. வருக... வருக! ******************************************************************************************************************************************************
மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் கட்டுரையாளர்கள் NIL ஹலோ சுட்டீஸ்! எப்படி இருக்கீங்க? எப்பவும் எதையாவது தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆர்வம் இருக்கறவங்கதானே நீங்க! 'அது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? சூரியனைத் தாண்டி வேற உலகம் இருக்கா? இந்த மெஷின் எப்படி வேலை செய்யுது?' _ இப்படி ஏராளமான கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பீங்க. பள்ளிக்கூடத்துல சில புத்தகங்களைக் குடுத்து 'இதைத்தான் படிக்கணும்... இதைப் படிச்சே தீரணும்'னு சொல்லும்போது நீங்க பரீட்சைக்காக மட்டுமே அதைப் படிப்பீங்க. அதே நேரத்துல, இன்னும் அதிகமான விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவீங்க. உங்களோட அந்த ஆர்வத்தைச் சரியான விதத்துல ஊக்கப்படுத்தறதுக்குன்னே உருவாக்கப்பட்டதுதான் இந்த 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்'. 'நமக்கு தெரியும்னு நினைச்ச விஷயங்கள்ல தெரியாதது இவ்வளவு இருக்கா?'னு உங்களை நிச்சயம் இந்தப் புத்தகம் ஆச்சரியப்படவைக்கும். உள்ளே போங்க... கடலுக்குள்ள இருக்கிற அதிசயங்கள், உயிரியல் உலகத்துல வித்தியாசமான விலங்குகள் இப்படி எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி பிரமிப்பு அடைவீங்க! 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்' உங்க சுட்டி விகடன்ல தொடராக வந்தப்போ உங்களை மாதிரி சுட்டிகள் அதைப் படிச்சு, பாராட்டி லெட்டர் போட்டு அவங்க காட்டின ஆர்வத்தை என்னால மறக்கவே முடியாது. 'மாயா டீச்சர்கிட்டே உங்க சந்தேகங்களைக் கேக்கலாம்'னு அறிவிப்பு செஞ்சதுமே வந்து குவிஞ்ச லெட்டர்ஸே அதுக்கு சாட்சி. 'அடேங்கப்பா'னு ஆச்சரியப்பட வைக்கிற அளவுக்கு வெளியானது அந்த கேள்வி _ பதில் பகுதி. இந்தப் புத்தகத்தில அந்தக் கேள்வி பதில்களையும் சேர்த்திருக்கோம். இந்தப் புத்தகத்துல வந்திருக்கிற விஷயங்கள் எல்லாமே உண்மையான தகவல்கள்தான். ஆனா, 'மந்திரக் கம்பளம்'ங்கறது மட்டும் உங்களைப் பரவசப் படுத்துவதற்கான கற்பனைக் கம்பளம்! மாயா டீச்சராகவே மாறி உங்களுக்கு எளிமையா புரியற மாதிரி எழுதின ரமேஷ் வைத்யா, வள்ளி ரெண்டு பேருக்கும் உங்க எல்லார் சார்பாகவும் என்னோட பாராட்டுக்கள். ஒரு கற்பனை உலகத்துக்கே உங்களைக் கூட்டிட்டுப் போன ஓவியர்கள் ஸ்யாம், ஹரன் ரெண்டு பேரையும் பாராட்டணும். நீங்க சந்தோஷமா இந்தப் புத்தகத்தைப் படிச்சு புதுப்புது விஷயங்களை தெரிஞ்சு பயனடைவீங்கனு நம்பறேன். ******************************************************************************************************************************************************
சுட்டி க்ரியேசன்ஸ் (பாகம் 1) விகடன் பிரசுரம் NIL வாழ்த்துக்கள்! புதிதாக எதையாவது செய்ய விரும்புகிற சுட்டிகள்தானே நீங்கள்! உங்களுக்கு அழகான 5 சவால்கள் இதோ... இதற்கு முன் நீங்கள் பார்த்திராத அற்புதமான இரண்டு புத்தகங்களுள் ஒன்றை கையில் வைத்திருக்கிறீர்கள். இந்த சுட்டி க்ரியேஷன்ஸ் துறுதுறுப்பான, நுட்பமான விரல்களுக்கானது. ஆச்சர்யமூட்டும் பொருட்களைப் பார்த்து வியந்து மட்டும் போய்விடாமல், 'இவற்றை நாமே உருவாக்க வேண்டும்' என்று நினைக்கிற உங்களைப் போன்ற சுட்டிகளுக்கானது இந்தப் புத்தகம். சுட்டிகளே! இந்தப் புத்தகத்தின் பக்கங்களை உங்கள் அழகான கைகளால் தொட்டு க்ரியேஷனை தொடங்குங்கள். ஆரம்பிப்பதற்கு முன்பு, கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனமாகவும் முழுமையாகவும் படித்துப் பாருங்கள். இந்தப் புத்தகம் முடிந்ததும் சுட்டி க்ரியேஷன்ஸ்_2க்கு தயாராகுங்கள். சுட்டி க்ரியேஷன்ஸ்_2ல் இருக்கும் மாடல்கள், இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் தரப்பட்டுள்ளன. நம்பர் 1 பத்திரிகையான ஆனந்த விகடன் நிறுவனத்திலிருந்து இந்த சுட்டி க்ரியேஷன்ஸ் வெளிவருகிறது. விகடன் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் மாதமிருமுறை இதழ் சிறுவர் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது. ******************************************************************************************************************************************************
சுட்டி க்ரியேசன்ஸ் (பாகம் 2) விகடன் பிரசுரம் NIL வாழ்த்துக்கள்! சுட்டி க்ரியேஷன்ஸ்_1லிருந்து எல்லா மாடல்களையும் செய்து முடித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தால் மறுபடியும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! சுட்டி க்ரியேஷன்ஸ்_1 போலவே இதிலும் ஜாலியாக செய்து பார்க்க சுவாரஸ்யமான மாடல்கள் உண்டு. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் நிச்சயம் அழகாக செய்து முடித்துவிடலாம். ஆரம்பிப்பதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனமாகவும் முழுமையாகவும் படித்துப் பாருங்கள். இதுவரை சுட்டி க்ரியேஷன்ஸ்_1 செய்து பார்க்கவில்லை என்றால் அதையும் வாங்கி முயற்சி செய்து பாருங்கள். சுட்டி க்ரியேஷன்ஸ்_1ல் இருக்கும் மாடல்கள், இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் தரப்பட்டுள்ளன. நம்பர் 1 பத்திரிகையான ஆனந்த விகடன் நிறுவனத்திலிருந்து இந்த சுட்டி க்ரியேஷன்ஸ் வெளிவருகிறது. விகடன் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் மாதமிருமுறை இதழ் சிறுவர் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது. ******************************************************************************************************************************************************
சுட்டி க்விஸ் விஸ் 2005 விகடன் பிரசுரம் 81-89780-56-5 டியர் சுட்டிகளே! மாயா ஜாலங்களில் தேர்ச்சி பெற்று, எந்தக் கேள்விக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பதில் சொல்லக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த மாயாவியை 'விசார்ட்' என்று அழைப்பார்கள். அதுதான் சுருக்கமாக, செல்லமாக 'விஸ்'. மந்திர தந்திர உலகின் சூப்பர் ஸ்டார் ஹாரிபாட்டர் _ ஒரு விஸ். அதுபோல, இந்த அறிவுப்பெட்டகத்தைத் திறந்து அரிய பொக்கிஷங்களை அள்ளி எடுக்கப் போகும் நீங்களும்_ சுட்டிகள் மத்தியில் ஒரு க்விஸ் விஸ்! தமிழ்நாடு முழுவதும் மூவாயிரம் பள்ளிகளிலிருந்து சுட்டிகள் பங்கேற்ற பிரமாண்டமான க்விஸ் நிகழ்ச்சி 'சுட்டி க்விஸ் விஸ்_2005'. ஏகப்பட்ட கேள்விகளோடும் பதில்களோடும் இந்தப் போட்டி ஒரு 'தகவல் திருவிழா'வாகவே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 1500 கேள்விகள் இதோ உங்களுக்காக ஒரு புத்தகமாக! இதில் தமிழ், ஆங்கிலம் _ இரண்டு மொழிகளிலும் கேள்வி_பதில்கள் தொகுக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம். ஓய்வு நேரத்தில் படிப்பதற்கு மட்டுமல்ல... நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் அறிவுபூர்வமாக பொழுதுபோக்கும் வகையில் க்விஸ்ஸை ஒரு போட்டி விளையாட்டாகவும் ஆடலாம் என்பது இன்னொரு சிறப்பம்சம். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 10 மார்க் போட்டுக்கொள்ளுங்கள். விடைகள் புத்தகத்தின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடைகளை அளித்து நீங்கள் 15,000 மதிப்பெண்களையும் அள்ளவேண்டும் என்பதே என் ஆசை. வெற்றி பெற என் அட்வான்ஸ் பாராட்டுகளை உங்களுக்கு இப்போதே தெரிவித்துவிடுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்ட அளவு சந்தோஷத்தை இந்தப் புத்தகம் தரும் என்பது உறுதி! சிறந்த கேள்விகளைத் தயாரித்த க்விஸ் மாஸ்டர் சுதா சேஷய்யனுக்கும், க்விஸ் விஸ் போட்டிகளை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்த ஆரோக்யா நிறுவனத்துக்கும், இடம் தந்து உதவிய அனைத்து பள்ளிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ******************************************************************************************************************************************************
யூ ஆர் அப்பாயின்டெட் மாஃபா கே.பாண்டியராஜன் 978-81-89936-90-7 ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல துறைகள் புறப்பட்டு வருகின்றன. பல திசைகளில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. வேலையில் சேர வெறும் படிப்பு மட்டும் இருந்தால் போதாது. பேச்சுத் திறமை, அடுத்தவரோடு பழகும் திறமை என்று பலவிதமான திறமைகளும் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் ஒரு மூத்த சகோதரன் மாதிரி, இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முழுத் தகுதி படைத்தவர் 'மா ஃபா' கே.பாண்டியராஜன். சிவகாசிக்கு அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து & பிறந்த உடனே தந்தையை இழந்து, வறுமையில் வாடிய பாண்டியராஜன், சிறுவயதிலேயே தீப்பெட்டித் தொழிற்சாலையில் குச்சி அடுக்குவது, மருந்து முக்குவது என நாள் பூராவும் கந்தகத்திலேயே உழன்று திரிந்தவர். கடுமையான உழைப்புக்கு மத்தியில் பள்ளிக்குச் சென்று படிப்பிலும் தனது கெட்டிக்காரத்தனத்தை நிரூபித்துக் காட்டினார். அதற்குப் பரிசாக 'மேற்கல்வி உதவித் தொகை' கிடைக்க... அவர் நினைத்தே பார்த்திராத கல்லூரிகளில் படிக்கிற வாய்ப்புகள் தேடி வந்தன. அனுபவப் படிப்பும் கை கொடுக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைசிறந்த நிறுவனங்களின் அறிமுகத்தையும் அபிமானத்தையும் பெற்று முன்னேறி, இப்போது 'மா ஃபா' என்கிற மனிதவள சேவை நிறுவனத்தின் தலைவராகத் திகழ்கிறார். தனது நிறுவனத்தின் மூலம், வேலை தேடும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கே.பாண்டியராஜன், 'எந்த மாதிரி 'ஸாஃப்ட் ஸ்கில்ஸ்' இருந்தால் நல்ல வேலை கிடைக்கும்?', 'எந்த மாதிரி விருப்பங்கள் இருப்பவர்கள் என்ன வேலை தேடலாம்?' என்று வேலைவாய்ப்பு தொடர்பாக எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்து வந்தார். அந்தக் கட்டுரைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடமிருந்து அரிய பல டிப்ஸ்களைப் பெற்று, இளைஞர்களுக்கு பயன்படும்படியாக வழங்கியது, கட்டுரைகளுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. இந்தப் புத்தகம், மாணவர்களுக்கும் வேலை தேடும் இளைஞர்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் என உறுதியாக நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
நில்... கவனி... விபத்தை தவிர்! எஸ்.பி.சந்தானம் 978-81-8476-076-7 உலக உயிர்கள் அனைத்துக்கும் நம்பிக்கைதான் அடிப்படை. இந்த நம்பிக்கைக்கு ஆரம்பப் புள்ளி பாதுகாப்பு. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது மனித சமுதாயம். இந்த நீண்ட பயணத்தில் அது கண்டிருக்கும் வளர்ச்சியும் அபரிதமானது. அத்தகைய வளர்ச்சி பெருக, பெருக அனுபவங்களும் அதிகமாகக் கிடைத்தன. அவற்றின் வெளிப்பாடாகத்தான் பாதுகாப்புத் திட்டங்களும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. இருப்பினும், தொழிற்சாலைகளிலும் சரி, வீடுகளிலும் சரி, ஏதோ ஒரு வகையில் ஆபத்து அவனைத் துரத்துகிறது. இந்த ஆபத்துகளைத் தவிர்க்கவும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளிலிருந்து தப்பிக்கவும் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை இந்த நூலில் வரைபடங்களுடன் விளக்குகிறார் எஸ்.பி.சந்தானம். அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி? _ இப்படி பல கேள்விகளுக்கு அனுபவ ரீதியாக பதிலளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். அதுமட்டுமல்ல, வீடுகளில் விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான வழிமுறைகளையும், பொது இடங்களில் விபத்து நடந்தால் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் எளிய நடையில் விளக்குகிறார். அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் முதல், வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வரும் பெண்கள் வரை, இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் விபத்துத் தடுப்பு முறைகளையும் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றினால் பயனடைவது நிச்சயம். இந்த நூலாசிரியரின் ஆலோசனைகள், பாதுகாப்புடன் வாழ வழிவகுத்துக் கொடுக்கும். ******************************************************************************************************************************************************
அச்ச ரேகை.. தீர்வு ரேகை எம்.பி.ராமன் NIL பூமியில் உயிரினங்களின் தோற்றம் தற்செயலாக ஏதோ விபத்து மாதிரி நிகழ்ந்ததா? பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா? அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானு கோடி கிரகங்களில் எதிலாவது வேறு உயிரினங்கள் உண்டா? மனித இனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை! இன்னொரு பக்கம், இந்த உலகத்தின் எதிர்காலம் குறித்து ஒவ்வொருவரும் வேறுவேறு விதமாகச் சொல்லும் ஹேஷ்யங்கள் பலரையும் குழப்புகின்றன. ௔2000மாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும்!௕ என்று முன்கூட்டியே சிலர் ஜோசியம் சொன்னபோது அதை நம்பி நடுங்கியவர்கள் ஏராளம். இந்தக் கேள்விகள், குழப்பங்களுக்கிடையே பூமியைப் படிக்க பலர் தவறிவிட்டார்கள். ௔இந்த பூமியில் பரவிக் கிடக்கும் இயற்கையின் சொத்துக்களிலிருந்து நாம் தினம் தினம் எத்தனையோ பொருட்களைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அதற்குப் பதிலாக இந்த உலகத்துக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்?ஒ என்று யோசித்துப் பார்த்தாலே போதும்... நாம் இந்த உலகத்துக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பது புரியும். பூமியும் உயிரினங்களும் உருவான வரலாறு, பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை, இயற்கைச் சீற்றங்கள், மனித இனத்தின் முன்யோசனையில்லாத அழிப்பு முயற்சிகள்... இப்படி எல்லாவற்றையும் சேர்த்த தொகுப்பாக ஒரு புத்தகம் வருவது தமிழில் இதுவே முதல்முறை எனலாம். அறிவியல் வளர்ச்சியின் சிகரத்தைத் தொட்டிருக்கும் இந்தத் தலைமுறைக்குதான் இதுவரை நிகழ்ந்த தவறுகளுக்குப் பரிகாரம் தேடவேண்டிய அக்கறையும் பொறுப்பும் இருக்கிறது. ஏனென்றால், எதிர்விளைவுகள் பற்றி அறியாமல் முந்தைய தலைமுறையினர் அணுகுண்டு வீச்சு, காடுகள் அழிப்பு, ரசாயன கழிவு போன்ற தவறான வழிமுறைகளைக் கையாண்டு இயற்கை அழிவுக்குக் காரணமாக இருந்துவிட்டார்கள். இந்த சுற்றுச்சூழல் தொடரை பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்ற வயதினர் வரை படித்துவிட்டு கடிதம் எழுதி, முழுப் புத்தகமாக வரும்?௕ என்று தவிப்போடு காத்துக் கொண்டிருந்தார்கள். நிறைந்த, இதுவரை பயணிக்காத ஒரு புதிய உலகத்துக்குப் போய் வந்த அனுபவத்தை உணர்ந்ததாகஒ பலர் பரவசப்பட்டார்கள். விகடன் பிரசுரமாக அன்னைத் தமிழின் அறிவியல் கரங்களுக்கு சூட்டப்படும் இந்த அணிகலன் வாசகர்களின் ரசனைக்கு ஒரு பொக்கிஷம். ******************************************************************************************************************************************************
கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) கோபுலு 81-89780-97-2 ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள். எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் நிறுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்கள் பல கடந்தாலும், விகடன் இதழ்களை எப்போது புரட்டினாலும் கோபுலுவின் ஓவியங்கள் ஹாஸ்யக் கருவூலமாக நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. அமரர் தேவனின் நாவல்களுக்கு உயிரோவியம் படைத்ததில்... 'தில்லானா மோகனாம்பா'ளை தத்ரூபமாகக் கண்முன்னே ஆடவிட்டதில்... 'வாஷிங்டனில் திருமணம்' தொடருக்கு காரிகேச்சர்களை உருவாக்கியதில்... கோபுலுவின் உழைப்பு மின்னலடித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 18 வருடங்கள் விகடனின் பொருளடக்கப் பகுதியில், தனக்கே உரிய ஹாஸ்ய உணர்வோடு 'மௌன ஜோக்'குகளை வரைந்து, வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் கோபுலு. அந்த 'ஜோக்' கடலிலிருந்து ஒரு கையளவு மட்டுமே எடுத்துத் தொகுத்து, வாசகர்களுக்குப் புத்தகமாக அளிப்பதில் பெருமை அடைகிறேன். கோபுலுவின் தூரிகையிலிருந்து வெடித்துக் கிளம்பிய நகைச்சுவை பட்டாசுகள் கணக்கற்றவை. இன்னும் பலநூறு 'ஜோக்'குகளையும் புத்தகமாக கொண்டுவரும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. உங்கள் ஆதரவு அதற்குக் கைகொடுக்கும் என நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
காஞ்சி மகானின் கருணை நிழலில் ரா.வேங்கடசாமி 81-89780-25-5 கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது! தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்...' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மேலும் பல அனுபவங்களையும் தேடித் தொகுத்து இந்நூலில் உங்களுக்கு அளித்திருக்கிறோம். இதில் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களும் உங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த தெய்வீக ரசம் சொட்டும் அனுபவத் தொகுப்பை புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். படிக்கக் கிடைத்த நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள். ஜெய ஜெய சங்கர! ******************************************************************************************************************************************************
அத்தனைக்கும் ஆசைப்படு சத்குரு ஜக்கி வாசுதேவ் 81-89780-05-0 மேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. உங்கள் ஆசைக் கனவுகள் நிறைவேற உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தரவேண்டும். உங்கள் மனமும் உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால் அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்வதுதான் யோகா! இப்படிக் கூறி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை உணர்த்துகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். முந்தின தலைமுறைகள் காலங்காலமாக கடைப்பிடித்துவந்த கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி, வாழ்க்கையின் கடினப் பகுதிகளை எளிதாக்கி, தன் போதனைகளால் நமக்கு உற்சாகத்தை ஊட்டும் ஜக்கி வாசுதேவ், தடைகளை வென்று நினைத்ததை சாதித்துக் கொள்ளும் வழிமுறைகளை சுகமான வார்த்தைகளாக இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார். சத்குருவின் வார்த்தைகளில் வெளிவந்த அனுபவபூர்வமான கருத்துக்களைத் தொகுத்து எளிய, சீரிய நடையில் எழுதியிருக்கிறார்கள் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து ஒவ்வொரு கருத்தையும் சுவைத்துப் பாருங்கள். அத்தனைக்கும் ஆசைப்படுவோம்... வாழ்க்கையை ஆனந்தமயமாக்குவோம்! ******************************************************************************************************************************************************
எழில்வரதன் எழில்வரதன் NIL காலந்தோறும் சிறுகதையின் செய்முறை மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மகிழ்ச்சி கொள்ளத்தக்க மாறுதல். தி.ஜானகிராமன் எழுத்து நடை ஒரு மாதிரி இருந்தது. ஜெயகாந்தன் வேறு மாதிரியாக. இப்படி வெவ்வேறு ரகத்தில் சிறுகதை நெய்யப்பட்டது. இப்போது, காற்றுப்போக்கில் போகும் காகிதம் மாதிரியான ஒரு புது நடையையே தனது இலக்கணமாகக் கொண்டு கதைகள் கொண்டுவந்திருக்கிறார் எழில்வரதன். தன் முதல் தொகுப்பான 'ரதிப் பெண்கள் உலவும் அங்காடித் தெரு' மூலமே வாசகர்களுக்குப் பரிச்சயப்பட்ட எழில்வரதனை இன்னும் பரவலாக அறிமுகப்படுத்துவதாக இந்தப் புத்தகம் இருக்கும். இவர் காட்டும் உலகம் பெரும்பாலும் துன்ப இயலாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது. இதில் வரும் அநேக மனிதர்கள் மனதிற்குள்ளே திட்டம் போட்டு அதை மனதுக்குள் மட்டுமே நிறைவேற்றுபவர்களாக இருக்கிறார்கள். கனவுகளோடு கல்யாணம் செய்து கொண்டு வந்தவள், கணவன் மனநோயாளி என்று தெரிகிறபோது என்ன செய்கிறாள் என்று ஆராய முற்படுகிறது இன்னொன்று. தேவையில்லாமல் ஒருவனின் கெட்ட வார்த்தை வசவுக்கு ஆளான ஒருவன், அந்த வசவால் எப்படி எல்லாம் உளைச்சலுக்கு ஆளாகிறான் என்று சொல்கிறது ஒரு கதை. தன் முறைப்பையனை கவர்ந்துவிடுவாளோ என்ற பொறாமையில் இன்னொருத்தியின் மேல் அவதூறு கிளப்பிவிட்டு, பிறகு அவளை நல்ல நிலையில் பார்க்கும் ஒரு பெண்ணின் உள்ளக்கிடக்கை... நல்ல சிறுகதைக்கு திருப்திகரமாக சுருக்கம் சொல்ல முடியாது. எழில்வரதனின் கதைகள் அப்படிப்பட்டவைதான். நீங்களே படியுங்கள். எதைச் சொன்னாலும் நச்சென்று மூக்கில் குத்துகிற மாதிரி அழுத்தமாகத்தான் சொல்கிறார் கதாசிரியர். துப்பறியும் கதைக்கு நிகரான விறுவிறுப்பை கனமான விஷயத்தைச் சொல்வதிலும் கொண்டுவர முடியும் என்பதற்கு உங்கள் கையில் இருக்கும் இந்தப் புத்தகமே சாட்சி. ******************************************************************************************************************************************************
வடி வடிவேலு... வெடிவேலு நடிகர் வடிவேலு NIL விகடனின் சிறப்பே நகைச்சுவைதான்! ஒரு நகைச்சுவை நடிகரின் வாழ்வையும் அனுபவங்களையும் வைத்து ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என முடிவுசெய்தபோதே பளிச்சென்று மனதில் தோன்றியவர் வடிவேலு. சமீபகாலமாக தமிழகத்தின் எல்லா திசைகளையும் குலுங்கவைக்கிற சிரிப்பு வித்தைக்காரர்! எங்கேயோ மதுரையிலிருந்து லாரியேறி கோடம்பாக்கத்தின் இரும்புக்கதவுகளை உடைத்துக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்ட வடிவேலுவின் வாழ்க்கையும் சுவாரஸ்யமான கதை. அதை அவர் மொழியிலேயே சொல்கிற இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிரிப்பு ப்ளஸ் சிந்தனைச் சரங்கள். வடிவேலுவின் ஸ்பெஷல்... அவர் நகைச்சுவையில் இழையோடும் மண்மணம். இந்தக் கட்டுரைகளிலும் மனசைக் கொள்ளைகொள்ளும் மண்மணம் நிரம்பி வழிகிறது. இதைப் படித்து முடிக்கும்போது நம் ஒவ்வொருவரின் பாதங்களிலும் மதுரை மண் ஒட்டிக்கொள்ளும். நம் அறைக்குள் சில்லென்று வைகையாறு ஓடி வரும். வெறுமனே ஒருவருடைய சொந்த அனுபவங்களாக இல்லாமல் விதவிதமான மனிதர்கள், அவர்களின் குணநலன்கள், நம் கலாசாரம் மாறிவரும் சூழல் என எல்லாவற்றையும் கலகலப்பாய் பேசும் இந்தக் கட்டுரைகளை சிரிப்பு இலக்கியம் என்றே சொல்லலாம். செக்கானூரணி பெரியம்மாவிலிருந்து சினிமா உலகின் விசித்திரங்கள் வரை அத்தனையும் பேசுகிற கட்டுரைகள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் வடிவேலுக்கென தனி இடம் இருக்கிறது. அதற்கு காரணம் அவர் காமெடிகள் எல்லாம் அனுபவத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கிறது. அதை இந்தக் கட்டுரைகளும் இனிமையாக நிரூபிக்கின்றன. நல்ல விஷயங்களை எப்போதும் உற்சாகப்படுத்தி உச்சியில்வைக்கும் உங்களுக்கு மீண்டும் நன்றி. வடிவேலுவின் பாஷையிலேயே சொல்வதென்றால், 'புத்தகத்தை படிங்கய்யா... சிரிங்கய்யா'! ******************************************************************************************************************************************************
ஆலய தரிசனம் கட்டுரையாளர்கள் 81-89780-24-7 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பார்கள். அந்தக் காலத்தில் கோயிலை வைத்துத்தான் ஊரே நிர்மாணிக்கப்பட்டிருக்கும். வளமான மனங்களை உருவாக்க, ஓர் ஊருக்கு முதலில் தேவை கோயில்தான் என்று அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெளிவாகவே புரிந்திருக்கிறது. இதற்கேற்ப நம் பண்டைய அரசர்கள் கோயில்களையும் ஆலயங்களையும் கட்டுவதற்குத் தாராளமாகவே நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... மன்னர்களே மண் சுமந்து கட்டிய ஆலயங்களும் நம் தமிழகத்தில் உண்டு! அத்தகைய புகழ்வாய்ந்த ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கே பெரும் பேறு செய்திருக்க வேண்டும். இறைவனே அவதரித்து உருவாக்கிய ஆலயங்கள், ரிஷிகள் ஸ்தாபித்த ஆலயங்கள், சித்தர்கள் நிர்மாணித்த ஆலயங்கள், மன்னர்கள் செதுக்கிய ஆலயங்கள் என்று ஓர் ஆலயத்தின் வரலாற்றை அறியப் போனால் ஆயிரம் கதைகள் தெரிய வரும். சிற்பிகளின் உளி பேசும் உன்னத ஆலயங்களின் ஒளி நம்மைத் திகைக்க வைக்கும். காலங்கள் எத்தனையோ கடந்தும் நம் கலாசாரத்தின் பெருமையையும், புகழையும் பறைசாற்ற ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த ராஜகோபுரங்கள் இன்றும் என்றும் இதற்கு சாட்சி! 'சக்தி விகடன்' இதழின் தொடக்கத்தில் இருந்தே ஆலயங்களின் சிறப்பையும் அதன் தொன்மை மிகுந்த வரலாற்றையும் ஒவ்வொரு இதழிலும் எழுதி வருகிறோம். கீர்த்திகள் பல பெற்றும் வெளியே அறியப்படாமல் இருக்கும் பல ஆலயங்களைத் தேடித் தேடி எழுத... சக்தி விகடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. இத்தகைய முயற்சியில் வாசகர்கள் பலரும் சளைக்காமல் பல ஆலயங்களைப் பற்றி சுவைபட எழுதி மெருகேற்றியிருக்கிறார்கள். 'ஆலய தரிசனம்' என்கிற இந்த அற்புத வெளியீடு உங்களைப் பரவசப்படுத்தும் _ பக்தி மார்க்கத்தில் வலுப்படுத்தும் என்பதில் பூரிப்படைகிறேன். ******************************************************************************************************************************************************
மண்ணில் உதித்த மகான்கள் காஷ்யபன் 81-89780-04-2 தெய்வத்தின் தூதர்களாகவும் தாயின் அம்சங்களாகவும் இந்த மண்ணில் உதித்த மகான்களை வணங்கிப் போற்றுவது மனித குலத்தின் பண்பு. அருள் மணம் பரப்பும் அன்பு வடிவமாக, அறியாமை என்னும் இருளை அகற்றும் ஒளி விளக்காக அவதாரம் எடுத்த மகான்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை, மக்களிடையே சென்று விளக்கி அவர்களின் துயரைத் துடைத்திருக்கிறார்கள். 'தன்னையே அறிவது' என்ற தத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்கள். தெய்வீக சக்தி மனிதர்களுக்கு நேரடியாகத் தோற்றம் அளிப்பதில்லை. பல கோயில்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று தேடினாலும் அந்த சக்தியை உணரும் பக்குவம் சுலபமாக எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆன்மிக பலம் கைவரப் பெற்றவர்களால் மட்டுமே அந்த சக்தியை உணர முடியும் என்று அறிந்து கொள்கிறார்கள். அந்த ஆன்மிக சக்தியை சாமான்ய மக்களுக்கு உணர்த்தவே இப்பூவுலகில் அவ்வப்போது மகான்கள் தோன்றுகிறார்கள். தமது அனுபவங்களைக் கொண்டு மனிதர்களிடையே ஆன்மிக பலத்தை ஊட்டுகிறார்கள். உபதேசங்கள் மூலம் அறம் வளர்க்கப் பாடுபடுகிறார்கள். மகான்களிடம் ஒரு தெய்வீக சக்தி இயங்கிக் கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து, அவர்களை குருவாக ஏற்று வணங்கத் தொடங்குகிறார்கள். மகான்களின் வாழ்க்கையையும் அவர்கள் வழங்கிய உற்சாக முத்துக்களையும் சக்தி விகடனில் பரவசத்தோடு வாசித்த வாசகர்களின் அமோக வரவேற்பை ஏற்றுத்தான் 'மண்ணில் உதித்த மகான்கள்' என்னும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இந்தப் புத்தகம் உங்களுக்கு ஆன்மிக பலத்தைக் கூட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ******************************************************************************************************************************************************
தெருவாசகம் யுகபாரதி 81-89780-98-0 ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது. நமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்காக சுமைகளைச் சுமப்பவர்கள்; நமக்காக நாற்றத்தைச் சுவாசிப்பவர்கள்தான் இந்தக் கவிதைகளின் நாயகர்கள். தினம்தினம் நாம் தரிசிக்கிற சக மனிதர்கள்தான். ஆனால், ஒரு சிக்னலில் காத்திருக்கிற இடைவெளியில்கூட இவர்களைப் பற்றி நாம் சிந்தித்திருப்போமா என்பது சந்தேகம். ஊர் தூங்கிய பிறகு விழித்திருக்கும் நிலவைப் பற்றி எத்தனையோ கவிதைகள்... நிலவோடு சேர்ந்து நித்திரை தொலைக்கும் கூர்க்காவைப் பற்றி யார் யோசித்தோம்? கோயில் வாசலில் மஞ்சள் வெயில் உதிரஉதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம் தெய்வத்துக்காவது தெரியுமா? அந்தியின் கடற்கரையில் மணல் வீடுகள் கட்டி விளையாடும் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவனின் கனவுகளை அலைகள் மட்டுமே அறியும். பரபரப்பான பெருநகரத்தின் சாலை ஓரத்தில் வெட்கம் பிடுங்கித் தின்ன ஒருவன் தருகிற அறுந்த செருப்பை தைத்துத் தருபவரின் துயரை எந்தப் பாதம் அறியும்? பறிக்க ஆளற்று அனுதினம் பூத்து உதிரும் காட்டு அரளிப் பூக்கள் மாதிரி கழிகிறது இவர்களின் காலம். பூமியைக் கேட்டு மழை பொழிவதில்லை, பூக்களைக் கேட்டு தேன் சுரப்பதில்லை என்பது மாதிரி கவனிப்பைப் பற்றிய கவலையின்றி கடமையைச் செய்பவர்கள் இவர்கள். யுகபாரதி திரைப்பட பாடலாசிரியராக ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான். மண்ணின் ஈரத்தையும் மனசின் வெப்பத்தையும் வார்த்தைகளில் அடைகாக்கிற கவிஞர். இந்தக் கவிதைகள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வடிவம் மரபாக இருந்தாலும், வார்த்தைகளிலும் அர்த்தங்களிலும் புதுமை செய்திருப்பதே இந்தக் கவிதைளின் சிறப்பு. ******************************************************************************************************************************************************
ஜனனி ரிங்கி பட்டாச்சார்யா 978-81-8476-077-4 பெண் _ வாழ்நாளில் எத்தனை அவதாரம் எடுக்கிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் அரிதாரம் பூசும்போதும், அவளுடைய மன உணர்வுகள் எப்படி எல்லாம் மாற்றம் பெறுகின்றன! மகளாக, தாயாக, பாட்டியாக என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் எப்படிப்பட்டதாக உள்ளன! இந்த உணர்வுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியுமோ? அனுபவித்தவர்கள் வெளிப்படுத்தினாலன்றி அந்த உணர்வுகளை மற்றவர்கள் அறிந்துகொள்வது கடினம்தான்! ஜனனியில், ஜனனம் செய்திருப்பதும் இப்படிப்பட்ட பெண்களின் மன உணர்வுகள்தான்! நம் நாட்டின் பண்டைய சித்தாந்தங்களில் ஊறிப்போன பெண்ணின் மனது எப்படி இருக்கும்; அந்தக் கட்டுக்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்ணுக்குத் தேவைப்படும் சுதந்திர உள்ளத்தோடு உலகை அணுகும் மனது எப்படி இருக்கும்?! குழந்தையை விரும்பி, குதூகலத்தோடு உலகை நோக்கும் உள்ளமும், குழந்தையே வேண்டாம் என்ற கருத்தோடு தனித்திருக்கும் பெண்ணின் குமுறும் உள்ளமும் என இந்த நூலில் வேறு வேறு சிந்தனைகள் ஒருமித்து ஜனித்திருக்கின்றன. சமுதாயத்தின் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்து, இந்த சமூகத்தைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறார்கள் இந்த நூலில். இதில் ஒரு மகளின் எதிர்பார்ப்புகள் அழுத்தமாகத் தெரிகின்றன. ஒரு தாயின் வேதனையும் ஆசையும் உள்ளத்தை ஊடுருவுகின்றன. தாய்மையின் ஏக்க உணர்வுகள் வெளிப்படும்போதும், கடந்த காலத்தின் நிராசைகளை அசைபோடும்போதும், பெண்ணுக்கான சமூக மதிப்பீடு நம் மனதில் ஆழப் பதிகிறது. சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். ******************************************************************************************************************************************************
ஜனனி ரிங்கி பட்டாச்சார்யா 978-81-8476-077-4 பெண் _ வாழ்நாளில் எத்தனை அவதாரம் எடுக்கிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் அரிதாரம் பூசும்போதும், அவளுடைய மன உணர்வுகள் எப்படி எல்லாம் மாற்றம் பெறுகின்றன! மகளாக, தாயாக, பாட்டியாக என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் எப்படிப்பட்டதாக உள்ளன! இந்த உணர்வுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியுமோ? அனுபவித்தவர்கள் வெளிப்படுத்தினாலன்றி அந்த உணர்வுகளை மற்றவர்கள் அறிந்துகொள்வது கடினம்தான்! ஜனனியில், ஜனனம் செய்திருப்பதும் இப்படிப்பட்ட பெண்களின் மன உணர்வுகள்தான்! நம் நாட்டின் பண்டைய சித்தாந்தங்களில் ஊறிப்போன பெண்ணின் மனது எப்படி இருக்கும்; அந்தக் கட்டுக்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்ணுக்குத் தேவைப்படும் சுதந்திர உள்ளத்தோடு உலகை அணுகும் மனது எப்படி இருக்கும்?! குழந்தையை விரும்பி, குதூகலத்தோடு உலகை நோக்கும் உள்ளமும், குழந்தையே வேண்டாம் என்ற கருத்தோடு தனித்திருக்கும் பெண்ணின் குமுறும் உள்ளமும் என இந்த நூலில் வேறு வேறு சிந்தனைகள் ஒருமித்து ஜனித்திருக்கின்றன. சமுதாயத்தின் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்து, இந்த சமூகத்தைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறார்கள் இந்த நூலில். இதில் ஒரு மகளின் எதிர்பார்ப்புகள் அழுத்தமாகத் தெரிகின்றன. ஒரு தாயின் வேதனையும் ஆசையும் உள்ளத்தை ஊடுருவுகின்றன. தாய்மையின் ஏக்க உணர்வுகள் வெளிப்படும்போதும், கடந்த காலத்தின் நிராசைகளை அசைபோடும்போதும், பெண்ணுக்கான சமூக மதிப்பீடு நம் மனதில் ஆழப் பதிகிறது. சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். ******************************************************************************************************************************************************
பிஸினஸ் வெற்றிக் கதைகள் எஸ்.பி.அண்ணாமலை 81-89780-14-X வியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆனந்த விகடன் இதழில் _ நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. 'புரபஷனல் கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக்காரர்!' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என்.டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை... இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்டுரைகளை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்தார்கள் விகடன் வாசகர்கள். நம்மைச் சுற்றி உள்ள பிரபல 'பிராண்ட்'களை தங்கள் உழைப்பால் உருவாக்கி அதை சிகரத்துக்குக் கொண்டு சென்றவர்கள் நம் பக்கத்திலேயே இருக்கிறார்கள் என்ற உண்மை பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது! அதோடு, இந்தத் தொடர் பலரையும் தொழில் துவங்கும் ஆர்வத்துக்குத் தூண்டி இருக்கிறது. காரணம், தன்னம்பிக்கைக் கட்டுரைகளை மட்டுமே படித்து வந்த தமிழர்கள், இந்த வெற்றிக் கதைகளைப் படித்துவிட்டு, தங்கள் வாழ்க்கையின் வியர்வைப் பக்கங்களைப் புரட்டி புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்த தொழில் அதிபர்களை கனவு நாயகர்களாகப் பார்த்தார்கள். அம்பானியும் பில்கேட்ஸும் சாதித்ததைவிட, இந்த மண்ணின் மைந்தர்களான இவர்களின் வெற்றிக் கதைகள் நெருக்கமான பல கதைகளைச் சொல்வதால் தொழில் கனவோடு இருப்பவர்களைப் பெரிதும் ஈர்த்ததில் மாஜிக் ஒன்றுமில்லை. தங்கள் டைரிப் பக்கங்களைப் பிரித்துக் காட்டிய தொழிலதிபர்கள் அனைவருமே பற்றிக்கொள்ள கை ஏதுமின்றி, தங்கள் சொந்த உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் உயர்ந்தவர்கள்தான். முதலீடு என்று பெரிதாக எதையும் கைவசம் வைத்திருக்காதவர்கள். வேதனை, அவமானம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, இலக்கொன்றே குறிக்கோளாக புதிய பாதையைப் பிடித்தவர்கள். இவர்களின் வாழ்க்கைக் கதையைப் படிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் 'சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும்!' என்ற வியாபாரத் தீ சுடர் விடும். அதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி! படியுங்கள், உங்களுக்குள்ளும் இந்த சுடர் தீ பிடிக்கும்!! ******************************************************************************************************************************************************
காசு மேல காசு நாகப்பன் _ புகழேந்தி 81-89780-16-6 ஒருவரிடம் பணம் அதிகமாக இருந்தால் அது சொன்னபடிதான் அவர் நடக்கவேண்டியிருக்கும் என்று தத்துவார்த்தமாக சொல்வது உண்டு. ஆனால், எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் சொன்னபடி அதைக் கேட்க வைப்பதுதான் தனிக் கலை. கையிலிருப்பது ஒரு ரூபாயோ, நூறு ரூபாயோ அல்லது லட்ச ரூபாயோ கண்ணை மூடிக்கொண்டு செலவழிப்பது சுலபம். ஆனால், அதைப் பெருக்குவது...? அதுவும் சுலபம்தான். அதைத்தான் இந்தக் கட்டுரைகளில் 'நாணயம் விகடன்' புகழ் நாகப்பன்_புகழேந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள். பிஸினஸ் பற்றிய கட்டுரைகளை ஜூனியர் விகடனில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தபோது, அரசியல், சினிமா, ஆன்மிகம் என்று போய்க் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதெல்லாம் எடுபடுமா... என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. வாழ்க்கைக்குத் தேவையான எதை எழுதினாலும் வாசிக்கத் தயாராக இருப்பவர்கள்தான் ஜூ.வி. வாசகர்கள் என்ற நம்பிக்கையோடு அதைத் தொடங்கினோம். தமிழ் வாசகர்களுக்குப் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகளுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது. "பர்சனல் ஃபைனான்ஸ்' எனப்படும் தனி நபர் வருவாய்க்கான வழிகளைப் பற்றி அவர்கள் எழுதியதைப் படித்த வாசகர்கள் பலரும் இன்றைக்குத் தரமான முதலீட்டுத் திட்டங்களில் தங்களின் பணத்தைப் போட்டுவிட்டு கவலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது உண்மை! அதே போல, நாகரிக உலகில் புதிது புதிதாக வடிவெடுக்கும் வர்த்தக, பொருளாதார விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் சென்று சேரும்வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைகள்... வாசகர்களை பல துறைகளிலும் விசாலமான அறிவு பெறத் தூண்டியிருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கும் தங்களின் பேராதரவு இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை! ******************************************************************************************************************************************************
கோலங்கள் (பாகம் 1) விகடன் பிரசுரம் NIL பச்சரிசி மாவில் புள்ளிவைத்து, இழை இழையாக நாம் போடும் கோலம், நமது கலாசார அடையாளங்களில் ஒன்று. அதிலும் மார்கழி மாதம் என்றால் அந்தக் கோலங்களின் மெருகும் போடுபவரின் உற்சாகமும் இன்னும் பல படிகள் அதிகரிக்கும். இருள் பிரியாத முன்பனிக் காலையில் எழுந்து போட்டி போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வீடு வண்ணப் பொடிகளால் வாசலில் ஒரு வானவில் ஜமுக்காளத்தையே விரித்துவிடுவார்கள். தினந்தோறும் நம் இல்லங்களின் முகப்பை அலங்கரிக்கும் கோலங்களுக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு. வீட்டுக்கு அழகும் மங்கலமும் தருகின்றன என்பதோடு, வேண்டாத எண்ணங்களை நீக்கி, மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் கோலத்துக்கு உண்டு. புள்ளிக்கோலம், நெளிகோலம், கோட்டு கோலம், இழைக்கோலம், ரங்கோலி என்று எத்தனை வகைகள்! அத்தனை வகைகளிலும் பெண்கள் தங்கள் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் மகத்தான கலையல்லவா கோலம்! அந்தக் கலையில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலுமே, உங்களுக்கு மேலும் மேலும், பலவித டிஸைன்களில் புள்ளிக் கோலங்களையும், ரங்கோலி கோலங்களையும் விதம்விதமாக அள்ளித்தந்திருக்கிறோம். 'கோலங்கள்' தொலைக்காட்சித் தொடரில் தினமும் ஒளிபரப்பப்பட்ட கோலங்களைப் பார்த்து, பல நேயர்களிடமிருந்து ஆர்வமான விசாரிப்புகள் வர... அதைத் தொடர்ந்தே இந்தத் தொகுப்பு உருவானது. ஒரு தொகுப்புக்கு 101 கோலங்கள்! ஆக, 505 அசத்தல் கோலங்களை ஐந்து தொகுப்புகளாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம். இது முதல் தொகுப்பு. புதுப்புது கோலங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்! களத்தில் இறங்கி வண்ணமயமாகக் கலக்குங்கள்! ******************************************************************************************************************************************************
கோலங்கள் (பாகம் 2) விகடன் பிரசுரம் NIL பச்சரிசி மாவில் புள்ளிவைத்து, இழை இழையாக நாம் போடும் கோலம், நமது கலாசார அடையாளங்களில் ஒன்று. அதிலும் மார்கழி மாதம் என்றால் அந்தக் கோலங்களின் மெருகும் போடுபவரின் உற்சாகமும் இன்னும் பல படிகள் அதிகரிக்கும். இருள் பிரியாத முன்பனிக் காலையில் எழுந்து போட்டி போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வீடு வண்ணப் பொடிகளால் வாசலில் ஒரு வானவில் ஜமுக்காளத்தையே விரித்துவிடுவார்கள். தினந்தோறும் நம் இல்லங்களின் முகப்பை அலங்கரிக்கும் கோலங்களுக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு. வீட்டுக்கு அழகும் மங்கலமும் தருகின்றன என்பதோடு, வேண்டாத எண்ணங்களை நீக்கி, மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் கோலத்துக்கு உண்டு. புள்ளிக்கோலம், நெளிகோலம், கோட்டு கோலம், இழைக்கோலம், ரங்கோலி என்று எத்தனை வகைகள்! அத்தனை வகைகளிலும் பெண்கள் தங்கள் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் மகத்தான கலையல்லவா கோலம்! அந்தக் கலையில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலுமே, உங்களுக்கு மேலும் மேலும், பலவித டிஸைன்களில் புள்ளிக் கோலங்களையும், ரங்கோலி கோலங்களையும் விதம்விதமாக அள்ளித்தந்திருக்கிறோம். 'கோலங்கள்' தொலைக்காட்சித் தொடரில் தினமும் ஒளிபரப்பப்பட்ட கோலங்களைப் பார்த்து, பல நேயர்களிடமிருந்து ஆர்வமான விசாரிப்புகள் வர... அதைத் தொடர்ந்தே இந்தத் தொகுப்பு உருவானது. ஒரு தொகுப்புக்கு 101 கோலங்கள்! இது இரண்டாவது தொகுப்பு. புதுப்புது கோலங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்! களத்தில் இறங்கி வண்ணமயமாகக் கலக்குங்கள்! ******************************************************************************************************************************************************
கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் 81-89780-36-0 எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத்தைப்போல கதைகளும் நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. பாரதியாரிலிருந்து தமயந்தி வரை தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது, காலம் எவ்வளவு விசித்திரமானது, மனிதர்கள்தான் எத்தனைவிதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என ஏராளமான ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது. இதைப் படிக்கும்போது கல்லெறிந்த குளம் மாதிரி நம் மனத்தில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. சேரிகளின் அவல நிலை தொடங்கி சென்னை வாழ் குஜராத்திகளின் வாழ்நிலை வரை பேசுகிற எழுத்துக்கள். வாழ்வின் நிஜமான விலாசத்தைத் தேடி பயணம் பண்ணுகிற இந்த 'கதாவிலாசம்' இதமான இலக்கியப் பதிவு. ஐம்பது எழுத்தாளர்களின் வெவ்வேறு விதமான சிறுகதைகள், அதையொட்டிய ராமகிருஷ்ணனின் அனுபவங்கள் என்பதால் இந்தப் புத்தகம் படிக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய வாழ்வனுபவமாக இருக்கும். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற இதை முழுத்தொகுப்பாகக் கொண்டுவருவதில் பெருமைப்படுகிறேன். ******************************************************************************************************************************************************
லிங்க‌ம் பா.ராஜநாராயணன் NIL உண்மைச் சம்பவங்கள் கதையாகும்போது எப்போதுமே ஒருவித பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தென்மாவட்டத்தில் திகிலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாதாவின் கதையை எழுதும்போது சூடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். பா.ராஜநாராயணன் எழுதி, ஜூனியர் விகடனில் வெளியான ‘லிங்கம்’ தொடர் அந்த வகையைச் சேர்ந்ததுதான். நல்லது எது, கெட்டது எது என்று லிங்கத்துக்கும் பிரபுவுக்கும் எடுத்துச் சொல்வதற்கு யாராவது இருந்திருந்தால், வன்முறைப் பாதையில் போய் தங்களைத் தொலைத்து, தங்கள் குடும்பத்தையும் தவிக்க விட்டிருக்கமாட்டார்கள். அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அவர்களுடைய குடும்பத்தின் வேதனைகளையும் தெரிந்துகொண்டால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையுமே என்ற முயற்சியில் எழுதப்பட்ட தொடரே இது. இப்போது புத்தக வடிவில் பார்க்கும்போது, அந்த உணர்வுகள் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருப்பது புரியும். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை என்பதால், நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள். ஜூனியர் விகடன் வாசகர்களுக்கேகூட லிங்கமும், அவனுடைய கதைகளும் சிவப்பு முத்திரையுடன் நினைவில் இருக்கும். எனவே, உண்மையை விட்டு விலகிச் செல்லாமல் சம்பவங்களை விறுவிறுப்போடு கொண்டு சென்றுள்ள நேர்த்தியை நன்றாகவே உணர முடியும். தொடர் வெளியானபோது ஒவ்வொரு இதழிலும் அழுத்தமாக நாங்கள் சொன்னதுதான் இப்போதும் _ இதை வாசிக்கும் எவரும் வன்முறையை நேசிக்க முடியாது! ******************************************************************************************************************************************************
30 நாள் 30 ருசி ரேவதி சண்முகம் 81-89780-57-3 இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம். பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு விடுமுறை நாளின் இளமாலைப் பொழுதுக்கான நொறுக்குத் தீனியாகட்டும், அவசர நாளுக்கான ஃபாஸ்ட் ஃபுட் ஆகட்டும், நிதானமாகச் சமைத்துண்ண ஃபுல் மீல்ஸ் ஆகட்டும் நா நரம்புகளை சிலிர்க்க வைக்கும் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இன்னொரு சிறப்பம்சத்தையும் இந்தக் குறிப்புகளில் நீங்கள் பார்க்கலாம். 'எனக்குத் தெரிந்த சமையல் எல்லாம் வெந்நீர் வைப்பதுதான்' என்று சொல்பவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் படித்து சுவையான அயிட்டங்களைப் படைத்துவிட முடியும் என்பதே அது. வாருங்கள், வாழ்க்கையை நறுமணமும் சுவையும் மிக்கதாக சந்தோஷமாகத் தொடர்வோம். ******************************************************************************************************************************************************
ஊருக்கு நல்லது சொல்வேன் தமிழருவி மணியன் 81-89780-72-7 'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன. தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது. நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை _ பாதுகாக்க வேண்டியவை. விகடனில் தொடராக வெளி வந்தபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் இப்போது புத்தகமாக உங்கள் கைகளில்! கண்டிப்பாக இந்தப் புத்தகம் உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை இன்னும் விசாலமாக்கும், உள்ளங்களில் ஒளியேற்றும். ******************************************************************************************************************************************************
நெருப்பு மலர்கள் ஞாநி 81-89780-68-9 இன்றைய இந்தியப் பெண்கள் சுதந்திரமாகவும் சமூக அந்தஸ்தோடும் வீரநடை போட்டு, ஆண்களுக்கு நிகராக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். அரசியல், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று பல துறைகளிலும் காலடி வைத்து சாதனை படைத்து வருகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த பெண் சமுதாயத்துக்கு இந்த அங்கீகாரமும் வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இது சாதாரண சமூக மாற்றம் இல்லை. இந்திய விடுதலைப் போருக்கு நிகரான _ ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம், அவமானங்களைத் தாங்கி, உறவுகளை இழந்து, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து பெண்ணினம் பெற்ற வெற்றி என்றுதான் இதை முழங்க வேண்டும். அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்த பெண்களின் பெயர்கள் நமது பாடப் புத்தகங்களில்கூட இல்லை. அந்தச் சாதனைப் பெண்களின் வரலாறை தேடிக் கண்டுபிடித்து, தீவிரமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார் ஞாநி. என்றென்றும் நமது நினைவுகளோடு கலந்த அந்தச் சாதனைப் பெண்களின் வீரதீரச் செயல்கள் 'அவள் விகட'னில் தொடராக வந்தபோது அனைத்து வாசகர்களும் உணர்வுபூர்வமாக விரும்பிப் படித்து வரவேற்றார்கள். என்றும் நினைவில் வைத்துப் போற்றும்விதமாக, அந்த 'நெருப்பு மலர்க'ளின் தியாக வரலாறுகளைத் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். ******************************************************************************************************************************************************
கந்தன் கதை கேளுங்கள் பரம சுகிர்தன் 81-89780-00-X 'ஸ்காந்தம்' என்று ஒரு மதமே உண்டு. கந்தனை மாத்திரமே வணங்கி பூவுலக வாழ்க்கையின் சுகங்களையும் நிம்மதியையும் பெற்று வாழ்பவர்கள் கந்தனின் பக்தர்கள். இப்போது இருக்கும் அவசரமான உலகத்தில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது. அதனாலேயே, பெருமை மிக்க நம் நாட்டின் புராண இலக்கியச் செல்வங்களைப் பற்றிய பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது இன்றைய தலைமுறை. வாசக பெருமக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் கந்தன் கதையைச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவள் விகடனில், எளியருக்கு எளியனான முருகனைப் பற்றி, 'கந்தன் கதை கேளுங்கள்!' என்ற எளிமையான தலைப்பில் இந்தத் தொடர் வெளியாயிற்று. தொடராக வந்தபோதே கதையின் வீறுகொண்ட நடைக்காகவும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்ற துதிப் பாடல்களுக்காகவும் நிறைந்த வரவேற்புப் பெற்றது. வாசக பெருமக்களின் ஆர்வமே இப்போது இதைத் தனிப் புத்தகமாகக் கொண்டுவர ஊக்கம் கொடுத்திருக்கிறது. அற்புதமான கற்பனைகளுக்காகவும் இருக்கிற வாழ்க்கையை இன்னும் மேம்பாட்டோடு வாழ்வதற்கான கருத்துகளுக்காகவும் கொண்டாடப்படுபவை நம் ஆன்மிக இலக்கியங்கள். அவற்றை மறுபடி அறிமுகப்படுத்தும் காரியத்தின் ஒரு படிதான் பரம சுகிர்தனின் இந்த நூல். ஓவியர் ஸ்யாம் வரைந்த எழிலான ஓவியங்கள் கந்தனுக்குப் பெருமை சேர்க்கின்றன. பக்திப் பரவசத்தோடு இந்த நூலைப் படித்து உங்கள் வழக்கமான ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
காசேதான் காதலிடா சுரேஷ் பத்மநாபன் 81-89780-02-6 ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகள்தான் உங்கள் கைகளை அலங்கரிக்கும் 'காசேதான் காதலிடா!' 'செஸ் விளையாடுவது எப்படி?', 'ஆங்கிலம் பேசுவது எப்படி?' என்று சகலவிதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க எத்தனையோ வகுப்புகள் இருக்கின்றன. ஆனால், 'பணத்தைப் பெருக்குவது எப்படி?' என்று மட்டும் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தனியாக எந்தப் பள்ளிக்கூடமும் இல்லை. இது பற்றி யோசித்த போதுதான், 'பணம் ஈட்டுவது பாவகாரியமல்ல!' என்று உரக்கப் பேசிய சுரேஷ் பத்மநாபனின் குரல் எங்கள் காதுகளுக்குக் கேட்டது. படிப்பறிவும் பட்டறிவும் ஒருசேர நிரம்பியிருக்கும் சுரேஷ் பத்மநாபன், பணம் பற்றிய தனது புரட்சிகரமான வாதங்களுக்கு வலிமை சேர்த்த விதம் எங்களைக் கவர்ந்தது. என்ன ஆச்சரியம்..! அவரது கட்டுரைகள் விகடனில் வெளிவர ஆரம்பித்ததும் பணத்தின் தன்மை பற்றி வாசகர்கள் கேள்விக்கணைகள் தொடுத்துத் தள்ளிவிட்டார்கள். பிரமித்துப்போன சுரேஷ் பத்மநாபன், வாசகர்களின் கேள்விக்களுக்கு தான் மட்டும் பதில் சொன்னால் போதாது என்று, அடிமட்டத்திலிருந்து உயர்ந்த உதாரண புருஷர்களைத் தன் கருத்துக்களுக்கு பலம் சேர்க்க உதவிக்கு அழைத்துக்கொண்டார். 'ஆரோக்கியா' ஆர்.ஜி.சந்திரமோகன், 'ஹாட் பிரெட்ஸ்' மகாதேவன், 'கெவின் கேர்' சி.கே.ரங்கநாதன், 'இன்டக்ரேட்டட்' வைத்தியநாதன், எஸ்.எஸ்.ஐ. நிறுவனங்களின் ஆலோசகர் நீலகண்டன், 'போத்தீஸ்' எஸ். ரமேஷ்... போன்றவர்களின் அனுபவ முத்துக்களும் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. மூத்தோர் சொல் மட்டுமல்ல... அனுபவமிக்க இந்தப் பெருமக்களின் வார்த்தைகளும் அமுதுக்கு நிகரானது. நீங்களும் அள்ளிப் பருகுங்கள்... இனி எல்லாம் பணமே! ******************************************************************************************************************************************************
எல்லை சாமிகள் (பாகம் 1) குள. சண்முக சுந்தரம் 81-89780-03-4 தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொருவிதமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வருகிறார்கள். அனைத்தும் தங்கள் குல மேம்பாட்டுக்காக தங்கள் தெய்வங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. ஒரே கிராமத்தில் கூடிவாழும் பல சமூகத்தினர், ஊரின் இறையாண்மையைக் காக்கும்பொருட்டு, பொதுவான நம்பிக்கை கொண்டு திருவிழாக்கள் நடத்த கோயில்களில் கூடுவது வழக்கம். ஒவ்வொரு கிராமத்திலும் வழிவழியாக நிலவிவரும் பூர்வீகக் கதைகளுக்குச் சொந்தமான கோயில்களும் உண்டு. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்றும் நம்புகிறார்கள். தங்களைப் பீடித்த இனம்புரியாத நோய்களைத் தீர்க்கும் அன்பான மருத்துவராகவும், எதிரிகளிடமிருந்து தங்கள் ஊரைக் காப்பாற்றும் வீரமிக்க தளபதியாகவும், வில்லங்கமான பஞ்சாயத்துகளைத் தீர்க்கும் நடுநிலையான நீதிபதியாகவும் அந்தத் தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டு கோயில்களை எழுப்பியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட 'எல்லை சாமி'களைத் தேடிக் கண்டுபிடித்து, அந்தத் தெய்வங்களின் வரலாற்றைச் சுவைபடத் தொகுத்து, பக்திப் பரவசத்தோடு எழுதியிருக்கிறார் குள.சண்முகசுந்தரம். 'சக்தி விகடன்' இதழில் இந்தக் கதைகள் ஆன்மிக வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதைப் போல, இப்போது இந்தப் புத்தகமும் தனிச்சிறப்பு பெறும் என்று நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
கோட்டையும் கோடம்பாக்கமும் ஆரூர்தாஸ் 81-89780-09-3 அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள். இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நுழைந்த சினிமா கலைஞர்களுக்குத் தகுந்த ஆதரவையும் தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். இதற்கு, அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் உச்சாணிக் கொம்புக்குச் சென்றதே இதற்குச் சான்று. சினிமா கலைஞர்களின் புகழை பிரசாரங்களுக்குப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் தங்களது வாக்குகளை உயர்த்திக் கொண்டன. சினிமா கலைஞர்களும் பொதுநல நோக்குடன், சில சமயங்களில் சொந்த வளர்ச்சிக்கும் அரசியலைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த நேரத்தில், அரசியலில் ஈடுபடும் கலைஞர்களைப் பற்றி முழுவதுமாக மக்கள் அறிந்து கொள்வது அவசியம். இதனை சிறந்த முறையில் அலசுவதற்கு தகுதியானவர் 'கலை வித்தகர்' ஆரூர்தாஸ். கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் கதை _ வசனத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று, விருதுகள் பல குவித்துவரும் ஆரூர்தாஸ், தமிழ் சினிமா _ தமிழக அரசியல் ஆகியவற்றோடு, அரசியலில் நுழைந்த கலைஞர்களையும் நெருங்கி நின்று உற்று நோக்கி வருபவர். அத்துடன், அரசியலில் வெற்றி தோல்விகளைக் கண்ட கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர். தமது அனுபவங்களை, 'கோட்டையும் கோடம்பாக்கமும்!' என்ற தலைப்பில் சுவைபட எழுதியுள்ளார் ஆரூர்தாஸ். இந்த புத்தம் புதியப் புத்தகம், அரசியலில் நுழைந்த _ நுழைந்து கொண்டிருக்கும் கலைஞர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள உறுதுணை புரியும் என்பது உறுதி. ******************************************************************************************************************************************************
வந்த நாள் முதல் செழியன் 81-89780-08-5 ஆயிரம் வயலின்களும், லட்சம் புறாக்களும், கோடி பூக்களுமான காதல்களின் காலம் எல்லோருக்கும் இருக்கும். அப்படிக் கடந்து வந்த உணர்வும் உருவமும்தான் இந்த 'வந்த நாள் முதல்!' காதல் என்கிற உணர்வும் காட்சி என்கிற உருவமும் இணைந்த தரிசனம் இந்தப் படைப்பு. காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. ஆனால் காதல் தரும் நினைவுகள் மட்டும் உள்நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தேநீர் கசப்பு மாதிரி உள்ளத்தின் அடித்தட்டில் தங்கிவிடுகிறது. எல்லோருடைய இதயத்தின் ரகசிய அறைகளில் வாழும் தேவதைப் பெண்களின் கதைகளை கவிதையாக்கிருக்கிறார் செழியன். பேருந்துகளில், கோயில்களில், திருமண வீடுகளில், தட்டச்சு வகுப்புகளில்... என ஏதோ ஒரு சந்திப்பில் கண்களால் பேசி, மனதால் கலந்து, கனவுகளால் கனிந்து, மௌனத்தையே சாட்சி வைத்து பிரிந்துபோன காதல் தருணங்கள் யாருக்கு இல்லை..? இப்படி ஒருவருக்கல்ல... ஒரு கோடி காதலர்களுக்கு நேர்வதுதான் செழியனின் இந்தக் காதல் வரிகள். சந்திக்கிறபோது கிடைக்கிற சந்தோஷமும் பிரிகிறபோது பெறுகிற வலிகளும்தான் காதலை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் உணரலாம். இந்தத் தொகுப்புக்கு விழியும் மொழியும் செழியன்தான். கவிதையே காட்சியாய் விரிவதும், புகைப்படமே கவிதையாய் எழுவதும் இவரது தனிச் சிறப்பு. காரணம் கவிஞர், எழுத்தாளர், இசை பயின்றவர், புகைப்பட நிபுணர், ஒளிப்பதிவாளர் என பலமுகங்கள் கொண்டவர் செழியன். 'வந்த நாள் முதல்...' தொடராக விகடனில் வந்தபோது, அந்தக் காதலர்களுடன் பயணித்த லட்சக்கணக்கான காதலர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி. பதிப்புத் துறையில் சாதனைகளைப் படைத்துவரும் விகடன் பிரசுரத்தின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கும் நீங்கள் பேராதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
நில்... கவனி... அபாயம்! கட்டுரையாளர்கள் 81-89780-11-5 சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம். தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். ஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் 'ஜூனியர் விகடன்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. 'ஸ்பெஷல் ஸ்டோரி' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்' என்ற நோக்கமும் வெற்றி பெற்றது. இதற்கு, 'கட்டுரையில் உள்ள தகவல்கள் மூலம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்' என வாசகர்கள் கூறியதே சான்று. பெற்றோர்கள், மாணவர்கள், நுகர்வோர், தொழில் புரிவோர், பல்வேறுத் துறைகளில் பணியாற்றுவோர் என அனைத்துத் தரப்பினரும் சமுதாய சீர்கேட்டுக்கு பலியாகாமல் விழிப்பு உணர்வுடன் செயல்பட இந்தப் புத்தகம் வழிவகை செய்கிறது. 'நில்... கவனி... அபாயம்!' என்ற தலைப்பில் சீரழிவுகளை அகற்றும் கருத்தாயுதங்களைத் தாங்கி வரும் இந்தக் கட்டுரைகளை, ஒவ்வொருவரும் படித்து, விழித்துக் கொள்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ******************************************************************************************************************************************************
சிகரம் தொட்ட சச்சின் ரமேஷ் வைத்யா, வள்ளி 81-89780-07-7 செஸ் தொடங்கி இந்தியா உலகத்துக்குக் கொடையாகக் கொடுத்த விளையாட்டுகள் ஏராளம். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி இன்று நம் நாடு முழுவதிலும் எட்டமுடியாத உயரத்தில் நிற்கும் மேஜிக் விளையாட்டு _ கிரிக்கெட்! விறுவிறுப்புக்கு ஒருநாள் ஆட்டம் என்றும் நுணுக்கத்துக்கும் விஸ்தாரத்துக்கும் ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் என்றும் சளைக்காமல் பார்த்து வருகிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில்கூட செல்வாக்கு செலுத்தவல்லதாகிவிட்டது கிரிக்கெட்! இந்த ஆட்டத்தில் கிரீடம் தரிக்காத எத்தனையோ மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் சாதனைகளையும் முறியடிக்கவல்ல திறமைகொண்ட சக்கரவர்த்தியாகத் திகழ்பவர் இளைஞர் சச்சின் டெண்டுல்கர்! உலக அளவில் பிரபலமான இந்தியர்கள் வரிசையில், மிக இளம் வயதிலேயே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்ட சச்சின், சுட்டிகளின் காவிய நாயகன். 'இவரைப் போல நாமும் சாதிக்க வேண்டும்' என்கிற லட்சியத்தை இளம் மனங்களில் விதைத்த கிரியா ஊக்கி. சச்சின் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள், திருப்புமுனையாக அமைந்த ஆட்டங்கள், அவர் முறியடித்த சாதனைகள் என்று எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொடராக சுட்டி விகடனில் வெளியிட ஆசைப்பட்டோம். 'சிகரம் தொட்ட சச்சின்!' என்கிற தலைப்பில் வெளிவந்த கட்டுரைத் தொடர் இதோ, இப்போது புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. உத்வேகம் ஊட்டும் அவரது வாழ்க்கை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
தேவாரத் திருவுலா (பாகம் 1) டாக்டர் சுதா சேஷய்யன் 81-89780-06-9 தேவாரப் பாடல்களை நினைத்தாலே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் இறை தொண்டுதான் நமது நெஞ்சை ஆட்கொள்ளும். ஈசன் திருவடிகளில் பணிந்து, அவன் உணர்வில் கலந்து உருகிஉருகி அந்த மகான்கள் பாடிய தேவாரப் பாடல்கள், தமிழ் இசையை தெய்விக இசையாக உலகம் முழுவதும் பறைசாற்றின! ஈசன் குடிகொண்ட கோயில்கள் அருள் கொடை வழங்குவதைப் புரிந்துகொண்ட மகான்கள், அந்தச் சிறப்பை மேலும் அறிந்துகொள்வதற்காகவே தேடித்தேடிச் சென்று ஆலய தரிசனம் செய்தனர். அந்த ஆலயங்களில் தாம் பெற்ற தெய்விக உணர்வைப் பிறரும் பெறவேண்டும் என்பதற்காகவே இறைவனின் பெருமைகளைப் பாடியும் கொடுத்தனர். சக்தி விகடன் இதழில் தொடராக வந்துகொண்டிருக்கும் 'தேவாரத் திருவுலா!' இப்போது புத்தக வடிவில் முதல் பாகமாக வருகிறது. தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலங்களுக்கு பக்தி சிரத்தையோடு சென்று வணங்கி, ஈசன் நடத்திய திருவிளையாடல் கதைகளை அருள்மழையாகப் பொழிந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். ஒவ்வொரு திருத்தலங்களாகப் பாடிக்கொண்டே சென்ற மகான்கள் பற்றியும், சமய பேதங்களால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாக இணைக்கத் தங்களின் பாடல்களையே பயன்படுத்தியுள்ள விதத்தையும் ஒரு கதாகாலட்சேபத்தின் சுவையோடு வடித்துக் காட்டியுள்ளார். அக்கால தமிழகத்தின் சமுதாய மேன்மை பற்றி, அந்தக் கதைகளும் பாடல்களும் நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்தப் புத்தகம், அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்க வைத்து உங்களை ஈர்க்கும் என நம்புகிறேன். ******************************************************************************************************************************************************
சின்ன ஐடியா பெரிய லாபம் கட்டுரையாளர்கள் 81-89780-10-7 தொழிற்சாலைகள் தொடங்குவது, புதிய வியாபாரம் ஆரம்பிப்பது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது என்று பிஸினஸின் பல விஷயங்களில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வம்காட்டி வருகிறார்கள். 'பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவா..?' என்பதைச் சொல்லும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, 'அவள் விகடன்' இதழில